Profile cover photo
Profile photo
Siddharth Venkatesan
4,682 followers -
நுனிப்புல்லின் சுவையறிதல்...
நுனிப்புல்லின் சுவையறிதல்...

4,682 followers
About
Siddharth's posts

Post has attachment
உலகியற்றியாள், தான் இயற்றிய உலகுடன் :)))
Photo

Post has attachment
We are family (C'est quoi cette famille?!)

விமானத்தில் பார்த்த ஃப்ரென்ச் நகைச்சுவை படம். படம் பார்க்கும் பொழுது இந்த படம் தமிழில் எடுக்க சாத்தியமுள்ளதா என்று ஒரு இணைநினைவு ஓடிக்கொண்டே இருந்தது. நாம் இன்னும் இந்த இடத்திற்கு வந்து சேரவில்லை என்பதில் மகிழ்ச்சி.

பாஸ்டியன் எனும் 15 வயது சிறுவனின் பார்வையில் விரிகிறது படம். பாஸ்டியனின் தாய் தனது மூன்றாவது கணவனுடன் இப்பொழுது வாழ்கிறார். அவருக்கு முந்தைய திருமணங்களின் மூலம் பாஸ்டியனையும் சேர்த்து மூன்று குழந்தைகள். தற்போதைய கணவரான ஹ்யூகோவிற்கு முந்தைய திருமணங்களின் மூலம் இரண்டு குழந்தைகள். இவர்களின் இணைகளின் பிற திருமணங்கள் மூலமான குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர். இவர்களெல்லாம் வாரத்தில் இந்த நாள் இவர் வீட்டில் அந்த நாள் அவர் வீட்டில் என்ற முறையில் வீடு மாறி மாறி வாழ்கின்றனர். இதை சரிசெய்யவேண்டும் என முடிவு செய்து பாஸ்டியன் போடும் திட்டமும் அதற்கான பெற்றோரின் எதிர்வினையுமாக படம் விரிகிறது. சாதாரண பொழுதுபோக்கு படம் தான். ரசித்தேன். காதல், அன்பு என்பவற்றிற்கெல்லாம் எந்த பொருளும் இல்லை, மணமுறிவில் முடிவதற்கே திருமணங்கள் நிகழ்கின்றன என நம்பும் பாஸ்டியன் அன்பை கண்டுகொள்வதும் ஒரு உட்சரடு.

தனிமனித உரிமை என்ற கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்ததில் ஃப்ரான்ஸுக்கு பெரும்பங்கு உண்டு என்று நினைக்கிறேன். அதன் நீட்சியாக அங்கு 'ஏற்றுக்கொள்ளப்பட்ட' யதார்த்தங்கள், நமக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியது. நம் சமூகத்திலும் நாம் நம்மை தனியர்களாக உணரத்துவங்கி ஓரிரு தலைமுறைகள் ஓடிவிட்டன. கூட்டுக்குடும்ப சிதைவு என்பது ஒரு துன்பியல் நிகழ்வாக அல்லாமல் சமூக வழமையாக மாறிவிட்டது. முதியோர் இல்லம் குறித்த முறைபாடுகள் எல்லாம் வாரமலர் கதைகளில் கூட க்ளிஷேயாக பார்க்கப்படுகின்றன. இது இன்னும் நீளும். இன்று satellite family என சுருங்கிய நாம் இன்னும் சுருங்குவோம். சென்ற நூற்றாண்டின் ஆகச்சிறந்த கருத்தாக்கமான தனிமனித உரிமையின் நிழல்வெளி இது. இதில் சரிதவறு என்பதற்கு ஒன்றுமில்லை. காலம் தன் அலகிலா கால்கள் கொண்டு நகர்ந்துகொண்டே இருக்கிறது. மண்ணில் சிக்கலான தடங்களை பதித்தபடி...
Photo

Post has attachment
அடேய்களா!!! :))))))))))
Photo

Post has attachment
Photo

Post has attachment
சமீபத்தில் படித்த சில புத்தகங்கள் முதலியத்தின் முடிவிலா வளர்ச்சிக்கான வேட்கையை குறித்து சிந்திக்க வைத்துள்ளன. குறிப்பாக Yuval Noah Harari எழுதிய Sapiens மற்றும் Homo Deus. முதலியத்தில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதன் முடிவு என்ன? எப்படி முடிவில்லாத வளர்ச்சி சாத்தியம்? நுகர்வு கலாசாரம் வளர்த்தெடுக்கப்படுவது இதனால் தான் அல்லவா?

முன்பெல்லாம் எந்த பொருளை வாங்கினாலும் அதை பயனாளரே பிரித்து பழுதுப்பார்க்க இயலும். இன்று திறக்க முடியாத வடிவத்தில் தான் அனைத்து பொருட்களும் வருகின்றன. பழுதானால் புதிதாக வாங்கிக்கொள்ளலாம்.... முடிவிலா வளர்ச்சி...

சமீப காலம் வரை காந்திய தன்நிறைவு சார்ந்த பொருளாதாரம் சாத்தியமற்ற கனவாகவே எனக்கு தொன்றியது. ஆனால் இன்று இதை மீள்பரிசீலனை செய்யவேண்டும்... அதை குறித்து மேலும் வாசிக்க வேண்டும் என்று படுகிறது...

இது காந்தி எழுதிய ஒரு குறிப்பு. ஒவ்வொரு வீட்டிலும் கைராட்டையை பயன்படுத்தி தனக்கான நூலை தானே நோர்ப்பதையும் அது தரும் தன்நிறைவை தேசத்தின் மொத்த Disaster Recovery Mechanismஆக முன்வைக்கிறார். தாத்தாவிற்கு இந்நாளில் வணக்கங்கள்....
Photo

வணக்கம் மக்களே... நல்லா இருக்கீங்களா?

மீண்டும் வந்தேன். (ஓ இவ்வளவு நாளா இங்க இல்லையா? என்ற கேள்வி மட்டுருத்தப்படும் ;) )

Post has attachment
Photo

Post has attachment
http://www.newyorker.com/news/news-desk/trumps-anti-science-campaign?intcid=mod-yml

அமெரிக்க வாழ் மக்களே... இந்த கட்டுரை எந்த அளவுக்கு நிதர்சனத்த பிரதிபலிக்குது?

Post has attachment
என் தங்கையின் மகள் சம்ப்ரீத்திக்கு 8 வயதாகிறது (கண்ணம்மா என்றழைப்பேன் நான். அப்படி அழைப்பதால் என்னை கண்ணம்மா மாமா என்பாள் :) ). புத்தகம் படிப்பதென்றால் அப்படி ஒரு ஈர்ப்பு. இப்போது ஒரு நாவல் எழுதி இருக்கிறாள். Everything Boy என்ற அதிபுனைவு வகை சிறிய நாவல். சென்ற மாதம் காயத்ரியின் நூல் வந்தபோது இருந்த குதூகலம் இப்போது மீண்டும் என்னுள். அவளை மிகச்சரியாக வளர்த்துக்கொண்டிருக்கும் என் தங்கைக்கும் மச்சானுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

மிக சிறிய நாவல் தான். ஒரு வகையில் அசலான குழந்தை இலக்கியம் இது. குழந்தையே எழுதியது. :))

அமேசான் கிண்டில் ஸ்டோரில் நூல் உள்ளது. நண்பர்கள் நூலை வாசித்து அமேசான் பக்கத்திலேயே பின்னூட்டம் இட்டால் அவளுக்கு அது மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கும். கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு அமேசானின் இந்திய சந்தைக்கானது. நூல் அனைத்து சந்தைகளிலும் உள்ளது. Kindle Unlimited பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே இறக்கிக்கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B01HXRIMPC
Photo
Photo
7/6/16
2 Photos - View album

Post has attachment
Wait while more posts are being loaded