Profile cover photo
Profile photo
கார்த்திகைப் பாண்டியன்
3,614 followers
3,614 followers
About
கார்த்திகைப்'s posts

வீடு காலி செய்யும்போது மீன் தொட்டியை எதிர் வீட்டிலிருக்கும் சிறுமியிடம் தந்து விட்டோம். புதனன்று இரவு ரயிலுக்குக் கிளம்பும் முன் பழகிய மக்கள் அனைவரிடமும் ஒவ்வொரு வீடாகச் சென்று சொல்லிக் கொண்டு வந்தேன். ஆட்டோவில் ஏறிக் கிளம்பும் நேரம் நகுலன் சட்டென்று கீழிறங்கி ஓடி எதிர்வீட்டுக்குள் நுழைந்தான். என்னவென்று புரியாமல் உள்ளே போய் பார்த்தால் மீன்தொட்டியின் முன்னால் நின்றிருந்தான். “ஏஞ்சல் போய்ட்டு வர்றே கோல்ட் பிஷ் போய்ட்டு வர்றே..” மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த கணத்தில் முகுந்த் நாகராஜனின் மீது பொறாமையாக உணர்ந்தேன்.

Post has attachment
இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள் கா.நகுலன்...:-)
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
ஆண்டு விழா நாயகன்
Photo

ATM-ல் பணம் எடுக்கப் போயிருந்தேன். உடன் நகுலனும். செம ஏசி. அட்டகாசமான குளிர்ச்சியில் பயபுள்ளைக்கு கைகால் புரியவில்லை.

அப்பா.. நல்லா இருக்குப்பா..

சரிடா கண்ணா..

நாமளும் ஒண்ணு வாங்கலாம்ப்பா..

சரிடா தம்பி.. ஒரு ஏசி வாங்கலாம்..

அது நேணாம்ப்பா.. இது..

ATM மெஷினைக் காட்டுகிறான்.

இதுல இருந்துதான் பித்தா பித்தா (பணம்) வருது. அது கொடுத்தா நிறைய ஏசி வாங்கி எல்லாருக்கும் கொடுக்கலாமா? அப்போ எல்லா இடத்துலயும் குளிரா இருக்கும்ல..

(மூணு வயசுன்னு சொன்னா நாமளே நம்ப மாட்டோம்..)

எந்தங்கமே..

நகுலன் இப்போது பிளேஸ்கூலில் இருக்கிறார். சனியன்று மாலை அவருக்கு ஆண்டுவிழா. மேடையில் அவருக்கும் சின்னதாய் ஒரு ரோல். உடம்பில் மேகி மற்றும் இன்னபிற நொறுக்குத்தீனி சமாச்சாரங்களை கட்டிக்கொண்டு இவர் நிற்க இன்னொரு சிறுவனுக்கு வெள்ளரிக்காய் வேடம். வெள்ளரியின் நன்மைகளை அந்தச்சிறுவன் சொல்லி முடித்தபிறகு நம்மாளின் முறை.

ஐயாம் மேகி
வெரி டேஸ்டி
ஹெல்தி திங்க்ஸ் நாட் டேஸ்டி
தேங்க்யூ

கூட்டம் பார்த்து எப்படியும் சொதப்புவார் என்று நான் நினைத்திருக்க அப்படி இப்படி என்று சரியாகச் சொல்லி விட்டார்.

கலை நிகழ்ச்சிகள் முடிந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுக்க ஆரம்பித்தவுடன் நானும் துணைவியாரும் சுள்ளானோடு கிளம்பி விட்டோம். ஹாலை விட்டு வெளியேறும் இறுதி நொடியில் மைக்கில் நகுலன் பெயரை அறிவித்தார்கள். அவரைத் தூக்கிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடி மேடையில் கொண்டுபோய் விட்டேன்.

“நகுலன் இன்னும் பிளேஸ்கூல்தான். ஆனா இன்றைய நிகழ்வில் பிளேஸ்கூல் சார்பாகக் கலந்து கொண்டு சரியாகப் பேசியவனும் அவன்தான். அவன் வயதுக்கு இது ஒரு அச்சீவ்மெண்ட்” என்று மைக்கில் மேடம் சொல்ல துணைவியார் மிதக்காத குறைதான்.

இதெல்லாம் ஒண்ணும் இல்லடா பாண்டியா என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும் மனதுக்குள்...

நகுலன்டா.. எம்புள்ளடா...:-)

இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்டா தம்பி..:-)

+MSK Saravana 

Post has attachment
நகுலன் - பாண்டியன் (டிசம்பர் 2015)
Photo

Post has attachment
சுயத்தைப் பற்றிய தேடல் கொண்ட யாரையும் இந்த நாவல் கண்டிப்பாக அலைக்கழிப்பில் ஆழ்த்தும். தன்னைத் தானுணர்தல் என்பதே எல்லைகளற்ற ஓர் முடிவிலியெனில் மிஷிமா கண்ணுக்கெட்டாத அதன் முனைகளைத் தேடும் தன் பயணத்தை குறுக்கும் நெடுக்குமாக நிகழ்த்திப் பார்க்கிறார். தடுமாற்றமும் துயரமும் பிறழ்வும் நிரம்பிய ஒரு வாழ்க்கையை இத்தனை உண்மையாக மனதுக்கு நெருக்கமாகப் பதிவு செய்திருப்பதே இந்த நாவலின் தனித்தன்மை என்று நம்புகிறேன். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் துணை நிற்கும் கவிஞர் ந.ஜயபாஸ்கரனுக்கும் என் நம்பிக்கைக்குரிய பதிப்பாளர் சா.அனுஷுக்கும்...
Photo
Wait while more posts are being loaded