Profile cover photo
Profile photo
முஹம்மது ஜலீல்
About
முஹம்மது's interests
முஹம்மது's posts

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
ஒரு துளிக் கடல் (முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் குறும்படம்)

Post has attachment
Photo

Post has attachment

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூரான வழிப்பாட்டுத்தலங்கள் முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்: மாவட்ட கலெக்டர் பிராங்ளின் அறிவிப்பு

காரைக்கால், செப். 29 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மத வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் கட்டிடங்கள் எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பிராங்ளின் அறிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் பிராங்ளின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய உச்சநீதிமன்றமானது, 29-09-2009-க்கு பிறகு சாலைகள், பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரசு திறந்தவெளி நிலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற வழிப்பாட்டுத் தலங்கள், வர்த்தக ரீதியான கட்டிடங்கள் கட்டுதல் போன்றவை கூடாது என்றும், 29-09-2009-க்கு முன்பு மேற்படி பொது இடங்களில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் கட்டிடங்கள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாத பட்சத்தில் அவை அந்த இடத்திலேயே நீடிக்கலாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில் அவற்றை அகற்றவும் ஆணை பிறப்பித்துள்ளது.

எனவே, மேற்கூறிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவது சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்டோர் அவற்றை அகற்ற தானாக முன்வரவேண்டும். தகுந்த ஆதாரங்களை கொண்டு மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி மேற்கூறிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும். காரைக்காலில் மேற்கூறிய குற்றங்களை ஆதரப்பூர்வமாக மாவட்ட துணை ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காரைக்காலில் கார், ஆட்டோ, டிராக்டர் மோதல்; குளத்தில் கார் கவிழ்ந்தது. இருவர் காயம்

காரைக்கால், செப்.26 காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் போலகம் அருகே கார், ஆட்டோ மற்றும் டிராக்டர் மோதியதில், கார் குளத்திலும், ஆட்டோ மற்றும் டிராக்டர் பள்ளத்திலும் கவிழ்ந்தது. இதில் இருவர் காயமுற்றனர்.

காரைக்காலை அடுத்த கீழச்காசாகுடியைச் சேர்ந்தவர் கலைசெல்வன்(52). இவர் திருவாரூர் பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இன்று பகல் சுமார் 2 மணிக்கு, திருவாரூரில் இருந்து தனது சொந்த காரில் காரைக்கால் கீழகாசாகுடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் போலகம் பால்குளம் அருகே கார் வந்த போது, எதிரே வந்த ஆட்டோவுடன் கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் தண்ணீர் இறைக்கப்பட்ட பால்குளத்திலும், ஆட்டோ அருகில் உள்ள பள்ளம் ஒன்றிலும் கவிந்தது. ஆட்டோ பின்னால் வந்த டிராக்டர் ஒன்று இந்த விபத்தால் நிலைகுலைந்து ஆட்டோ கவிழ்ந்த பள்ளத்தில் மோதி டிராக்டரும் கவிழ்ந்தது.

இந்த சாலை விபத்தில், ஆட்டோ டிரைவர் ஹாஜா நஜிமுதினும், டிராக்டர் டிரைவர் காரைக்கால் அருள்மொழிதேவன் பகுதியைச்சேர்ந்த பெரியநாயகசாமியும் காயமடைந்தனர். காரை ஓட்டிவந்த கலைச்செல்வன் லேசான காயமடைந்தார். தொடர்ந்து, காயமடைந்த இருவரும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திரு-பட்டினம் காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..
Wait while more posts are being loaded