Profile cover photo
Profile photo
இளவஞ்சி iLaVAnJi
993 followers -
தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :)
தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :)

993 followers
About
Communities and Collections
View all
Posts

சல்லிக்கட்டின் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு சாதிய ஒதுக்கல். இந்த மனவருத்தம் இருந்தும் எந்த வித்தியாசமும் பாராமல் தமிழன் என்கிற உணர்வில் எல்லோரும் இன்றுவரை சளைக்காது போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த மனக்குறையை போக்க நாளைக்கு வாடிவாசலை திறந்து வைப்பது திருமாவளவனும் கிருஷ்ணசாமியுமாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் போராட்டதை மதிக்க ஓபிஸ் செய்யும் மிகச்சிறந்த செயலாகவும் அமையும்.

இதெல்லாம் நடக்குமாடா லூசுன்னு திட்டாதிங்க. ஒரு வாரம் முன்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழகத்தையே புரட்டிப்போடுவார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால் நானும்கூட லுசாடா நீன்னுதான் கேட்டிருப்பேன் :)

இதையும் செய்துகாட்டுங்க பசங்களா... உங்களால் முடியும் இளையபட்டாளங்களே.. உங்களால் மட்டுமே முடியும்!
Add a comment...

Post has attachment
மிகப்பெரிய அவநம்பிக்கையாளர்கள் நம் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் தான் போல!

* அதெல்லாம் ரெண்டுநாள்ல நடக்காது.. ஜவ்வாட்டம் இழுத்துருவாங்க

*அதெல்லாம் சட்டத்தை ஒருநாள்ல திருத்த முடியாது. ஏழுமலை ஏழுகடல் தாண்டனும் உங்களுக்கு தெரியாது

* மாணவச்செல்வங்களே... ஒடனே ஊட்டுக்கு போய் ஹோம் ஒர்க்கெல்லாம் முடிங்க.. மாடு உங்க வாழ்க்கையல்ல.

* அதெப்படி மாநில அரசு மத்திய அரசை நிர்ப்பந்திக்கும். அதுக்குன்னு ப்ரொசீஜரும் லெட்டரு பேடும் இருக்கில்ல?

* இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காது. நாங்க பார்க்காத போராட்டமா?

* நாளைக்கு போலிஸ் குறிவைச்சு ஓட ஓட அடிக்கப்போறாங்க.. இன்னைக்கு கொண்டாடிக்கங்க...

ங்கொய்யால... இப்ப தெரியுதுய்யா அவங்க ஏன் உங்களையெல்லாம் உள்ள சேர்த்திக்கலைன்னு. அங்க அவன் ரொம்ப தெளிவாத்தான் இருக்கான்! நாங்க தான் இதுவரைக்கும் என்னத்த கண்ணையாவா இருந்தோம். இன்னைக்குதான் தெரியுது அது யாராருன்னு... :)
Photo
Add a comment...

Post has attachment
”அழைப்பில்லாத கல்யாணத்தின் பந்தியில் இலை கிழிந்திருக்கிறது என கதறுவது”யாதெனில்...

1. அரசியல் தெரியாத மாணவர்கள் சித்தாந்தம் இல்லாமல் நேரவிரயம் செய்கிறார்கள்
2. அதான் முதல்வர் சட்டப்படி ரெண்டு நாள்ல செய்யறோம்னு சொல்லாங்கல்ல.. கலைஞ்சு போங்கய்யா
3. அரசியல் கட்சிகள் இல்லாமல் இதை எப்படி மேல கொண்டு போவீங்க?
4. அடிப்படை போராட்ட அறிவுகூட இல்லாமல் என்னத்த போடாறீங்க?
5. ஒருத்தன் கூட இன்னமும் உலேபுலே சவுண்டு விட்டு கைதாகலை. இதெல்லாம் போரட்ட வெற்றியா?
6. நாங்கெல்லாம் வெளில இருக்கம். சரி.. வெளில உட்கார வைச்சுட்டீங்க. இருந்தாலும் யாரோ பின்னாடி இருந்து இயக்கறான். அந்த கயவன் யாரா இருக்கும்?


அரசியல் கட்சி மக்களே!

இதுல எதையுமே தெரியாதனாலதான்யா அவங்களெல்லாம் நாலுநாளாகியும் கரைஞ்சுடாம ஒக்காந்திருக்காங்க. நீங்க கொஞ்ச நாளைக்கு உங்க வேலைகளை பாருங்க. அங்க குடும்பம் குட்டிய உட்கார்ந்திருக்கறவன் எல்லாம் குடும்பி, வேலை உள்ளவன். பிரட்சனை தீர்ந்ததும் அவங்களாகவே பொழப்பை பார்க்க கலைஞ்சுருவாங்க. எப்படியாச்சும் இந்த உணர்வுக கலைஞ்சுறாதான்னு ரொம்பவும் மெனக்கெட்டு மேலும்மேலும் வெளிபடுத்திக்காதிங்க! உங்கள் மேலிருக்கும் அடிப்படை மரியாதையே போகிறதய்யா... :(

அந்த ஒத்தை காக்கிச்சட்டை போலிஸ்காரருக்கு வந்த உணர்வுகளை கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கா உங்கள் கரைவேட்டி ஈகோ இந்த நேரத்தில் ஒருங்கிணைந்து ஒரு குரலாய் ஒலிக்க உங்களை தடுக்குது? :(

#JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU

Photo
Add a comment...


ஒருவர் பெரியாரை போற்றுதலும் தூற்றுதலும் அவரின் வாழ்நாள் செயல்கள் கொண்டு தமக்குக்கிடைத்த பலன்கள் கொண்டே என்கிற புரிதலில் இருக்கிறேன். சில பிராமணர்களின் உள்குத்து நக்கலும் நேரடி இழிவுகளும் மதரீதியாக உணர்வுகள் காயப்பட்டதன் ரீதியாக எனவும் புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார் கடவுள் எனும் வகையில் வணங்குபவர்கள் கூட தமக்குக் கிடைத்த சமூக மரியாதை, சாதி அவலத்தை எதிர்க்கும் உரிமை, இட ஒதுக்கீட்டில் கிடைத்த பலன் கொண்டே என்றும் உணர்கிறேன்.

கட்சிக்காரர்களையும், சமூகத்துக்கு உழைக்கும் பெரியார் குரலாளர்களையும் நான் இதில் சேர்க்கவில்லை. அவர்களுக்கு என ஒரு நோக்கு உண்டு. தான் தன் குடும்பம் எனும் அளவில் பெரியாரை தன் கருத்தில் பிரதிபலிப்பவர்களை மட்டுமே ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியாதது சமீபமாக பெருமளவில் ஆரம்பித்திருக்கும் பெரியாரை அவர் சார்ந்த சாதியாக மட்டுமே அடையாளப்படுத்தும், அவரின் சில தவறுகள் மட்டுமே அவர் மொத்தமும் என நிறுவ அவரின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மட்டும் பிடித்து தொங்கும், பெரியாரின் மீது செருப்பு மூத்திரம் பெய்யும் அளவுக்குக் கிளப்பும் கிளம்பும் வன்மம்.

இதையெல்லாம் செய்பவர் ஏதேனும் ஒரு வகையில் சமூகமரியாதையையோ இட ஒதுக்கீட்டையோ கல்வி கற்கும் உரிமையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளில் பெற்றவர்களாகவே இருப்பதுதான் வியப்பு!

ஏன் திடீரென பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையினரிடம் பெரியார் வில்லனாக்கப்படுகிறார்? மதத்தை இழிவுப்படுத்தியவர் என்றால் அந்த மதத்திலேயே இழிநிலையில்வைக்கப்பட்டு இருந்து வெளியே வந்திருக்கிறோம் என்பது எங்கு மறக்கடிக்கப்படுகிறது? அவர் ஒரு சுயசாதி உணர்வாளர் என்றால் அது எந்த வகையில் நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் பலன்களைப் பாதிக்கிறது? அவர் ஒரு வெறுப்பாளர் வெறுப்புணர்வு அதைத் தவிரவேறெதையும் சமூகத்துக்கு வழங்கவில்லை என வாதித்தாலும் அது எப்படி நம் தாத்தனும் அப்பனும் துண்டை இடுப்பில் இருந்து தோளில் மாற்றியதற்கு நேரெதிர் வைக்கும் வாதமாக இருக்கமுடியும்?

அந்த மதரீதியிலாக மட்டும் இடைச் சாதி யிடம் பெரியார் ஒருவெறுக்கக்கூடிய நாயக்கன் என கட்டமைக்கப்படும் சமீபகாலநிகழ்வுகளுக்கு பின்னாலிருக்கும் புரிதல் மாற்றம் என்ன?

நிச்சயம் ஒத்தையா ரெட்டையா பிடிப்பதற்கோ வலதா இடதான்னுவிவாதிக்கவோ கடவுள் வழிபாடா மறுப்பா எனக் கட்சி இயக்கம் ரீதியிலாகபைனரித்தனமா கேட்கவில்லை. நிஜமாகவே புரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.

வாழைமட்டை குருட்டடியில்லாமல் முயற்சித்தால் அறிதல் எல்லாப் பக்கங்களுக்கும் உண்டு என ஆழமாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
Add a comment...

நின்று காட்டும் கபாலிகள்…


கபாலியை முதநாள் முதக்காட்சி பார்க்க ஆசைப்பட்டுப் போய் எங்கூருக்கு க்யூப் சினிமாஸ் க்ளவுட் வழியா பொட்டி அனுப்பிச்சும் திறக்க சரியான சாப்ட்வேர் கீ வரலைன்னு போராடி பதினாலு மணிநேரம் தியேட்டர் மேனேஜர் கூடவும் டிஸ்றிபியூட்டர் கூடவும் சென்னைல இருக்கற க்யூப் சினிமாஸ்க்கும் கூட ஓரியாடி அப்படியும் செட்டாகாம 75 மைல் வேற ஊருக்கு நடுச்சாம காட்சிக்கு வண்டியுருட்டிக்கிட்டு போய் மன்னன் ரஜினி கவுண்டமகான் கணக்கா சட்டைய புழிஞ்சமேனிக்கு காப்படத்துக்கு மக்களோட ஒன்னா விசிலடிச்சு ஆரவாரிச்சு அப்பறம் என்னடா இது டோமரேன்னு அமைதியாகி ஹிஹி மீசைல மண்னு ஒட்டலடேன்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முடித்தது போனவாரம் நடந்த ஒரு த்ரில் பயணக்கதை.

எல்லா ரஜினிப் படங்களிலும் நான் ரசிகனாகத் திருப்திப்பட்டுக்கதுக்கு எனக்குன்னு ஒரு அழுவாச்சி சீன் கட்டாயம் கிடைச்சிடும். ஏன், குசேலனிலேயே க்ளைமாக்ஸ்ல கண்ணுல தண்ணி வைச்சுக்கிட்ட இளகிய மனது கொண்டவன் தான். கபாலில அந்த அரைமண்டை ஸ்டெப் கட்டிங் புள்ள என்னங்கப்பா.. ஏம்ப்பா... சொல்லுங்கப்பா ... அப்பா அப்பான்னு கூப்பிடற போதெல்லாம் அதைக் கபாலி கண்மூடாமல் ஒரு ஆச்சரியம் கலந்த ஆனந்தம் உடலெல்லாம் ஆட்கொண்ட மேனிக்கு அரைச்சிரிப்பாய் அவ சொல்லறதை கேட்டுக்கிடறதை கண்டபோதெல்லாம் என் கத்திக்கத்தி ஓஞ்ச வாயை மூடிக்கினு கண்ணுல குபுக்குன்னு வேர்க்க வேர்க்க மகிழ்ச்சியாய் தொடைச்சுகிட்ட மேனிக்குப் படம் முழுசும் பார்த்து எழுந்ததில் பட்ட சிரமமெல்லாம் தூசாயிட்டு. பொன்ன மகிழ்ச்சி. எம்பொண்ணு வளர்றாங்கறதும் எனக்கு வயசாவுதுங்கறதும்கூட இந்தச் செண்ட்டிக்குக் காரணமாக இருக்கலாம் :)

அது சரிடே.. படம் பார்த்த கதையையும் குறியீடுகளையும் எல்லோரும் பிரிச்சு மேஞ்சு தொவைச்சு காயப்போட்ட காலத்துல வந்து ஏன்யா இப்படித் தொணத்துறன்னு திட்டாதிங்க. மேட்டருக்கு வர்றேன்.

சத்தம்:

முணங்கலாய் ஆரம்பித்த
சத்தம் மெல்ல மெல்ல
பலரும் சேர வலுக்க ஆரம்பித்தது
இதுவரை கேட்டறியாத
அந்தச் சத்தங்கள்
யாருக்கும் பிடிக்கவில்லை
ஏன் அலறுகிறார்கள் என்று
பல முகங்கள் சுழித்தன
அவர்களோ அதைச் சட்டை செய்யாமல்
தங்கள் குரலை மேலும் உயர்த்தினர்
சிரிக்கிறார்கள் உங்கள் கூச்சலைப்
பார்த்து என்று எச்சரிக்கை வந்தது
வாயை திறந்து பழக்கமில்லை கொஞ்சம்
புரிந்து கொள்ளுங்கள் என்று பதில் வந்தது
எங்களைப் போல நாகரீகமாய்
பேச பழகிக் கொள்ளுங்கள்
என்று அறிவுரை சொல்லப்பட்டது
பல நூறு ஆண்டுகள் கட்டப்பட்ட
தொண்டையிலிருந்து வரும் முதல்
சத்தங்கள் நாராசமாய்தான்
உங்கள் காதில் விழும்
பிறகு பழகி விடும் என்றார்கள்
ஓவென்று சிரித்துக் கூச்சலிட்டப்படி!

- ramachandranusha(உஷா) 2005

இந்தக் கவிதையைப் படித்துப் பதினோரு ஆண்டுகள் ஆகிறது. அந்தக்கால முன்னூற்று சொச்சம் பதிவர்களுக்குள் படித்து எழுதி பகிர்ந்து சட்டையைக்கிழித்து அடித்துக்கொண்டிருந்த பொற்காலம் :) ஆனால் இன்றைக்கும் இந்த வரிகள் என் மனதில் உறைந்து போனதற்குக் காரணம் எந்தவிட அரூபமும் படிமமும் சொற்சுவையும் இன்றி எளிய உண்மையை மிக எளிமையான சொற்களால் சொல்லிச்சென்றது மனதுக்கு நெருக்கமாய்ப் பிடித்துப்போனதால் தான். அன்றைக்கே இது கவிதையே அல்ல என்றுகூட வலைஞர்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் இருந்தது :)

உஷா சொல்லிய குரல் பெண்களுடையதாக இருக்கக்கூடும். ஆனால் எத்தனையே இடங்களில் பொருத்திப்பார்த்து பளிச்சென்று கண்ணத்தில் அடிவாங்கிப் புரிதல் கிடைத்து அமைதியடையவைக்கும் அர்த்தம்கொண்ட வரிகள் இவை.

மீண்டும் ஒரு முறை இந்த வரிகளை நேற்று தேடி எடுத்து படித்துப்பார்த்து மலைத்துப்போனேன்! இன்னமும் எத்தனையெத்தனை அமுக்கப்படும் குழுக்களின் குரல்கள் அழுத்துபவனை நோக்கி திமிறி எழுந்து பிடிக்கலைன்னா பழக்கிக்க எனச் சொல்லிச்சிரிக்க வைக்க வேண்டியிருக்கிறது!

இடைநிலை நாம் நடக்க ஆரம்பித்தே இருநூறு வருசம் இருக்காது. பேச ஆரம்பிச்சதே ஏதோ சில பெரியவா ( பெரியார்னா சிலருக்கு எரியும் :) ) பார்த்து போராடி செஞ்சுகொடுத்த வசதிக்கு அறுவது வருசத்துக்கு மின்ன கிடைச்சதுதான். நம்பத் தாத்தனுக்கும் அப்பனுக்கும் அரைஞாண் கயித்துல இருந்த பிட்டுத்துணி தோளுக்குத் துண்டாக ஏறியதே முதல் பட்டதாரிக நாம வெளியவந்த பிறகுதான். நம்ப குடும்பம் நெல்லுச்சோறு திங்கறதே ரெண்டு தலமுறையாகத்தான். ஆனால் சில காலமாய்ப் பேச ஆசைப்படும் ஆரம்பிச்சிருக்கும் ஒருத்தனைப்பார்த்து நாமெல்லாம் ஏன்யா இப்படிப் பெனாத்துறதுன்னறதென்ன? உன் படைப்புதான் பேசனும் நீ மூடிக்கனுங்கறது என்ன? உன் படைப்பு தோல்விடேன்னு சின்னவயசு வெளயாட்டான உங்கம்மா டும்முடேங்கற மாதிரி நாக்கைத்துருத்தி சிரிக்கறதென்ன? நீ யாருடே உம்பேருக்கு நாங்க வைச்சிருக்கற அர்த்தத்தை மாத்திப்பிடிக்கறதுக்கு… உம்பேருக்கு நாங்க வைச்சிருக்கறதுதாண்டே மீனீங்குன்னு கார்ட்டூன் போட்டு எரிச்சமசுரை காட்டுவதென்ன?

கவிப்பேரரசுகளையும் நேர்கொண்ட பார்வை பத்திரிக்கைகளையும் விடுங்க. ஆனா நம்பளை சும்மா சொல்லக்கூடாது மக்களே! நம்மையெல்லாம் சும்மாவா வெளில தினப்படி அரைப்படி இணையபுரட்சியாளர்கள்னு சொல்லி சிரிக்கறாங்க? இங்கன இப்படி இந்தச் சார்புல இப்படித் திரிச்சுத்தான் பேசுவோம் உள்ளுக்குள்ள புண்ணாக்குகூட இல்லைன்னாலும் புரட்சி வந்துருச்சுன்னு தம்கட்டுடா மாப்ளன்னு எத்தனையெத்தனை தகிடுதத்தங்கள் சொல்லிட்டே செய்யறோம்கற நம்ப ஆட்டம் பட்டய கெளப்புது :)

வியாபாரம் தான். விளம்பர அலப்பரைதான். ரசிகர்களுக்கு ஏமாத்தம்தான். படத்துல ரஞ்சித் எனும் கதை சொல்லிய காணோம்தான். காட்சிகளை இணைத்துப்பிடிக்கும் சரடு கருத்துசொல்லற வேகத்துல நேக்குகிடைக்காம காணாமப்பூடுச்சி தான். சரி படமே பிடிக்கலைன்னா பிடிக்கலதான். இதைத்தாம்யா இப்படித்தாம்யா எல்லாப் படைப்புக்கும் கழுவிக்கழுவி சந்தோசமா ஊத்துனோம்? ஆனா இந்தப் படத்துக்கு மட்டும் அதுக்கும்மேல கண்ணுக்குத்தெரியாத சாதிக்குத்து ஊசிகளைக் கண்ணிவெடியாட்டம் ஆங்காங்கே தூவிக்கொண்டே போகும் இந்த எழுத்துவித்தை பழம்தின்னு கொட்டைபோட்ட எழுத்தாளர்களுக்கும் கூடக் கைகூடாத வித்தை. இதுல நாமதான் முன்னோடி. நம் நாகரீக சாயத்தை வெளுத்துக்காட்ட ஒரேயொரு வார்த்தை போதும்னு அந்தாளு சொன்னது கரெட்டுதான் போல! :)

சமூகநீதியின் படி கிடைத்த இட ஒதுக்கீட்டின் மூலம் நான் பலன் பெற்றவன். மகிழ்ச்சி. எங்க குடும்பம் நின்னுட்டது. ஆகவே நான் இட ஒதுக்கீட்டுக்கு மிகவும் நன்றியுடையவன். சரி. நான் நின்னுட்டேன் பிழைச்சுக்கிட்டேன் அதுபோதும். எங்க குழுவுல இருக்கறவங்களோ இன்னமும் கீழ இருக்கறவங்களோ அவங்களா இதை என்னைமாதிரியே உபயோகித்துத் தம்கட்டி முக்கறவங்க முக்கி மேல வரட்டும். அதுபத்தி எனக்கென்ன? இது சுயநலம். ஆம் நான் சுயநலமிதான். நாட்டிற்க்கு நல்லது செய்யப் புரட்சி செய்யும் தலைமைப்பண்பெல்லாம் எனக்குக் காணாது. என் வீட்டை நிமித்திட்டா போதுண்டேங்ற குடும்பி. அதில் ஒரு குற்ற உணர்வுமின்றி வாழும் சுயநலமி. ஆனால் இன்னமும் போராடி முக்கி முனகி மேலே வரப்பார்க்கும் யாரையும் பார்த்து ஹெஹே நடக்கத் தெரியல... பேசத்தெரியல... பேரைப்பாரு... நிக்கறது அசிங்கமா இருக்குன்னு குத்திக்காட்டி வழிவிடாமல் அமுக்கி அவர்களைச் சுணங்க வைப்பேனெனில் அது மாபெரும் அயோக்கியதனம். அந்த அயோக்கியதனம் செய்யும் விருப்பம் எனக்கில்லை.

ரஞ்சித் போன்ற கபாலிகளைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. தனக்கான திறமையில் நின்று காட்டுகிறார்கள். வேண்டிய இடத்தை விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். செய்யும் வேலைத்திறமையில் பல கதவுகளை அநாசியமாகத் திறக்கிறார்கள். தனக்குப்பிடிச்சதை செய்ய நினைச்சதை வெற்றியோ தோல்வியோ எது பலனாக எதுகிடைத்தாலும் சொல்லி அடிக்கிறார்கள். திறமைக்குக் கிடைக்கும் வாய்ப்பை குனிந்து ஏற்காமல் எனக்கு வருவதை எனக்குப் பிடிச்சமாதிரிதான் எடுப்பேன்னு இருபக்கமும் மரியாதை கெடாமல் வெகு இயல்பாய் ஏற்கிறார்கள்.

என்னைக்கேட்டால் தன்காலில் நின்றுகாட்டும் இந்தக் கெத்துதான் மிகச்சரியான வழிகாட்டல். “அடங்கமறு. அத்துமீறு. திமிறி எழு. திருப்பி அடி” என்பது கூட நேரடியாகவும் சூசகமாகவும் அழுத்திவைக்கப்படும் பொழுது செய்தே தீரவேண்டியவைதான். ஆனால் அதையும் விட மிகச்சக்திவாய்ந்த வழிகாட்டல் இந்தக் கெத்து! கவுண்டனை வெட்டு கவுண்டச்சிய கட்டுன்னு உணர்ச்சிவேகத்தில் சொல்லிக்கொடுத்ததை விட எனக்கு வேண்டிய இடத்தில் என் திறமையில் என் முயற்சியில் நானே நின்னுக்குவண்டென்னு சிரிச்சுக்கிட்டு செய்துகாட்டுவது ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது. தவறான வழிகாட்டலில் நாடகக்காதல் செய்து பெண்ணை அழித்து அவள் குடும்பத்தாரை அழவைத்து பணம்பார்க்கும் குயுக்தி வளர்சியைவிட லட்சம் மடங்கு உயரத்தில் இந்தக் கெத்து வைத்துக்காட்டுவது.


நீங்க பேசுங்க கபாலிகளே! இன்னமும் நூறாண்டானாலும் எங்களுக்கு உங்க குரல் பிடிக்கனும்னு அவசியமில்லை. நேற்று கமறிய எங்கள் குரல்களை நாசூக்காய் நாகரிகப்போகாய் மறைத்துக்கொண்டு இன்றைக்கு உங்கள் குரல்கள் பிடிக்கலைன்னு சொல்லிக்கறதுலயும் நாங்க அசிங்கம் பார்க்கறதில்லை. ஆனால் எங்க பிடித்தம் கொடுக்கும் எந்த அங்கீகாரமும் உங்களுக்கு இன்றைக்கு அவசியமில்லை.

தோள்சீலைக்கும் பஞ்சப்படிக்கும் இடஒதுக்கீட்டுக்கும் போராடி நின்று காட்டிய குழுக்களின் குரல்கள் போல எங்களுக்கும் ஒருநாள் உங்களதும் பழகிரும். பழகிக்குவோம்.

நின்னு காட்டி பழக்கியுடுங்க கபாலிகளே! :)
Add a comment...

கபாலி - ( வரப்போகும் ) சில விமர்சனங்கள்


ஜெயமோகன்:


அன்றக்கு நள்ளிரவில் என் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் பொதுவாக கோடம்பாக்க எண்களை தொப்பித்திலக கட்டுரைக்குப்பின்னான மாறுவேட வாழ்வுக்குப்பிறகு பதிந்து கொள்வதில்லை. அழைத்த குரல் “ஜெயன், அனைத்து வெண்முரசு செம்பதிப்புகளையும் மொத்தமாக வாங்கிவிட்டேன். ஆனால் வீட்டிற்குள் தூக்கிச்செல்ல முடியவில்லை. உதவிக்கு வரமுடியுமா?”  எனக்கேட்டது. அந்தக்குரலில் ஒலித்த இலக்கியதாகத்தை அறிந்த நொடியிலேயே அவர் அனுப்பிவைத்த காரில் கிளம்பிவிட்டேன். அது கமல்தான். அவர் வீட்டின் கேட்டை திறக்கும் பொழுதே அவர் போர்டிகோவிலேயே அமர்ந்து நான்காம் தொகுதியின் ஐனூற்றிநாலாம் பக்கத்தில் ரசித்து லயித்திருப்பதை பார்க்க முடிந்தது. அருகில் செல்வதற்கும் அவர் “ஜெயன், சூதர் என்ற சொல்லை நீங்கள் வெண்முரசு நெடுக உபயோகப்படுத்தும் விதம் தமிழின் கொச்சையான ஒரு சொல்லை புனிதப்படுத்தி  மேன்மைப்படுத்தும் பாங்கிலேயே அமைந்திருப்பது வலிந்து செய்யப்பட்டதல்ல என்று நான் சொன்னால் நீங்கள் மறுதலிக்காமல் எற்றுக்கொள்வீர்கள் எனினும் உங்கள் அகமொழியில் அதற்கென இருக்கும் தமிழின் கொடை ஜெயச்சொல் அகராதி வரிசையில் இச்சொல்லுக்கு என்ன இடம் அளித்திருப்பீர்கள் என்பது மிகுந்த வியப்புக்குரியதாக உள்ளது என்பதை நான் சொன்னால் நாகரீகமின்றி அவையக்கம் மீறி நான் விளம்புவதாக நீங்கள் கருதக்கூடாது!” என்றார்.


எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. இந்த வேகத்தில் இவர் படித்தால் நான் எந்த வேகத்தில் எழுதவேண்டும் என நினைக்கிற பொழுதே மிகுந்த உளஎழுச்சி ஏற்பட்டது. இந்த நிகழ்வு எஸ்.ரா அவர் புத்தக வெளியீட்டில் ரஜினி ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர் எனக் கண்டறிந்த நிகழ்வுக்கு சற்றும் குறைவுடயதானதில்லை.


நான் மனதிற்குள் ரஜினியை நினைப்பது கண்டு கமல் சிரித்தார். “நான் உங்களை புத்தக எடை தாளாமலா கூப்பிட்டிருப்பேன்? வேறு காரணம் உண்டு!” என கண் சிமிட்டினார். தன் கைப்பேசியில் “நாற்பதாண்டு கால உயிர் நண்பர்” என பதிந்திருந்த ஒரு எண்ணுக்கு அழைத்தார். அழைப்பு எடுக்கப்பட்டதும் ஒரு சிறு கணைப்பு. அந்தப்பக்கம் ஒரு அதிரடி சரவெடி சிரிப்புச்சத்தம் ஹஹா ஹஹாவென கேட்டது. எதுவும் சொல்லாமல் கைப்பேசியை என்னிடம் கொடுத்தார். “நான் ஜெயன்” என்றேன். அதே வெடிசிரிப்பு தொடர அவர் “தெரியும் ஜெயன், உங்க ஒழிமுறி வசனங்கள் சூப்பர். இப்படியான வசனங்கள் ரசிச்சு பலகாலாமாச்சு. ச்சும்மா அசத்த்திட்டீங்க..”   என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு வித புகழொளி ஒவ்வாத கூச்சமாக இருந்தது.


“நன்றி ரஜினி. கபாலி பட அறிவிப்பு பார்த்தேன். வாழ்த்துகள்.  வசனம் யாருங்க?” எனக்கேட்டேன்.


அந்த முனையில் ஒரு நொடி நிசப்தம். பிறகு “ஹலோ.. ஹலோ..ஹ..” என்றதோடு அழைப்பு துண்டாகிவிட்டது.


கமலிடம் “என்னங்க?” என்றேன். அவர் “விடுங்க அவர் கேளம்பாக்க பண்ணையில் டவர் அப்பப்ப எடுக்காது. அப்பப்ப நான் அவருக்கு விளக்கமாக ஒரு விசயத்தை சொல்லிக்கிட்டு இருக்கறப்பவும் இதுபோல ஆகும். அதுபோக அவர் இன்னும் நோக்கியா 1100தான் வைத்திருக்கிறார்” என்றார்.


இன்றைக்கு கபாலி உலகெங்கும் நூறுநாள் ஓடுவது மகிழ்வுக்குரிய விடயம் தான். இருந்தாலும் அன்றைக்கு டவர் சரியாக எடுத்திருந்தால் இன்றைக்கு படம் கேரளா எடப்பள்ளியில் அரங்கு நிறந்த காட்சிகள் தினம் இரண்டு வெற்றிகரமாக நடந்திருக்கும். ரஞ்சித் இந்த இலக்கிய உலகில் இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும் கபாலிக்கு பிறகாவது இலக்கியம் (எ) அரசியல் மீதான விருப்புக்கு ஏற்ற வாய்ப்பை ஏற்பார் என்கிற நம்பிக்கையுண்டு.


சாரு நிவேதிதா:


என் வாசகர்களை கண்டால் இப்பொழுதெல்லாம் கடுங்கோபம் தன்னிச்சியாக எழுகிறது. அவர்கள் வாசிப்பு மீதான நம்பிக்கை இன்மையால் அல்ல. எனக்கு ஏதேனும் நல்லது செய்தே தீரவேண்டும் எனும் தாளாத ஆசையில் என்னை அடிக்கடி தொந்தரவு செய்து மீளவியலாத மன வன்முறைக்கு ஆட்படுத்துவதே காரணம். சென்றமாதம் தான் ஒரு மலக்கிடங்கில் இருந்து தப்பி வந்தேன். அதற்குள் ஒரு நண்பர் மெட்ராஸ் ரஞ்சித் என ஆசை காட்டி என் பைரவரோடு சென்றுகொண்டிருந்த வாக்கிங்கை பாதியில் நிறுத்தி கூட்டிச்சென்றுவிட்டார். அந்த இலக்கியம் முகர்ந்திராத பூஞ்சைக்கூட்டமும் முகமெல்லாம் ஏதோ சீரோடிகிரி புலிட்சர் வென்றமாதிரியே முகமெல்லாம் பூரிக்க திரியும் ரசிகர்களும் அரங்கிற்குள் நுழையும் முன்பாகவே மகா குமட்டல். பெயர் திரையில் தெரிந்தது தான் காரணம். பேயாட்டம் ஆடுகிறார்கள். பழய கபாலி தினக்கூலி அநியாங்களை எதிர்க்க ஆரம்பிக்கையிலேயே கோடம்பாக்க உன்னதம் அறியா கழிசடைத்தனம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விடுகிறது. அந்த நிலையிலும் அவர் மனைவியோடான ரொமான்ஸ் பாட்டுகள் மனிதனின் உணர்வுகளை கொன்றெடுக்கிறது.


இதெல்லாம் விட பெருங்கொடுமை இசை. நெருப்புடா பாட்டில் வலிந்து வலிந்து பரிதாபகரமாக இழுக்கப்படும் பாஸ் கிடார் மாதிரி ஒரு அபத்த இசையை ராசாவால் கூட கொடுக்க முடியாது. சிலேவில் இதே காட்சியமைப்புக்கு ப்லூட்டும் ட்ரம்பெட்டும் கலந்த அருமையான ஜாஸ் இசையை அமைத்து படத்துக்கே ஒரு உன்னத அனுபவத்தை கொடுத்திருப்பார்கள். அதெல்லாம் தமிழர்கள் உணர பன்னெடுங்காலமாகும். ஆனால் இந்த பாட்டுக்கு வெறிகொண்டு ஆடுகிறார்கள். நேரமாக ஆக கொடூர அழுத்தம் தாளமுடியாமல் படத்தின் எண்ட்கார்டு போடும் பொழுதே எழுந்து ஓடிவந்து விட்டேன். வீட்டுக்கு வந்து மிஷ்கினின் அந்தப்பட அந்தப்பாட்டில் வரும் அந்த 5 செகண்டு நடனத்துணுக்கை கண்டபிறகுதான் உயிரே வந்து தமிழ் திரைப்பட உலகின் மீது ஒரு ஆசுவாசம் கிடைத்தது.


ஆனால் படம் வெற்றி என பேசிக்கொள்கின்றனர். தமிழன் திரையுலகிலும் இசையுலகிலும் இந்த நூற்றாண்டில் கடைத்தேற வழியேயில்லை!


அ மார்க்ஸ்:


பேத்தியின் விருப்பத்தின் பேரில் குடும்பத்தில் அனைவரும் கபாலி திரைப்படம் பார்க்க சென்றிருந்தோம். சர்க்கரைதண்ணீருக்கும் சோளப்பொறிக்கும் எண்ணூறு ரூபாய் கேட்ட திரையங்கின் அநியாயத்தை தட்டிக்கேட்பதற்குள் படம் பெயர் போட்டுவிட்ட சப்தம் கேட்டபடியால் அந்த எதிர்ப்பை ஒத்திவைக்க வேண்டியதாகிற்று. படம் பற்றி ஒன்றும் சொவதற்கில்லை. எல்லா பெரும்பான்மை வலிவு ஊடகங்களும் வலிந்து திணிக்கும் சிறுபான்மை எதிர்ப்பைத்தான் சோவின் நண்பர் ரஜினி ஒரு அப்பாவி இளம் இயக்குனர் மூலமாக சாதித்துக்கொண்டது அப்பட்டமாக தெரிகிறது. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலேசியாவின் குடிமகன் சிறுபான்மை இனத்தை சேர்ந்த வில்லர். அவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிறுபான்மையாக கூட்டமாக தினக்கூலியாக வாழும் கபாலியின் அநியாயம் கண்டு பொங்கும் போக்கைக்கண்டு பொறுக்காமல் கபாலியை வதைக்கிறார். அவர் மனைவியை வல்லாங்கு செய்து மரணிக்கச்செய்கிறார். கபாலியின் குழு அனைவரையும் கூட்டமாக குற்றுயிரும் குலையுருமாக சிதைத்து அனுப்புகிறார். ஆனால் இந்த சிறுபான்மையினராக கொத்தடிமையாக வாழும் பெரும்பான்மை இன கபாலீஸ்வரர் எனும் கபாலி 25 வருடம் கழித்து டானாக மாறி சிறுபான்மை பெரும்பான்மையாக வசிக்கும் மலேசிய வில்லர் அலுவலகத்துக்கு வருகிறார். எடுத்த எடுப்பில் அடாபுடாவென பேசி அருகில் வரும் வில்லரின் அடியாள் ஒருவரை வில்லரின் பங்களா உத்தரத்திலேயே தொங்கி உதைத்து வில்லரின் மேசைமீது விழச்செய்து மேசையை உடைத்தெறிகிறார். இந்த குரூர நிகழ்வைப் பார்க்கையில் ரத்தம் கொதித்தது. அந்த வில்லரின் தவறுகள் மன்னித்து சமூகத்தில் திருந்தி வர ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கையில் இந்த குரூர மேசையுடைப்பு பழிக்குப்பழி வாங்கல் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்பொழுதே இப்படி சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வசிக்கும் இடத்திற்குள்ளே புகுந்து அவமதிக்கமுடியும் எனும் போக்கு அனைவரும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.


கவலைப்படாதீர்கள் மலேசிய வில்லர். உங்களது சமூக சமநிலை இல்லாமை காரணமாக உந்தப்பட்டு செய்த தவறுகளுக்கு உடனடி மன்னிப்பும் நீங்கள் எதிர்காலத்தில் வளமாக வாழ்வதற்கான எல்லா தகுதிகளும் வழங்கி வாழ வைக்க இந்த சமூகம் சீக்கிரம் விழிப்புணர்வு அடைந்து ஆயத்தம் ஆகிவிடும் என விரும்பி நம்புகிறேன்.


கார் பார்க்கிங் மணிக்கு ஐம்பது ரூபாய் என்பதால் நேரம் எடுத்து சோளப்பொறியில் நடந்த அநியாயத்தை அன்றைக்கு தட்டிக்கேட்க முடியாமல் போனது வருத்தத்திற்குறியது.


சுரேஷ் கண்ணன்:

தமிழ்ச்சமூகத்தின் மொன்னைத்தனமும் பொதுப்புத்தியும் சுரனையற்ற சுய பரஸ்பர புறச்சொறிதல்களும் ஒருங்கே சங்கமிக்கும் உலகம் தான் நம் தமிழ்த்திரையுலகம். கோலிவுட் என்று இவ்வுலகை குறிப்பிட எனக்கும் கமலுக்கும் ஒரே அகத்துயர் அழுத்தும் தயக்கம் இருந்தாலும் நானும் அவரும் அவரவர் வழியில் இந்த உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது.  நான் இதுவரை எடுத்துரைத்திருக்கும்  எந்த இலக்கிய உன்னத அகப்பகுப்பாய்வுகளுக்குள்ளும் வரமுடியாத படைப்புலகம் தான் கோலிவுட் என்பதைப்பற்றி இதுவரை பலமுறை இலக்கிய இதழ்களில் சுட்டிக்க்காட்டியுள்ளேன். இருந்தாலும் மெட்ராஸ் திரைப்படத்தில் ரஞ்சித் அவருக்கு கிடைக்கப்பெற்ற வரையறைக்குள் செய்து காட்டிய புரட்சிக்காட்சிகள் தமிழ்ச்சமூகத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சில அறிவுசார் உணர்வுவழி கலையை ஆற்றுப்படுத்தும் பொதுப்புத்தியை கட்டுடைக்கும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததை நாங்களே நினைத்தால் தவிர யாரும் மறுக்கவியலாது. அந்த வகையில் இது ரஜினி படமாக இருக்க கிஞ்சித்தும் வாய்ப்பில்லையென மனதுக்குள் ஆர்வமும் உலகஎனிமா தேடலில் கற்ற திரைமொழி ஒளியும் வழிநடத்தத்தான் நண்பர் ஒருவரின் உதவியுடன் ரசிகர்மன்ற திரைக்காட்சி அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு முதல்நாள் முதல் காட்சி அதிகாலை நான்குமணிக்கு சென்றேன். ஆனால் நான் திரையிலும் அரங்கிலும் பொதுப்புத்தியால் ஆட்கொண்ட மக்கள்  நிகழ்த்திய செயல்களைக்கண்டதில் மனம் மிகத்துயற்றதுதான்  அறிவுசார் தேடலுக்கு கிடைத்த பலன் :(


ஒரே ஒரு காட்சியின் மூலம் இது ரஞ்சித் படமல்ல ரஜினியின் படம் மட்டுமே என பொதுப்புத்தி ஆட்கொண்ட எளிய திரைப்பட ரசிகமனப்பான்மையை முன்னிறுத்தும் ரசிகர்கூட்டம் கூட கண்டுகொள்ளும். 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டைகளின் சமூக அழுத்தத்தில் அனைத்து துயரையும் அனுபவித்த கபாலி திரும்ப டான் கபாலியாக வருகையில் அவருக்குப்பின் பத்து அடியாட்கள் தனிமனித கதாநாயக ஆராதனை துதிபாட வலம் வருகிறார். இது எந்தவகையிலும் சமூக முற்போக்கு நோக்கோடு படைக்கப்பட்ட பாத்திரம் அல்ல என்ற கருத்து அறிவுசார் மக்களிடம் வலுப்படும் நேரத்தில் உணரப்படும் கணத்தில்  இயக்குனர் ரஞ்சித் நடிகர் ரஜினியிடம் பரிதாபமாக தோற்றுப்போகிறார். இதுபோக படம் முதல்நாளே 100கோடி வசூல் என்கிற செய்தியும் திரையங்கில் என்னைத்தவிர மற்ற அனைத்து எளிய திரைரசனைகொண்ட அனைவரும் மிக மகிழ்ச்சியாக படம் பார்ப்பதுவும் மிகத்துல்லியமாக தமிழ்திரையுலம் கலாச்சார வீழ்ச்சியின் தள்ளாட்டத்தில் இருப்பதை என்பதை அறுதியிட்டு கூறிவிட முடிகிறது என்பதுதான் இந்த விடிகாலை காட்சியின் ஆகப்பெரிய பெரிந்துயர். இப்படம் பற்றி அதன் சமூகப்பிரஞ்சையற்ற தடித்தன இயக்கம் பற்றி விரிவாக காட்சிப்பிழையில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அடுத்தமாதம் வெளிவந்ததும் படிக்கவும்.


வளைகுடா இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நேற்றிரவு ரஞ்சித் அவசரமென அழைத்திருந்தார். உங்கள் நாடுகளுக்கு இப்பட போஸ்டர்கள் போய்ச்சேர்ந்துவிட்டது என்றும் ஒட்டுவதற்குத்தான் பசை ஏற்பாட்டில் படத்தயாரிப்பின் அதிகப்படி செலவில் முடியாதென தாணு கைவிரித்து விட்டாரெனவும் விசனப்பட்டார். வளை கிடா நண்பர்கள் ஒட்டகப்பாலில் மைதா கலந்து காய்ச்சி கெட்டிப்பசையாக கொடுத்துதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


பா. ராகவன்:


படம் வெளிவருவதற்கு முன்பே வாணிராணியின் 1000வது எபிசோட் வெற்றிவிழாவில் ராதிகா மேடத்துக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். இன்றல்ல. அதிகாலை இரண்டுமணிக்கு ரஜினியை எழுப்பி குளிப்பாட்டி “அத்த்த்தான் இட்லி சாப்பிடுங்க அத்த்த்தான்” என்று அசத்தலாய்  நடித்த காலத்தில் இருந்தே ராதிகா மேடம் தான் ரஜினிக்கு மிகச்சரியான ஜோடி. காபாலியிலும் அவர் நாயகியாக வரும் காட்சிகள் அனைத்தும் அடிபொலி. ஒரு தேர்ந்த நடிகை ஒரு படத்துக்கும் சீரியலுக்கும் எவ்வளவு பலம் என்பதை ராதிகா மேடம் தான் பலமுறை நிரூபித்திருக்கிறார் என்கிற வகையில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதுபோக மாவாவின் “மக்கள் கலைதான் அரசியல்மாற்றத்துக்கு வித்து” என்கிற கூற்றுப்படி ராதிகாமேடத்தின் தந்தை எவ்வளவோ தமிழ்திரையுலகில் நிரூபித்திருந்தாலும் தினமும் அரைமணி எபிசோடில் பதினைந்து நிமிட விளம்பர இடைவெளி போக கிடைக்கும் வாய்ப்பில் எடுத்த கேரக்டராய் வாழ்ந்துகட்டுவதில் ராதிகாமேடம் தான் தந்தையை வென்ற மகள்.


ரஜினியின் வைரவிழா ஆண்டு படத்திலும் நாயகியாக நடிப்பதற்கான வாழ்த்துகளையும் வாணிராணியின் 10000வது எபிசோவ் வெற்றிவிழாவில் சொல்லும் வாய்ப்பினை இப்பொழுதே விரும்பியேற்றுக்கொள்கிறேன்! :)


அரவிந்த் கண்ணையன்:


பொறுக்கிகளின் வெறுப்பரசியல்!


படம் நியூஜெர்சியில் முதல் நாள் முதல் காட்சி $25 கட்டணத்தில் திரையிட்டிருந்தார்கள். அப்படியொரு கூட்டம். நண்பர்களும் குடும்பத்தினருமாக ஏதோ இந்தியா உலக அரங்கில் உன்னத இடத்தை எட்டிப்பிடித்து விட்டதைப்போல ஒரு கொண்டாட்டம். அலுவலகம் முதல் வீடு வரை டிக்கெட் வாங்கியாச்சா வாங்கியாச்சான்னு வதை. தமிழர்களின் இந்த இழிநிலை கொண்டாட்ட மனநிலை ஒரு நோய்க்கூறு என அறிந்தே இருந்தாலும் வழக்கம் போல பிடிக்கவே பிடிக்காமல் இந்த கூட்டத்தோடு படம் பார்க்க சென்றேன். கருமம். திரையரங்கு வாசலிலேயே நெருப்புடா கபாலிடா என ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் சந்தோசமாய் கத்திக்கத்தி வானரங்களாட்டம் குதிக்கிறார்கள். சென்ற வருடம் சூப்பர் பவுலுக்கு அலுவலக வெள்ளையர் கூட்டம் ஆபீஸ் நேரம் முழுக்க கேம்க்கு டிக்கெட் வாங்கிய கதையை பேசி மாய்ந்து பீர் புட்டிகளாக ஊற்றிக்கொண்டு குழுவாக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மூக்கில் ரத்தம் வர சட்டை கிழிய நின்ற காட்சி கொடுத்த வீர உணர்வு சமீபத்தில் வாங்கிய பாரதியின் தொகுப்பில் ஒருக்கும் “அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்” வரிக்கு ஈடாக அளப்பறியது. ஆனால் இந்த தமிழ்க்கூட்டம் கொஞ்சமும் சூடும் சொரணையும் அறிவும் இன்றி இப்படி அமெரிக்காவில் இந்தியாவை அசிங்கப்படுத்துவதை காண்கையில் அதே பாரதி சொன்ன “வேடிக்கை கதை பேசி” மாயும் கூட்டத்தை சட்டமிட்டு காட்டுவதாகவே உள்ளது.


கொடுமை இதுவெனில் படம் அதைவிட கீழ்த்தரம். ரஜினி நாலுபேர் புடைசூழ நடந்துகொண்டு அடாபுடாவென அநாகரீக வசனங்களை அள்ளியிறைக்கிறார். கோட்டு போட்டுக்கொண்டு கோனையாக சிரிக்கிறார். செத்தமொழியில் மகிழ்ச்சி என்கிறார். இந்த முதிர்ச்சியற்ற செயல்களெல்லாம் அந்த வெண்தாடி பொறுக்கி தமிழர்களுக்கு சொல்லிக்கிடுத்த வெறுப்பரசியலே தான்! அடக்கப்பட்டோர் போராடி உரிமை பெறுவது உலகெங்கும் நடப்பதுதான். எளிய மக்கள் வன்முறையை குறுக்குவழியாக எடுப்பது உலகெங்கும் ஆங்கிலதில் பதிவு செய்யப்பட்ட வரலாறு. அதை ஆங்கிலத்தில் படிக்கையில் நம்பகமாக இருக்கிறது. ஆனால் தமிழர்களின் இந்த பொறுக்கித்தன அரசியலால் என் உறவினர்களில் ஒருவரே பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது தமிழகம் முழுக்க இந்த வெண்தாடி வளர்த்தெடுத்த  கும்பலின் வெறியாட்டத்தை கற்பனை செய்தால் மனம் பதைக்கிறது. அதை தணிக்க ஆங்கில  வரலாற்று நூல்களே ஒரே தீர்வு. தமிழின் வரலாற்று நூல்களின் தரம் நமக்கு தெரிந்தது தானே!


சொல்ல மறந்துவிட்டேன். படம் முடித்து வருகையில் ஒவ்வொருவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி. நம் மக்கள் இப்படி கூட்டமாக மகிழ்ச்சியாக இருப்பதை கண்டாலே கடுங்கோபம் வருகிறது. இதுபற்றி ஜெயமோகனிடம் சீக்கிரம் எழுதி கேட்கவேண்டும்.


ராசு அண்ணன்:


நெருப்புடா
நெருங்குடா
பார்ப்போம்
அடங்குமா


நெருப்பு என்பது தணல். அனுகினால் தீக்காயம். அகன்றால் குளிர். அகலாது அனுகாது நின்றால் கதகதப்பு மட்டுமே மிஞ்சும். ஆனால் தீயில் விழுந்து வாழ்ந்து புரண்டவனுக்கே கணலின் வாட்டமும் கருகலும் அந்த வலி கொடுக்கும் குமைச்சலும் சுகமும். கபாலியின் துணையாளுக்கு துர்மரணம். சகியைப்பிரிந்த கபாலிக்கு தீக்கருக்கல் மீதநாள் முழுதும். இல்லாள் நீங்குவது காமத்துறப்பு மட்டுமல்ல. அந்த பிரிவு கொடுக்கும் துயர் தான் நெருப்புடா.


நெருங்குடா பாப்பம். எப்படி முடியும்?


ஒருத்தியை உடலோடும் உணர்வோடும் வாழ்ந்து பின் எப்படி எதுகொண்டு அந்த பிண்ணிய இழைகளை உடலே இல்லையெனினும் அறுப்பது? பாடல் கபாலி எதிர்நாயகனை துவைத்தெடுக்கும் நிகழ்வில் தான் ஒலிக்கிறது. ஆனால் அந்த வரிகள் இல்லாமல் ஆக்கப்பட்ட துணையை தேடி அலையும் களிரின் பிளிரலுக்கு ஒப்பானது. படம் பார்த்து வந்து முக்காலே வீசம் பகார்டி புட்டி தீர்ந்த பிறகும் உவப்பது கபாலியின் உடல்மொழியல்ல. அந்த பிணைவறுத்தல் கொடுத்த தீக்கருக்கல். சமயங்களில் கருகலும் கருக்கலும் மனிதனின் பலிவிழா கூட்டாஞ்சோறில் நிகழ்வது சுவைக்கேடுக்கல்ல. கூட்டல்.


அடங்குமா?தல தளபதி ரசிகர்கள்:


என்னது சூப்பர் ஸ்டார் பட்டமா? எங்காளுக்கா? அதை நாங்க பார்த்ததே இல்லயே!! அது ஏதோ கேக்கிலாமன் மேக்கிலான் கம்பேனி பேரு மாதிரி கேள்விப்பட்டதாவே இல்லையே.. விடுங்கப்பா.. இங்கன ஓரமா கொஞ்ச நாளைக்கு வெளையாண்டுக்கறோம்! ஹிஹி...


கமல் ரசிகர்கள்:


ம்..ம்ம்..ம்ம்ம்… இருக்கட்டும்யா… நாங்களும் ஆட்டத்தை வைச்சிக்கறோம். விஷ்வரூபம் 2 வரட்டும்!


ரஜினி ரசிகர்கள்:


தலைவா.. கொன்னுட்ட தலைவா… நீ அரசியலுக்கு வா தலைவா….


Add a comment...

Post has attachment

Post has attachment
அஷ்டே ஜிந்தகி :)
Photo
Add a comment...

Post has attachment
அய்யகோ ப்ளஸ்சு மக்களே

எனக்கு நடந்திருக்கும் இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா?!

மேயரய்யா... நீங்களாவது இந்த ஆளை தட்டிக்கேளுங்க

சித்தரே... இந்தாளுக்கு ஒரு சிறப்பு சூனியம் வைங்க...

இத்தனை நாள் என்னை ஒதுக்கிவைச்ச பழமையின் வன்கொடுமையை நான் கண்டிச்சு நான் இன்னைக்கு முட்டைபரோட்டா சாப்புட்டு உண்ணாவிரதம் இருக்கப்போறேன் :(((
Photo
Add a comment...

Post has attachment
அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்

இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு.

கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு.

என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அமைதியாக பங்கேற்றது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஊர்நிறைய தன்னிச்சையாய் வைத்த தட்டிகள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள். கட்சிக்காரர்கள் வைத்ததுபோக பள்ளிகள் கல்லூரிகள் ரோட்டரிகள் மற்றும் சின்னச்சின்ன பழக்கடை முடிதிருத்தகம் உட்பட. அவர்கள் எல்லாம் இந்த விளம்பர உத்தியில் எத்தனை ஆட்களைபிடித்து வியாபாரம் பெருக்குவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.

எளிய கிராமத்து மாணவர்கள்தான். நேற்றுவரையும் நாளையிலிருந்தும் மீண்டும் தல தளபதி ரசிகர்மன்ற குஞ்சுகளாக ஆகிவிடுபவர்கள்தான். இருபக்கமும் தன்னிச்சையாக ஒருமித்து நின்றவர்களும் அதே இலவசத்தில் அடித்துவீழ்த்திய சோற்றாலடித்த பிண்டங்கள்தான். நாளைமுதல் ஏன் இன்றைக்கே டாஸ்மாக்கில் கவிழப்போகிறவர்கள்தான்.இவர்கள் அத்துணைபேரையும் தான் இத்தனைநாள் இந்த அப்துல்கலாம் வான்வெளி விஞ்ஞானி என ஏமாற்றியிருக்கிறார். பலவருடமாக அணுசக்தி நிபுணராக நடித்திருக்கிறார். இந்தியாவை வல்லரசாக்கும் சிந்தனையாளர் என புளுகியிருக்கிறார். எந்தவித உயரிய சிந்தனைக்கூறுகளும் இல்லாமல் ச்சும்மா கனவுகாணுங்கள் என்று எளிய அருள்வாக்கு சொல்லும் காலிப்பெருங்காய டப்பாவாக வாழ்ந்திருக்கிறார். தமிழருக்கு எந்தவித நலனும் செய்யாத கள்ள ஊமையாக வாழ்நாளெல்லாம் மக்களை ஏமாற்றியிருக்கிறார். நாடுமுழுவதும் உள்ள உயர்தர காண்வெண்ட் பள்ளிகளுக்கும் மேன்மக்கள் கல்லூரிகளுக்கும் மட்டும் தேடித்தேடி அவராகவே சென்று எதையாச்சும் அர்த்தமில்லாமல் பேசி ரிடையரானபின்பும் பணவெறியில் சம்பாதித்து இருக்கிறார். குண்டுவைக்கும் இஸ்லாமியர்களை அவர்கள் தீவிரவாதிகள் மட்டுமே என அழுத்திச்சொல்லும் ஒரு சில இஸ்லாமியர்கள் திடீரென இறந்த இந்தியர் கலாம் ஒரு இஸ்லாமியர் என கண்டுபிடிக்கும்படி தந்திரமாக நடந்துகொண்டிருக்கிறார். மொத்தத்தில் வாழ்நாளெல்லாம் எவ்வளவு கடின மனதுடன் அளவிளா திறமையுடன் அவர் நடித்திருந்தால் இத்தனை எளிய மக்களை அவர் வாழ்நாள் முழுதும் ஏமாற்றியிருக்கவேண்டும். நல்லவேளை! இன்றைக்கு இந்த நடிப்பையெல்லாம் அவர் இறந்த வேளையில் மிகச்சரியாக கண்டறிந்துசொன்ன நம் அறிவுசார் ஜேம்ஸ்பாண்டுகள் மட்டும் இல்லையெனில் நாமெல்லாம் கலாமின் அற்புத நடிப்பில் இன்னமும் ஏமாந்து வாழ்விழந்து ஊக்கம் சிதைந்து மொத்தமாய் சீரழிந்துபோயிருப்போம்!


அமைதியான பேரணிமுடிவில் இப்பவெல்லாம் எந்த தலைவருக்கும் இதுமாதிரி மக்களே இறங்கி செய்யமாட்டாங்க என்றேன். ஒரு பெருசு பதினைஞ்சுவருடம் முன்ன இதேபோல் நடந்திருக்கிறது என்றார். மருத்துவம் பார்க்க ரெண்டுரூபாயும் மூனுநாள்வைச்சு பிரசவம் பார்க்க பதிநாலு ரூவாயும் கட்டணமாக பெற்ற லட்சுமிநாராயணன் என்றொரு தேர்ந்த நடிகர் மருத்துவராக செம்மையாக நடித்துக்கொண்டு இருந்தாராம். அவர் மறைவுக்கு பாவம் இந்த மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார ஏமாளிமக்கள் முழுவதும் அவர்களாகவே ஒரு நாள் கடையடைத்து மவுன ஊர்வலம் சென்று அவருக்கு சிலையும் வைத்துவிட்டார்கள் என்றார்.

இன்றைக்கு இறப்பை இத்தனை ஆராய்ச்சி செய்யும் அறிவுசார் சுடர்களே, கடனேன்னு இரங்கல்செய்தி கொடுக்கும் மக்கள் தலைவர்களே, நீங்களும் உங்கள் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் உண்மைகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் இதே எளிய பொதுப்புத்தி மக்களிடம் தானே சேர்ப்பிக்க ஏற்றுக்கொள்ளவைக்க உணரச்செய்ய போராடுகிறீர்கள்? இந்த ஏமாளிமக்கள் இந்த சின்ன உணர்வுப்பிரட்டலில்தானே ஒருபக்கமாய் மாக்கள்போல சாய்கிறார்கள். இந்த சாய்வுதானே தேர்தலில் ஓட்டுகளாக மாறுகிறது? வாக்களிப்புமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள் மட்டுமே அரசியல் அதிகாரம் பெறும் வழிமுறை கொண்ட நம் நாட்டில் மக்களை உங்களுக்கும் இப்படி உணர்வுபூர்வமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் உங்களுக்கு உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது? நீங்களெல்லாம் ஏன் கலாமின் ஏமாற்று நடிப்பை காப்பியடித்து அவர் இப்பொழுது பெற்றிருக்கும் பலனை பெறக்கூடாது? இதுவரை உங்களுக்கு கிடைக்கப்பெறாத எளிய ஏமாளிமக்களின் ஆதரவை மொத்தமாய் அள்ளிக்கொள்ள கலாம் இதுவரை செய்த ஏமாத்து சித்துவிளையாட்டு நடிப்பை கொஞ்சநாளைக்கு செய்துபார்க்கக்கூடாது? வாழ்நாளெல்லாம் அந்த ராமேஸ்வரத்து கிராமத்தானால் விஞ்ஞானியாக ஜனாதிபதியாக கல்வியாளராக மாணவர்களை விரும்பும் நேயராக வெற்றிகரமாக நடித்து ஏமாற்றமுடியுமெனில் பலதளங்களில் அறிவுகொண்ட பல அரசியல்களம் கண்ட உங்களால் ஏன் இதேபோல் நடித்து நீங்கள் விரும்புவனவற்றை அடைய முடியாது? நாம்தான் இறப்பிலும் கூட ஆதாயம் தேடும் மேன்மக்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அந்த ஆளின் நடிப்பு இவ்வளவு பெரிய ஆதாயத்தை தருமெனில் ஏன் பாய்ந்து அந்த வித்தையை நீங்கள் கைப்பற்றக்கூடாது?

தமிழகம் மட்டுமல்ல... அறிவுசார் மேன்மக்களின் பார்வையில் தெரியும் பொதுப்புத்தி மக்களெல்லாம் வெள்ளிப்பாத்திரம் போன்றவர்கள். தினப்படி சூழலும் கிடைக்கும் வழிகாட்டிகளும் தலைவர்களும் ஊடகங்களும் அவர்கள்மீது கருமையை படரவிடுகின்றன. கார்கில் பூகம்பம் நிலநடுக்கம் மற்றும் கலாம் போன்றவர்கள் மறைவு விபூதிபோட்டு தேய்ச்சாப்படி வெள்ளிப்பாத்திரங்களை பளிச்சுன்னு ஆக்கிருது. அதுவும் கொஞ்சகாலத்துக்குதானே நிற்கும்? அப்பறம் அதே மாசுபட்ட வியாபார ஊடக அரசியல் சூழலில்தானே வாழ்கிறோம்.
நல்லதோ கெட்டதோ நம்மை கிளப்பிவிட அடுத்த விபூதிப்பூச்சுக்கு காத்திருக்கவேண்டியதுதான்.

அந்த விபூதிப்பூச்சு வித்தையையாவது இந்த வாய்ப்பில் கற்றுக்கொண்டு அடிக்கடி செயல்படுத்தி பொதுமக்களை வளைத்தெடுத்து உடனடி பலன்பெறுங்கள், இன்றைக்கு கலாம் பலதுறைகளில் ஒரு தேர்ந்த நடிகர் என கண்டறிந்து எங்களுக்கு அறிவித்த அறிவுசார் கண்திறப்பாளர்களே!

Photo
Add a comment...
Wait while more posts are being loaded