Profile cover photo
Profile photo
Selvam M
1,720 followers -
A human
A human

1,720 followers
About
Selvam's posts

யாதும் டிவிடி கிடைச்சாச்சு :-)

Gowri !!!!

Post has shared content
ஏனா தானா
________________

நமக்கும் கவிதை வரும் என்று நம்பி, வரிகளை ஒடித்துப்போட்டு அவ்வப்போது எதையோ எழுதிக்கொண்டு இருந்தேன். இப்போது கூச்சமாய் இருக்கிறது. 

“நீயா? நானா?” எல்லாம் கிடையாது, நானேதான் என்று அடித்தாடும் வழக்கமுள்ளதொரு நிகழ்ச்சியில், ‘விஜய்’ தொலைக்காட்சியில், ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் கட்சி பிரிக்கப்பட்டு ஆடிய வாய்ச்சண்டையில், நான் மெர்சல் (மிரளல்) ஆனதே மிச்சம்.

வெளியூரிலிருந்து ஒரு கவிதாயினி என்னைத் தொலைவிளித்தார், “இந்த நிகழ்ச்சியைத் தவறவிடாமல் பாருங்கள், கவிதை என்றால் இன்னதுதான் என்கிற தெளிவுகிட்டும்.”

அதே கவிதாயினியை மறுநாள் விளித்து, “பரப்பப்பட்ட எடிட்டட் வெர்ஷன் உங்களுக்குப் பிடித்திருந்ததா?” என்று அறிய விழைந்தேன். அவர் புலம்பித் தீர்த்துவிட்டார். நிரம்ப வெட்டு வாங்கியிருப்பார் போல. 

“வேய், நீரு வ.உ.சி.க்க உயிலு படிச்சிருக்கேரா? படிச்சா கண்ணீரு வந்திரும்வே. இப்பம் கொஞ்ச நாளாட்டு அவரையும் வெள்ளாளனா ஆக்கிப் போட்டானுவோ! இப்பம் அப்படீல்லா... காமராசரு நாடாரு, மகாத்மா காந்தி வாணியச்செட்டி. லல்லு பிரசாத் கோனாக்கமாரு, ஜெயில்சிங் ஆசாரி...” என்பார் நாஞ்சில் நாடன் தனது ‘கும்பமுனி முறித்த குடைக்காம்பு’ கதையில். 

நாஞ்சில் நாடன், மிகுதியும் கதை எழுதியதாலோ அல்லது சாதிக்காரர்களிடமிருந்து தள்ளி இருந்ததினாலோ, தப்பித்துவிட்டார். வண்ணதாசனும் கலாப்ரியாவும் சிக்குப்பட்டுவிட்டார்கள். இவர்கள் பெயர்களைத் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள் இருவர் - இரண்டே இரண்டுபேர். ஆனால் இவர்களின் கவிதைகளிலிருந்து இரண்டிரண்டு வரிகளை எடுத்துக்காட்ட மதியில்லை. 

பாவம் மனுஷ்யபுத்திரன், அவருக்கும் நிறைய வெட்டு விழுந்தது போலும்! இருந்தாலும், தான் எழுதும் மொட்டைக் கவிதைகளை நியாயப்படுத்தும் வகையில், அணியிலக்கணம் பேணாமையே இந்நூற்றாண்டுக் கவிதை என்று சும்மா அடித்துவிடுகிறார். ஆனால், அந்தோ! அடுத்து வந்த எடுத்துக்காட்டிலேயே ஒருவர், சரக்குந்துக் கிளியின் (கிளீனர்) வழிகேட்டு வெளிநீட்டப்படுகிற கை தன் அசைவினால் ஒரு பறவை ஆகிற, இசையின் அணிஇலக்கணக் கவிதையை எடுத்துக்காட்டி அவரைக் கவிழ்த்துவிடுகிறார். 

எதிர்வினைகளைப் பதிவுபண்ணாத திரைமொழி உண்டோ? உண்டென்று தெளிவதற்கு ‘விஜய்’ தொலைக்காட்சியின் “நானே நான்தான்” பாருங்கள்! விளம்பரம் தேடிவந்து வாடிநொந்த முகங்களுக்கும்.

எழுதக்கூடாது என்றுதான் எண்ணியிருந்தேன். நாஞ்சில்நாடனைப் பற்றியொரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில் இது உப-சரக்காக வந்துவிட்டது. மன்னிக்கவும்!

//There’s a term called “Free Range Kids.” I’m a little out of the loop on pop culture but as I understand it, this describes kids who are given extensive freedom to explore the world at their pace, with guidance but a minimum of oversight. That describes us and a lot of other cruising families pretty well. We give them a great deal of independence: it’s typical to drop them off a nearby beach for the afternoon, to make their own fun. We’re in radio range, they have a handheld VHF, and unless someone is bleeding we don’t need to be contacted. And they’re FINE. They exercise ingenuity and imagination.//

http://www.sailingtotem.com/2015/04/free-range-cruising-kids.html

Post has shared content
By ரசூல் அஹமது அப்துல் காதர்

அய்யா. மானமிகு.சுபவீரபாண்டியன் அவர்கள் ஆசிரியராக மாதம் இருமுறை வரும் கருஞ்சட்டைத் தமிழர் எனும் பத்திரிக்கையில் 2ஜி அலைக்கற்றை வழக்குத் தொடர்பாக “கனவினால் ஒரு மாளிகை…. காற்றிலே மணி மண்டபம்! எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்கள் அந்த கட்டுரையை இங்கு அப்படியேப் பதிவிட்டுள்ளேன்...

தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், மேனாள் மத்திய அமைச்சர் அண்ணன் மானமிகு.ஆ.இராசா அவர்களின் மீதும் அவதூறு பேசி வரும் ஊடக நடுநிலையாளர்களே தயவு கூர்ந்து இதைப் படித்துப்பாருங்கள்….!!.

தில்லியில் நடைபெற்ற 2ஜி, 3ஜி அலைக்கற்றை ஏலம் பத்தொன்பது நாள்களுக்குப் பிறகு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இறுதியில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடியில், கடந்த மார்ச் 25ஆம் தேதி ஏல விற்பனை முடிந்திருக்கிறது.

இது வெறும் செய்தி அன்று, இதற்குள் மிகப்பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது. இதே அலைக்கற்றை விற்பனையை வைத்துதான் 1.76 லட்சம் கோடி ஊழல் என்று சொல்லி, தி.மு.க.வுக்கு எதிரான ஒரு பெரும் சூறாவளியைச் சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்கள் உருவாக்கின. முன்னாள் நடுவன் அமைச்சர் ஆ.இராசா பதினைந்து மாதங்கள் திகார் சிறையில் இருந்தார். அதே வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னமும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதலில் இதனை ஊழல் வழக்கு என்று சொல்லுவதே மோசடியாகும், பெங்களூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குதான் ஊழல் வழக்கு. நம் ஊடகங்கள் அதனை சொத்துக்குவிப்பு “ஊழல்” வழக்கு என்று சொல்லுவதில்லை. சொத்து குவிப்பு வழக்கு என்று மட்டுமே கூறுவார்கள். அதிலும் தந்தி தொலைக்காட்சியோ, ‘சொத்து வழக்கு’ என்று மிகக் கவனமாக சொல்லும்.

2ஜி அலைக்கற்றை வழக்கு என்பது, அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய வருவாய் இழப்புக் குறித்துத் தணிக்கையாளரின் எதிர்குறிப்பினால் (Adult objection) எழுந்த வழக்கு. இதுபோன்ற தணிக்கையாளர் எதிர்க்குறிப்புகள் பல அரசுகளின் மீது, இன்றும் இருக்கவே செய்கின்றன. பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்தும் இரு எதிர்குறிப்புகள் இருக்கின்றன். டாடா நிறுவனம், நானோ கார்கள் தயாரிப்பதற்க்கு நிலம் வழங்கியது தொடர்பாகவும், சபர்மதி ஆற்றின் கரையோரம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்க்கு பல ஏக்கர் நிலத்தை அளித்தது தொடர்பாகவும் தணிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் அதன் அடிப்படையில் மோடியோ அல்லது வேறு மாநில அமைச்சர்களோ கைது செய்யப்படவில்லை. ‪#‎திமுகவினருக்கு_மட்டும்_இந்நாட்டில்_சில_தனிச்சட்டங்கள்_இருக்கின்றன_போலும்‬.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தீர்ப்பு வரும்வரை ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாத நிலையில், ஆ.இராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகளும், ஊடகங்களும் குரல் எழுப்பினார்கள். நீதிபதி கங்குலி, அமைச்சராக ஆ.இராசா இருந்ததை ஒருபோதும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார். பிறகு, ஒரு பாலியல் வழக்கில் அதே கங்குலி குற்றம் சாற்றப்பெற்று பதவி விலகினார்.

இத்தனை கலவரங்களை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கு என்ன என்பதை இன்றும் கூட முழுமையாக விளக்குவதில்லை. ஆ.இராசா அமைச்சராக இருந்தபோது, 52.7(MHz)) மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மட்டுமே விற்பனையானது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் 267.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு மொத்தம் 14.98 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. தலைமை தணிக்கையாளர் வினோத்ராய் அவராக ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தார். அலைக்கற்றையை ஏலத்திற்க்கு விட்டிருந்தால், ஒரு MHz 3,350 கோடிக்கு விலை போயிருக்கக்கூடும் என்றார். அவ்வளவு விலைக்கு விற்பனை ஆகி இருக்கும் என்பதற்க்கு எந்தச் சான்றும் இல்லை. அது அவருடைய கற்பனை அவ்வளவுதான்! அந்த கற்பனையின் அடிப்படையில் கட்டப்பட்ட மாளிகைதான் 1.75 லட்சம் கோடி (52.7* 3,350=1.76,545).

இப்போது அலைக்கற்றைகளின் பயன்பாடு பன்மடங்கு கூடியிருக்கிறது. கைத்தொலைப்பேசி இல்லாதவர்கள் கையில்லாதவர்களாகப் பார்க்கப்படும் காலம் இது. எனவே அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 380.75MHz அலைக்கற்றைகள் விற்பனையாகி உள்ளன. ஆம், தணிக்கையாளர் வினோத்ராய் கூறியப்படி ஏலம்தான் விடப்பட்டுள்ளது. அப்படியானால் 3,350 கோடிக்கு குறையாமல் ஒரு MHz அலைக்கற்றை விலைப்போயிருக்க வேண்டும். அப்படி ஏலம் நடந்திருக்குமானால் (380.75*3,350), மொத்தம் 12.75 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் வந்திருக்க வேண்டும். ஆனால் வந்திருக்கும் மொத்தத் தொகையோ 1.09 லட்சம் கோடிதான். ஆக, ஒரு MHz அலைக்கற்றை 289 கோடிக்குத்தான் விற்பனையாகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

3,350 கோடி எங்கே, 289 கோடி எங்கே? அன்றைக்கு 2ஜி ஊழல் வழக்கு என்றார்களே இன்றைக்கு 3ஜி ஊழல் வழக்கு என்று சொல்ல வேண்டாமா? அன்றைக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கு என்றார்களே, இன்றைக்கு 12.75 லட்சம் கோடி ஊழல் வழக்கு என்று சொல்ல வேண்டாமா?

இன்னமும் சொல்லப்போனால், மேற்காணும் கணக்கே கூட, சற்று குறைவான மதிப்புடையதுதான் 3,350 கோடிக்கு விலைபோயிருக்கும் என்று வினோத்ராய் போட்ட கணக்கே ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முந்தையது. இன்றைக்கு அதன் மதிப்பு பன்மடங்காக கூடியிருக்காதா? மேலும் அன்றைக்கு ஏலம் விடப்பட்டது 2ஜி அலைக்கற்றை மட்டுமே. இன்று 3ஜி அலைக்கற்றை விற்பனையும் சேர்ந்து இருக்கிறது. எல்லாவற்றையும் கற்பனையில் கணக்குப்போட்டுப் பார்த்தால் 20 லட்சம் கோடிக்கு மேலே வரும். நாமும் கனவில் ஒரு மாளிகை கட்டி, கற்பனையில் மணிமண்டபமும் கட்டலாம்.

ஆ.இராசா அமைச்சராக இருந்தபோது அவர் செய்த இன்னொரு மக்கள் தொண்டினை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அன்று Roll out obligation என ஒருத் திட்டத்தை அவர் கொண்டுவந்தார். அதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் நிறுவும் அலைக்கற்றை கோபுரங்களில் பத்து விழுக்காட்டினை கிராமங்களில் அமைக்கவேண்டும் என்பது. அப்படி அமைத்தால்தான் அலைக்கற்றையே வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன் பொருட்டு ஒவ்வொரு நிறுவனமும் கிராம மக்களையும் கைத்தொலைப்பேசிகளை பயன்படுத்துகிறவர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டு தொலைபேசி கட்டணங்களை வெகுவாக குறைக்கப்பட்டன. ஒரு நிமிடத்திற்க்கு 10 காசுகள் வரை அவர்கள் இறங்கி வருவதற்க்கு இதுவே அடிப்படைக் காரணம்.

இப்போது, அவர்கள் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். எந்த கட்டளைகளையும் இனி அவர்கள் மீது திணிக்க முடியாது. தொலைபேசி கட்டணங்கள் ஏறுவதையும் தடுக்க முடியாது. விரைவில் தொலைபேசி கட்டணங்கள் உயர் இருக்கின்றன என்பதை, தொலைத் தொடர்பு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் வெளிப்படையாகவே அண்மையில் ஒரு நேர்காணலில் (Economic Times Now, 22.01.2015) குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொலைப்பேசிகள் வெகுமக்களை சென்றடைந்தும், அவற்றுக்கான கட்டணங்கள் மிகக் குறைவாக இருந்தும் ஆ.இராசா அமைச்சராக இருந்த நேரத்தில்தான் இது ஆ.இராசா எனும் தனிப்பட்ட பெருமையன்று. அவர் கழகத்தின் உறுப்பினர் கலைஞரின் தம்பி என்பதே குறிப்பிடத்தக்கது. என்றைக்கும் எவர் ஒருவரின் சாதனையும், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் சாதனையாகவே பார்க்கப்பட வேண்டும் ஆகவே அன்று மத்திய அரசில் திமுகழகம் செய்த சாதனையை, சாதனையாக காட்டாமல் மக்களிடம் வேதனையாக காட்டினார்கள், எதிர்கட்சிகளும், ஊடகங்களும்.

அவர்கள் கற்பனையில் கட்டிய கோபுரங்கள் அண்மையில் நடந்து முடிந்த ஏலத்திற்க்குப் பிறகு, உடைந்து, தகர்ந்து, நொருங்கிப்போயின.

இவ்வாறு கட்டுரையில் அய்யா மானமிகு. சுப வீர்பாண்டியன் அவர்கள் குறீப்பிட்டுள்ளார்கள் இந்தப் பத்திரிக்கையை என்னைப் போன்ற கழக நண்பர்களின் கையில் தவழவிட்ட எங்கள் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு,சிவசங்கர் எஸ்.எஸ். அவர்களுக்கு நன்றி.! நன்றி..!! நன்றி…!!

Post has shared content
Thuglife diving....


#funny #diving #thuglife #lol #cool #gif
*********************************************
Blackberry Group SMS Software sends standard as well as notification text messages from computer without having any internet gateway. Visit www.mobiletextsms.com/mobiletextsms/blackberrymobile.html to download SMS Software for blackberry mobile phones.
Animated Photo

Post has shared content

Post has shared content
அதிமுக ஆதரவோடு மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திருவாரூரில் கலந்துகொண்டு உரையாற்றிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், மீத்தேன் திட்டத்திற்கு எதிரான தனது கருத்தையும் திமுகவின் நிலைப்பாட்டினையும் தெள்ளத்தெளிவாக எடுத்துறைத்து விட்டார். 

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை திமுக எதிர்ப்பதாகவும் அதற்காக போராட்ட களத்தில் இறங்கவும் தயாராக இருப்பதாகவும் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கின்றார். மேலும் கடந்த திமுக ஆட்சியில் அத் திட்டம் பற்றிய ஆய்வுப் பணிகளுக்காக மட்டுமே... அதாவது அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதையும், அதையும் விவசாயிகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் எந்த வகையிலும் இதனால் பாதிப்பு வருமா? என்ற ஆய்வை நடத்திட வேண்டும் என்ற இன்னும் சில நிபந்தனைகளுடனும் தான் ஆய்வுப்பணிக்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் மிகத் தெளிவாக தளபதி கூறியிருக்கின்றார். 

இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், ஒரு திட்டம் நல்லதா? கெட்டதா? என்ற ஆய்வுப்பணிக்காக முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டதையே பிடித்துக்கொண்டு, இவ்விஷயத்தில் திமுக துரோகம் செய்துவிட்டதாக பரப்புரை செய்கின்ற சில அதிமுக கைக்கூலி அமைப்புக்கள்...  அப்பொழுதே.... அதாவது திமுக இந்த ஆய்வுப்பணிக்கு அனுமதி வழங்கிய போதே.....   இத் திட்டம் மக்களுக்கும், விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஆபத்தானது என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்டம் நடத்தியிருக்கின்றார்களா?????

இல்லையே....!!!

அப்பொழுது வைக்கோ இதற்கு எதிராக போராட்டம் நடத்தினாரா? இல்லையே...!  மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு அப்பொழுது ஏற்படுத்தப்பட்டதா? இல்லையே...!!!

யாரும் அப்பொழுது அதை ஏன் எதிர்க்கவில்லை?

காரணம்.... அப்பொழுது யாருக்குமே இத் திட்டத்தில் இவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதன் பாதிப்புக்கள் தெறியவர, கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புகள் வர ஆரம்பித்து, அது வலுப்பட துவங்கி, இப்பொழுது போராட்டங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. 

இதேப் போன்று தான் அப்பொழுது திமுகவுக்கும் இது பற்றிய பாதகங்கள் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது தெரிந்தவுடன், அத்திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றம் துவங்கி மக்கள் மன்றம் வரையிலும் போராட களமிறங்கி விட்டது. இத் திட்டதிற்கு எதிராக திமுக களமிறங்கியிருப்பது இத்திட்ட எதிர்ப்பாளர்களுக்கு மிகப் பெரும்பான்மையான பலத்தை மட்டுமன்றி, உண்மையான பலத்தையும் கொடுத்திருக்கின்றது. 

ஆகவே இத்திட்டத்தை உண்மையிலேயே எதிர்ப்பவர்கள், திமுகவை விமர்சிப்பதை தவிர்த்து விட்டு, திமுகவோடு இணைந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.  

Post has shared content
Wait while more posts are being loaded