Profile cover photo
Profile photo
பாலகுமார் விஜயராமன்
1,959 followers
1,959 followers
About
Posts

Post has attachment

//அவனது பார்வை தீர்க்கமாக நிலைத்திருந்தது. நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது சிறிய மகனின் வாழ்வு அந்தப் பறவைகள் முடிவெடுப்பதில் இருப்பதாக நம்பினான்.

“புறாக்கள் விலகிச் செல்கையில், துரதிர்ஷ்டம் விரைவாகப் பின்தொடர்கிறது.”//

தற்பொழுது மொழிபெயர்த்து முடித்திருக்கும், கோய்லோ நேட்டோவின் பிரேசிலியன் சிறுகதையான “புறாக்கள்” - அதிலிருந்து சில வரிகள்

Post has attachment
வனத்திலிருந்து வெளியேறியதில் ஒருவித விடுதலை உணர்வு தோன்ற, வெளிச்சக்கீற்றினூடே வேகமாக நடக்கிறேன். வழியின் நடுவே கரிய குன்று போல் ஏதோ தடுக்க, தடுமாறி அப்படியே திகைத்தபடி நிற்கிறேன். பார்வைக்கு மிக அருகே, இரு யானைகள் மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கின்றன. நான் அசைவற்று, சிறு சத்தமும் கொடுக்காமல், அவற்றின் ஆக்ரோசத்தை, கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவற்றின் இயக்கத்துக்கு இடையூறாக சிறு ஒலி எழுந்தாலும் , அவற்றின் கோபம் என் மீது திரும்பி விடும் என்ற நிலையில்....
//மேலும் வாசிக்க//

Post has attachment
//வாழ்க்கையின் அதன் போக்கில், மகிழ்வாக வாழ நினைக்கும் இளைஞன் காட்டுவா. நண்பர்களின் தூண்டுதலினால் “செய்கை” செய்து ஏரியாவுக்குள் ”பெரிய கையாக” தலையெடுக்க முனைகிறான். அது கைகூடாமல், போலீஸில் மாட்டிக் கொள்ளும் நிலை வரும் போது, தப்பித்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆண்டுகள் பல சென்ற பின்....//
எழுத்தாளர் அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” நாவல் குறித்த எனது கட்டுரை “கோரிப்பாளையத்தின் கதை” இந்த “சொல்வனம்” இதழில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசிக்கலாம்.
http://solvanam.com/?p=50553

10 வட்டிக்குப் பணம் என்பதும், 10 சதவீத வட்டிக்குப் பணம் என்பதும் வேறு வேறு.

10 வட்டி என்றால் மாதத்திற்கு, 100 ரூபாய்க்கு 10 ரூபாய் வட்டி, அப்படியென்றால், வருடத்திற்கு 10x12=120 சதவீத வட்டி. அதாவது நீங்கள் வாங்கும் 100 ரூபாய் கடனுக்கு வருடம் முடிவில் கொடுக்க வேண்டிய தொகை, அசல் ரூ. 100, வட்டி ரூ. 120, ஆக மொத்தம் ரூ. 220 (இதில், மாதம் மாதம் வட்டியான ரூ.10 ஐ செலுத்த வேண்டும், அசல் அப்படியே நிற்கும். ஒரு மாதம் வட்டி கட்டாவிட்டால், அந்த மாத வட்டி ரூபாய் 10, அசலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு அசல் ரூ 120 ஆகிவிடும், அடுத்த மாதத்தில் இருந்து வட்டி ரூ. 12 கட்ட வேண்டி வரும், இது தான் கந்துவட்டி. இதையே மாதக் கணக்கிற்கு பதிலாக, வாரக்கணக்கு நாள்க்கணக்கு, மணிக்கணக்கு என்ற ரீதியில் வட்டிக்கு விடுபவர்களும் உண்டு. அதற்கு மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று என்னென்னமோ பெயர்கள் உண்டு)

அதுவே, 10 சதவீத வட்டி என்பது வருடத்திற்கு ரூ.100க்கு ரூ 10 வட்டி. ஆக, வருடம் முடிவில் கொடுக்க வேண்டிய தொகை, அசல் ரூ. 100, வட்டி ரூ. 10, ஆக மொத்தம் ரூ 110. இது வங்கிகளில் உள்ள நடைமுறை.

#10சதவீதம் கந்துவட்டி, 28சதவீதம் ஜி.எஸ்.டி, அவ்வளவு தான் பொருளதாரம் என்று கம்பு சுற்றும் பொருளாதார நிபுணர்களே, தயவு செய்து கருணை காட்டுங்கள் !

Post has attachment
மலைகள் இதழில் வெளியாகியுள்ள எனது சிறுகதை "கனவுகள் விற்பனைக்கு". நண்பர்கள் வாசிக்கலாம்.

தன் முட்டை இந்த நிலத்தில் தான் கருத்தரிக்கும் என்று அறிந்து, கண்டம் விட்டு கண்டம் தாண்டி, பல நூறு மைல்கள் சலிக்காமல் பறந்து தன் அடுத்த தலைமுறையை தாய்மண்ணில் உருவாக்கி, அதற்கு தன் நிலத்தின் தானியங்களையும் தண்ணீரையும் உண்ணக்கொடுத்து, பின் பிழைப்புக்காக மீண்டும் அயல்தேசம் ஏகும் வலசைப் பறவை, ஒரு பருவத்தை நினைவிலும், அடுத்த தலைமுறையை கக்கத்திலும் சுமந்து செல்கிறது.

குஞ்சுக் குளுவான்களோடு பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் காத்திருந்து, ஒருவழியாய்ப் பயணித்துச் சொந்த ஊரைத் தொட்டுப் பார்த்துவிட்டு வரும் குடியானவனுக்கும், இங்கே அவர்களின் இரண்டு நாள் இருப்புக்காக வருடம் முழுதும் காத்துக்கிடக்கும் தாய் மண்ணுக்கும் உள்ள பந்தம் அத்துப் போகாமல் இருக்கும் வரை, பண்டிகைகள் அழகாகத்தான் இருக்கும்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் !

Post has attachment
”போஸ்டிங் இலவசம், டிராஸ்ஃபர் காசு” – இது தான் நாவலின் கரு. மனசாட்சிப்படி, வாங்குகிற சம்பளத்திற்கும், ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியப்பணிக்கும் உண்மையாய் இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் மாணவர்களிடம், தன்னால் ஆன மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வர முயற்சிக்கிறார், ஆசிரியை ராஜலட்சுமி. அவரின் அன்றாட ஆசிரியப்பணியின் நேர்க்கோட்டுச் சித்திரம் தான் “கரும்பலகை” நாவல். பள்ளிக்கு வந்து போகும் போக்குவரத்து தூரத்தைக் கடக்கவே தங்கள் மொத்த சக்தியையும் இழக்கும் இன்றைய அரசுத் துறை ஆசிரியர்களின் பிரச்சனையைப் பேசுகிறது நாவல். நாடகத்தன்மையோ, மிகையுணர்வோ துளியும் இன்றி, நிஜத்தில் பணபலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத ஒரு சாதாரண அரசுத்துறை ஆசிரியர் படும் கஷ்டங்களைத் தத்ரூபமாக சித்திரித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா.

மேலும்...

Post has attachment
தமிழகத்துக் கல்விமுறை என்பது மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது, பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவனும் தொடர்ந்து எட்டாவது வரை பள்ளிக்கு வந்து, தொடர்ச்சியாக கல்விச் சூழ்நிலையில் இருந்து, முடிந்தமட்டும் கற்று, தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ள வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால், அவனைக் கல்விச் சூழலில் இருந்து விலக்கி, வொர்க் ஷாப் வேலைக்கோ, களையெடுக்கவோ அனுப்பி விடாமல், அடுத்த மாதமே மறு தேர்வு வைத்து, அந்த கல்வியாண்டே அவனுக்கு அடுத்த வகுப்பில் படிக்க வாய்ப்பு வழங்குவது.

மேலும்...

”இந்த மாதத்தில், நான்கு வெள்ளிக்கிழமை. இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய நிகழ்வு, அதிகமாகப் பகிரவும்” அப்படினு போட்டாலே, பதட்டமாயி ஆயிரக்கணக்குல ஷேர் செய்கிற கலாச்சாரம் நம்மது. இணையத்தில் வந்தால், அது உண்மை தான் என்று நம்புற பெருங்கூட்டம் இங்க இருக்கு. இப்படியான விஷயங்களின் துவக்கப்புள்ளி, நல்லா எழுதத் தெரிஞ்சவங்க கிண்டலுக்கு எழுதுறேனு ஆரம்பிக்குறது தான். அதுவே, ஒரு கட்டத்துல உண்மை மாதிரி பெரும் அளவுல பரப்பப்படுது. இப்போ அப்துல் கலாமுக்கு அடுத்து, ராம்நாத் கோவிந்த் ஐயா வாழ்க்கைச் சித்திரமும் வர ஆரம்பிச்சுடுச்சு. எதுல போய் முடியுமோ, தெரியல.

நுட்ப பகடியெல்லாம், தமிழ் சமூகத்துல ஃபுல்லுக்குத் தாங்காதுங்கய்யா. பார்த்து செய்ங்க !
Wait while more posts are being loaded