Profile

Cover photo
B R Murali Krishnan
Lives in Chennai
207 followers
AboutPosts

Stream

B R Murali Krishnan

Shared publicly  - 
 
Free PowerPoint Templates Slides
Every week we will be publishing free PowerPoint Templates Slides for You to download.
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
With Summer quickly coming to an end, I am pulling out all of the photos from my summer parties I haven't shared yet! Do you remember that darling Pink Flamingo Baby Shower I co-hosted for my sister back in June? Well, I knew I was going to have some GORGEOUS flowers leftover, so I planned a ...
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
 
1937ஆம் ஆண்டு பிறந்த லூ ஹோல்ட்ச் முன்னாள் அமெரிக்க கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர். மேலும், இவர் மிகச்சிறந்த கால்பந்து விளையாட்டு ஆய்வாளரும் கூட. இவரது பயிற்சியளிக்கும் முறை மற்றும் வீரர்களை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை இவருக்கு சிறந்த பெயரைப் பெற்றுத்தந்தன.

ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களிடையே உரையாற்றுபவர். சுயமுனேற்ற புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். கௌரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

* ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது தோல்வியை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறன்; அதிலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

* நமக்கான எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே உள்ளன, சில நேரங்களில் அவற்றை நாம் சரியாக அங்கீகரிப்பதில்லை.

* அனைவரின் வாழ்விலும் துன்பம் வந்து செல்கிறது, அதிலிருந்து எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்பதே விஷயம்.

* நேற்றைய செயல் உங்களுக்கு பெரிதாக தெரிந்தால், இன்று நீங்கள் எதையும் செய்யவில்லை என்று அர்த்தம்.

* உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்; 80% பேர் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை மற்ற 20% பேர் அதை எண்ணி மகிழ்ச்சி அடைவர்.

* இந்த உலகில் எதுவும் சாத்தியமற்றதல்ல என்பதை உங்கள் மனதில் நிறுத்தி நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தால் எல்லாம் சாத்தியமே.

* வாழ்க்கையானது, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம், அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு சதவீதம்.

* வெற்றியாளர்கள் கடின உழைப்பை வெற்றியாக மாற்றக்கூடியவர்கள், தோல்வியடைந்தவர்களோ அதை தண்டனையாக பார்ப்பவர்கள்.

* ஒரு செயலைச் செய்வதற்கு உங்களிடமுள்ள சக்தியே திறன்; என்ன செய்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது ஊக்கம்; அதை எவ்வளவு நன்றாக செய்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பது அணுகுமுறை.

* வெறும் பேச்சினால் நான் ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, கேள்விகளை கேட்கும்போது மட்டுமே விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

Source:- http://tamil.thehindu.com/business/business-supplement/வெற்றி-மொழி-லூ-ஹோல்ட்ச்/article7651426.ece
 ·  Translate
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
 
30 வயதுக்குள் சி.இ.ஓ ஆக 3 வழிகள் !
------------------------------------------------------------------------
1980க்கு பின் பிறந்தவர்களை மில்லினியல் என்று கூறுவார்கள். 30 வயதுக்குள் இருக்கும் மில்லினியல் ஒருவர்,  "நான் புதுசா ஒரு கம்பெனி தொடங்கி, அதோட தலைமை நிர்வாகி ஆகப்போறேன்!"னு சொன்னா, "தம்பி இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாதீங்க... ஒழுங்க ஏதாவது ஒரு கம்பெனில போய் வேலையப் பாருங்க...!" அப்படின்னு உங்களோட நெருங்கிய நலம் விரும்பி யாரேனும் சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் உலகில் எல்லாமும் சாத்தியப்படக்கூடிய இந்த 21ம் நூற்றாண்டில், ஒருவர் 30 வயதில் தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் எளிய வழியிருக்கிறது.

இணையமும், தொழில் நுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில், புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதை நிர்வகிப்பது என்பது மிகவும் எளிது. குறைந்தபட்ச தேவை என்பது நல்ல தலைமை பண்பு மட்டுமே. நல்ல தலைமை பண்பு என்பது, நீண்ட கால வாழ்கை அனுபவத்தின் மூலம் சாத்தியமடையும்.  ஆனால் 25-30 வயதிலேயே நல்ல தலைமை பண்பை பெறுவதற்கு பின்வரும் மூன்று வழிகளை பின்பற்றினாலே போதும்...





1)உங்களுக்கென்று ஓர் அணியை உருவாக்குங்கள் :-

ஒன்றை 'செய்!' என சொல்பவனைவிட,  "வா சேர்ந்து செய்யலாம்..!" என சொல்பவனே சிறந்த தலைவன். நீங்கள் ஒரு சிறந்த தலைவன் ஆகவேண்டும் என்றால், உங்களுக்கென்று ஒரு அணியை உருவாக்குங்கள்... நீங்கள் எழும் சமயத்தில் தூக்கிப்பிடிப்பதற்கும், விழும் சமயத்தில் தாங்கிப்பிடிப்பதற்கும் ஏற்ற வகையில்.

தலைமை நிர்வாகியாக இருப்பவர் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவரை தன்னுடைய பணியாளராக வைத்துக் கொண்டாலே போதும். உங்களுக்கு போதுமான அனுபவம் இல்லையென்று கவலைப்படாதீர்கள்.  உங்கள் பேச்சைக் கேட்க கூடிய அனுபவசாலிகளை உங்கள் அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பண, நேர விரயம், தவறான கொள்கை முடிவுகள், திறமையற்ற பணியாளர்களை தேர்ந்தெடுப்பது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பதற்கு சிறந்த அனுபவசாலிகளை அருகில் வைத்துக் கொள்வதுதான் உதவும்.

உதாரணத்திற்கு,  ஃபேஸ்புக்கின் தலைமை இயக்க அதிகாரியான (COO) ஷேரில் காரா சேண்ட்பர்க் என்ற பெண்,  சிறந்த  பொருளாதார நுணுக்கங்களை அறிந்தவர். தலைமை நிர்வாகியான மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு தொழில்நுட்ப அறிவு இருந்தாலும், பொருளாதார அறிவு குறைவு என்பதால் பொருளாதாரம் குறித்த எல்லா முடிவுகளையும் ஷேரிலிடம் கேட்டே முடிவு செய்வாராம்.

அதே போல் 24 வயதில் கூகுள் நிறுவனத்தை தொடங்கும்போது லாரி பேஜ், சேர்ஜி பிரின்  இருவரும் எரிக் ஸ்கிமிட் என்ற 50 வயது அனுபவசாலியை தங்களது வழிகாட்டியாக வைத்துக் கொண்டனர். எனவே உங்களுக்கென்று ஓர் அணியை உருவாக்குங்கள். எல்லோரும் உங்களைபோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; மாறாக உங்களை முழுமை அடையச் செய்பவராக இருந்தாலே போதும்.





2) நல்லது-கெட்டது இரண்டையும் பயன்படுத்துதல் :-

சிறுவயதிலேயே நிறுவனம் தொடங்கப்போகும் எவருக்கும் பின்வரும் நன்மைகளும்,பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பிரச்னைகள் என பார்க்கும் நீங்கள், அந்தக் களத்திற்கு புதிது என்பதால், உங்களுக்கென்று சாதனை வரலாறோ,சோதனை வரலாறோ எதுவும் இருக்காது. எனவே உங்கள் மீது பிறர் வைக்கும் நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும். மேலும் பெரு முதலீட்டாளர்கள் பெரும்பாலும், உங்களது கடந்த கால செயல்திட்டங்களை கருத்தில் கொள்ளவே ஆர்வம் காட்டுவர். எனவே அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை புதிதாக நிறுவனம் தொடங்கும் நீங்கள், உங்களது புதுப்புது ஐடியா குறித்து நிறைய பேரிடம் பேச வேண்டியதிருக்கும், நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டியதிருக்கும். எனவே ஏற்கனவே கூறியது போல உங்களுடன் அனுபவசாலிகளை வைத்துக் கொண்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம் - அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை. 

இதில் இருக்கும் நன்மை என்னவெனில், உங்களுக்குத்தான் கடந்த கால அனுபவம் என்று எதுவுமே இல்லையே... எனவே நீங்கள் புதிதாக எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். முன்பு யாருக்கோ தோல்வியை தந்த ஒன்று. உங்களுக்கு இன்று வெற்றியை தரலாம். ஒரு வேளை உங்களுக்கு அனுபவம் இருந்தால், பலருக்கு தோல்வியை தந்த அந்த விசயத்தை முயற்சி செய்யாமலேயே விட வாய்ப்பிருக்கிறது. எனவே கடந்ததை கருத்தில் கொள்ளாமல் முயற்சி செய்வது கூட, சமயங்களில் பலன் அளிக்கும்.ஆகவே நல்லது, கெட்டது இரண்டையும் நமக்கு உற்றதாக பயன்படுத்துவதே சிறந்தது.

3) பணிவு

டவுன் டு எர்த் என்று அழைக்கப்படும் பணிவு  ஒரு தலைவனுக்கு மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு குணம். Intellectual humility என்று அழைக்கப்படும் அறிவாற்றல் சார்ந்த பணிவு இருக்கும் பட்சத்தில், நம்மிடம் வேலை செய்யும் பணியாளர்களிடம் இருந்து நமக்கு தேவையானதை எளியைமாக பெற முடியும். இதன் மூலம் நம்முடைய களத்தில், நமக்கு தேவைப்படும் விசயங்களை தெரிந்துகொள்வது எளிதாகும்.

உங்களுக்கு ஒன்று தெரியாத சமயத்தில், தெரிந்தவர்களிடம் அது குறித்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தில் 100% சதவிகத திறமை இல்லையெனில், உங்கள் பணியாளரில் யாருக்கு திறமை இருக்கிறதோ அவரை முன் நிறுத்துங்கள். முன் இருக்கையில் அமர்வது மட்டும் தலைமைப் பண்பு அல்ல, தேவைப்படும் சமயங்களில் பின் இருக்கையில் அமர்ந்து கை தட்டுவதும் கூட தலைமைப் பண்புதான். உங்களுடைய குறிக்கேள் வெற்றி மட்டுமே. எனவே உங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பணிவில் எந்தத் தவறும் இல்லை. எனவே பணிவு என்பதை எந்த விதத்திலும் குனிவாக நினைக்ககூடாது. தலைமை பண்பில் தலையாயப் பண்பு பணிவுதான்.

வழியை உருவாக்குபவன்,அந்த வழியில் பயணிப்பவன், அந்த வழியில் பயணிக்க வைப்பவன் எவனோ அவனே நல்லதொரு தலைவன்.

உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்...!
 ·  Translate
உலகில் எல்லாமும் சாத்தியப்படக்கூடிய இந்த 21ம் நூற்றாண்டில் ஒருவர் 30 வயதுக்குள் தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் எளிய வழியிருக்கிறது. 3 Things to Do If You Want to Become a CEO by Age 303 Things to Do If You Want to Become a CEO by Age 30 | 30 வயதுக்குள் சி.இ.ஓ ஆக 3 வழிகள்! - VIKATAN
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
 
பிக்டீடஸ் ஒரு புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி. அவரது உண்மையான பெயர் அறியப்படவில்லை. இன்றைய துருக்கியில் ஒரு அடிமையாகப் பிறந்த அவர், தனது மிகச்சிறந்த தத்துவங்களால் அறியப்படுகிறார். இவரது தத்துவம், அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் விதியால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது நமது கட்டுப்பாட்டை மீறியது என்றும் அதனை அமைதியாகவும் உணர்ச்சி வசப்படாமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.

அதேசமயம், மனிதர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு அவர்களே பொறுப்பு, அவற்றை கடுமையான சுய ஒழுக்கத்தின் மூலம் ஆராய்ந்து கட்டுப்படுத்த முடியும் என்பது இவரது கொள்கையாகும்.

நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை முதலில் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்; பின்பு நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.

நமது விருப்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய கவலைகளை நிறுத்துவதே நமது மகிழ்ச்சிக்கான ஒரே வழி.

நாம் விரும்பியபடி வாழும் உரிமையை விட வேறு சுதந்திரம் ஏதாவது இருக்கிறதா? வேறு எதுவுமில்லை.

மற்றொருவரின் தவறினால் எப்பொழுது நீங்கள் எரிச்சலடைகிறீர்களோ, அப்பொழுது உங்கள் தவறுகளை ஆராய்ந்துப் பாருங்கள். பிறகு உங்களது கோபத்தை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படும் விஷயத்தை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை பொருத்தே, அவர்களுக்கான பாதிப்பு இருக்கின்றது.

உங்கள் செயல்பாட்டுக்கு உங்களிடமுள்ள சக்தியை முழுமையாக சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் பின்பு அது நடக்கும்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பெரிய விஷயமல்ல, அதற்கான உங்களின் நடவடிக்கை என்ன என்பதே முக்கியம்.

நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதற்கான அர்த்தத்தை முதலில் அறிந்துகொள்ளுங்கள், பிறகு பேசுங்கள்.

அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ அல்லது ஆர்பாட்டமாகவோ சிரிக்காதீர்கள்.
 ·  Translate
நாம் விரும்பியபடி வாழும் உரிமையை விட வேறு சுதந்திரம் ஏதாவது இருக்கிறதா? வேறு எதுவுமில்லை.
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
Creative agency from Seaside Park, New Jersey specializing in branding, print design, web design and interactive media.
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
Design Ideas & Inspiration, Mom & Baby Fashions and Products plus other useful information on creating a designer look for a baby room for a budget
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
 
திருவண்ணாமலை அருகில் கணத்தம்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் 'மருதம் பண்ணைப் பள்ளி’.
 ·  Translate
வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை வாந்தி எடுக்கும் சமகாலக் கல்வி முறைகளுக்கு மத்தியில், குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப விளையாட்டாக பாடம் கற்றுக் கொடுக்கும் வாழ்வியல் பள்ளிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றன. Marutham Farm school, ThiruvannamalaiMarutham Farm school, Thiruvannamalai | ஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை..! - VIKATAN
1
Add a comment...

B R Murali Krishnan

Shared publicly  - 
 
CherryFramework 4. How To Install Theme Using Cherry Wizard
1
Add a comment...
Collections B R Murali is following
View all
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Chennai
Story
Introduction
வருவதைக் கண்டு மயங்காதே ! 
போவதைக் கண்டு கலங்காதே ! - கவியரசர் கண்ணதாசன்

அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு - கவிஞர் வாலி



நல்லதே நினைப்போம் !  நல்லதே செய்வோம் !  நல்லதே நடக்கும் !
Basic Information
Gender
Male
Other names
MuKi @ முகி