Profile cover photo
Profile photo
மணி ஜி.
5,317 followers
5,317 followers
About
மணி's posts

இன்று காலை துபாய் நேரம் பத்து மணிக்கு அமிழ்தினியின் உடல் அடக்கம் என்று செல்வம் தகவல் அனுப்பியிருக்கிறாஎ.என்ன சொன்னாலும் தீராதுதான்..வார்த்தைகள் வெறும் சம்பிரதாயமே என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். ஆனாலும் கூட்டு பிரார்த்தனை ஆன்ம பலம் கொடுக்கக் கூடும்.குழந்தையுடன் பத்து நாட்கள் பயணத்தில் கழித்திருக்கிறேன்.கண்ணுக்குள்ளே நிற்கிறாள் அமிழ்தினி.அஞ்சலிகள் குழந்தைக்கு.செல்வம்,ராதிகா,ஆதிரை..ப்ரார்த்தனைகள்!!

குட்டி டின். சந்தோஷமா? என்னையே டக்ளஸ் ஆக்கிட்டிங்களாயே-:)

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.இங்கிருந்து திசை மாறி சென்று விட்டேன்.இதோ உங்கள் காலடியில் கிடக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்வீர்களா?

சரிசெய்துகொள்ள வேண்டுமென்ற நன்னோக்குடனே இப்பதிவு. ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு முன்னால், பதிப்பகம் சார்பாக, ஆசிரியர் சார்பாக எனக் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பிழைதிருத்தம் பார்ப்பது வழக்கம். நான்கு அல்லது ஐந்து முறை படியெடுத்துப் பிழை திருத்துபவர்களையும் நானறிவேன். தொழில்முறை பிழை திருத்துநர்களிடம் கொடுத்துப் பிழை பார்ப்பது மிகவும் நல்லது.

ஒரு புத்தகத்தில் கௌதமர் மலர்ச்சோலையில் பிறந்தார் என்பது தட்டச்சுப் பிழையால் 'ர்' விகுதி தவறி, மலச்சோலையாகி விட்டதை என்னென்று சொல்வது? சமீப காலங்களில் ஆசைஆசையாய்ப் புத்தகங்களை வாங்கிப் படிக்கும்போது இத்தகைய தட்டச்சுப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், மயங்கொலிப் பிழைகள் கடும் எரிச்சலை மூட்டுகிறது.

புத்தகத்தின் சாரம் எவ்வளவு முக்கியமோ, அதன் வடிவம் எத்தனை முக்கியமோ அதேயளவு அப்புத்தகம் பிழையின்றி வெளியிடப்படவேண்டுமென்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இன்றைய பல பதிப்பாளர்கள் இதற்கு முதன்மைக் கவனம் கொடுக்காமல் குறைமொழியறிவு கொண்டவர்களிடம் கொடுத்துப் பிழைபார்த்து நூலை வெளிக்கொண்டுவந்து விடுகின்றனர்.

சமீபத்தில் படித்த புத்தகங்களில் இரண்டு புத்தகங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ப.ராமஸ்வாமி எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'போதிமாதவன்' மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் Vediyappan M Munusamy வெளியிட்ட 'லாக்கப்'. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இத்தகைய நல்ல புத்தகங்கள் பிழைகள் மலிந்த நிலையில் வெளிவருவது படிப்பவர்களைத் தவறாகத் திசை திருப்பும்; பதிப்பாளர்களும் தங்கள் நற்பெயரை இழப்பர்.

இதை எழுதுவதா, வேண்டாமா என்று பல நாட்கள் யோசித்து, ஒரு மாதமாகியும் எரிச்சல் தீராத காரணத்தாலும் புத்தகக் கண்காட்சியையொட்டிப் பல புத்தகங்கள் வரக்கூடிய நிலையில் பதிப்பாளர்கள் பிழை திருத்தலில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டுமென்ற காரணத்தாலுமே இதை எழுதுகின்றேன்.

கவனம் செலுத்துவீர்களாக! ஆமென்!!

+T Parameswari​

இங்கன ஆக்டிவா இல்லைதான்.அதனால கூப்பிடாம விட்ருவியா +ம தா ர்​

பேஸ் புக்கில் சகிப்புத்தன்மை இல்லாததால் தாய் வீட்டுக்கே வந்துடலாமான்னு யோசிச்சிங்

Post has attachment
how true caller works? என் தம்பியின் பெயர் கிருஷ்ணமணி.அவன் செல்லப்பெயர் உட்டாலக்கடி.சின்ன வயதில் அழைத்த பெயர்.கிட்டதட்ட மறந்தே போச்சு. இன்று அவனிடமிருந்து அழைப்பு வந்தபோது ட்ரூ காலர் இவ்வாறு காட்டியது.அவனிடம் கூகுளில் இப்படி எங்காவது போட்டிருக்கியா என்று கேட்டேன்.திட்டவட்டமாக மறுத்தான்.பின் எப்படி? என் மச்சான் மொபைலில் மட்டும் உட்டாலக்கடி என்று சேவ் செய்திருப்பதாக அறிந்தேன்.ஒருத்தர் பதிவு செய்திருந்தால் மட்டுமே இப்படி காட்டுமா?இத்தனைக்கும் என் தம்பியின் போன் மிகவும் பிசியாகவே இருக்கும். டால்மியா டீலர். வேறு யாருக்கும் இப்படி காட்டுமா என்று விசாரித்தால் இல்லை.யாராவது டெக்னிக்கலா விளக்குங்க. முகநூலில் கேக்கலாம்னு பார்த்தேன்.அங்க விட இங்குதான் டெக்னிக்கல் மூளைகள் இருப்பதாக அறிந்தேன்-;)
Photo

Post has attachment
Photo

கிலோக்கணக்கில் கோழி ,ஆடு விற்கப்படுவது போல் இப்போது பிரியாணியும் கிலோ விலையில் விற்கிறார்கள்..அதற்கு 2 முட்டை இலவசம்...ஒரு கடை 110ரூ ..இன்னொருவர் 100ரூ... இன்னொரு கடையில் எங்கள் பிரியாணியில் கோழி உயிருடன் இருக்கும் என்ற அறிவிப்பை எதிர்பார்க்கலாம்!!

ICU க்குள் போக எதாவது வழியிருக்கானு கோபி கேட்கிறார்- நாதஸ்வரம்
Wait while more posts are being loaded