Profile cover photo
Profile photo
பிளிப்பர் டாட்இன் (flippardotin)
11 followers
11 followers
About
Posts

Post has attachment
அடிமைகளாய் தவிக்கும் 6.5 கோடி இந்தியர்கள்

6.5 கோடி இந்தியர்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வேலை செய்கின்றனர் என்ற செய்தியை அமெரிக்க ஆய்வு வெளியிட்டுள்ளது.  120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் 6.5 கோடி பேர் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் வாழும் மக்களின் நிலை மற்றும் வேலைக்காக நடைபெற்று வரும் ஆள் கடத்தல் போன்றவற்றை கண்காணித்து வரும் அமெரிக்க அரசின் “டிப்ஸ்” வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டறிக்கையின்படி நமது நாட்டில் மட்டும் சுமார் ஆறரை கோடி மக்கள் வறுமை, குடும்பக் கடன் போன்ற காரணங்களினால் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாகவும், சிலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
வசதியான தரகர்களின் மூலமாக உள்நாட்டில் இந்த ஆள் கடத்தல் ரகசியமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடும் அந்த அறிக்கை, இப்படி கடத்தப்படும் ஆண்- பெண் இருபாலர்களும் கட்டுமான வேலை, ஜவுளித் தொழில், மீன் மற்றும் இறால் பதப்படுத்துதல், செங்கல் சூளை, சுரங்கங்கள் மற்றும் ஓட்டல் வேலைகளில் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
Add a comment...

Post has attachment
ஆரஞ்சு பழத்தின் ரகசியம்

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டுவந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.  எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச்சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.  சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது.
மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருக்கமடைகிறது. தலைமுடியை நரைக்கச் செய்கிறது. இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.
இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது.
இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் c-யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.
Add a comment...

Post has attachment
சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து – விமர்சனம்

புத்தகத்தின் பெயர்  -  சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து                                                                                                                                                      ஆசிரியர்  – ரஃபிக்                                                                                                                                                                                                                                                 பதிப்பகம்  -  சந்தியா பதிப்பகம்
உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாளிணி உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும் ஒரு நவீன ஓவியனின் எல்லையற்ற சர்ரியலிசக் கனவுகளோடு ஒரு மார்கழி மாதத்துப் பனிபோல அவரது எழுத்தில் புரண்டு எழுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
Add a comment...

Post has attachment
பயனர்களை கவர்ந்திழுக்கும் WeChat

இலகுவானதும், விரைவானதுமான மொபைல் தொடர்பாடலுக்கு உதவும் WeChat மற்றும் WhatsApp அப்பிளிக்கேஷன்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.
WhatsApp அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 16 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்ததன் பின்னர் மாதந்தோறும் 450 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இதேவேளை WeChat அப்பிளிக்கேஷனும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் மாதாந்த பாவனையாளர்களை 355 மில்லியன் பயனர்களை கவர்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a comment...

Post has attachment
சீரகம் சாகுபடி

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
ரகங்கள்: கோ.1 மற்றும் கோ.2.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை: ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். குளிர்ந்த தட்பவெப்பநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் வரை பயிர் செய்யலாம்.
பருவம்: மலைப்பகுதிகளுக்கு: மே – ஜூன்; சமவெளிப்பகுதிகளுக்கு: அக்டோபர்- நவம்பர் அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
விதையும் விதைப்பும்: நேரடி விதைப்பதற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை. தேவைக்கேற்ப மேடைப்பாத்திகள் அமைத்து, விதைகளை பாத்திகளின் மேல் சீராகத்தூவி, கைக்கொத்தியால் மண்ணுடன் நன்கு கலக்கச்செய்ய வேண்டும். விதைகள் முளைக்க 5 முதல் 9 நாட்கள் ஆகும்.
நடவு: 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 து 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம்: செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
பயிர்- இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) – இப்கோ, டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)
சீரகம் – அடியுரம் – தழை25 – மணி10 – சாம்பல்0 – டிஏபி22 – யூரியா46
சீரகம் – மேலுரம் – தழை25 – மணி0 – சாம்பல்0 – டிஏபி0 – யூரியா55
களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி: களைகள் முளைக்கும் முன் எக்டருக்கு ஒரு லிட்டர் பெண்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். பின் இரண்டு அல்லது மூன்று முறை கைக்களை எடுக்க வேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: அசுவினிப்பூச்சி: இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30இசி 2மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்: நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எக்டருக்கு 25 கிலோ தூவும் கந்தகம் மருந்தை உபயோகிக்க வேண்டும்.
அறுவடை: பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துகளை அறுவடை செய்ய வேண்டும். பின் இவற்றை வெயிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
மகசூல்: எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.
-அகமது கபீர், தாராபுரம், 89037 57427.
Add a comment...

Post has attachment
தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள Draughtsman – Grade-III பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Draughtsman – Grade-III
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
Add a comment...

Post has attachment
வான் கோழி வளர்ப்பு

இன்று அசைவ பிரியர்கள் அதிகம் பேர் சுவைப்பது கோழி வகையைத்தான். இவற்றில் வான்கோழியின் சுவை தற்போது உணவுப் பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் விவசாயிகள் வான்கோழி வளர்ப்பில் அக்கறை காட்டினால், அவர்களது வாழ்வு வளம் காணும் என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே வான்கோழி வளர்ப்பிற்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.
வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்கா. இது பிறநாடுகளிலும் பரவி, தற்போது ஹாலந்து வெள்ளை, பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி, நார்கான்செட், பார்பான் சிவப்பு, ஸ்லேட், நார்போக் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. பிற இனங்களைவிட விரைந்த வளர்ச்சி காணும் இவற்றிற்கு குறைந்த தீவனம் போதுமானது. ஒரு வான்கோழி மாதம்தோறும் 12 முட்டைகள் இடும்.
Add a comment...

Post has attachment
சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்

வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கைச் சாதனை என்று கூறலாம். குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை, அச் சமூகம் அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கொண்டுதான், அரசு நிறுவனங்கள், சட்டவியல், கலை, மதம், சித்தாந்தம் போன்றவற்றின் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.தற்காலத்தில் நிலவும் முதலாளித்துவ அமைப்பின் தோற்றம், சிக்கல், இன்றைய நிலை ஆகியனபற்றிய உண்மைநிலையை, மார்க்சின் இந்த இரு கண்டுபிடிப்புகள் வெளிப்படுதுகிறது.
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Wait while more posts are being loaded