Profile cover photo
Profile photo
பாலா BALA
134 followers -
Never give up, Be yourself. சொல்லும் வார்த்தை கொல்லும் ஓர்நாள்..
Never give up, Be yourself. சொல்லும் வார்த்தை கொல்லும் ஓர்நாள்..

134 followers
About
பாலா's posts

Post has attachment
கடற்கறைக்கு வருவது நீயென தெறிந்துவிட்டதும்
அலைகள் எல்லாம் அடித்து கொள்கின்றன ஒன்றொடு ஒன்று,
முதலில் யார்
உன் பாதங்களை
தொட்டு தொட்டு
நுறைத்து
கறைவது என்று...
Photo

Post has attachment
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

👦🏻 அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

👤என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

🔥கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

👉🏻அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

👉🏻 அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.

👉🏻 நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

👉🏻 மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

😇குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.

🗣 அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

👉🏻 அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!

👉🏻_உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்._

🙌🏻கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!😋

🚫தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும். 💪🏻

😎_ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!_😏

😊_உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!_
Photo

Post has attachment
உங்களுடைய இதயம்
மலராக இருந்தால்

உங்கள் பேச்சில்
அதன் வாசனை தெரியும்
Photo

Post has attachment
அளக்க முடிந்தது இரண்டு அடி,

அளக்க முடியாதது திருவடி,

அது மண் படா திருவடி

1. புறக் கண் இரண்டு.

அதைக் கொண்டு புறப் பொருட்களை பார்க்க முடியும்

மூன்றாவது கண் மனதின் கண் அது நெற்றிக்கண்.

அதனைக் கொண்டு மனதை இன்னதென்று அறிந்து தெளிந்து கொள்ள முடியும்.

நான்காவது கண் பிடரிக் கண்.

இது இருக்கும் இடமோ தலையின் பின்புறம் உள்ள முடிச்சுப் பகுதி.

இதுவே அறிவின் கண் என்று சொல்லலாம்.

பின் விளைவைக் கணிக்கக்கூடிய அறிவைக் கொடுக்கும்

ஆற்றல் வாய்ந்த மையம் பிடரிப் பாதம்.

இது கண்களின் மறுபக்கம் (பின்புறம்) ஆகும்.

இந்த மையத்தை நினைவில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதால் தான் பிராமணர்கள் அந்த இடத்தில் குடுமிமுடி வைத்து அதற்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இங்கு மனதை நிலைத்து தவம் ஆற்றினால் விளைவை கணித்து செயல்படும் ஆற்றல் கூடும்.

ஐந்தாவது கண் மனோன்மணி.

இதுவே ஆன்மாவின் கண் எனப்படும்.

ஏனெனில், ஆன்மாவானது மையமற்று இருப்பது.

நீடித்து நிலைத்திருப்பது.

என்றும் அழியாதது.

ஆகவே மையத்திற்குள் அடங்குவது ஒன்பது மையம்

மையமற்று இருப்பது மனோன்மணி.

எனவே அறிவின் கண் நெற்றிக்கண்

ஆன்மாவின் கண் மனோன்மணி

மையத்தின் மையத்தில் : உள் முக பயணம் 
Photo

Post has attachment
ஆண் என்பவன் வாழ்க்கையில்

1 என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி காவலன் என்று சொல்லிக் கொள்ளலாம்.

2 உடல் ரீதியாக இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன் ஆண் தான்.

3 ஷாப்பிங் செய்ய பெண்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட, தான் சம்பாதித்த பணத்தில், தன் தங்கை, காதலி, அம்மா போன்றவர்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதில் ஆண் மகனே அதிக மகிழ்ச்சி அடைகிறான். ஆண் மற்றவரை மகிழ்விக்க தன் வலியையும் மறைத்து வாழ்பவன் என்பதே நிதர்சனம்.

4 ஓர் பெண்ணின் வாழ்க்கை ஆண் இன்றி முழுமை அடைவதில்லை. அதே போல தான் பெண்ணின்றி ஆணும் முழுமை பெறுவதில்லை. பெண்களின் கனவுகளை வளர்க்க ஆண் வியர்வை சிந்துகிறான், தகப்பனாக தொடங்கி கணவனாக முடிவு வரை.

5 தோள் கொடுக்கும் தோழன்
பெண்கள் துவண்டு போகும் ஒவ்வொரு தருணத்திலும் அவளை மீட்டெடுப்பவன் ஆண் தான். தகப்பனாக, சகோதரனாக, தோழனாக, காதலனாக ஓர் ஆண் பெண்ணுக்கு எப்போதுமே உறுதுணையாக தான் இருக்கிறான்.

6 எத்தனை பணம் கொடுத்தாலும் பெண்ணுக்கு ஓர் நல்ல தோழன் கிடைப்பது என்பது வரம் போன்றது. எந்த ஒரு பெண்ணும் தனக்கு அமைந்த அந்த தோழமையை இழக்க விரும்புவதில்லை. அந்த சூழலை எந்த உண்மையான தோழனும் ஏற்படுத்துவதில்லை.

7 ஒரு பெண் வலுவிழந்து காணப்படும் போது அவளை பற்றி அவளுக்கே எடுத்துக் காட்டி, அவளை நல்வழி படுத்தும் ஓர் நல்ல வழிகாட்டியாக இருப்பது பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தான். அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு உறவின் பரிமாணத்தில் ஆண் துணையாக வந்து செல்கிறான்.

பெருமிதம்கொள்வோம் ஆண் மகனாக பிறந்தமைக்கு மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்வோம் நட்பூக்களே
Photo

Post has attachment
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.

ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.

ஓர் இல் - ஒரு மனைவி.
ஒரு சொல் - வாக்குத் தவறாமை.
ஒரு வில் - குறி தவறாத ராம சரம்.

Photo

Post has attachment
வீழ்ந்தால் மதிப்பில்லை

ஒரு ஆலயத்தின் படியில் இருக்கும் ஒரு கல் சிற்பம் ஒன்றிடம் கேட்கின்றது. நீயும் என்னை போன்று ஒரு கல்தான். என்னை போலத்தான் நீயும் ஆனால் உன்னை வணங்குகின்றார்கள் , என்னையோ மிதிக்கின்றார்கள் ஏன் இந்த பாகுபாடு உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?

சிற்பம் அதற்கு பதில் சொல்கின்றது நீயும் நானும் ஒன்றுதான் ஒரே இடத்தில் இருந்துதான் வந்தோம் என்னை சிற்பி செதுக்கும் போது நான் வலியை பொறுத்துக்கொண்டேன் எவ்வளவு என்னை அடித்தாலும் அசராமல் நின்றேன் நான் சிற்பம் ஆகிவிட்டேன் என்னை வணங்குகிறார்கள், நீயோ சில அடிகளிலேயே வீழ்ந்துவிட்டாய் வலியை சகிக்க முடியாமல் ஒத்துழைக்க மறுத்துவிட்டாய் இன்னும் கல்லாகவே இருக்கின்றாய் ...

வலியும் அனுபவங்களும் மனிதர்களையும் தெய்வீகமாக்கும்.
Photo

Post has attachment
➥என்ன கொண்டு வந்தோம்? என்ன கொண்டு செல்வோம்?
➥தாய் தந்தை ஆசையால் பிறந்தோம்!
➥பஞ்ச பூதங்களால் உடல் பெற்றோம்!
இறைவனால்.. ஆத்மாவான, உயிர் பெற்றோம்!
➥எது இங்கே நம்முடையது?
எதுவுமே இல்லை!
➥பிறந்ததில் இருந்து 5 வயது வரை, தாய் தந்தை ஆதரவால் வளர்ந்தோம்!
➥5 வயது முதல் 17 வயது வரை, சமுதாயம் பள்ளிக்கூடம் செல் என்றது சென்றோம்,!
➥17 வயது முதல் 25 வயது வரை, சம்பாதிக்க படிக்க வேண்டும் என்று, பெரியவர்கள் கூற, கல்லூரி சென்றோம்!
➥25 வயது முதல் 40 வயது வரை திருமண பந்தத்தில் இனைந்தோம், நமக்கு கொள்ளி போட ஓர் மகன் வேண்டுமென, எண்ணியதால்!
➥40 வயது முதல் 70 வயது வரை, பெற்ற பிள்ளையையும், கட்டிய மனைவியையும், கண்கலங்காமல் காப்பாற்றுவது கடமை என ஊர் சொல்லியதால், உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து பணத்தை சேர்த்தோம்!
➥70 வயதில் இருந்து 100 வயதுக்குள், செயல்பட முடியாமல் இறந்து போகிறோம்!


Photo

Post has shared content

Post has attachment
Wait while more posts are being loaded