Profile cover photo
Profile photo
இரவு வானம்
604 followers -
LOVE EVER HURT NEVER
LOVE EVER HURT NEVER

604 followers
About
இரவு வானம்'s posts

Post has shared content

Post has shared content
செருப்படி விருது:

நான் ஒரு சினிமா எடுக்க போறேன்!

ஒரு இந்து பெண். கணவனுக்காக இஸ்லாமுக்கு (அல்லது கிருஸ்துவம்) மதம் மாறி திருமணம் செஞ்சிக்கிடறாய்ங்க! தன் முந்தைய மத அடையாளங்களை துறந்து புது  மத அடையாள சின்னங்களை அணிகிறார்! அன்னத்தைய இயல்பு வாழ்க்கையை துவக்கும் போது போகும் வழியில் ஒரு பெருமாள் கோயில் சிலையை காட்டறோம். பெருமாள் அப்படியே சிலையில் இருந்து அந்த பெண்ணையே உத்து பாக்கிறாமேரி இன்னொரு டைரக்டோரியல் டச் சீன்!

அப்ப ஆரம்பிக்குது அவருக்கு ப்ரச்சனை. ஏதுமில்லாத ஒரு சின்ன விசயம் பூதகரமாகிறது! ப்ரச்சனை ஒரு மழை காகிதம் (Plastic bag) போல காலில் மாட்டிகொள்கிறது. இயல்பு வாழ்க்கையில் இருந்து சுழட்டி அடித்து துறத்துகிறது (டைரக்டோரியல் டச்சி)! அப்போது அவர் அல்லலுற்று கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெளியே காத்திருக்கும் போது, டூ-வீலர் கண்ணாடியில் கபாலீஸ்வரர் கோபுர கலசம் தெரிகிறது. அதில் 'Objects in mirror are closer than they appear'ன்னு காட்டறோம்! அதாவது மதம் மாறினாலும் உன் மன்சூஸ்ல கபாலீஸ்வரஸ் அனுக்கிரஹம் உண்டுடி குழந்தன்னு அதே டச், அதாவது டைரக்டோரியல் டச்.

இப்ப அப்படிக்கா எதிர் பார்ட்டியை காட்டறோம்! அவர் ஒரு தோழர்! (அதே 'அண்ணே ஒரு டீ சொல்லேன்' தோழர்தேன்). அந்த தோழர் கேரக்டர் எஸ்டாப்ளிஷ் செய்யறோம்! தோழர் ஒரு பயங்கர முற்போக்கு வாதி! ஒரு இமாம் (இல்லை சர்ச் ஃபாதர்) ஸ்கூட்டரில் டிராபிக்கில் இருந்துகிட்டு 'தோழர் ஏன் டிராபிக்கை நிறுத்தி வைக்கறீங்க'ன்னு கேக்கிறார். உடனே தோழர் கொதிச்சிப்போயி - 'ஒலகமே அழிச்சாலும் உனக்கு மசூதில போயி ஓதணும் (இல்லை சர்ச்சுல போயி மணிஅடிக்கணும்)'னு சொல்லி அந்த ஸ்கூட்டரை "உதைத்து" (மிக முக்கிய டைரக்டோரியல் டச்) கால் ஸ்கூட்டரில் படுவதை க்ளோஸ் ஷாட்டில் காட்டி உதைத்து அனுப்ப வேண்டும்! தியேட்டரில் இந்த காட்சிக்கு பயங்கர அப்ளாஸ் அள்ளும்! அப்படியாப்பட்ட தோழர் எப்படின்னா, இந்த இமாமை உதைச்சி அனுப்பின தோழர், பயங்கர பரபரப்பான சூழ்நிலையில் அந்த கதாநாயகியின் அம்மா வூட்டுக்கு போவார்! அங்கே அந்த இந்து மாமி மம்மி 'ஆண்டாள் பாசுரங்களை' சொல்லி கொடுத்துக்கினு இருக்கார். அவர் பாசுரம் பாடி முடிக்கும் வரை காத்திருந்து பேசிவிட்டு செல்கிறார். அதாவது இஸ்லாமிய இமானின் ஸ்கூட்டரை கோவத்தில் உதைச்சி அனுப்பிய அதே தோழர் இந்து அம்மையாரின் ஆண்டாள் பாசுரங்களுக்கு (அதுவும் எப்படி அந்த பாசுரங்களை சொல்லி லோக ஷேமம் காக்கும் அம்மையார் என்பதையும் ஏஸ்டாப்ளிஷ் செய்யறோம்) மதிப்பளித்து காத்து நின்று பேசிவிட்டு செல்கிறார்! டச் டச்சு டஞ்சக்கு டச்சு!

கதையின் resolution பகுதி! அதே கபாலீஸ்வரர் கோயிலில் தான் ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய (அல்லது கிருஷ்தவ) மத அடையாளங்களை அழிக்கிறார். அதை சிம்பாலிக்காக காலில் மாட்டிய மழை காகிதத்தை ரிமூவ் செய்து reestablish செய்கிறோம்! (டைரக்டோரியல் டச்சேதான்)

மீண்டும் இந்துவானவுடன் கதாநாயகியின் ப்ரச்சனை தீருகிறது! தோழரின் ப்ரச்சனை தீருகிறது! எல்லாரும் சந்தோசமாய் லோக சுகினோ பவந்துன்னு பாடிகிட்டு போறாய்ங்க! கடைசியா தோழர் மஹா பெரியவா எழுதிய 'தெய்வ தரிசனம்' கம்ப்ளீட் கலெக்‌ஷன்ஸில் கையெழுத்து போட்டு தாய் மதம் திரும்பிய கதாநாயகிக்கு பரிசளிக்கிறார்!

இதுதான் சமிபத்தில் தேசிய விருது வாங்கிய குற்றம் கடிதல் படத்தின் கதை! நீங்கள் ஊகித்ததுபோல ஸ்கூட்டரில் உதைபடுவது பாப்பான். கதாநாயகி கிருத்துவர், ஆனால் காதலினால் கிருத்துவம் துறந்து ஹிந்துவானவர்!

படம் முழுக்க இப்படியான பூடக காட்சிகள்! தேவையே இல்லாமல் செக்ஸ் கல்வி என்றெல்லாம் பூசி மெழுக்கி இருக்கிறார்கள்! நான் ஹிந்து மத தீவிரவாதொயோ ஹிந்துத்துவனோ இல்லை! ஆனால் ஒரு பெரும்பான்மை மதத்தை இத்தனை இழிவு செய்யும் ஒரு படத்தை, அதுவும் மத பிரசங்கம் இத்தனை தெளிவாய் காட்டப்பட்ட ஒரு படத்துக்கு எப்படி தேசிய விருது வழங்கினார்கள் என்றே தெரியவில்லை!

இவான்ஜலிக்கல் மதமாற்றம் பற்றி எனக்கு ப்ரச்சனை இல்லை! நான் 12 வருடங்கள் படித்த பள்ளியில் வருடம் இரண்டு முறை பால் தினகரன் வருவார். அவர் கூட்டங்களில் நான் வாலண்டையராக பணியாற்றி இருக்கிறேன்! அவர் கூட்டங்களில் பலரும் ஒரு நம்பிக்கை பெற்று சென்றதை நேரில் பார்த்தவன் நான். அதனால் அதில் எந்த தவறுமில்லை. ஒருவர் மன கஷ்டத்தில் வரும் போது ஒருவருக்காய் கண்மூடி சிறிய ஜெபம் செய்வதால் அவருக்கு மனமகிழ்ச்சி கிடைத்தால் அதில் தவறில்லை!

ஆனால் இயக்குனர் ப்ரம்மா போன்றவர்கள்தான் அபாயமானவர்கள். கேளிக்கையில் இப்படியான மதமாற்றத்துக்கான பொடி வைத்து ஏற்றுவது ஜெர்மானிய சினிமா முறை! ஹிட்லர் தன் மக்களுக்கு போட்டுக்க்காட்ட இப்படியான பிரச்சார படங்களைத்தான் எடுத்தார். ஸ்டாலினும் இப்படி பிரச்சார படங்களை தானே தணிக்கை செய்து வெளியிடுவார் என்று கேள்வி.

டைரக்ட்டர் இப்படியான படங்களை எடுப்பது அவருடையபேச்சுரிமை, ஆனால் இப்படி அப்பட்டமாய் மத இவாஞ்ஜலிஸம் காட்டப்படும் ஒரு திரைப்படத்திற்கு எப்படி தேசிய விருது கொடுக்கிறார்கள்? நுண்ணுணர்வற்ற ஒரு தேர்வு குழுவினரால் மட்டுமே இப்படியான பிரச்சார படத்திற்கு தேசிய விருது வழங்க முடியும்!

ஏதோ ஒரு காட்சியில் பெரியாரின் சிலை காட்டியதற்கு புளங்காகிதம் அடைந்த தமிழ் சினிமா விமர்சன பிதாமகர்கள் எல்லாம் இதை ஆதாரிப்பது ஒரு நோய்மையான சூழல்! மொக்கை படத்துக்கெல்லாம் இந்த படத்தை நான் இயக்கி இருந்தால் என்று கூறுகெட்ட விமர்சனம் எழுதும் லெஃப்டிஸ்ட் விமர்சகர்கள் இதை புளுத்த சிரிப்புடம் கடந்திருப்பார்கள் என்பது இன்னும் கொடுமையாக இருக்கிறது!

குற்றம் கடிதலுக்கான தேசிய விருது ஒரு அவமானம்! தேர்வுகுழுவுக்கு கன்டனங்கள்!

;)))
Photo

Post has shared content
Malai Murasu Murali @ fb

பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..

பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன
என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா. நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக... டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன். உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.

வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன். இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம். சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க. வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல. இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும்போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம். ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும். அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.

ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன். சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன். இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.
Photo

Post has shared content
Just for Fun..! :)))))))

#Fb
Photo

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

ஊருக்கு உபதேசிக்கும் பிரபல்ய நண்பரின் மறு பக்கத்தை பார்க்க நேர்ந்தது, எனக்கு உலகத்தை பற்றி புரியவைத்த, சொல்லிக் கொடுத்த நண்பரவர், இதில் வேடிக்கை என்னவென்றால், நண்பர் சொல்லிக் கொடுத்த உலக மனிதர்களை என் வாழ்க்கையில் நான் காணவே இல்லை, மாறாக அத்துணையும் நண்பரிடத்திலேயே கண்டு கொண்டேன், உலகத்தை புரிய வைக்கும் சாக்கில் நண்பர் தன்னை புரியவைக்க முயன்றிருக்கிறார், வழக்கம் போலவே இதையும் நான் புரிந்து கொள்ளவில்லை :-)

மக்கள் தங்கள் உபதேசங்களை தங்களிடத்திலிருந்தே தொடங்குகிறார்கள், இப்பொழுது தெளிவடைந்து விட்டேன்.

வாழ்க நின் புகழ், வளர்க நின் கொற்றம் ..!
Wait while more posts are being loaded