Profile

Cover photo
சித்தர்கள் இராச்சியம்
54 followers|91,513 views
AboutPostsPhotosVideos

Stream

 
இராமலிங்க அடிகள் (1825 - 1858)

இராமலிங்க அடிகளாரின் இளமைப் பருவம் பற்றி கூறப்படும் பல்வேறு சம்பவங்கள், அவரையொரு அசாத்தியமான சக்திகள் நிறைந்த மிகை மனிதராகவே காட்சிப் படுத்துகின்றன. பின்னாளில் அவர் தொட்ட உயரங்களை மனதில் கொண்டு அவருடைய அணுக்கத் தொண்டர்கள் இத்தகைய தொன்ம சித்திரங்கள் நிறைந்த இளமைக் காலத்தை கட்டமைத்திருக்க கூடும் என்கிற எண்ணமே எனக்கு மேலோங்குகிறது.

உதாரணத்திற்கு சில சம்பவங்களை பட்டியலிட விரும்புகிறேன்.
 ·  Translate
1
Add a comment...
 
சதுரகிரியில் மறைவாக இருப்பதாய் கருதப் படும் தைலக் கிணறு பற்றி ஏராளமான கதைகள் உண்டு. இவற்றில் பல கதைகளை புனைவின் உச்சமாகவே கருதலாம்.நானும் கூட முந்தைய பதிவொன்றில் இந்த தைலக் கிணறு குறித்த ஒரு கதையினை பகிர்ந்திருக்கிறேன். அதனை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

பிலாவடி கருப்பண்ண சாமி கோவிலின் பின்னால் இருப்பதாக கூறப்படும் இந்த தைலக் கிணற்றை இதுவரை யாரும் கண்டறிந்து கூறியதாக தெரியவில்லை. இரசவாதம் செய்வதற்கு தேவையான மூலிகை குழம்பின் மிகுதி இந்த கிணற்றுக்குள் கொட்டப் பட்டு அதற்கு காவல் தெய்வங்களை சித்தர்கள் நியமித்ததாகவும், அந்த காவல் தெய்வங்கள் இந்த கிணற்றை சாமானியர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும் மட்டுமே சமாதானம் சொல்லப் படுகிறது. இன்றைய பதிவில் இது தொடர்பான சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.
 ·  Translate
1
Add a comment...
 
திரு அருட் பிரகாச வள்ளலார் என அறியப் படும் மருதூர் இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றிய எனது தேடல், சேகரிப்புகள், புரிதல்கள், தெளிவுகள் ஆகியவைகளை பதிவாக்கும் முயற்சிதான் இந்த தொடர். வெகு நாட்களாகவே எழுத நினைத்திருந்தது இப்போதுதான் சாத்தியமாயிற்று.

இந்த தொடரின் நெடுகே நான் முன் வைக்கும் தகவல்கள் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் யாவும்...
 ·  Translate
1
Add a comment...
 
யானைக்கால் நோய் (Elephantiasis) என்பது, ஃபைலேரியா (Filaria) எனும் நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் நமது நிணநீர் மண்டலத்தை தாக்குவதால் ஏற்படும் ஒரு நோய். மனிதர்களுக்கு இந்த நோய் நுளம்புகளின்(கொசு) வழியே பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப் பட்டவர்களின் தோலும் அதன் கீழே உள்ள திசுப் பகுதிகள் வீககமடைந்து விகாரமான தோற்றத்தைத் தரும். தற்போது இந்த நோய் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட்டாலும் முற்காலத்தில் பரவலாய் பலரும் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

யானைக்கால் நோய்கான தீர்வுகளை நமது முன்னோர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர். அத்தகைய ஒரு தீர்வினை இன்றைய பதிவில் பார்ப்போம்...
 ·  Translate
1
Add a comment...
 

சமீப நாட்களில் வன விலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வந்து விடுவதாகவும், அதனால் மக்களுக்கு துயர் உண்டாவதாகவும் பல செய்திகளை பத்திரிக்கைகளீல் பார்க்க முடிகிறது. நாம் அவற்றின் வாழ்விடங்களான வனப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியதுதான் இத்தகைய நிலைக்கு காரணம் .

முற்காலத்திலும் கூட மனிதன் தன் தேவைகளுக்காக அடர் வனங்களின் ஊடே வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிருகங்களோடு இணக்கமாயிருக்கும் உத்திகளை கைக் கொண்டிருந்தனர். இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய
 ·  Translate
1
Add a comment...
 
சதுரகிரி - தொடர்கிறது மலைப் பயணம்!

தாணிப் பாறையிலிருந்து கிளம்பி அத்திரி மகரிஷி மற்றும் மச்சமுனிவரின் ஆசிரமங்களின் வழியே தனது ஆசிரமம் வரை நம்மை அழைத்து வந்த கோரக்கர், சதுரகிரி மலையில் வாசம் செய்கிற மற்ற பிற சித்தர்களின் ஆசிரமங்களுக்கு செல்லும் வழியை தெளிவாக கூறியிருக்கிறார். அவர் வழியில் பயணத்தை இன்றும் தொடர்வோம்.

கோரக்கரின் ஆசிரமத்திற்கு தெற்குப் பக்கமாய்
 ·  Translate
1
Add a comment...
 
வள்ளல் பெருமானின் ஆன்மிக அனுபவங்களை, அதில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்குச் சொல்லும் ஆவணமாய் இருப்பது அவருடைய பாடல்களே. சற்றேறக் குறைய ஆறாயிரம் பாடல்கள் ஆறு தொகுதிகளாய் “திருவருட்பா” எனும் தலைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இதனை அவருக்கு நெருக்கமாய் இருந்த சீடர்களே தொகுத்து பதிப்பித்தனர். இது தவிர அவரது தனிப்பாடல்கள் ஒரு திரட்டாக தொகுக்கப் பட்டிருக்கின்றன.

துவக்கத்தில் இந்த பாடல்களை நூலாக தொகுப்பதில் வள்ளல் பெருமானுக்கு ஆர்வம் இல்லையென்பதும், மிகுந்த சிரமத்திற்கிடையேதான் அவரது சீடர்கள் போராடி அவரிடம்
 ·  Translate
1
1
Add a comment...
 
வள்ளல் பெருமானின் பிறப்பும், இளமைக் காலமும்

சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் கணக்கராய் இருந்தவர் இராமையா பிள்ளை. இராமையா பிள்ளையின் முதல் ஐந்து மனைவிகளுக்கு குழந்தையின்மை மற்றும் இறந்து போனதால், சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னகாவணத்தைச் சேர்ந்த சின்னம்மையை ஆறாவதாய் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இராமையா பிள்ளை, சின்னமையின் ஐந்தாவது பிள்ளையாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதியில் இராமலிங்கம் பிறந்தார். இவருடன் உடன் பிறந்த....

.
 ·  Translate
1
Add a comment...
 
வீங்குதல், புடைத்தல், வளர்தல் ஆகியவையே பொதுவில் வீக்கம் எனும் சொல்லினால் அறியப் படுகிறது. நமது உடலின் எந்த பகுதியிலும் இந்த வீக்கம் உருவாகலாம். இதற்கு எண்ணிலடங்கா காரண காரியங்களை பட்டியலிட முடியும். அத்தகைய சில வீக்கங்களுக்கான ஒரு மருந்தினையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த மருந்தானது நரம்பு முறிந்து வீக்கங் கொண்டாலோ, அல்லது அடிப்பட்டு வீக்கங் கொண்டாலோ, அல்லது வேறு சில காரணங்களினால் வீக்கம் கண்டால் அதை குணமாக்கிட உதவும் என்கிறார் தேரையர். ஆம், இந்த மருந்து முறையானது...
 ·  Translate
1
Add a comment...
 
இந்த ஆக்கம்தான் வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவாய் வந்திருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் கவனித்தமையால் எண்ணூறாவது பதிவு எனது தனிப்பட்ட எண்ணப் பகிர்வாய் அமைந்தது விட்டது. 

இனி இரும்பை செம்பாக்கும் வித்தையை பார்ப்போம்.
 ·  Translate
1
Vikram Don's profile photo
 
நல்லபதிவிற்க்கு நன்றி.
 ·  Translate
Add a comment...
 
சதுரகிரி - ஆச்சிரமங்கள், சஞ்சீவி மூலிகை, கற்பகதரு!

கோரக்கர் அருளிய 'கோரக்கர் பிரம்மஞான தரிசனம்', மற்றும் 'கோரக்கர் மலை வாகடம்' என்கிற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட சதுரகிரி மலைப் பயண வழிக் குறிப்புகள் இன்றும் தொடர்கிறது. சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களின் ஊடாக பொதிந்திருக்கும் தகவல்களை தனியே பிரித்தெடுத்து உரைநடையாக பதிந்து வருகிறேன். எனவே பாடல்களுடன் தகவல்களை பகிர்வதில் உள்ள சிரமத்தினை(தட்டச்சு செய்வது) புரிந்து கொள்ள வேண்டுகிறேன். எதிர்காலத்தில் சதுரகிரி பற்றிய ஆய்வு நூலொன்று எழுதிடும் திட்டமிருக்கிறது, அப்போது விரிவாக பாடல்களுடன் எழுதிட முயற்சிக்கிறேன்.

வாருங்கள், கோரக்கரின் வழிகாட்டுதலுடன் அகத்தியரின் கும்ப மலை குகையில் இருந்து பயணத்தை தொட்ர்வோம்...
 ·  Translate
1
Add a comment...
 
போகர் அருளிய விடத்தலைக் கற்பம்

எளிய வகை காய கற்பங்களின் வரிசையில் இன்று “விடத்தலை கற்பம்” பற்றி பார்ப்போம். கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளில் விரிவாக விளக்கியிருப்பதால் இன்று நேரடியாக கற்பத்தைப் பற்றி பார்ப்போம்.

விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும்.

விடத்தலை கற்பம் என்பது மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் தன்மையுடையது என...
 ·  Translate
1
Add a comment...
Story
Tagline
சித்தர்கள் இராச்சியம்
Introduction
அன்பே சிவமென அகிலத்துக்குச்
சொன்ன ஆதித் தமிழரின் வாழ்வியலை
   மீட்டெடுக்கும் சிறுமுயற்சியில்....

"சித்தர்கள் இராச்சியம்"