Profile cover photo
Profile photo
Selva Kumar ISR
1,645 followers
1,645 followers
About
Selva Kumar's posts

ஜிலு ஜிலுவென கூந்தல் பறக்க, டூவீலர் மேல் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு, அந்தப் பெண் யாருடனோ மொபைலிக் கொண்டிருந்தாள்.

ரோஜாச் செடியை பராமரிப்பது போல ஒரு இளைஞன் அவளது நகங்களை வெட்டிக் கொண்டிருந்தான்.

டிராபிக் வழிந்த சாலையில் அப்படி ஒரு காட்சி இது வரை நான் பார்த்திராத ஆச்சரியம்.

அவள் அவனுக்கு தங்கையா, அக்காவா, மனைவியா? யாராக இருந்தாலும் இருவரும் அழகு!


Post has attachment

மணமான பெண்களுக்கு
உடன்பிறந்தவர்களுடன்
அம்மாவீட்டில் கும்மியடிப்பது
புத்துணர்வு முகாம்.
மணமான ஆண்களுக்கு
உடன் படித்தவர்களுடன்
டீக்கடையில் கும்மியடிப்பது
புத்துணர்வு முகாம்.

Post has attachment
புதிதாக ஒரு மொழி, புதிதாக ஒரு பழக்கம் ஞாபக சக்தியை நிலை நிறுத்துகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக டாஸ்மாக் கடைகளை மானாவாரியாக திறந்து வைத்து, எதிர்கட்சிகளின் முழு அடைப்பை நீர்த்துப் போகச் செய்த ஆளும்கட்சியின் ராஜதந்திரம் வியக்க வைக்கிறது.

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், எம்.ஜி.ஆர் நகர் டாஸ்மாக்கில் ஜே.ஜே.வென கூட்டம். அமோக விற்பனை!

Post has attachment

இரு அணிகளும் இணையுமா? அழுகிப் போன குப்பை டாபிக்.

அதே நபர்கள், அதே அசிங்கமான குற்றச்சாட்டுகள்,
அதே கத்தல்கள். இதையே இன்னும் எத்தனை நாட்களுக்கு டிவி சேனல்களில் பேசிக் கொண்டிருப்பார்கள்?

சேனல்காரர்களுக்கு எது அவசியம் எது அனாவசியம் என்பதே மறந்துவிட்டது. ஒன்றுக்கும் உதவாத இரண்டாம்தர அரசியல்வாதிகளை வைத்து மணிக்கணக்கில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

மீடியாவிற்கு தேவை மனோதர்மம். ஆனால் அவர்களோ ஒன்றுக்கும் உதவாதவர்களையும், நாட்டை குட்டிச் சுவர் ஆக்குபவர்களையும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் இல்லாமல் தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இது ஒரு மனோவியாதி. இப்போதிருக்கும் மீடியாகாரர்களால் இந்த மனோ வியாதியிலிருந்து மீளவே முடியாது. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Post has attachment

Post has attachment

தியாகி தினகரனிடம் மீடியா கேட்க வேண்டிய கேள்விகள்.

மகாத்மா காந்திக்கு கூட கொடுக்காத மீடியா கவரேஜை, அசால்டா 90 கோடி கொடுத்து ஓட்டு வாங்கற உங்களுக்கு கொடுக்கிறோமே.. அது ஏன்?

உங்களை மெச்சூர்டாக மக்களுக்கு காட்ட உங்களுக்கு வலிக்காமல் கேள்வி கேட்கிறோமோ.. இதற்காக எங்களுக்கு நீங்க என்ன கொடுத்தீங்க? எப்படி கொடுத்தீங்க?

ஒவ்வொரு ஏர்போர்ட்டுலயும் நீங்க வந்தா பிடிச்சு தர சொல்லி உத்தரவாமே? ஏன்?

ஃபெரா வழக்கு என்றால் என்ன? இத்தனை வருஷம் எப்படி டிமிக்கி கொடுத்தீங்க?

உங்களை ஜெயலலிதா துரத்திவிட்டவுடன் எங்கே தலைமறைவா இருந்தீங்க? என்னைக்கு போயஸ்கார்டனுக்குள்ள நுழைஞ்சீங்க?

ஜெயலலிதா இறந்தவுடன் இறுதி ஊர்வலம் துவங்கும் முன்பே திடீர்னு உங்க குடும்பம் அதிமுகவை கைப்பற்றியதே அது எப்படி?
ஏன் திடீரென்று ஓ.பி.எஸ்சை பார்த்து பயப்படறீங்க? ஏன் உங்க குடும்பமே ஒதுங்கிக் கொள்வதாக பல்டி அடிக்கிறது?

முந்தா நேத்து வரைக்கும் ஓ.பி.எஸ்சை துரோகி என்று திட்டித் தீர்த்த நீங்களும், உங்கள் கும்பலும், திடீரென்று அவரை விசுவாசத்தின் அடையாளம் என்று புகழ்கிறீர்களே.. அந்த மாயம் எப்படி நிகழ்ந்தது?

திடீரென்று கட்சியும் வேணாம் பதவியும் வேணாம்னு தியாகம் பண்ணிட்டீங்களே? இனிமேலும் இந்த தேசத்துக்கு என்னென்ன தியாகங்கள் செய்வீங்க? இதுக்கு முன்னாடி என்னென்ன தியாகங்கள் செய்திருக்கீங்க?
Wait while more posts are being loaded