Profile cover photo
Profile photo
கார்த்திக் புகழேந்தி
121 followers -
கிடக்கிறான் விடுங்கள் பஞ்சப்பயல் கையில் பொன் கிடைத்தால் என்ன பொரிகடலைகிடைத்தாலென்ன பற்றவே பற்றாது.
கிடக்கிறான் விடுங்கள் பஞ்சப்பயல் கையில் பொன் கிடைத்தால் என்ன பொரிகடலைகிடைத்தாலென்ன பற்றவே பற்றாது.

121 followers
About
கார்த்திக்'s posts

Post has attachment
கோடை விடுமுறையும் கையெறி குண்டுகளும்
          ஆதம்பாக்கம் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த
சிறுவன் ஒருவனைக் காட்டி, “புகழ் அந்தப் பெடியன பாருங்களேன்” என்றார் அகரமுதல்வன்.
அவர் சொல்லுகிற பெடியன் என்கிற அந்தச் சொல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிறுவன் அவன்பாட்டுக்கு
மண்ணையோ கல்லையோ வைத்து தனியாளாக...

Post has attachment
ஆடு வளர்ப்பு
      வெ ள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி
இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக்
கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையத...

Post has attachment
கள்ளும் நறவும் தேறலும்..
          நன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி,
ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும்,
கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை
வழியில் சந்திக்கிற ப...

Post has attachment
வேட்டையன்கள்
             சிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர்
ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு
நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை
கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது ந...

Post has attachment
‘கதா மாலிகா’
              ந ரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப்
பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும்
நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல
இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே    வாசிக்கத்
தி...

Post has attachment
வாசிக்கும் பிம்பங்கள்
         ஏழை
எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை
அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களை...

Post has attachment
மரக்கா - முத்துராசா குமார்
கொஞ்ச மாதங்களுக்கு முன்பாக தமிழ் மொழிக்கூடம்
Srinivas Parthasarathy அவர்கள், சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு மேற்காக களிகுன்றம்
பகுதியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிற்காகச்
சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு...

Post has attachment
ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளன் -தொ.மு.சி ரகுநாதன்
          த மிழ் சிறுகதை
இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான
சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ்
மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர்
தொ.மு.சி., ப...

Post has attachment
“ஆயனுக்கு முதல் இசைக்கருவியே காற்றுக்கருவி தானே. எங்கள் ஊரிலும் ஒரு ஆயக் கொம்பூதி இருந்தார். இளங்கன்று கிடாரிப் பருவம் தாண்டிய போது அரையடிக்கு முளைவிட்டு நிற்குமில்லையா கொம்பு. அதில் ஒன்றை மெழுகாய் தீட்டி, காற்றூதுவார்.

அதற்கு திமிரிக்கொம்பு என்று பேரும் சொல்லுவார். இன்னும் கொஞ்சம் பெருசுக்கு பாரிக்கொம்பு என்று பேர். கொம்பை விட இன்னும் பெரிது தாரை. நல்ல மேல் வளைவும், கீழ் வளைவுமாக வாய் பிளந்து கனமாக இருக்கும். தூக்கி வாயில் முட்டுக்கொடுத்து, தூக்கி ஊதுவதற்கு தனி வலுவேண்டும்”

Post has attachment
காற்றில் வரும் ஒரு சிறு இசை
“கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்று மூதுரையில் அவ்வை அவள்
பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். திடீரென்று நண்பன் கேட்டான் அதெப்படி சங்கு
சுட்டாலும் வெள்ளையாக இருக்கும் என்று. கொஞ்சம் புரிகிறமாதிரி பேசித்தீர்த்துக்கொண...
Wait while more posts are being loaded