Profile

Cover photo
கொக்கரக்கோ சௌம்யன்
Works at RAMANA'S FOOD PRODUCT
Attended Bharathidasan University
5,645 followers|886,398 views
AboutPostsPhotosYouTube

Stream

 
நேத்திக்கி வைக்கோ திமுகவோடு கூட்டணி இல்லைன்னு அறிவித்த உடனேயே எனக்கு அடி மனதில் ஒருசந்தோஷம். ஏதோ ஒரு நல்ல செய்தி வரப்போகுதுன்னு...!!

இன்னிக்கு லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வந்து அதை உறுதிப்படுத்திவிட்டது..!

இதே லயோலா கல்லூரியின் கடந்த ஆண்டு (2014) கருத்துக்கணிப்பில்....   44 சதவிகிதம் மக்கள் ஆதரவு பெற்றிருந்த அதிமுக... இன்று வந்த கணிப்பில் 10 சதவிகித மக்களின் ஆதரவை இழந்து 34.6 சதவிகிதமாக சுறுங்கியிருக்கின்றது...!

அதே சமயம் கடந்த ஆண்டு (2014) கருத்துக்கணிப்பில் 26 சதவிகித மக்கள் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த திமுக... இன்றைய கணிப்பில்,  6 சதவிகித மக்களின் அமோக ஆதரவைப் பெற்று...  32,1 சதவிகிதமாக பிரம்மாண்டம் காட்டியுள்ளது. 

இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்துக்கணிப்பு. அதாவது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வங்கி சதவிகிதம் தற்பொழுது வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே...!

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஒரு ஆளும் கட்சியால் தனது வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வது கிட்டத்தட்ட இயலாத ஒரு காரியம். அதே சமயம், எதிர்க்கட்சிக்கு, தங்கள் வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வது சிறிது சுலபமான காரியமும் கூட..!!

அந்த வகையில் இந்த 1.5 சதவிகித வாக்கு வங்கியை திமுக திட்டமிட்டு செயலாற்றினால் வெகு இலகுவாக இட்டு நிறப்பி...  இன்னும் கூடுதல் வாக்குகள் பெற்று நிச்சயம், ஆட்சியைப் பிடிக்கும்...!!

இந்த கருத்துக்கணிப்பில் வந்திருக்கும் இன்னொரு முக்கிய விஷயம்....

யார் அடுத்த முதல்வராக வர விருப்பம் என்ற கேள்விக்கு...

ஜெயலலிதாவுக்கு 31 சதவிகித ஆதரவும்...

திமுகவின் தலைவருக்கு 23.5 சதவிகித ஆதரவும்...

திமுகவின் பொருளாளருக்கு 28 சதவிகித ஆதரவையும்...

மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதை திமுகவினர் கொண்டாட வேண்டும்...! ஏனெனில் திமுக சார்பான முதல்வர் வேட்பாளருக்கு தமிழக மக்களில் 50 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்...!!

திமுகவுக்கு அடுத்த படியாக அதிமுக சார்பு முதல்வர் வேட்பாளருக்கு வெறும் 31 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்...!!

அதாவது திமுக முதல்வருக்கும் அதிமுக முதல்வருக்கும் 19 சதவிகிதம் வித்தியாசம் இருக்கின்றது..!!

ஆகவே திமுகவை நெருங்க வேண்டுமானால் அதிமுக தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்து சிறிய கட்சிகளோடும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம்..!!

போயஸ் தோட்ட தூதுவர்கள் கோயம்பேடு, தாயகம், தைலாபுரம், கமலாலயம் என்று படையெடுக்க வேண்டியிருக்கும்...! விரைவில் அந்தக் காட்சிகள் அரங்கேறலாம்...!!!
 ·  Translate
13
1
Tjustinwilfred Thainesimuthu's profile photoகொக்கரக்கோ சௌம்யன்'s profile photoNamakkal Shibi's profile photoRAJA MUTHAPILLAI's profile photo
9 comments
 
44 - 34 aagalam. Aanavam Adhe madhiri kuraiyuma?
Add a comment...
 
110 இன் கீழ அறிவிக்கிறது தான் அறிவிக்கிறாங்க...  அது என்ன புதுக்கோட்டைக்கு மாத்திரம்???

புதுக்கோட்டைல ஆரம்பிச்சி...,  தஞ்சாவூரு, கும்பகோணம், மாயவரம், சிதம்பரம்ன்னு....  அப்புடியே ஸ்ட்ரைட்டா நூல் புடிச்சி போக வேண்டியது தானே??!!

பட் இந்தம்மாவோட நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...!! ஒரு பொய்யச் சொன்னாலும் அதை நம்புற மாதிரி கொஞ்சம் உண்மை கலந்தது மாதிரி சொல்லனும்ங்கற விதிப்படி...

போன வருஷம் கரூர்..., இந்த வருஷம் புதுக்கோட்டைன்னு, வருஷத்துக்கு ஒரு ஊரைத்தான் குறிவச்சி சொல்றாங்க.  அப்பத்தான மக்களும் நம்பறதுக்கு வசதியா இருக்கும்..!!

இதே மாதிரி தான் ரெண்டு வருஷம் முன்னாடி தமிழ்த்தாய் சிலை..., இப்போ சிவாஜி மணிமண்டபம்...!!  இப்புடிக்கா சொல்லி சொல்லித்தான் எல்லோரையும் ஒருவித சந்தோஷ எதிர்பார்ப்புல வச்சிருக்கணும்...!!

இத விட்டுட்டு, இந்த கலைஞர பாருங்க...!  சொன்னா மாதிரி திருவாரூர்ல மருத்துவ கல்லூரியும், மத்திய பல்கலைக்கழகமும் கொண்டாந்துட்டாரு...!  சொன்ன மாதிரியே சினிமாகாரங்களுக்கு எல்லாம் சென்னைல வீட்டுமனை கொடுத்துட்டாரு...!

அதெல்லாம் வாங்குன கையோட கலைஞர திட்ட ஆரம்பிச்சிட்டானுவோ...!!

அதுக்கு தான் சொல்றது....  எதையும் செய்யக் கூடாது....   ஜெயலலிதா மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கணும்...!!
 ·  Translate
17
2
Gandhi Karunanidhi's profile photosubramani 2341's profile photoRAJA MUTHAPILLAI's profile photo
 
கடந்த இரண்டொரு நாளாக திருநாவுக்கரசர் இந்த பொம்பளைய பாராட்டுறத பார்க்கையில், ஆர்.கே.நகரிலிருந்து புதுக்கோட்டைக்கு தாவத் திட்டமோ?..
 ·  Translate
Add a comment...
 
கடந்த ஒரு ஏழெட்டு பத்து வருஷமா, இந்த பங்குச் சந்தைல காசப் போட்டு பணத்தை அள்ளுற ஒரு குரூப்பு வேகமா பெருக ஆரம்பிச்சிடிச்சி...!!

நம்ம ஹர்ஷத் மேத்தா மேட்டர்ன்னு ஒன்னு வெளில வந்த பின்னாடி தான் நம்ம நாட்டுல நூத்துக்கு 95 பேருக்கு பங்குச் சந்தைன்னு ஒரு சமாச்சாரமே காதுக்குள்ள வந்துச்சி...!

அது அப்படியே அந்த துறைக்கு நல்ல விளம்பரத்தைக் கொடுத்து, முதல் கட்டமா, மேல் நடுத்தர வர்க்கம் எல்லாம் அதுல கொஞ்சமா காலை நனைக்க, அதுக்கப்பறம் ஒரிஜினல் நடுத்தரம் எல்லாம் தானும் காலை நனைச்சுக்கறேண்டா பேர்வழின்னு பல பேரு கொதிக்கிற வெந்நீருல காலை விட்டு சூடு வச்சிக்க....

இப்படியாக கனஜோரா வளர்ந்துச்சி நம்ம பங்குச் சந்தை. இந்தியாவுல நம்ம நடுத்தர வர்க்கம் தான் மிகப் பெரிய ஏமாந்த சோனகிரிங்கறத புரிஞ்சிக்கிட்ட கார்ப்பரேட்டுகள் அனைத்தும், ஊடகங்களை கையில போட்டுக்கிட்டு, அவங்களை மூளைச்சலவை செய்ய ஆரம்பிக்க...

ரிஸ்க் இல்லாத இலகுவான வழி ஒன்னு இதுக்கு அவங்க மூலமாவே அறிமுகப்படுத்தப்பட்டது தான் மியூட்சுவல் ஃபண்ட். விகடன் குழுமத்துல நாணயம் விகடன்னு ஒரு வார இதழ் இதுக்காகவே துவங்குன மாதிரி நடுத்தர வர்க்கத்தை எல்லாம் அதுல இழுத்துப் போட்டுச்சி. 

அதுல கொஞ்சம் துளிர்விட்ட நம்மாளுங்க, தாங்களே நேரடியா (பங்குச்சந்தை என்ற இடைத்தரகர் கமிஷன் இல்லாம) களம் இறங்க, டிரைனிங் கொடுக்கிறேன் என்று எக்கச்சக்க பேர் இதில் காசு பார்த்துவிட்டனர். 

தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊருலயும் இந்த மாதிரி பங்கு வணிக மையங்கள் பல்வேறு நிறுவன பெயர்களில் குறைந்தபட்சம் இருபதாவது இருக்கும். ஒவ்வொன்னுத்திலயும் 50 பேராவது காலைல 10 மணிக்கெல்லாம் டாஸ்மாக் குடிமகன்கள் மாதிரி குத்த வச்சி ஒக்காந்திருப்பாய்ங்க...!!

இதத் தவிரவும் வீட்டுல, ஆஃபீஸ்ல உட்காந்துக்கிட்டு லேப்டாப்ல டிரேடிங் பண்றவங்களும் ஒவ்வொரு ஊருக்கும் சில பல ஆயிரங்கள் தாண்டும்..!!

ஆனா அந்த குருப்பு எல்லாம் எப்பவாவது ஒரு பொது விசேஷம் அல்லது கிளப்புகளில் ஒன்னு சேர்ந்தா, மன்மோகனை திட்டுதிட்டுன்னு திட்டிக்கிட்டு, சிதம்பரத்துக்கு எல்லாம் ஃபினான்ஸ் நாலெட்ஜே கிடையாதுன்னு அலம்பல் விட்டுக்கிட்டு, மோடி வந்தா தான், நம்ம காட்டுல இன்னும் செமையா மழை பெய்யும்ன்னு பேசுவாய்ங்க...!!

என்னைய மாதிரி மாடு மாதிரி உழைச்சு, இவிங்க அளவுக்கு வருமானம் பார்க்காதவிங்க எல்லாம் ஆஆஆன்னு வாயை பிளந்துகிட்டு, இவிங்க பேசுறத வேடிக்கை பார்த்துட்டிருப்பாய்ங்க...!!

நேத்திக்கு, ஏஏஏஏழு.... லட்சம் கோடியாம்...!!  

அவ்வளவும் இந்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் பணம் தான்..! ஒக்கே ஒக்க நாள்ல எல்லாம் ஹோகயா...!!  நம்மூரு ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் பணமெல்லாம் கூட கண்டிப்பா அந்த ஏழு லட்சம் கோடில கரைஞ்சு போயிருக்கும்...!!!

இந்த நடுத்தர வர்க்கம் தன்னை திருத்திக்காத வரை இந்த நாடு உருப்படவே உருப்படாது...!!!
 ·  Translate
23
5
Ushaselvi Ushaselvimarimuthu's profile photosubramani 2341's profile photoAnbu Alaghan's profile photosaravanan funk's profile photo
13 comments
 
இன்ஷா அல்லாஹ்...:-)
 ·  Translate
Add a comment...
 
என்ன மாதிரியான மனநிலை இது???

இன்றைக்கும் நம் தமிழகத்தின், தமிழர்களின் பெருமையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் கரிகால் சோழன் கட்டிய கல்லணை, ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில், மதுரை நாயக்கர் மஹால், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், மாமல்லபுரம் சிற்பங்கள்...  இப்படியாக பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்டவைகளை....

அவர்களுக்கு அடுத்தடுத்து வந்த அரசர்கள் அழித்து ஒழித்திருந்தால்....??!!

இவற்றின் பெருமைகளை நாம் இன்று பேசிக்கொண்டிருந்திருக்க முடியுமா? அவற்றின் பலன்களைத்தான் நாம் அனுபவித்திட முடியுமா???!!

ஒருவேளை தஞ்சை பெரிய கோவிலை அடுத்தடுத்து வந்த மராட்டியர்கள் அழித்திருந்தால்... ??

நாம் அவர்களை என்னவெல்லாம் வசைபாடுவோம்??

அதேப் போன்று தானே....

சம காலங்களில்... அதாவது கடந்த இரு நூற்றாண்டுகளில், தமிழகத்தில் நிலைத்து நிற்கக் கூடிய சில சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன...  சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் கலைக்கூடம்...

இந்த வரிசையில்...   நிச்சயம் உலக அளவில் புகழ்பரப்பக் கூடியதும், ஒட்டுமொத்த தமிழர்களின் கல்விக் களஞ்சியமாக திகழக் கூடியதொரு அற்புதமான, ஆசியாவிலேயே மிகச் சிறந்ததானதொரு நூலகத்தினை கடந்த திமுக ஆட்சி அமைத்துக் கொடுத்தது...!!

அது மாத்திரம் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், இந்நேரம் உலக மக்களின் இந்திய சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கும்.  ஹிலாரி கிளிண்டனின் வருகையே அதற்கு ஒரு சான்று. 

அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை, வெறும் அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களுக்காக, அதைக் கட்டிய ஆட்சியாளரின் புகழ் நிலைபெற்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.....

அதை கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவதும், அதை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பிப்பதும், அதிலுள்ள அடிப்படை வசதிகள் அனைத்தினையும் சீர்குலையச் செய்து அங்கு வருவோர் எண்ணிக்கையை முற்றிலும் முடக்கிப் போடுவதும்.....

என்று செய்வது எல்லாம் என்ன மாதிரியான ஒரு மனநிலை????????!!!!

இது போன்று ஒரு ஆட்சியாளர் செய்வதை செயல்படுவதைத் தான் இன்றைய உண்மையான நடுநிலை தமிழர்கள் நியாயப்படுத்துகின்றார்களா? இதையெல்லாம் அதிரடி என்றும், எதற்கும் அஞ்சாத வீரம் என்றும் பெருமை கொள்கின்றார்களா??

ஒரு வேளை இதற்கான பதில் ஆம் என்றால், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த கோர மனநிலை, நாளை மக்களுக்கு எதிராகவும் திரும்பும். அப்பொழுது அதை சாமான்ய மக்களால் எதிர்கொள்ள முடியுமா?...!!

ஏற்கனவே, எஸ்மா, டெஸ்மா, பொடா, கஞ்சா கேஸ், இன்னும் பலவற்றை சந்தித்தது தான் இந்த தமிழகம்.  இது போன்ற பொது விஷயங்களிலாவது தமிழர்கள், அதாவது உண்மையான நடுநிலையாளர்கள் அரசின் இத்தகைய போக்கினை கண்டிக்காவிட்டால், நாளை இது அவர்கள் தலையிலேயே விடியும் என்பதை உணர வேண்டும்..!!

கடந்த ஆட்சியாளர்கள் அதிரடிக்காரர்கள் இல்லை...  நிதானம் கொண்டவர்கள்...  இந்த அரசின் ஒவ்வொரு தவறுகளுக்கும் சம்ச்சீர் கல்வி தொடங்கி, இந்த நூலகம்... அதாவது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம் வரை சட்டரீதியாக வெற்றி கொண்டுள்ளது..!!

ஆம்... சென்னை உயர்நீதிமன்றம், அந் நூலகத்தை இடமாற்றம் செய்யும் அதிமுக அரசின் ஆணையை ரத்து செய்தும், அதன் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும் உள்ளது. 

சிந்தியுங்கள் தமிழர்களே...!!
 ·  Translate
14
1
Gokul D (Gokul Dha)'s profile photo
Add a comment...
 
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #3

கடந்த திமுக ஆட்சியில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகிய மூன்று நதிகளை இணைத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த 125 கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும் அற்புதமான திட்டத்தை ரூ. 369 கோடியில் தீட்டி, அதன் இரண்டு கட்ட பணிகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில்....

வெறும் பத்து சதவிகித பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த நான்காண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும்... அதிமுக ஜெயலலிதா ஆட்சியை அதை நிறைவேற்றக் கோரி நெல்லை மாவட்ட விவசாயிகள் கலக்டர் குறை தீர்க்கும் கூட்டங்களில் முறையீடு மேல் முறையீடாக வைத்துக் கொண்டிருக்கின்றார்களே????!!!!

தானாக ஒரு மக்கள் நலத் திட்டத்தைத் தான் கொண்டு வர முடியவில்லை, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை இந்த அதிமுக ஆட்சியில் ஒன்றையாவது கொண்டு வர முடிந்ததா????!!!!
 ·  Translate
14
2
கொக்கரக்கோ சௌம்யன்'s profile photoRamachandran b k's profile photoelango m's profile photosaha saha's profile photo
9 comments
 
+கொக்கரக்கோ சௌம்யன் நான் சர்வ நிச்சயமாக நடுநிலையாளன் இல்லை. அதற்க்காக ஒரேடியாக திமுக எதிர்பாளன் என்று முத்திரை குத்த வேண்டாம்.

1967 போல புது முகங்களுக்கு வாய்ப்பு தந்து அதாவது உங்க மா செ குடும்பங்களை ஒதுக்கி விட்டு, தெளிவாக ஸ்டாலின் முதலமைச்சர் என்று அறிவித்து தேர்தலைச் சந்தித்தால் ஆட்சிக்கு வரலாம்.

செய்வீங்களா
நீங்கள் செய்வீங்களா 
 ·  Translate
Add a comment...
 
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! # 1

கடந்த திமுக ஆட்சியில் நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் இன்றைக்கு பத்து கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கச் செய்து, தென் சென்னையில் வசிக்கின்ற 15 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்...!!!

இதேப் போன்று ஏதாவது ஒரே ஒரு திட்டம் கடந்த நான்காண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கின்றதா???
 ·  Translate
22
1
Vaigai V's profile photoraja sundara rajan's profile photoRajah Ramaiyah's profile photoShankar Veera's profile photo
3 comments
 
கல்வியின் தரம் நீர்த்து போச்சே, அடிப்படை எந்த ஆட்சியாளர்,,,,,
 ·  Translate
Add a comment...
Have him in circles
5,645 people
thiyagu rajan's profile photo
ratnam thuraiyappa's profile photo
Suresh Deva's profile photo
Cpiml Shankar's profile photo
Prasadh Vishal's profile photo
mahadeer mohamed's profile photo
barthi dasan's profile photo
khoshbur ali's profile photo
Nevin Shan's profile photo
 
ஆண்ட கட்சி, பேண்ட கட்சி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட்சி...  சார்பா இடஒதுக்கீடு பற்றிய டீவி டிபேட்டுகளில் பங்கேற்பவர்களின் வாதங்களைக் கேட்கும் பொழுது...

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பார்ப்பனர்களும், உயர்ஜாதி இந்துக்களும் இனி பெரிதாக எதுவும் மெனக்கெட வேண்டாம் என்றே தோன்றுகிறது..!!

ஆர்.எஸ்.எஸ் வழி வந்த பாஜகவைச் சார்ந்த ஒரு பார்ப்பனரும், சில பல காரணங்களுக்காக பாஜகவை எதிர்த்து எழுதுகின்ற ஒரு பார்ப்பன பத்திரிக்கையாளரும், இட ஒதுக்கீடு போன்று ஒரு பொது டிபேட்டில் கலந்துகொள்ளும் போது, நிச்சயமாக தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை புறம்தள்ளிவிட்டு, இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத்தான் தங்கள் வாதங்களை ஒருவர் மாற்றி ஒருவர்...  ஒருவரோடு இன்னொருவர் பின்னிப்பிணைந்து, பார்ப்பவர்கள் நம்பும்படி அழகாக எடுத்து வைப்பர்..!!

ஆனா நம்மாளுங்க அங்கேயும் போய் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், காலை வாரி விட்டுக்கொண்டும்,  இட ஒதுக்கீட்டின் மூல காரணமாக விளங்கும் திமுகவை குறை கூறிக்கொண்டும்.....  எதிரிகளுக்கு பட்டுச்சாமரம் வீசியும், சிகப்புக் கம்பளம் விரித்தும்...  இடஒதுக்கீட்டை நீர்த்துப்போக வைத்துவிடுகின்றனர்...!!

ஐயா சாமியளா...,  பக்கத்து தெருகாரங்களால உங்க தெருவுக்கு ஒரு பிரச்சினைன்னா, தனி வீட்டுக்காரனா உன் ஒருத்தனால எதையும் புடுங்க முடியாது..!! உன் தெருவிற்கான பொது பிரச்சினையாக இதை விளக்கி, தெருக்காரன் அனைவரையும் அரவணைத்து உன் தெருவின் சார்பாகஅழைத்துச் சென்றால் தான் உன் தெருவை காப்பாற்றிக்கொள்ள முடியும்..!!

பார்ப்பனர் மற்றும் அவர்களால் ஜலக்கிரீடம் சூட்டப்பட்ட உயர்ஜாதி இந்துக்கள் ஆரிய வர்க்கம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருக்கும் அதிகாரத்தை நம் வசம் மீட்டெடுக்க வேண்டுமானால்....

நான் தமிழன்னு ஒரு தனி வீட்டுக்காரனா போக முடியாது...!! அப்படிப்போனா, அங்கே ஜாதிகளும் வெளிக்கிளம்பும். இப்பொழுது டீவி டிபேட்டுகளில் காண்பது போல அந்தந்த ஜாதியும் அடித்துக்கொள்ளும்...!!  ஆரியம் ஆரவாரமாய் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டிடும்..!!

அதனால் தான் ஆரியத்தை வென்று நம் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருக்கின்ற அனைத்து ஜாதி, மத குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு தனி படையாக.... திராவிடப் படையாக இணைந்து போராடினால், காவலிருந்தால் மட்டுமே ஆரியத்தை வெற்றிகொள்ள இயலும். 

ஆரிய சூழ்ச்சியில் இருந்து விடுபட்டு, திராவிடத்தால் நடுவில் சில காலம் ஒருங்கிணைந்து போராடிய காரணத்தால் தான் இன்றைக்கு பீற்றிக்கொள்ளும் ஆண்ட, பேண்ட பரம்பரைகள் எல்லாம் கல்வி, அரசு வேலை வாய்ப்பு என்று வெகுவாக முன்னேறியிருக்கின்றார்கள். 

ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களில்... இந்த ஜாதிக்கார தமிழர்களில் வெறும் 2 சதவிகிதம் பேர் கூட கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்பினை பெற்றிருக்கவில்லை. இது தான் வரலாறு. 

ஆனால் அன்றைக்கு இவர்கள் திராவிடத்தால் ஒன்றிணைந்த காரணத்தால், கடந்த நாற்பது ஆண்டுகளில் இச்சாதியினரில் இன்றைக்கு 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பினைப் பெற்று முன்னேறியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது..!!

ஆகவே ஜாதிக்கட்சிகள புறந்தள்ளுவோம்... திராவிடத்தால் வளம் பெறுவோம்...!
 ·  Translate
11
3
subramani 2341's profile photoRAJA MUTHAPILLAI's profile photo
Add a comment...
 
நாற்பது சதவிகிதத்திற்கும் சற்று அதிகமான குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்.., ஏழு கேபினட் அமைச்சர்கள்..., ஒரு முதல்வர்... 

இவை அனைத்தும், குஜராத் மக்கள் தொகையில் 15 சதவிகிதம் மட்டுமே இருக்கும் பட்டேல்களுக்கு பாஜக கொடுத்திருக்கும் பரிசு..!! இதைத் தவிர்த்து வல்ல்பபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை... இத்தியாதிகள்...

இப்படியாகவெல்லாம், ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மையப்படுத்தி, கேஸ்ட் போலரைசேஷன் அரசியல் மூலம் குஜராத்தில் கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய பாஜகவுக்கு...   அங்கே மூடு விழா ஆரம்பமாகிவிட்டது போலத்தான் தோன்றுகிறது....   இன்றைக்கு ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அனைத்தையும் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் குஜராத் அரசை பார்க்கும் பொழுது..!!

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த பொழுதும், வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த பொழுதும்....   

இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக பொங்கி போராட்டம் நடத்திய வட இந்திய மாணவர்களில்... பட்டேல் சமூகத்தினரின் பங்களிப்பு தான் பிரதானமானது..!!

ஆனால் இன்றைக்கு அதே பட்டேல்கள், ஹர்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில், தங்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதி தீவிர போராட்டத்தை முன்னெடுத்து, ஒட்டுமொத்த குஜராத்தையே இன்றைக்கு ராணுவத்தைக் குவித்து ஊரடங்குச் சட்டம் போடுமளவிற்கு முடக்கிப் போட்டிருப்பது தான் வேடிக்கை..!!

இட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவானவர் காங்கிரஸ்... எதிர்ப்பாளர் பாஜக என்ற அடிப்படையில் தான், கால் நூற்றாண்டுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த பட்டேல்கள், பாஜக பக்கமாக தங்கள் ஆதரவு கூடாரங்களை மாற்றும் படி வலை விரித்து பலனும் கண்டது பாஜக.!

இட ஒதுக்கீடு கூடாது என்று தங்கள் அரசியல் களத்தையே மாற்றிக்கொண்ட, குஜராத்தின் செல்வந்தர்களாகவும், பெரு வியாபாரிகளாகவும், அதிகாரபலம் கொண்டவர்களாகவும் விளங்கிய அந்த பட்டேல்கள்...  இன்றைக்கு தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது??

பெரும் தொழில் வளர்ச்சி என்று காட்சியமைக்கப்பட்ட குஜராத்தின், தொழில்கள்... குறிப்பாக பட்டேல்கள் வசமிருந்த வைரம் மற்றும் இன்னபிற தொழில்கள் பெருமளவில் சமீபகாலத்தில் காற்று வெளியேற்றப்பட்ட பலூன் போன்று முடங்கிப் போனதன் விளைவே...

...இனி தொழில் செய்து பிழைப்பதை விட, இது வரை நமக்குத் தேவையில்லை என்று தட்டிக்கழித்த அரசு வேலை வாய்ப்புக்களில் நுழைந்தால் தான் தங்கள் வருங்கால சந்ததிகள் தப்பிக்க முடியும் என்ற ஐயத்தினால் தான், பட்டேல்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று களமிறங்கிவிட்டார்கள்..!!

இதில் பாஜக இரு வெவ்வேறு பாடங்களை படிக்க வேண்டியிருக்கின்றது. ஒன்று: ஜாதிகளை மையப்படுத்தி அரசியல் செய்து ஆட்சியைப் பிடிப்பது...  இரண்டாவது: எதார்த்தத்திற்கு மீறிய மாய பிம்ப வளர்ச்சியை மக்கள் முன்னே நிறுத்தி,  ஆட்சியைப் பிடிப்பது..!

இவை இரண்டுமே வெறும் குறுகிய கால பலன்களை மட்டுமே தரும் என்பதை இனியாவது பாஜக புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இரு வாரங்கள் முன்பு மதுரையில் மையம் கொண்ட அமித்ஷா தேவேந்திர குல வேளாளர்களைக் கொண்டு, ஒரு பிரித்தாளும் அரசியலை முன்னெடுத்ததைச் சொல்லலாம்..!!

ஜாதி, மதம், வெற்று விளம்பரம், இந்தி, சமஸ்கிருதம், மனு தர்மம் இதையெல்லாம் விட்டொழித்து...  மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான எண்ணத்துடன் செயல்பட்டால் மட்டுமே இனி பாஜக பிழைக்கும்...!!
 ·  Translate
14
3
J Mariano Anto Bruno Mascarenhas's profile photoதியாகு திருப்பூர்'s profile photosubramani 2341's profile photoSubramani N's profile photo
 
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #5

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித தொகுதிகள் ஒதுக்கீடு, தமிழக அரசு வேலை வாய்ப்புக்களில் 30 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிச்சாலைகளில் பெண்களை மட்டுமே ஆசிரியராக நியமிக்கும் உத்தரவு...!  இந்த மூன்றையுமே செய்தது திமுக ஆட்சி தான்.  இந்த மூன்று முத்தான சட்டங்களும் கடந்த கால் நூற்றாண்டுகளில் பல லட்சக்கணக்கான தமிழக பெண்களை, ஆண்களுக்குச் சமமாக இல்லை, அவர்களை விட தரம் உயர்ந்தவர்களாக நிமிர வைத்திருக்கின்றது. இவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு மற்ற பெண்களும் வேகமாக முன்னேறி வரும் நிலையினையும் தமிழகம் கண்டு வருகிறது.  நியாயமாகப் பார்த்தால் ஒவ்வொரு பெண்ணும் இந்த சட்டங்களுக்காகவே திமுகவை முற்றும் முழுதாக ஆதரிக்க வேண்டும்... அதை விடுங்கள்....

இதேப் போன்று, பெண் சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு... ஏதாவது ஒரு...  ஒரேயொரு திட்டத்தை அல்லது சட்டத்தையாவது அதிமுக அரசு செய்திருக்கின்றதா?????
 ·  Translate
11
பெம்மு குட்டி's profile photoகுடுகுடுப்பை சித்தர்'s profile photo
2 comments
 
நான் தமிழகத்தில் இருக்கிறேன், நான் அறிந்த யார் வெற்றிபெறுவார் என்பதை விட மக்களிடம் பேசும் இடைத்தரகர்கள் தமிழக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி வைத்திருக்கிறார்கள். அனைத்தும் விலைதான்:((
 ·  Translate
Add a comment...
 
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #4

மார்ச் 25, 1989 - இது தமிழக பெண்கள் அனைவரும் குறித்து வைத்துக் கொண்டு வருடா வருடம் கொண்டாட வேண்டிய ஒரு திருநாள். அன்றைய தினம் திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த, தந்தையின் சொத்துக்களில் பெண் வாரிசுகளுக்கும் ஆண் வாரிசுகளுக்கு சரிக்கு சமமான முழு உரிமைச் சட்டம் தான், கடந்த கால் நூற்றாண்டுகளாக பெண்களுக்கு புகுந்த விட்டில் ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஈட்டித்தந்தது.  அவர்களுக்கு மனதளவில் தானும் ஆணுக்கு சமமானவள் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.  தந்தைக்கு 300 சதுர அடியில் ஒரு சின்ன குடிசை வீடு இருந்தாலும், அதற்கு பாதி பணத்தை பெண்ணிடம் கொடுத்து விட்டுத் தான், அவளது கைய்ப்பத்தைப் பெற்ற பிறகு தான் ஆண் மகன் அதை அனுபவிக்க முடியும் என்ற நிலை உருவாகி,பெண்களை பொருளாதார ரீதியாக தலை நிமிரச் செய்தது அந்தச் சட்டம்...!!!

பெண்களுக்கு உண்மையாகவே தேவையான முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய இப்படியொரு...  ஒரே ஒரு சட்டத்தையாவது அதிமுக அரசு நிறைவேற்றியிருக்கின்றதா???!!!
 ·  Translate
6
Add a comment...
 
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #2

கடந்த திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன்களை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்ததன் மூலம் 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு கடனில்லா பெருவாழ்வு வாழும் பேரிண்பத்தைக் கொடுத்தது அவர்கள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட வைத்தது போன்று....

கடந்த நான்காண்டு அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் ஒரே ஒரு திட்டமாவது நடந்தேறியிருக்கின்றதா?!
 ·  Translate
13
Sriram Narayanan's profile photo
 
அப்பாடா, ஒரு உபி positive propaganda வில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்க இதை இதை பண்ணோம் ஓட்டு போடுங்கடா வெண்ணைங்களான்னு கேளுங்க...  
 ·  Translate
Add a comment...
 
வெற்றிபெறும் ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பார்கள்.....

எனக்கு பின்னால் மட்டுமல்ல, முன்னாலும், பக்கவாட்டிலும், மேலும், கீழும்....  என் உள்ளேயே இருக்கும் என் காதல் மனைவிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். :)
 ·  Translate
55
1
Gopal Kannan (சத்ரியன்)'s profile photoSakthivel Arthanathan's profile photoSURESHKUMAR RAMALINGAM's profile photoelango m's profile photo
15 comments
 
Su per anna
 ·  Translate
Add a comment...
People
Have him in circles
5,645 people
thiyagu rajan's profile photo
ratnam thuraiyappa's profile photo
Suresh Deva's profile photo
Cpiml Shankar's profile photo
Prasadh Vishal's profile photo
mahadeer mohamed's profile photo
barthi dasan's profile photo
khoshbur ali's profile photo
Nevin Shan's profile photo
Work
Employment
  • RAMANA'S FOOD PRODUCT
    Managing Director, 1997 - present
Basic Information
Gender
Male
Looking for
Friends
Other names
கொக்கரக்கோ
Story
Tagline
நாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்...?!
Education
  • Bharathidasan University
    M.Sc., Industrial Chemistry, 1990 - 1992