Profile

Cover photo
Vinavu Thalam
Works at வினவு
Lives in Chennai
12,558 followers|2,538,215 views
AboutPostsVideos+1's

Stream

Vinavu Thalam

Shared publicly  - 
 
நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates ஜல்லிக்கட்டுப் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒட்டு மொத்த தமிழகமே திரண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கிறது. தென்குமரி முதல் மெரினா வரை கீழத்தஞ்சை முதல் மேற்கு தொடர்ச்சி மலை வரை முழு தமிழகமும் இரண்டிலொன்று பார்த்து விடுவது என்ற உறுதியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள். அம்மா சமாதி 'புகழ்' மெரினா கடற்கரையில் மோடிக்கு பாடைகட்டி ஒப்பாரியும் செய்திருக்கிறார்கள் கட்டிளங் காளையான இளைஞர்கள். சாதி, மத, பாலின பேதங்களை கடந்து உழைக்கும் தமிழ் மக்களின் போராட்டக் குரல் தமிழகமெங்கும் மாபெரும் மக்கள் இசையாய் அணிதிரட்டி வருகிறது. கோமாதாவை கொண்டு மக்களை பிளவுபடுத்த முயன்ற காவி கும்பல்களை காளைகளை கொண்டு எதிர்கொள்கிறார்கள் தமிழ் மக்கள். அரசு, நீதிமன்றம், ஓட்டுக் கட்சிகள் எதையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. காவிரி, முல்லை பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக வெடித்திருக்கிறது. அரசுகளையும், ஆளும் வர்க்கத்தையும் அந்தக் குரல் இடையறாது அச்சுறுத்துகிறது. மைய ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தின் அரசியல் முழக்கத்தை மறைத்து விட்டு வெறுமனே அடையாள போராட்டமாக காட்ட முயற்சிக்கின்றன. ஆனால் போராட்டத்தில் பங்கு பெறும் மக்களோ மாணவர்களோ மோடியைத் திட்டாமல் தமது மூச்சைக் கூட விடுவதில்லை. மோடி அல்லது மோடி அரசு என்பது நூற்றாண்டுகளாக இந்தியாவின் பூர்வகுடி மக்களை ஒடுக்கி வரும் பார்ப்பனியத்தின் இன்றைய குறியீடு. டெல்லியில் இருந்து கொண்டு பார்ப்பன பனியாக்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் தடியால் ஒடுக்கும் அடக்குமுறைதான் மோடி அரசு. இளைஞர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். முழங்குகிறார்கள். இணைந்திருங்கள்

காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
 ·  Translate
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.…
2
3
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். ( மேலும் )

தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடிஇருகட்டும், டெல்லியின் கொம்பை பிடிவிடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீ காட்டுத் தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும்.
 ·  Translate
தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடிஇருகட்டும், டெல்லியின் கொம்பை பிடிவிடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீ காட்டுத் தீயாக…
7
2
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
மக்கள் அதிகாரத்தின் டெல்லிக்கட்டு - சென்னை, விழுப்புரம் - படங்கள் மஞ்சு விரட்டு நடக்கவிருந்த இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக வந்து நம்மை மறித்து வலுகட்டாயமாக வேனில் ஏற்றினார்கள். அப்போது மாடுகளை அவிழ்த்துவிட்டு மஞ்சு விரட்டு செய்தோம். அதனை தடுக்க நினைத்த போலிசார் அவர்களும் மாட்டை பிடிப்பபதாக நினைத்து அவர்களே மஞ்சுவிரட்டை நடத்தி விட்டனர். அந்த இடமே போர்க்கோலம் போல் காட்சியளித்தது. கிட்டத்தட்ட 1- மணி நேரம் போராட்டம் நடைப்பெற்றது. அந்த இடத்தில் 5௦௦ க்கும் மேற்பட்ட மக்கள் கூடிநின்று போராட்டத்தை பார்த்து ஆதரவு தெரிவித்தனர். போலீஸ் தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர். இரண்டு மாடுகளை பறிமுதல் செய்து பின்னர் அதையும் விடுதலை செய்தனர். (மேலும்)

தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பன கும்பலுக்கு எதிராக ஓன்றுதிரட்டபட வேண்டும். இனி காளைகளை அடக்குவது வீரவிளையாட்டல்ல, காவி காளைகளை அடக்குவதே தமிழர்களின் வீரத்திற்கு சவால் விடும் விளையாட்டு.
 ·  Translate
தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பன கும்பலுக்கு எதிராக ஓன்றுதிரட்டபட வேண்டும். இனி காளைகளை அடக்குவது வீரவிளையாட்டல்ல, காவி காளைகளை அடக்குவதே …
5
3
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா - கோரேகான் வெற்றித்தூண் முக்கியமான வரலாற்றுக் கட்டுரை - அவசியம் படியுங்கள்! தேசபக்தி என்பது பாரதமாதா போன்ற பட்டு உடை போர்த்திய மாமி படங்களை பூஜிப்பதால் வருவதில்லை என்பதை இந்த வரலாற்றுத் தூண் கூறுகிறது. ஆங்கிலேயர்களை அண்டிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் தலைவர்களும் சரி, காங்கிரசை இந்துமயமாக்கிய திலகர் போன்ற தலைவர்களும் சரி அனைவரும் பேஷ்வாக்களைப் போன்று சித்பவன பார்ப்பனர்கள் என்பது இந்த வரலாற்றுத் தூணின் கதையை உறுதிப்படுத்திகிறது. பேஷ்வாக்கள் ஆட்சியில் தமது பார்ப்பன சாம்ராஜ்ஜியம் பறிபோனதாலேயே சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசிலும், ஆர்.எஸ்.எஸ் - இந்து மகா சபாவிலும் சேர்ந்தார்கள். இதன் காரணம் தேசபக்தி அல்ல. இழந்து போன பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை மீட்பதே. ஆனால் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பேஷ்வாக்களை எதிர்த்த மகர்களின் நோக்கம் தமது அடிமைத்தனத்தை ஒழிப்பதே. இப்போது சொல்லுங்கள் தேச பக்தர்கள் யார் என்று! (மேலும்)

பீமா-கோரேகான் கிராமத்தில் இருக்கும் ஒரு நினைவுத்தூணருகே மகர் உள்ளிட்ட தலித் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மராத்தா பார்ப்பன பேஷ்வா அரச பரம்பரையின் ஆட்சி அதிகாரத்தைச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை நினைவுகூறவே அங்கே அவர்கள்…
 ·  Translate
பீமா-கோரேகான் கிராமத்தில் இருக்கும் ஒரு நினைவுத்தூணருகே மகர் உள்ளிட்ட தலித் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மராத்தா பார்ப்பன பேஷ்வா அரச பரம்பரையின் ஆட்சி அதிகாரத்தைச் சுமார் 150 ஆண்டுகளுக…
3
1
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
கம்பம் : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! கம்பம் சிக்னல் அருகே சென்ற போது டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ஊர்வலத்தை தடுக்க முயற்சித்த போது தோழர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தது. தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது .

மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தார்கள், தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினார்கள் . அதன் பின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த்து.
 ·  Translate
மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தார்கள், தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினார்கள் . அதன் பின் ஆர்ப்ப…
1
1
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்த 16 வயது நந்தினி என்ற சிறுமியை இந்து முன்னணி ஒன்றியச்செயலாளர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து நிர்வாணமாக கீழமாளிகை கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். ஆறுமாத கர்ப்பத்தை, பெண்ணின் பிறப்புறுப்பை கிழித்து சிசுவை எடுத்து அந்த பெண்ணின் சுடிதாரில் வைத்து கொளுத்தியுள்ளனர். கடந்த 29-ம்தேதி மாலை காணாமல் போன நந்தினியின் உடல் 17 நாட்களுக்கு பிறகு பிணமாக அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீச மேலே வந்துள்ளது. (மேலும்)

இந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக்கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினியின் பிணத்தை வாங்காமல் மக்கள் போராடி…
 ·  Translate
இந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக்கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை …
4
1
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
 ·  Translate
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது. …
7
2
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
நடத்த வேண்டியது டெல்லிக்கட்டு ! காவிக் காளையின் கொம்பைப் பிடி ! ( மேலும் )

மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !
 ·  Translate
5
1
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
இந்தியர்களோடு செல்ஃபி எடுக்கப் பயப்படும் ஜெர்மனிப் பெண் ”காகாசிய” (வெள்ளையினம் மற்றும் மாநிற மனித இனம்) மக்களைக் கண்டு வியப்பதோடு, அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றது. இந்த நான்கு நண்பர்களும் மதுரையின் அந்த அழகு நிலையத்தினுள் நுழைந்த போது அங்கே மூன்று வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் தான் இருந்துள்ளன. அங்கே வேலை செய்தவர்கள் இந்த நால்வரில் ”சுத்த” வெள்ளையாக இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்களது இந்தோ-ஜெர்மானிய தோழி ஜூலியாவின் தோல் கருப்பாக இருந்த காரணத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார் முன்பெல்லாம் எங்கள் குழுவிலேயே ஜூலியா தான் அழகானவரென்றும், அவரையெல்லாம் அழகுபடுத்தவே தேவையில்லை எனவும் சொல்லியிருக்கிறேன். இனி அப்படிச் சொல்ல முடியாது. (மேலும்)

‘வெள்ளையர்களான எங்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம் – அதே நேரம் இந்தியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?’ தங்களது சொந்த குடிமக்களையே பாகுபாட்டுடன் நடத்தும் என்னவொரு விசித்திரமான நாடு!
 ·  Translate
‘வெள்ளையர்களான எங்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம் – அதே நேரம் இந்தியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?’ தங்களது சொந்த குடிமக்களையே பாகுபாட்டுடன் நடத்தும் என்னவொரு விசித்திரமான நாடு!…
1
1
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்

திருநின்றவூரிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் இடது புறமாக 5 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் நத்தமேடு. படு குக்கிராமமான இந்த ஊருக்கு ஒழுங்கான சாலை வசதி கூட கிடையாது. பகுதி அளவிற்கு விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்கள். நாங்கள் சென்ற போது கோவிலில் மந்திரங்கள் ஒலிக்க பூஜைகள் நடந்து கொண்டிருந்தது.

“ஓம் ஆயிரத்தில் ஒருவனே போற்றி! ஓம் இதய தெய்வமே போற்றி ! ஓம் இரட்டை இலை தந்தவா போற்றி, இதயக்கனியே நமக” – பூணூல் அணிந்த பார்ப்பனர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்கள் தான் இவை. குழம்பி விட்டீர்களா?

இது அயோத்தி ராமச்சந்திர மூர்த்தியின் கோயிலல்ல; நமது அண்ணாயிஸ்டு மற்றும் பாசிஸ்ட்டு எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்தியின் கோயில். கோயிலுக்கும் அதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனுக்கும் ஓனரான கலைவாணனிடம் பேசினோம்,

(மேலும்) மீள்பதிவு
 ·  Translate
கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால் இங்கே பார்ப்பனிய இந்து மதத்தின் அருகதையை விளங்கிக் கொள்…
4
1
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்

காவிரியைத் தடுத்து எங்கள் கழனியைக் கருக்கி, உழவன் உயிர்களைக் குடித்து மண்ணைக் கெடுத்தவனை எதிர்த்து மோது. தமிழினை அழித்து – செத்த சமஸ்கிருதம் திணித்து – எங்கள் பாடத்தை திரித்த – மோடி வேடத்தை கலைக்கிறோம் பார் ! - ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக்கட்டு பாடல்…
 ·  Translate
காவிரியைத் தடுத்து எங்கள் கழனியைக் கருக்கி, உழவன் உயிர்களைக் குடித்து மண்ணைக் கெடுத்தவனை எதிர்த்து மோது. தமிழினை அழித்து – செத்த சமஸ்கிருதம் திணித்து – எங்கள் பாடத்தை திரித்த – மோடி வேடத்தை கலைக்கி…
6
2
Add a comment...

Vinavu Thalam

Shared publicly  - 
 
உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை ! பகுதிவாரியாகப் பார்க்கும் போது 30 படுகொலைகளுடன் மத்திய கிழக்கு பத்திரிக்கையாளர்களுக்கு கொலைக்களமாக இருக்கிறது. மத்திய கிழக்கை நிரந்தர போர்க்களமாக்கி தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு அல் கைதா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கிய அமெரிக்காவே முதன்மைக் குற்றவாளி. மத்திய கிழக்கைத் தொடர்ந்து ஆசியா - பசிபிக் பகுதியில் 24 படுகொலைகளும் ஆப்பிரிக்காவில் 8 படுகொலைகளும் ஐரோப்பாவில் 3 படுகொலைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக ச.ஊ.ச கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2016 ஆண்டு முழுதும் பத்திரிக்கையாளர்கள் பலர் காணாமல் போயுள்ளது குறித்தும் தமக்குத் தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. “காணாமல் போனவர்கள் பற்றிய நம்பகமான தகவல் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத கும்பல்களிடமிருந்து வரும் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க சில நாடுகளில் நிருபர்கள் சுயதணிக்கை (Self-Censorship – இங்கே பத்திரிக்கையாளர் தமது அடையாளத்தை மறைத்தல் என்ற பொருளில்) செய்து கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்” என்று ச.ஊ.ச வின் பொதுச்செயலாளர் அந்தோணி பெல்லங்கர் கூறியுள்ளார். (மேலும்)

வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் 'கிம் புக்' என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.
 ·  Translate
வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் ‘கிம் புக்’ என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக…
8
1
Add a comment...
Story
Tagline
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
Introduction
மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Chennai
Contact Information
Home
Phone
91-97100 82506
Mobile
(91) 97100 82506
Email
Address
16, Mullai Nagar Shopping Complex, Second Avenue, Ashok Nagar, Chennai 600083. Tamilnadu, India
Work
Mobile
(91) 97100 82506
Work
Occupation
ஊடகவியலாளர்
Employment
  • வினவு
    ஊடகவியலாளர், present
Basic Information
Other names
வினவு
Links
Contributor to
Links
Vinavu Thalam's +1's are the things they like, agree with, or want to recommend.
பாசிச எம்.ஜி.ஆருக்கு பக்தர்கள் கட்டிய கோவில்
www.vinavu.com

கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட எம்ஜிஆர் எனும் அற்பங்களுக்கெல்லாம் தமிழகத்தில் ஒரு கோவிலும், பூஜையும் நடக்கிறது என்றால

எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !
www.vinavu.com

இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழ

ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்
www.vinavu.com

“தலித்துகளை பலிகொடுக்கிறதுதாண்டா மேக் இன் இந்தியா. ஆன்ட்ராய்டு காலத்துலயும் நாங்கதாண்டா ஆண்டைகள்”…

த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!
www.vinavu.com

‘த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாட

மோடியின் டிஜிட்டல் பாசிசம் : புதிய கலாச்சாரம் ஜனவரி 2017
www.vinavu.com

4-ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும்

அமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்
www.vinavu.com

கூலி உயர்வு கேட்டு வங்கதேச ஆடைத்தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களால் அமெரிக்க – ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும

என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !
www.vinavu.com

ஒட்டுமொத்த விவசாயமே கழுத்தறுபட்ட கோழியைப் போல் துடித்துக் கொண்டிருக்கும் போது பாரம்பரிய விவசாய முறைகள் மட்டும் விவசாயிகளைக் காக்குமா?…

கோவை : நலியும் விசைத்தறி தொழில் காக்க வீதியில் இறங்குவோம் !
www.vinavu.com

ஜவுளிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு எதிராக போராட வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கும், மல்லையாவுக்கும் கடன் தள்ளுபடி

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
www.vinavu.com

“காலையில வயக்காட்டுக்குப் போனவரு தான். வீட்டுல பழையது இருந்திச்சிது. சீக்கிரமா வாரம்னு சொல்லிட்டுத்தேன் போனாரு… நானும் வருவாரு வருவாருன்னு க

இராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை
www.vinavu.com

இராஜ்குமாரை இன்று எப்படி நான் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறேன்; எனக்கு அந்த மனத்திடம் துளியும் இல்லை: பலப்பல வருடங்களாக அவர்தானே என்னைப் போன

“மேடம் 45 பர்சென்ட்!”
www.vinavu.com

பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென

சசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ…………!
www.vinavu.com

ஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாள

சசிகலா நடராஜன் ஊழல் பணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்!
www.vinavu.com

ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வ

மறத்தமிழன் சீமான் – மணற்தமிழன் வைகுண்டராஜன் – தரகுத்தமிழன் நடராசன்
www.vinavu.com

மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் சீமானால் இனவுணர்வைக

வர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு
www.vinavu.com

எப்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி செயலாற்ற அரசு வருவதில்லை. மக்களே தங்கள் பாதிப்புகளை சரி

ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்
www.vinavu.com

5 ஆண்டுகள் கொள்ளை வெறியாட்டத்துக்குப் பின் ஜெயா கும்பல் ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 1996-ல், “ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல

அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !
www.vinavu.com

இலவச அரிசியோ, ஒரு ரூபாய் இட்டிலியோ இவையனைத்துமே மக்களின் கோபம் எல்லை மீறாமல் இருப்பதற்காக வீசப்படும் எலும்புத் துண்டுகள், உரிமைகளை கேட்கும்

பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி !
www.vinavu.com

தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான

ஜெயலலிதா – live updates
www.vinavu.com

எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத

கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
www.vinavu.com

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் எனும் திருட்டுக் கம்பெனி குறித்தும், அந்த திருட்டுக் கம்பெனியிட