Profile cover photo
Profile photo
Suresh Kumar
About
Suresh's posts

Post has attachment
இந்த சமூகம் நம்மையும் ஒரு உணவு ரவுடிதான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ! நாம சாப்பிடறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் என்று கூறிக்கொண்டு, நீ சீனா போயிருக்கியா, அங்க பாம்பு கறி சாப்பிட்டியா, தேள் சாப்பிட்டு இருக்கியா.... ஆமாம்னு சொல்லு, நாங்க உன்னை உணவு காதலர் அப்படின்னு ஒத்துக்குறோம் அப்படின்னு சொல்றாங்க. அட போங்கடா.... நானும் ரவுடிதான், எல்லாரும் பாத்துக்க நான் இன்னைக்கு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டேன், பார்த்துக்க, பார்த்துக்க என்று வான்டெட் ஆக கூறிக்கொண்டு பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்தேன்..... ஆனாலும், கடைசியில என்னையும் அரசியல் பண்ணி தேள் வறுவல் சாப்பிட வைச்சிட்டீங்களே.... நியாயமாரே !!

Post has attachment
அறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் !!
என்னதான் நாம தமிழ்நாடு முழுக்க சுற்றி சுவையான உணவு பற்றி எழுதினாலும், அல்லது இந்தியா முழுக்க சுற்றி உணவுகளை பற்றி எழுதினாலும், அமெரிக்கா பர்கர், இத்தாலியன் பாஸ்தா, ஜப்பான் நூடுல்ஸ் என்று அங்கேயே சென்று ருசித்து எழுதினாலும்.... இந்த சமூகம் நம்மையும் ஒரு உணவு...

Post has attachment
முதலில் அல்வாவை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.... ஆரஞ்சு கலரோ, அரப்பு கலரோ, மேல நெய் மிதந்தே ஆகும், கையில் எடுக்கும்போதே தலபுல தலபுல என்று ஆடும், வாயில் வைக்கும்போது எனக்கும் நாக்குக்கும் சம்பந்தம் இல்லை, நாங்க பகையாளி என்று உள்ளே வயிற்றுக்கு ஓடும். இதுவரை அப்படித்தானே எல்லாம்.... ஆனால், இங்கு துதல் அல்வா தூக்கு சட்டியை திறக்கும்போது, கருப்பு திராட்சையை கூழ் செய்து வைத்தது போல அவ்வளவு கருப்பு, அதன் மேலே திறக்கும்போது கடையில் கரண்ட் இல்லாமல் கம்மியான வெளிச்சத்தில் தூக்கு சட்டியினை எட்டி பார்த்தால் அல்வா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று முந்திரியை தூவி அல்வாவின் இருப்பை உறுதி செய்து இருந்தனர். "ஏங்க, இதுதான் துதல் அல்வாவா.... உண்மையாத்தான் சொல்றீங்களா ?!" என்று கேட்டுக்கொண்டே அந்த சுவையான வாசனையை முகர்ந்தேன் !!

Post has attachment
ஊர் ஸ்பெஷல் - கீழக்கரை துதல் / தொதல் அல்வா !!
"கீழக்கரை" - இந்த பெயரில் பிரபு நடித்து ஒரு படம் வந்தது, அப்போதுதான் இந்த பெயரே பரிச்சயம். பின்னாளில், அப்பா வேளாங்கண்ணிக்கு கூட்டிக்கொண்டு செல்லும்போது, கீழக்கரை இங்கிருந்து பக்கம் என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டு, ஓஹோ அது இந்த பக்கம்தான் போல என்று எண்ணிக்க...

Post has attachment
உருளைகளை பார்வையிட்ட எனக்கு மனதில் "அது ஏன் எல்லா அப்பளமும் உருண்டையாக இருக்கிறது ? சதுரமாக இருந்தால் என்ன ?? " என்று தோன்றியது. நமக்குத்தான் சந்தேகமே ஆகாதே, அப்பளம் போட்டு கொண்டு இருந்தவர்களிடம் கேட்டேன், எல்லோரும் நன்றாக முழித்தார்கள், பல விதமான பதில்கள் வந்தாலும் எனக்கு திருப்தியே வரவில்லை..... ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அப்போது ஒரு இடத்தில், அப்பளம் அடுக்கி கொண்டு இருந்த பெரியவர், சிரித்துக்கொண்டே "அப்பளம் என்பது....

Post has attachment
ஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் ! (பாகம் - 2 )
ரொம்ப நாள் ஆச்சு இந்த ஊர் ஸ்பெஷல் பதிவுகள் போட்டு, அதுவும் இந்த கல்லிடைக்குறிச்சி அப்பளம் முதல் பாகம் போட்டு மாதங்கள் ஆகி விட்டது, இன்னும் இரண்டாம் பாகம் வரவில்லையே... அப்பளமே நமுத்து போச்சு என்றெல்லாம் செல்லமான திட்டல்கள் ! என்ன செய்வது, ஒவ்வொரு முறை ஊர் ஸ...

Post has attachment
கரண்டியை கொண்டு ஒரு தட்டு தட்டிவிட்டு, வாழை இலை வைத்து இருக்கும் தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணி அரிசியை வைத்து, நன்றாக வெந்த சிக்கன் பீஸ் கொஞ்சம் மசாலாவுடன் அந்த பிரியாணிக்கு மகுடம் போல வைக்கிறார்கள். எவ்வளவுதான் தட்டில் வைத்தாலும் நமக்கு மனதுக்கு, இன்னும் ஏதோ கொஞ்சம் குறையுதே என்று தோன்றத்தான் செய்யும்... அதை எதிர்நோக்கியது போலவே, சிக்கன் 65 வேண்டுமா என்று கேட்க்கும்போது வேண்டாம் என்று சொல்ல வாய் வருவதில்லை !!

Post has attachment
அறுசுவை - திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பிரியாணி !!
கடந்த  வருடங்களாக சுற்றியதில் நிறைய கடைகள் சென்று சாப்பிட்டு, போட்டோ எடுத்து பதிய வேண்டும் என்று நினைத்தாலும் நேரமின்மையால் அப்படியே ஒரு போல்டரில் சேர்த்து வைத்து, வைத்து இன்று எடுத்து பார்த்தால் சுமார் ஐநூறு உணவகங்கள் வரை வந்து விட்டது ! கொல்கத்தா ரசகுல்லா...

Post has attachment
பொருட்காட்சி.... சிறு வயதில் இந்த ஒரு வார்த்தையை சொன்னாலே நினைவுக்கு வருவது என்பது பபிள்ஸ், பெரிய அப்பளம், ராட்டினம், பஞ்சு மிட்டாய். இவற்றில் சிலவற்றில் குழந்தைகள் மகிழ்வார்கள், சிலவற்றில் பெரியவர்கள் மகிழ்வார்கள்.... ஆனால், ஒன்றே ஒன்றில் மட்டுமே குழந்தைகளும், பெரியவர்களும் மகிழ்வார்கள்... அது "சிரிக்கும் கண்ணாடி" என்ற இடத்தில்தான்.

Post has attachment
சிறுபிள்ளையாவோம் - சிரிக்கும் கண்ணாடி !!
பொருட்காட்சி.... சிறு வயதில் இந்த ஒரு வார்த்தையை சொன்னாலே நினைவுக்கு வருவது என்பது பபிள்ஸ், பெரிய அப்பளம், ராட்டினம், பஞ்சு மிட்டாய். இவற்றில் சிலவற்றில் குழந்தைகள் மகிழ்வார்கள், சிலவற்றில் பெரியவர்கள் மகிழ்வார்கள்.... ஆனால், ஒன்றே ஒன்றில் மட்டுமே குழந்தைகள...
Wait while more posts are being loaded