Profile cover photo
Profile photo
வரலாற்று சுவடுகள்
99 followers -
Blogger | Writer | Accountant | Social Activist
Blogger | Writer | Accountant | Social Activist

99 followers
About
Posts

Post has attachment
இஸ்ரோவை பொறுத்த மட்டில் நேற்றைய தின வெற்றிக்காக கடந்த 20 ஆண்டுகளா பல விஞ்ஞானிகள் தங்களது விருப்பு வெறுப்புகளை துறந்து இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்பின் வலி பல விஞ்ஞானிகளின் கண்களில் தெறித்து சிதறிய சந்தோஷ கண்ணீரில் காண முடிந்தது. ஆர்பரித்த சந்தோஷ கூச்சளிடையே அக்கினி சிதறல்களை வெளியேற்றியபடியே வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்து மேகக்கூட்டத்தில் கலந்தது ஜி. எஸ்.எல்.வி டி5.

ராக்கெட் உலகில் தற்போது உள்ள உயரிய தொழில்நுட்பமாக கருதப்படுவது ‘கிரையோஜெனிக்’ தொழில்நுட்பம்தான்., அந்த தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கும் ‘இஸ்ரோ’, இனி எதிர்காலத்தில் சர்வதேச அளவில் தவிர்க்க இயலாத விண்வெளி ஆய்வு நிறுவனமாக இருக்கபோவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிச்சயம் நாம் அமெரிக்காவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

1990-களில் இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்க முயற்சித்ததை அமெரிக்கா தடுத்திருக்காவிட்டால் இன்று நம்மால் இந்த மாபெரும் வெற்றியை பெற்றிருக்க இயலாது, தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றிபெற்றவனிடம் அதிகப்படியான அனுபவம் குவிந்துகிடக்கும், அந்த அனுபவங்கள் இத்தொழில்நுட்பத்தை மேன்மேலும் மெருகேற்ற அடிப்படை காரணமாக இருக்கபோகிறது. ஆகையால்தான் சொல்கிறேன் "நாம் அமெரிக்காவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்"

உங்களுக்கெல்லாம் ஹிஸ்டரின்னு ஒன்னு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, எங்கள் மூதாதையர்களுள் ஒருவரான ‘ஆர்யபட்டர் (Aryabhata; CE. 476 – CE. 550)’ என்னென்னவெல்லாம் கண்டுபிடிச்சிருக்காருன்னு போய் படிச்சிபாரு தம்பி.... ‘ஜீரோ’-ன்னு ஒன்ன கண்டுபிடிச்சதே நாங்கதான்., அது ஞாபகத்துல இருக்கா? எங்களால முடியாதது உலகத்துல யாராலையும் முடியாது.
Photo
Add a comment...

1. இந்தியாவிற்குள் அனைவரும் சமம் என்கிற சம உரிமை சுதந்திரம்,

2. சுதந்திரமாக பேசும் எழுதும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை பெரும் உரிமை, 

3. சுதந்திர மத சார்பு உரிமை, 

4. அடிப்படை கல்வியை இலவசமாக பெற்றுக்கொள்ளும் கல்வி கற்கும் உரிமை, 

5. ஊழலை எதிற்கும் உரிமை, 

6. ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் உரிமை.

- இவைதான் நேற்று நாம் விவாதித்த இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒரு இந்தியருக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் ஆகும்.!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவின் இந்திய அரசியலமைப்பு சட்டமே உலகின் மிகபெரிய / மிக நீண்ட அரசியலமைப்பு சட்டமாக கருதப்படுகிறது. 22 parts(பிரிவுகள்), 395 articles(உட்பிரிவுகள்), 8 schedules(அட்டவணைகள்), 80000 words(வாக்கியங்கள்) கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தயாரித்து முடிக்க கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் நவம்பர் 26, 1949-ஆம் ஆண்டுதான் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டு முழுமையடைந்தது. தொடர்ந்து அரசியலமைப்பு சட்டம் ஜனவரி 26, 1950 –ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா தன்னை ‘குடியரசு’ என்று அழைத்துக்கொண்டது. அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஜனவரி 26 நாளைத்தான் நாம் ‘குடியரசு’ தினமாக கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 26, 1949 அன்றே அரசியலமைப்பு சட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்டுவிட்டாலும் கூட, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துதான் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது குறிப்பாக ஜனவரி 26, 1950 என்கிற தினமே இந்திய குடியரசு தினமாக இருக்க வேண்டும் முன்பே தீர்மானிக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறதல்லவா? அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

அதற்குரிய காரணம் இதுதான்., இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அதாவது 1930-லிருந்தே இந்தியர்கள் ஆண்டுதோறும் ஜனவரி 26, தங்களது சுதந்திர தினமாக கொண்டாடிவந்தனர். இந்த தினத்தையும் சிறப்பிக்கும் பொருட்டே, அந்தநாளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, குடியரசு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Add a comment...

நேத்து வாங்கிங் போகும்போது ரொம்ப நாள் கழிச்சு ஒரு நண்பரை சந்திச்சேன். ரொம்ப நாள் கழிச்சு சந்திப்பதால் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு இன்னதுதான்தான் என்று இல்லாமல் எல்லா ‘சப்ஜெக்ட்டிலும்’ புகுந்து ஒரு நிலையில் ‘அரசியலில்’ புகுந்தது. நமக்கு அரசியல் அறிவு சற்று கம்மி என்பதால் அவருக்கு ஈடு கொடுத்து என்னால் பேசயியலவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட அவர் என்னை துவம்சம் செய்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என் நிலை, ‘வடிவேலு - தம்பி ராமையா’ கூட்டணி காமெடி ரேஞ்சுக்கு மோசமடைந்து கொண்டிருந்தது. உனக்கு அந்த மாநில முதலமைச்சர தெரியுமா, இந்த மாநில முதலமைச்சர தெரியுமா என்று கர்ண கொடூரமாய் போய்கொண்டிருந்தார், யோவ் ‘எனக்கு அவங்ககூட எல்லாம் பழக்கம் இல்லைய்யா’ என்கிற ரீதியில் நான் சரண்டர் ஆனாலும், அவர் விட்டபாடில்லை.

பொருக்க முடியாத பட்சத்தில் கட்டகடைசியாக ‘நமது இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒரு இந்திய குடிமகனுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் எத்தனை? அது என்ன-ன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன். 

-அடிக்காத போனை ஆன் பண்ணி பேசிகிட்டே கிளம்பி போய்ட்டார்.! 

நம்மல்ல எத்தனை பேருக்கு கூகுளில் தேடாமல் இதுக்கு பதில் தெரியும்?
Add a comment...

Post has attachment
வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் எண்ணிக்கை இயல்பு அளவுகளை தாண்டி அதிகரிப்பத்திருப்பதன் காரணமாக, தாவரங்கள் அளவுக்கு அதிகமான ஒளிச்சேர்க்கை (Photosynthesis) நிகழ்வுக்கு தூண்டப்படும், இதனால் ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்களில் உருவாக்கப்படும் ஆற்றல் (Energy, which is called as carbohydrate) அதிகரித்து, தாவரங்கள் மிகவேகமாக வளர ஆரம்பிக்கும்! இதனால் ஏற்படும் வளர்சிதை மாற்றம் (Metabolism) தாவரங்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும், இதன்காரணமாக தாவரங்கள் பூக்காது, அப்பிடியே பூத்தாலும் காய்க்காது!
Add a comment...

Post has attachment
அனைவருக்கும் வணக்கம், நெருங்கிவரும் டிசம்பர் 21, 2012 நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறதோ இல்லையோ உலக அழிவு பற்றி நம் அனைவரையும் அதிகம் சிந்திக்கவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது! இதற்க்கு முன்பும் பலமுறை உலக அழிவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இப்போது போல் எப்போதும் உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை என்பதே உண்மை! 
Add a comment...

Post has attachment

Post has attachment
மொழியால் ஒன்றுபட்டுள்ள  சகோதரனுக்கு  சாதியும், மதமும் கண்களுக்கு நிச்சயம் தெரியாது.

...............இந்த மண்ணில் விடுதலைக்காக அல்ல இந்த போராட்டம். விடியலுக்காக நடக்கின்றது..........

பன்னிருகோடிக்கும் மேல் மக்கள் தொகை இருந்தும் நமது குரல்களுக்கு மதிப்பில்லையே..? காரணம், மொழியில் பிளவு. அதுவே அவர்களுக்கு சாதகமும் கூட...
Add a comment...

Post has attachment
ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) போது தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்ளும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்! மேலும் பள்ளிகூட பாட புத்தகங்களில் இதுபற்றி விரிவாக படித்தும் இருப்போம்! தாவரங்கள் உயிருள்ளவை..., ஆகையால் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை உறிஞ்சிக் கொள்வதில் நமக்கு வியப்பேதும் இருக்கப்போவதில்லை! ஆனால் நீரோ உயிர் அற்றது! என்றால் கடல் நீரால் எப்படி கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சிக்கொள்ளமுடிகிறது என்று நீங்கள் கேட்கலாம்! இங்கு தான் வேதியியல் (Chemistry) என்ற ஒன்று வேலை செய்கிறது!
Add a comment...

Post has attachment

Post has attachment
இந்த கெளரவமே போதும் வேறென்ன வேண்டும்!!! நன்றி மக்கள் சந்தை குழு!!!
Add a comment...
Wait while more posts are being loaded