Profile cover photo
Profile photo
Hari prashanth Palani
1 follower
1 follower
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
என்காதல் உயிர் வாயுவே!

கார்பண்டை ஆக்சைடே போல் -
பாரத, பேதமத நோய்...
நடிகர் இரசினிகாந்து அன்ன;
நம்... இடையே புகுந்து;
இருவரையும்...
இணைய, ஒட்டாதவாறு!
பிரித்து [ஒன்றலுக்கு]
தடையாய்...
ஊறு செய்கின்றதோ?

என்தேக ஓசோன் படலமே!

இங்கே சூரியனின்...
ஏப்ரல்-மே அல்ட்ராவயலட்
பூமி உயிர்களை,
பயிர்களை,வயல்களை,
சுற்றிஎரிக்கும் முனைப்பில்...
எரிமலை ஆறுபோல்...
பாய, நீயோ...
உன் உலகமாக என்னை...
காப்பாற்ற முற்படாமல்,
பச்சைத் தமிழனுக்கு;
பயந்து...
காற்று மண்டலத்தை
தொற்றிக் கொண்டு...
அங்கிருந்து நோக்குகின்றாயே!

Post has shared content
Buddhar land/Prashanth [Willsindias M] Words power!: என்முகம் நோக்கும் விண்ணிலவே! கதிரவன்தன் வட்டப்பாத... http://buddharland.blogspot.com/2017/05/blog-post_13.html?spref=tw
Sunshine
My Mother, my friend so dear
throughout my life you’re always near.
A tender smile to guide my way
You’re the sunshine to light my day. ~ Anon

♥´¨)
​¸.•´¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•`​ (̅_̅_̅_̅S❤S_̅_̅_̅̅()​ ​💕💕💕

http://www.jendhamuni.com/sunshine/
Photo

Post has attachment
புன்னகைக்கும் நிலாவே!

அது என்ன...
கருப்பு வளையம்!?
(பிளாக் ஹோல்)!?

பிரபஞ்சம் முமுமையும்;
அதனால்...
இழுக்கப் படுகின்றனவே!

நானோ... ஏன்?
உன்வசமாய்
ஈர்க்கப் படுகின்றேன்!

என் முகம் நோக்கும் 
விண்ணிலவே!

கதிரவன்...
தன் வட்டப்பாதைக்குள்;
நொடி ஒன்றுக்கு...

இருநூற்று அய்ம்பது;
கிலோ...
மீட்டர்வேகத்தில்;
சுழல்கின்றானாம்!

முழுமதியாய் உன்னை...
காணும் இரவெல்லாம்!
எத்தனை மைல்கள்...
வேகமென்று தெரியாமலே...

என்னை நானும்...
சுழற்றுகின்றேனே!

Post has attachment
ஆச்சரியமே!

உன் விழியீர்ப்பு
விசையை அறிய...
கிரகங்களின்
ஈர்ப்பை அளக்கும்
நியூட்டனின் தத்துவம்
உதவாமல் போயிற்றே!

ஆனால் கிரகங்கள்
போன்றே...
ஈர்பபும் தாவலும்;
ஒருங்கே...
உன்னிடத்தில் எப்படி?


அழகு வீணசே!

நீ...
கந்தக அமிழத்தை –
மழையாய் பொழியாதே!
அமிலம் பட்டு நம் 
காதல் கொடி
கருகிவிடக் கூடாதே!

சூரிய(ன்) குடும்பத்து' ப்ளூட்டோ'வே...
போலவும் என்னை;
தொலைவில் கடைசியாய் வைத்து...
தனிமையில் சுழல விடாதே!

Post has attachment
காதல் பிரபஞ்சமே!

சூரிய குடும்பமே போல்...
நானும் –
உன்னை விட்டு...
முப்பத்து மூன்றாயிரம்
ஒளி ஆண்டுகள்
தொலை தூரத்தில்...
விலகி –

ஒரு மூலையில் –
மின்மினிப் பூச்சிபோல்
சுற்றுவதாய்
உணர்கின்றேனே!
எனக்கும் உனக்கும்
எதற்கோ...
இந்த இடைவெளி!.

கவிதை மையமே!
சூரிய குடும்பத்தில் கோள்கள்... மொத்தம் ஒன்பதாம்!
நமது காதல் குடும்பத்திலோ... ஓடு பாதைக்குள்; இணைந்த பிறகே! [அதைப் பற்றி] முடிவு செய்ய வேண்டும்!

சூரியன்...
ஹைடிரஜனை,
பிரதானமாக கொண்டு,
எரிந்தழிகின்ற...
அகில மெழுகுவர்த்தி!

என் நினைவுகளோ...
உன்னையே –
ஆதாரமாகக்
கொண்டொளிரும்,
வளரும்...
காதல் வர்த்தி!

Post has attachment
என் காதல் பூந் தோட்டமே!
தமிழ்நாட்டில்...
வானிலை –
ஆய்வு மைய்யங்கள் –
ஏழு இடங்களில்...

சென்னை,
கோயம்புத்தூர்,
உதகமண்டலம்,
கொடைக்கானல்,
திருச்சி, சேலம்,
மதுரை... என்று
உள்ளனவாம்!

உன், இக் காணான் தேச –
கவிதைகளை...
நீ ஆயும்... ஒரே மையம்;
உனக்கே தெரியும்!
அது... எங்கே என்று!

என் காதல் ஆய்வு மையமே!

சோலார்
நெப்யூலாவோ...
வாயு அடர்த்தியுடன்
சுழலும் தூசித்தட்டு!

நானோ உன்னை!
தென்றலுடன்...
மணமோடு, சூழ்ந்திட்ட;
சுகமான –
மல்லிகை மொட்டு!

Post has attachment

Post has attachment
கனவு அரங்கேற்றமே!

தாரகை
ஒளிக்கற்றைகள்
பல தூசு
அடுக்குகளை
வாயுப்படலங்களை
தாண்டி
வெளிப்படுவதால்
விட்டு விட்டு
மின்னுதலைச்
செய்கின்றனவாம்!

நம் காதல்
ஒளிக் குவியலோ...
இந்திய
பேத மாசுகளை
ஊடுருவி ஒதுக்கி...
ஒற்றுமைத்
தெளிவில் தூய்மையில்!
மறையாமல்...
உயர்ந்து ஒளிர்கின்றது!

Post has attachment
என் தாக தேசமே!
பூமியில் மட்டுமன்று
வியாழனிலும்...
தண்ணீர் காற்று!
உண்டு என்று...
தனியே இங்கே,
என்னை விட்டு
விலகிச்செல்லாதே!

என்றாவது ஓர்நாள்...
கங்கை காவிரியோடு,
இணைந்து உறவாடும்...
குமரிக் கடலுக்குள்,
நீந்தி மகிழும்!

Post has attachment
அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் அங்குமிங்கும்...
குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரள்கள்,
திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனுள்,
பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!

அண்டம் விட்டு அண்டம் ஆயும்,
அறிவியல்... ஒர்நாள் –
கண்டம் விட்டு கண்டம் பாயும்?
அகிலம் கருகி... சாம்பலாகும்!

மானுடம் பிழைக்க –
பயிர் வயல்கள்,
செடி கொடிகள்...
பூத்துப் புன்னகைக்கின்றன!

ஆனால் –
பூச்சிக்கொல்லி மருந்துகளால்,
தானியங்கள், காய்கள், கனிகள்;
நஞ்சுகளாகின்றன!

அதனால்...
அறிவியல் ஒரு
அரியும் வெங்காயம்!
மருந்தும் ஆகின்றது!
எரிச்சலும் தருகின்றது!

அறிவியல்...
சூரிய மண்டலம்கடந்து...
சுழலவும் செய்கின்றது!
பால்வெளி வீதிக்குள்நுழைந்து...
பயணமும் தொடர்கின்றது!

அதனால்...
உலகம் சுருங்குகின்றது!
பிற கிரகங்களின்
இரகசியங்களைத்
தெரியவும் உதவுகின்றது!

ஆனால்...
அழிவைச் செய்திடும்
கலகக் காரர்களுக்கு–
வேட்டைநாயும் ஆகின்றது!

அறிவியல் இரவுகளில் …
ஒளிக் கற்றைகளாகி
அகிலத்துக்குள்
இருட்டைக் களைகின்றது!

உலகோர் தேவைகளை...
ஆலைகளாகிப்
பூர்த்தி செய்கின்றது!

ஆனால்...
ஓசோன் படலத்தை
ஓட்டை ஆக்குகின்றது!

சூரியனின்
புற ஊதாக் கதிர்களை
உட்புக வைத்து...

பூமிச் சோலைகளின்–
பரப்புக்களைச் சுருக்கி,
பாலைவனங்களாய்...
மா[ற்]றவும் செய்கின்றது!

அறிவியல்...
அற்புத கணனிகளாகி,
இயந்திர மானுடமாகி,
விந்தைகளைப் புரிகின்றது!

ஆனால்... இன்றைய
இளைய சமுதாயத்தினரை,
கல்வி முடித்தும் –
வேலையில்லா...
பட்டதாரிகளாக்குகின்றது!

புவனத்தை –
போர்களங்கள்,
ஆக்குகின்றது!

பருவ வயதினர்...
கைச் செல்போன்களாகி,
குடும்பத் தந்தையரின் வருமானம் –
சேமிப்புக்குள் உயரவிடாமல்...

உதிரம் கசிய...
உழைப்போர்
வியர்வைத் துளிகளே போல்...

உலக பொருளாதாரத்தை
தினசரி –
விரயம் செய்கின்றது!

இதனால்...
ஒரு பெண் [வேலையில்லா பட்டதாரி!]
கவிதை எழுதுகிறார்...?

*வளர்ச்சி உண்டு! ஆற்றல் உண்டு !
வனப்பும் உண்டு!

ஆனால்...
மணமே இல்லை!
இந்த,
செல்போன் கொடி மலரே போல்...
அறிவியல் பூவும்,
முதிர் கன்னி!
Wait while more posts are being loaded