Profile

Cover photo
Deena dayalan
Works at cargoplan
14 followers|34,949 views
AboutPostsPhotosVideos+1's

Stream

Deena dayalan

Shared publicly  - 
 
 
பள்ளிக்காக தன் பெயரில் கடன் வாங்கி கல்வி புகட்டும் அரசுப்பள்ளி ஆசிரியை-கிருஷ்ணவேணி....

1986-ம் ஆண்டு. அரசுப் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 427 மதிப்பெண்கள் பெற்று, மேலே படிக்காமல் வீட்டில் இருந்தார் மாணவி கிருஷ்ணவேணி. அப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக அவரின் வீட்டுக்கு வந்தார் ஓர் ஆசிரியர். 'இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று ஏன் படிக்கவில்லை?' என்று கேட்க, வசதியில்லை என்றார் கிருஷ்ணவேணி. உடனே படிப்பதற்கு பணம் கட்டி, உடைகள் வாங்கிக்கொடுத்து, ஊக்கமும் அளித்தார் அந்த ஆசிரியர்.

இப்போது அந்த மாணவி, நல்லாசிரியர் விருது, மாநில அளவில் சிறந்த நடுநிலைப்பள்ளி விருது, தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சிறந்த சாதனை ஆசிரியர் விருது, தனியார் மெட்ரிக் பள்ளியின் அப்துல் கலாம் நினைவு சாதனை ஆசிரியர் விருது உள்ளிட்டவைகளுக்குச் சொந்தக்காரர். பள்ளி தலைமையாசிரியர், இலக்கிய ஆர்வலர், பேச்சாளர் என்று பல முகங்கள் கொண்டவர்.

"கணக்கெடுப்புக்கு வந்த ஆசிரியர், பலன் எதையும் எதிர்பார்க்காமல் என்னைப் படிக்க வைத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்தாலே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் ஆகலாம் என்ற நிலை இருந்தது. அவரால் மட்டும்தான் இன்று நான் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். அவர் என்னை உருவாக்கினார்; நான் மேலும் சிலரை உருவாக்குகிறேன்.

எங்களின் சின்னமுத்தூர் பள்ளி, இட வசதி இல்லாத காரணத்தால் அரை கி.மீ. இடைவெளிக்குப் பிரிந்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என தனித்தனியாக இருக்கிறது. இதனால் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அரசிடம் என்ன கேட்டாலும் இரண்டிரண்டாகக் கேட்டுப் பெற வேண்டும். முதலிரு வருடங்களில் கோயில் வளாகம், மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பொது இடங்களில் வகுப்புகள் நடந்திருக்கின்றன. ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் நடந்த காலமும் உண்டு.

இப்போது, வகுப்பறை முழுக்கப் படங்களால் நிரப்பியிருக்கிறோம். எங்கள் மாணவன் வீட்டில் எப்போதும் கீழேதான் உட்காருகிறான் என்பதால் பள்ளியில் யாரையும் தரையில் உட்கார அனுமதிப்பதில்லை. பெஞ்சுகள் வாங்கியிருக்கிறோம். ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு முழுக்கவும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கிறது. டைல்ஸ் ஒட்டியிருக்கிறோம்...

#பள்ளிக்காக_கடன்_வாங்கியவர்:

இவை அனைத்துக்கும், அதிக நிதி தேவையாக இருந்தது. நன்கொடையாளர்கள் சிலர், தருவதாகக் கூறியிருந்த தொகையைக் கடைசி நேரத்தில் தரவில்லை. மூன்று லட்ச ரூபாய் பற்றாக்குறை காரணமாக வேலை பாதியிலேயே நின்றது. அதனால் வங்கி ஒன்றில் லோன் வாங்கி, கட்டிடத்தைக் கட்டி முடித்தோம். இப்போது தவணை முறையாக மாதாமாதம் 8,000 ரூபாய் கட்டி வருகிறேன். முத்தூரை அடுத்து, உள்ளே 1 1/2 கி.மீ. தாண்டி சின்னமுத்தூரில் இரண்டு பெரிய தனியார் பள்ளிகளுக்கு இடையில் கம்பீரமாக நிற்கிறது எங்கள் அரசுப்பள்ளி......

தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும், எங்கள் பள்ளியின் பெயர் பரவ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை!' -என சொல்கிறார்.......
 ·  Translate
9 comments on original post
1
Add a comment...

Deena dayalan

Shared publicly  - 
 
 
தமிழச்சி தாலி கயிறு. ஜாதி மதம் கடந்து பகிர்வோம்.
#தமிழச்சிடா.........
 ·  Translate
1 comment on original post
1
Add a comment...

Deena dayalan

Shared publicly  - 
 
 
மற்ற பதிவுகளை போல ஒதுக்கி விட வேண்டாம், தயவு செய்து படியுங்கள், நீங்கள் படிக்காவிட்டாலும் ஒரே ஒரு முறையாவது பகிருங்கள், இது ஒரு கிராமத்தின் வாழ்வு சம்மந்தப்பட்ட பதிவு நண்பர்களே……

நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவின் கீழ் வரும் கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலும் சுற்று வட்டார கிராமங்களிலும் பல நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. மேலும் நாங்குனேரி – களக்காடு சாலையும் எங்கள் கிரமத்தின் வழியாகவே செல்கிறது. கிரமத்தின் அருகில் பல பள்ளிகளும் உள்ளன.

எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் மதுரை மேலூரைச் சேர்ந்த P.S.கிரானைட் நிறுவனர் P.S.பெரியசாமி அம்பலம் என்பவர் நிலங்கள் வாங்கியுள்ளார், அதில் 9 ஏக்கர் நிலம் சாலையின் ஒருபுறமும் 7 ஏக்கர் நிலம் சாலையின் மறுபுறமும் உள்ளது.

கடந்த 26.01.2016 அன்று P.S.கிரானைட் நிறுவனர்கள் மேற்படி நிலங்ளில் பூமிபூஜை செய்து பொக்லைன் இயந்திரங்கள், குழி தோண்டும் இயந்திரங்கள் மற்றும் இராட்சத இயந்திரங்கள் மூலம் எங்கள் கிராமமும் சுற்று வட்டார கிராமங்களும் அதிரும் படி நிலத்தில் துளையிட்டனர்.

எங்கள் ஊரைச் சேர்ந்த மக்கள் சென்று கேட்கையில் நிலத்தில் 20 அடி அழத்தின் கீழ் தோண்டி கிரானைட் கற்கள் எடுக்கும் தொழில் செய்ய போவதாக கூறினார்கள். எங்கள் கிரமத்தில் தனியார் நிறுவனம் கிரானைட் குவாரி தொழில் தொடங்க போவதாக விளம்பரமோ அல்லது அரசு சார்பில் முன்னறிவிப்போ ஏதுவும் செய்யப்படவில்லை.
கிரானைட் குவாரி நடத்தும் இடத்தின் அருகில் கடம்போடுவாழ்வு குளம், புளியங்குளம், வடுகச்சிமதில் ஆலங்குளம் ஆகிய குளங்களின் தண்ணீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது. அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் நிரம்பி உள்ளன.
கிரானைட் குவாரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போகும் பேராபத்து ஏற்படும்.
P.S. கிரானைட் நிறுவனத்தினர் எங்கள் கடம்போடுவாழ்வு கிரமத்தில் கிரானைட் குவாரி நடத்துவதற்காக மத்திய மாநில அரசுகளிடம் முறையான அனுமதியோ உரிமமோ பெற்றதாக தெரியவில்லை, சுற்றுச்சூழல் அமைச்சகத்திலும் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை, தமிழ்நாடு கனிம வளத்துறையின் அனுமதியையும் பெற்றதாக தெரியவில்லை.
விதிமுறைகள் மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ள எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் P.S.கிரானைட் நிறுவனத்தினர் கிரானைட் குவாரி நடத்த எந்த விதத்தில் அரசு அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு கிராமத்தின் வாழ்வு உங்கள் கையில் உள்ளது நண்பர்களே,
எங்கள் கிராமத்தின் கனிமவளம், நீர்வளம், விவசாயவளம், போன்ற இயற்கையான வளங்களை பாதுகாக்க நாங்கள் உங்களிடம் கேட்பது ஒரே ஒரு பகிர்வு (SHARE) மட்டுமே….

நன்றி……..
 ·  Translate
11 comments on original post
1
Add a comment...

Deena dayalan

Shared publicly  - 
 
 
அவசரம் !!!!

படத்தில் உள்ள குழந்தை இரு பிச்சைக்காரர்கள் வசம் உள்ளது... குழந்தை இந்த பிச்சைக்காரர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை..

குழந்தையின் உடையும், அணிகலங்களும் இவர்களது குழந்தை இல்லை என்பதை தெரிவிக்கிறது... குழந்தையின் முகத்தை உடனே மூடி விட்டனர்.

இடம் : சென்னை, கிரீம்ஸ் சாலை...

குழந்தை கடத்தல் பேர்வழிகள் போல் தெரிகிறது...

அதிகம் ஷேர் செய்யவும். குழந்தையை பறிக்கொடுத்து பதறி கொண்டு இருக்கும் குழந்தையின் தாய், தந்தையருக்கு தகவல் போய் சேரும் வரை...!!!
 ·  Translate
1
Add a comment...

Deena dayalan

Shared publicly  - 
 
 
#அறிவோம்_அறியாததை


சென்னை

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ்

முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம்

கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்

மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம்

ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை சதயு புரம் :

சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை

ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு

மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்

இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்

பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை சின்ன தறிப் பேட்டை :

சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை

பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம் புரசைப் பாக்கம்:

புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை அமைந்தகரை அமர்ந்தகரை:

ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு*செங்கழுநீர் பட்டு :

செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர்

பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்

பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை

பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

பூந்தமல்லி

பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்

நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்

ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்

முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்

குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி

திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்*வள்ளி சேர் பாக்கம்:

முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல்

ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர்*மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம்

கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்

அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

*****************************************
 ·  Translate
4 comments on original post
1
Add a comment...
Collections Deena is following
View all
Basic Information
Gender
Male
Work
Employment
  • cargoplan
    documentation, 2007 - present
Links
Deena dayalan's +1's are the things they like, agree with, or want to recommend.