Profile cover photo
Profile photo
ஊரான் ஆதி
51 followers -
படிக்கவும் எழுதவும் ஆர்வம் கொண்டவன்
படிக்கவும் எழுதவும் ஆர்வம் கொண்டவன்

51 followers
About
ஊரான் ஆதி's posts

Post has shared content
தோழர் கோவன் கைது – இந்தியா முழுவதிலிருந்தும் கண்டனங்கள்
_____________________________
1. In English Press

    Indian Express Sedition charge against Tamil folk singer for anti-Jayalalithaa song
    NDTV Tamil Folk Singer Arrested for Sedition Over Song Criticising Jayalalithaa
    DNA India Folk artist, activist Kovan arrested by Chennai police for criticising Jayalalithaa government
    IBN Live Folk artist Kovan detained by Chennai police for criticising Jayalalithaa-led government
    The Hindu Chennai Police arrest cultural outfit member on charges of sedition

2. தமிழ் பத்திரிகைகளில்

    விகடன் : டாஸ்மாக்கை மூடு’ பாடலைப் பாடியவர் தே.பா.சட்டத்தில் கைது!
    தினகரன் :  நாட்டுப்புறக் கலைஞர் தோழர் கோவன் கைது
    மாலை மலர் : டாஸ்மாக்குக்கு எதிராக பாடல்: மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கைது
    ஒன் இந்தியா : நாட்டுப்புறக் கலைஞர் தோழர் கோவன் கைது
    நக்கீரன் : டாஸ்மாக் கடைகளை மூடுமாறு பாடியதற்காக ம.க.இ.க கோவன் கைது
    நியூஸ்7 : தேச துரோக நடவடிக்கை பிரிவில் மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி கைது

(மேலும் படிக்க...)

Post has shared content

Post has shared content
கோவன் செய்த குற்றத்தை நீங்களும் செய்யுங்கள் !

பாடியவரைக் கைது செய்து விட்டார்கள். இனி பரப்பியவர்களைக் கைது செய்யட்டும். பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்யட்டும். நமது பாடல் கோட்டையை எட்டும். கொடநாட்டையும் எட்டும். மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.

(மேலும்)

Post has shared content
பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு

எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு

எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்

(மேலும்)

Post has shared content
இந்திய சட்டத்தை எழுதியவர்களில் ஒருவரான தோழர் ‪#‎அம்பேத்கர்‬, சட்டத்தின் திருத்த முடியாத பக்கங்கள் தனியார் உரிமைகளில் தலையீடுவதாக சுட்டிக்காட்டினார். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி  "இந்தியாவின் பெரும்பாலான ‪#‎மாநில_சட்டமன்றங்கள்‬ பொது மக்களின் உரிமைகளை ஒழுங்குப்படுத்துவதில் தமது சட்ட அதிகாரங்களை ஈடுபடுத்துகின்றன" என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடைசியாக, "மக்களுக்கு பயன்படாத ஒரு சட்டம் இருக்குமானால் இந்திய சட்டப்புத்தகத்தை கொளுத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன்" என்றார்.

அம்பேத்கர் கூறியபடி மாநில சட்டமன்றங்களின் தனி மனித உரிமைகளில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதற்கு ‪#‎டாஸ்மார்க்கை_மூடு‬ என்று பாடியதற்காக தோழர் கோவனை மீது இந்திய தண்டனை சட்டத்தின் [124A, 153A, 505] ‪#‎தேசத்துரோகம்‬, இரு குழுக்களுக்கிடையே வன்முறையை தூண்டுதல், ‪#‎கலகம்_விளைவித்தல்‬ என்னும் பிரிவுகளின் கீழ் ‪#‎கைது‬ செய்யப்பட்டு, ‪#‎புழல்_சிறை‬ யில் அடைக்கப்பட்டுள்ளதை உதாரணமாக பார்க்கலாம்.

இரு குழுக்களுக்கு இடையே ‪#‎கலகம்‬ விளைவித்தல் என்றால், குடிப்பவர்கள் / குடிக்காதவர்களுக்கு இடையே தோழர் கோவனை கலகம் விளைவித்தார் என்று பொருட் கொள்ள முடியுமா?

ஒருவேளை ‪#‎மாநில_அரசு_அதிகாரம்‬ அதையே வலியுறுத்துகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஜெயாவின் அரசு குடிக்காரன்களுக்கு மட்டுமான அரசா? குடிக்காதவர்களுக்கான அரசு இல்லையா?

இங்கே தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‪#‎மக்களாட்சி‬ நடக்கிறதா? குடிக்காரன்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட ‪#‎குடிமகன்கள்‬ ஆட்சி நடக்கிறதா?
அரசு மக்களுக்காக இல்லை. சட்டம் தனிமனி மனிதனுக்கான உரிமையை வழங்கவில்லை என்றால் வேறு எதற்காக மக்களுக்கு ‪#‎அரசு‬, ‪#‎சட்டம்‬, ‪#‎காவல்துறை‬?

‪#‎தமிழச்சி‬ 
31/10/2015
Photo

Post has shared content
ஜெயாவின் ‪#‎டாஸ்மார்க்‬ அரசியலுக்கு எதிராக ‪#‎விழிப்புணர்வு‬ பிரச்சாரத்தை ‪#‎எழுச்சிப்பாடல்‬ மூலமாக மக்களிடையே கொண்டு சென்றதற்காக ‪#‎தோழர்_கோவன்‬ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

"கலையும், இலக்கியமும் யாருடைய நன்மைக்காக இருக்க வேண்டும்" என்று அதிகாரத்தை நோக்கி தோழர் ‪#‎பெரியார்‬ கேள்வி எழுப்புகிறார்.

"கலை / இலக்கியம் யாவும் மக்களுக்கே " என்கிறார் தோழர் ‪#‎மாவோ‬.

"ஒரு பெரும் சமூக ஜனநாயக எந்திரத்தின் பற்சக்கரங்களாகவும் மறையாணிகளாகவும் கலை / இலக்கியம் இருக்க வேண்டும்" என்கிறார் தோழர் ‪#‎லெனின்‬.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, "கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்" என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் ' டூயட் ' ஆட்டங்கள் கலையாக இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு சோறு போடாது.

மக்களுக்காக பேசப்படும் கலைகளும் இலக்கியங்களும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் புரட்சிப்பாடகரான தோழர் கோவன் செய்திருக்கிறார்.
எனவே, "ஜெயலலிதாவே டாஸ்மார்க்கை மூடு. தோழர் கோவனை வெளியே விடு."

‪#‎தமிழச்சி‬
30/10/2015

‪#‎கருத்துரிமை‬ ‪#‎டாஸ்மாக்‬ ‪#‎தமிழ்நாடு‬ ‪#‎தமிழகஅரசு‬ ‪#‎ஜெயலலிதா‬

*
‪#‎மூடு_டாஸ்மாக்கை_மூடு‬ – பாடல் வரிகள்:
மூடு டாஸ்மாக்கை மூடு நீ….
மூடு டஸ்மாக்கை மூடு
நீ ஓட்டுப் போட்டு மூடுவான்னு
காத்திருப்பது கேடு..
மூடு டாஸ்மாக்கை மூடு..நீ……
மூடு டாஸ்மாக்கை மூடு
இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சு சாகணும்
எத்தன தாலி அறுந்து விழணும்..
எத்தனை தாலி அறுந்து விழணும் (கோரஸ்)
எத்தன கட்சிகள் கொள்ளையடிக்கணும்
எத்தன தேர்தல் வந்து போகணும்
எத்தன தேர்தல் வந்து போகணும் (கோரஸ்)
இது தப்புன்னு நல்லா தெரிஞ்ச பின்னும்
இப்பவே மூடு ஏன் தயங்கணும்
மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு… (கோரஸ்)
கூட்டம் சேக்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம் (கோரஸ்)
கோஷம் போட சாராயம்
கொடி பிடிக்க சாராயம்
கொடி பிடிக்க சாராயம் (கோரஸ்)
சாராய ஊறலில்தான் கட்சி வளருது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது (கோரஸ்)
அட கடைய மூட எதுக்கு ஓட்டு
போடு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு
மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு.. (கோரஸ்)
அப்பனும் மகனும் கடையிலே
ஆளிருந்தும் துணையில்லே
ஆளிருந்தும் துணையில்லே (கோரஸ்)
சுத்தி சுத்தி இன்னும் கடன வாங்கி
மானம் போகுது தெருவிலே
மானம் போகுது தெருவிலே (கோரஸ்)
விலையில்லா பொருளால
வாழ்க்கை விலை போனது கடையிலே
வாழ்க்கை விலை போனது கடையிலே (கோரஸ்)
விளக்கு அணைஞ்சு போச்சு வீட்டிலே….
விளங்குமா இந்த பொம்பள
மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)
கெட்ட குடி நம்ம குடி
அறுந்த தாலி நம்ம தாலி
அறுந்த தாலி நம்ம தாலி (கோரஸ்)
பத்தியெறியது எங்க வயிறு
குடிய பாக்கு வெச்சு அழச்சதாரு
பாக்கு வெச்சு அழச்சதாரு (கோரஸ்)
shut tasmac 4அட வேணான் இது எங்க ஊரு
அதிகாரம் பண்ண கலெக்டர் யாரு?
மூடு டாஸ்மாக்கை மூடு…
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்க வரும் போலிசுக்கு அஞ்சாதே
மூடு கடையை – அட
எவன் வருவான் பாப்போம்
நம்ம ஊரில் இனி டாஸ்மாக்கு கிடையாது
அடிச்சு தூக்கு………………..

பாடல்: மையக் கலைக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம்
https://www.youtube.com/watch?v=yZLrn1dKOF8
Photo

Post has attachment

Post has attachment

Post has shared content
அம்மாவின் மரண தேசம் - ஆவணப்படம் முன்னோட்டம் - டீசர்
Wait while more posts are being loaded