Profile cover photo
Profile photo
Priyadharsun Sivadasan
130 followers -
Software Engineer at AKLO Information Technologies (Pvt.) Ltd
Software Engineer at AKLO Information Technologies (Pvt.) Ltd

130 followers
About
Posts

Post has attachment
விவேகம் (2017)

ஒட்டு மொத்தத் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு, தயாரிப்பாளரின் முதலீடு, அஜித் எனும் உச்ச நடிகரின் அர்ப்பணிப்பு இவை அத்தனையும் இயக்குனர் ஒருவரின் அஜாக்கிரதையால் விழலுக்கிறைத்த நீராக வீணடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது கோபத்தை விட பரிதாபமே மேலோங்குகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள், இதுவரை கண்டிராத படப்பிடிப்புத் தளங்கள், தொழில்நுட்ப மிரட்டல்கள் இவையெல்லாம் இருந்தும் அதீத தித்திப்பானது ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டவே செய்யுமென்பதற்கு சரியான உதாரணம் விவேகம்.

அறிமுகக் காட்சியில் கதாநாயகன் பேசும் பன்ச் டையலாகிற்கு கை தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் அதே ரசிகன், இறுதிக் காட்சியில் அதே வசனத்திற்கு தலையில் கையை வைத்து கொண்டு உட்காந்திருப்பதென்பது அதீத நாயக பிம்பமானது சுக்கு நூறாக உடையும் மோசமான அனுபவம். முந்தைய வீரம், வேதாளம் போன்ற சுமாரான கதைகளையே ரசனைமிகு காட்சிகளின் கோர்வையாக்கி இயக்குனாராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட சிவா, இந்த முறை காட்சியமைப்பில் கவனம் செலுத்தாமல் உச்ச நடிகரின் புகழ் போதையை வைத்து வெறுமனே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி விடலாமெனத் தப்புக் கனக்குப் போட்டிருப்பதே இந்தப் பெரும் சறுக்கலுக்குக் காரணம்.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/08/26/vivegam/


Add a comment...

Post has attachment
Classics of Tamil Cinema 2: சபாஷ் மீனா (1958)

நகல்களைக் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை; அதே சமயம் அவை தழுவி எடுக்கப்பட்ட அசல் படைப்புக்களுக்கான குறைந்த பட்ச மரியாதையைக் கூடக் கொடுக்கத் தவறுவதென்பது நிச்சயம் நேர்மையின்மையின் வெளிப்பாடு தான். பாமா விஜயம், காசே தான் கடவுளடா, காதலிக்க நேரமில்லை என காலத்தால் அழியாத முழு நீள நகைச்சுவைச் சித்திரங்கள் வரிசையில் வைத்து இன்று வரை கொண்டாடப்படும் படைப்பான 1996 இல் வெளியாகி சக்கைப்போடு போட்ட உள்ளத்தை அள்ளித்தா படமானது, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1958 இல் வெளியான சிவாஜி – சந்திரபாபு இணைந்து கலக்கிய சபாஷ் மீனாவின் அப்பட்டமான தழுவல் என்பது இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? தனது இயக்கத்தில் ஜெயராம் – குஷ்பூ நடித்து வெளியான முறைமாமன் படத்தின் கதைக்கருவானது 1963 இல் சிவாஜி – சரோஜாதேவி நடிப்பில் வெளியான இருவர் உள்ளம் படத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டது என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்ட இயக்குனர் சுந்தர்.சி இதுவரை உள்ளதை அள்ளித்தா – சபாஷ் மீனா சர்சையைப் பற்றி வெளிப்டையாகப் பேசியதாகத் தகவல்கள் ஏதுமில்லை. வெறும் கதைக்கரு மாத்திரமன்றி கதை நகரும் களமும், கதாப்பாத்திர வடிவமைப்பும் கூடவே காட்சியமைப்புக்கள் கூட சபாஷ் மீனாவுடன் ஒத்துப் போவதால் வெறும் இன்ஸ்பிரேஷன் எனக் கருதி எளிதாகக் கடந்து செல்ல முடியாது.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/08/24/sabaash-meena/
Add a comment...

Post has attachment
வேலையில்லா பட்டதாரி 2 (2017)

வலுவான வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தனுஷ் இக்கட்டான சூழ்நிலையில் முந்தைய வெற்றிப் பாடமான வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தீர்மானித்தமையானது நிச்சயம் தந்திரமான மூலோபாயம் தான். என்றாலும் அந்த அதீத எதிர்பார்ப்பை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய எத்தனிக்காமல் வெற்றுச் சமாளிப்புகளுடனேயே திருப்திப்பட்டுக் கொண்டிருப்பது தான் சற்றே ஏமாற்றத்தைத் தருகிறது. முந்தைய பாகத்தின் கதையமைப்பின் தொடர்ச்சியாகவும் கதாப்பாத்திரங்களின் நீட்சியாகவும் இரண்டாம் பாகத்தைத் சுவாரசியமாகத் தருவதில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஜெயித்திருந்தாலும், வலுவான கதைக்களமோ மனதில் நிற்குமளவிற்கு அழுத்தமான காட்சியமைப்புகளோ இல்லாதிருப்பது தான் மிகப் பெரிய சறுக்கல்.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/08/12/vip2/
Add a comment...

Post has attachment
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)

தொடர்ந்து நல்ல கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதர்வாவிற்கு கொஞ்சம் ரிலாக்ஸாக முழு நீள நகைச்சுவைப் படம் பண்ண வேண்டுமென்று ஆசை; காதல் மன்னன் ஜெமினிகணேசனின் வேடமென்றவுடன் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னை முழுமையாக இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்து விட்டார் அதர்வா. தொடர்ச்சியான காதல் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் ஜெமினிகணேசன் – ஒவ்வொரு காதல் தோல்விக்கும் பின்னால் இருக்கும் காரணத்தை ஆராயத் தொடங்கி சிக்கிச் சின்னாபின்னமாகும் சுருளிராஜன் இரண்டு பேரையும் வைத்து சடுகுடு ஆடியிருக்கலாம் இயக்குனர் ஓடம் இளவரசு. என்னதான் நகைச்சுவைப் படங்களில் தர்க்க முரண்பாடுகள் பார்க்கத் தேவையில்லை என்ற போதிலும், ஒட்டு மொத்தப் படமுமே தர்க்க முரண்பாடுகளோடு பயணிப்பதால் எந்தவொரு காட்சியும் மனதில் நிற்காமல் இருப்பதென்பது திரைக்கதையின் பலவீனம்.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/07/19/ggsr-2017/
Add a comment...

Post has attachment
பண்டிகை (2017)

வாழ்க்கையின் ஒரு கட்டம் வரை தான் நாம் பணத்தைத் துரத்துகிறோம்; தொட்டு விட்ட மறுநொடி அது நம்மைத் துரத்தத் தொடங்கி விடும்; இந்த உண்மையை உணராத வரை நிம்மதியின்றி காலச்சக்கரத்தில் உழன்று கொண்டிருக்க வேண்டியது தான் என்பதை இரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்லியிருக்கிறது இந்தப் பண்டிகை. பணத்திற்காக அடித்துக் கொண்டு சாவதற்கும் அஞ்சாத சண்டைக்காரர்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் சூதாட்டப் போட்டி, பெட்டிங் பணத்தைக் கட்டி விட்டு ஏதோ ஒரு வித மனோ வியாதியுடன் வெறி கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம், சூதாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் மாஃபியா கும்பல், தெரிந்தும் தெரியாமலும் அதனைச் சுற்றிப் பின்னப்படும் சூழ்ச்சி வலைகள் என இதுவரை காணாத புதிய கதைக்களத்துடன் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை விருந்தாக்கிப் பண்டிகையை வார்த்தெடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஃபெரோஸ்.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/07/15/pandigai-2017/
Add a comment...

Post has attachment
உன் மேல் பிழை (குறும்படம்)

Impression எனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் அழகான உணர்வானது புறத் தோற்றத்தைச் சார்ந்திருக்கும் வெறும் வார்த்தைப் பிரயோகமல்ல; அது உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; இதயத்தைத் தொடுவதென்பதே அதன் உண்மையான வெற்றி எனும் கருவுடன் வெளிவந்திருக்கும் குறும்படம் தான் உன் மேல் பிழை. நெகிழ வைக்கும் திருப்பங்கள் இல்லை; வார்த்தைப் பிரயோகங்கள் ஒன்றேனும் இல்லை. இயல்பான காதல் கதை தானே என்னும் அசமந்தப் போக்குடன் இருந்து விட்டால், ஆங்காங்கே சின்னச் சின்ன ஆச்சரியங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர் சத்ரியன் T.பிரபு.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/06/28/ump-2017/
Add a comment...

Post has attachment
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017) #AAA #Review

இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ஒரு சில நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஓன்று படத்தின் முதல் ரஷ்ஷினைப் பார்த்து விட்டு எடிட்டர் மறுபடியும் பார்க்க மறுத்திருக்கலாம்; அல்லது தேவையில்லாத காட்சிகளை வெட்டியெறிந்து விட்டு மிச்ச மீதியிருக்கும் நான்கு காட்சிகளை மாத்திரம் ட்ரைலராக வெளியிட்டு விட்டு எஞ்சிய குப்பைகளை மறுபடியும் பார்க்க விருப்பப்படாது அப்படியே இரண்டு துண்டங்களாகி வெளியிட்டிருக்கலாம். கடைசியாக தான் நடித்த காட்சிகளை வெட்ட மனமில்லாமல் அப்படியே வெளியிட சிம்பு முடிவு செய்திருக்கலாம். இதில் எது நடந்திருந்தாலும் அது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்பதை மறுப்பதற்கில்லை. சிலம்பரசன் திறமையான நடிகர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் அறிமுகமாகி இத்தனை வருடத்தில் தனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் அவருக்கு இருக்கும் வணிக மதிப்பையும் புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் அவர் மேல் இருக்கும் வருத்தம்.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
https://thiraimozhionline.com/2017/06/26/aaa-2017/
Add a comment...

Post has attachment
வனமகன் (2017) #Vanamagan #Review

இயற்கையையே காவலரணாகக் கொண்டு வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழும் அழிந்து வரும் மனிதத் தன்மையின் எச்சங்களான பழங்குடியினர், தமது வாழ்வாதாரமான காட்டு வளத்தை அபிவிருத்தி என்னும் பகட்டு மொழியைப் பயன்படுத்தி அபகரிக்க நினைக்கும் நாகரீகம் எனும் போர்வையில் நாட்டுக்குள் நடமாடும் மிருகங்களிடமிருந்து மீட்டெடுக்க நடத்தும் போராட்டமே இந்த வனமகன். சமூக அக்கறையுடன் கூடிய நல்லதோர் கதைக்களத்தைத் தெரிவு செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய் அதையே மையக் கருவாகக் கொண்டு பயணித்திருக்கலாம். காட்டுவாசி நாயகன் நகருக்குள் வந்து காதலில் விழுவதென பார்த்து பழகிய ஹாலிவூட் திரைப்படங்களின் சாயலிலேயே முன் பாதி திரைக்கதையை நகர்த்தி இருப்பது தான் கொஞ்சம் நெருடல்.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
Add a comment...

Post has attachment
மரகத நாணயம் (2017) #MaragathaNaanayam #Review

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் வரத்தையும், அதே நேரம் தொட்டவனையே தீர்த்துக் கட்டும் சாபத்தையும் தன்னகத்தில் ஒருங்கே பெற்ற அமானுஷ்யப் பொருளைத் தேடும் ஒரு சுவாரசியமான பயணமே இந்த மரகத நாணயம். இந்த மாதிரியான கதைக்களத்தை மிகைப்படுத்தப் பட்ட நாயக பிம்பத்துடன் கூடிய சாகசப் பயணமாகவோ, அன்றேல் மாந்திரீகத்தின் பின்னணியுடன் கூடிய பக்திப் படமாகவோ நகர்த்துவதே தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலா. அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் நகைச்சுவையுடன் கூடிய பாண்டஸிப் படமாக வித்தியாசப்படுத்தி இருப்பதே அறிமுக இயக்குனர் ARK சரவணனுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
Add a comment...

Post has attachment
ரங்கூன் (2017) #Rangoon #Review

இயற்கையால் விதிக்கப்பட்ட பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவே வாழும் வாழ்க்கையை மட்டுமே மனிதனால் தீர்மானிக்கப்படுகிறது; எப்படி வாழ வேண்டும் என்பதை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அது சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளுமே தீர்மானிக்கின்றன. இதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இல்லை. எல்லோருமே அதிர்ஷ்டத்தைத் தேடி அலையும் துரதிஷ்டசாலிகள் தான். இழப்பு, சந்தோசம், காதல், நட்பு, துரோகம் எனப் பார்த்துப் பழகிய கதை தான். எடுத்துக் கொண்ட கதைக்களமும் அது சொல்லப்பட்ட விதமும் தான் படத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறது.

திரைமொழி வலைத்தளத்தில் மேலும் விரிவாகப் படிக்கலாம்..
Add a comment...
Wait while more posts are being loaded