Profile cover photo
Profile photo
Srinivasan Balakrishnan
825 followers
825 followers
About
Posts

Post has attachment
ந்யூயார்க் சாலைகளின் போக்குவரத்து நெரிசல். சென்னைப் பெருவெள்ளத்தின் போது ஏற்பட்டதே ஒரு சாலை நெரிசல் அதே போல் ஊர்ந்து ஊர்ந்து தவழ்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். இத்தனைக்கும் எவ்வித குறைபாடுகளும் இல்லாத மிகப்பெரிய சாலைகள். அவற்றால் கூட இப்படி ஒரு நெரிசலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மை. இப்படியே ஊர்ந்து ஊர்ந்து விடுதி வந்து சேர்ந்த போது ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அப்போது எடுத்த முடிவு தான் இனி எக்காரணத்தைக் கொண்டும் கால்டாக்ஸி பிடிக்கப் போவதில்லை எங்கு செல்வதென்றாலும் பஸ் அல்லது ரயில் மட்டும் தான் என்று.

Post has attachment
நாயும் ஆனவன் - சிறுகதை

பூனை வளர்த்து இருந்தீங்கன்னா ஒருவிசயத்த கவனிக்க முடியும். பூனைங்க அதீத பாதுகாப்பு உணர்வு கொண்டது. எவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அதோட அடியாழத்துல அழுத்தமா பதிந்து போன எச்சரிக்கை உணர்வு அத தொந்தரவு பண்ணிட்டே இருக்கும். பூனைய நெருங்குறது அவ்வளவு சுலபம் இல்லை. அதுக்கு அசாத்தியப் பொறுமை வேணும். பூனை ஒரு செல்லக்கிறுக்குன்னு கூட சொல்லலாம். ஆனா நாய் அப்படியில்லை. வெகுளி. ஈஸியா நம்பிரும். ஒருமுறை பழகினா அடுத்தமுறை நாம அடிச்சாலும் வாலட்டிட்டே பக்கத்தில வந்து கொழையும். இதையெல்லாம் நான் தெரிஞ்சிசிக்க காரணமா இருந்தது சென்னையும் பாலாஜியும் தான்.

தொடர்ந்து வாசிக்க...

http://www.seenuguru.com/2016/02/balaji.html

Post has attachment
மனிதன் எனும் கொலை மிருகம்

எல்லாருக்கும் சமமாகத்தான் எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறது இயற்கை. ஆனால் மனிதன் மட்டும் தன் தேவையையும் மீறி தனக்குத் தேவையானவற்றை இயற்கையிடம் இருந்து பறித்துக் கொள்கிறானோ எனத் தோன்றுகிறது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கற்பிதம் செய்திருக்கும் மனிதன்தான், தான் புகுந்த எல்லா இடங்களையும் நாசம் செய்து கொண்டிருக்கிறான். தெரிந்தும் தெரியாமலும். புரிந்தும் புரியாமலும். 

http://www.seenuguru.com/2016/02/manithaniyarkai.html

Post has attachment
பசங்க - 2 - யாருக்கான படம்?

அவசர உலகில் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறைந்துகொண்டே செல்கிறது. பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் எவ்வளவு அவசியம் என்ற கேள்விக்கான பதில் அதன் முக்கியத்துவத்தை இழந்து கொண்டே வருகிறது. குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மன ரீதியான பிரச்சனையா அல்லது உடல் ரீதியான பிரச்சனையா என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு மருத்துவரின் உதவியைத் தான் நாட வேண்டி இருக்கிறது என்பதை பல காட்சிகளில் தொடர்ந்து பதிவு செய்திருப்பது, எல்லாவற்றிற்கும் மருந்து மாத்திரை ஒன்றே தீர்வு என நம்பும் கூட்டத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் - பசங்க 2.

http://www.seenuguru.com/2016/01/pasanga-2-movie-review.html

Post has attachment
Photo

Post has attachment
அன்புள்ள அரசியல்வாதிகளுக்கு,

வணக்கம். நலமா?  தமிழகத்தில் அதுவும் குறிப்பாக சென்னையில் அடைமழை விடாது பெய்வதால் வீட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஏசியின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். பாவம் சளி பிடித்து விடப்போகிறது. ஒருவேளை தொகுதி பக்கம் செல்லும் எண்ணம் இருந்தால் இந்த மழைக்காலம் முடியும் வரைக்கும் அதனையும் ஒத்திப்போட்டு விடுங்கள். காரணம் இருக்கிறது. சொல்கிறேன். அதற்குத்தானே இந்தக் கடிதமே.

http://www.seenuguru.com/2015/11/a-letter-to-politicians.html

Post has attachment
சின்ன காக்கா முட்டை

மழை பெய்து சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருந்ததால் மேடவாக்கத்தில் இருந்து வேளச்ச்செரி வரையிலும் செம ட்ராபிக். வாகனம் அனைத்தும் மெல்ல ஊர்ந்து செல்ல, இவ்வளவு பெரிய ட்ராபிக்கிற்கு மத்தியிலும் கண்ணாடியில் தெரிந்த அந்த சிறுவனைப் பார்த்துக் கொண்டே பேசியிருக்கிறான் சாரதி.  

'ஃப்ரீதான்னா. ஆனா போட்டோ எடுக்க, பிரின்ட் போடன்னு நூறு ரூவா கேட்டாங்கோ. எங்க அம்மாட்ட கேட்டேன் துட்டு இல்ல போடான்னு அடிக்கிதுன்னா'.  

'அப்போ அப்பாட்ட கேட்க்க வேண்டியதுதானடா'

'அப்பா இல்லனா. இறந்துட்டாரு' 

http://www.seenuguru.com/2015/10/lift.html

Post has attachment
இருள் பரவும்...!

உங்களுக்கே தெரியும் நான் நன்பகலில் பயணித்து நள்ளிரவில் வீடு வந்து சேர்பவன் என்று. அன்றாட நிகழ்வில் நீங்கள் பலரையும் கடக்கும் போது, பல சமயங்களில் நான் நாய்களை மட்டுமே கடந்து வருபவன். கூடிய விரைவில் நான் எழுதப்போகும் தெருநாய்களைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ஐநாவில் இருந்தோ சீலேவில் இருந்தோ அல்லது உகாண்டாவில் இருந்தோ பரிசு கிடைத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்பது தான் என் நிலைப்பாடு. இருந்தும் நாய்களைப் பற்றிய நமக்கான விவாதத்தில் ஒரு திருப்புமுனை வரும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை இவ்வளவு அவசர அவசரமாக எழுதுவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் நேற்றைய இரவு வரைக்கும் கூட.

http://www.seenuguru.com/2015/10/night-at-chennai.html

Post has attachment
ஐடி வேலை @ மெண்டல் கேர்

உங்கள் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் வழி உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. ஐடி வேலை இப்படித்தான் இருக்கும் என்பது தெரியும் அதனால் உங்கள் உடலுக்கும் மனதுக்குமான ரிலாக்சேஷனை அவ்வபோது கொடுங்கள். குறைந்தபட்சம் அதற்கான முயற்சியையாவது எடுங்கள். இல்லை எதோ ஒரு கட்டத்தில் மனநிலை பாதிப்பு அடைந்து திரியும் போது உங்களை நீங்களே இழந்திருப்பீர்கள். அப்போது உங்கள் வயது நீங்கள் வாழ வேண்டிய வயதாகக் கூட இருக்கலாம்.

http://www.seenuguru.com/2015/10/ITmentalcare.html

Post has attachment
சொர்க்கம் அருகிலே @ பாண்டிச்சேரி

ஒரு பயணம் தன்னால் எவ்வளவு அனுபவங்களைத் தரமுடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டிருந்தது. உடன் இருப்பவர்கள் அத்தனை பேரும் வயதிலும் அனுபவத்திலும் திறமையிலும் பெரிய பெரிய ஆட்கள். நான் இங்கு வெறும் பார்வையாளன் மட்டுமே. அவர்களுடைய அனுபத்தில் இருந்து எனக்கான உலகை கட்டமைத்துக் கொண்டிருந்தேன். எனக்கான உலகில் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என வழிகாட்டிக் கொண்டிருந்தவர்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தேன். 

மேலும் படிக்க...

http://www.seenuguru.com/2015/10/club-mahindra-resorts.html
Wait while more posts are being loaded