Profile cover photo
Profile photo
suresh perumalsamy
136 followers -
நான் நூலகம் சென்றதில்லை... புத்தகங்கள் படித்ததில்லை... அன்பானவர்களை நூலகமாக்கி... அவர்கள் அனுபவத்தை படிக்கின்றேன்... thanks ajay
நான் நூலகம் சென்றதில்லை... புத்தகங்கள் படித்ததில்லை... அன்பானவர்களை நூலகமாக்கி... அவர்கள் அனுபவத்தை படிக்கின்றேன்... thanks ajay

136 followers
About
Posts

Post is pinned.Post has shared content
கு(ட்)டி முதலை கதை..
ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது. அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான காட்டு மிருகத்தைப் பிடித்து வளர்த்து , அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் உயரும் என்று நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது. ஆவலுடன் அதைக் கையில் பிடித்து வீட்டுக்கு எடுத்து வந்தான்.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும் , நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள் . அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள் . அவனோ அதை அலட்சியப்படுத்திவிட்டு முதலையை செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.

எங்கே சென்றாலும் அவன் முதலைக் குட்டியோடுதான் சென்று வந்தான். போகும் இடமெல்லாம் மக்கள் மிரண்டு போய்ப் பின் வாங்குவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும் அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை.

முதலை இப்போது ஐந்தடி நீளம் வளர்ந்துவிட்டது. எவ்வளவு இறைச்சி போட்டாலும் சாப்பிட்டு விடுகிறது. ஆனால் முதலையின் காரணமாக அவனது மனைவி , பிள்ளைகள் அவனை விட்டு விலகிப் போனார்கள். நண்பர்களும் வருவதில்லை. இருந்தாலும் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்படும் பயம் அவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை . இப்போது அது ஆறடி வளர்ந்திருந்தது. அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது . நன்கு வளர்ந்துவிட்ட முதலையின் வலிமையோடு அவனால் போராட முடியவில்லை . இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது..

🍻குடிப் பழக்கமும் இந்தக் குட்டி முதலை போலத்தான் ஆபத்தில்லாத ஒன்று போல வாழ்வில் நுழைந்து ஒரு நாள் நம்மையே விழுங்கி விடும் .
அதில் கிடைக்கும் பெருமையும் , மகிழ்ச்சியும் சில நாள் தான். சீக்கிரமாய் குடி நம்மை அழித்து விடும். குடித்து அழிந்தவர்களும், குடியினால் பிச்சைக்காரர்களானவர்களும் விளையாட்டாய் குட்டி முதலையை வீட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான்.
என்றைக்கானாலும் அதற்கு அவர்கள் இரையாகப் போவது நிச்சயம் . எனவே, *குடி எனும் முதலையை இப்போதே கொன்று விடுவது நல்லது.

Post has shared content
சிவபெருமானை வணங்குதலும்!! உணர்தலும்!!!

ஒரு இனிய நறுமணமிக்க பழத்தை கண்களால் பார்த்துக் கொண்டே இருத்தலுக்கும் … அதன் வாசனையை நுகர்ந்து கொண்டே இருத்தலுக்கும்.. அந்த பழத்தை உண்டு மகிதலுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது….

அதனை போலவே, சிவபெருமானை புறக்கண்களால் மட்டும் கண்டு, தூப தீபம் காட்டி வணங்கி அதோடு நிறுத்திக் கொள்ளுதலும் ….ஆதி அந்தம் இல்லா சிவத்தை உணர்ந்து வாழ்தலுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

மனித உருவில் இருக்கும் அத்துனை ஆன்மாக்களும் இறைவனை தொழ வேண்டி ஆலயம் செல்கின்றது .இறைவனை கண்களால் காண்கின்றது, பிரகாரத்தை விட்டு வெளியே வந்ததும் மாய வாழ்க்கை ஆட்க்கொண்டு இறைவனை மறந்து விடுகின்றது. மேலும் தனக்கு சோதனைக்காலம் வரும் போது இறைவனை நாடி செல்கின்றது. உண்மையில் இறைவனிடம் எதாவது ஒன்றை யாசித்துக் கொண்டு தான் இருக்கின்றது. பல மனிதர்களுக்கு இறைவனின் தொடர்பு வெறும் வணிகத்தனமாகவே உள்ளது.இது நிதர்சனமான நடைமுறை…

காலம் இந்த சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கையில், இறைவனை ஆன்மா உணர மறந்து விடுகின்றது. அல்லது அதனை பற்றி எண்ண முயற்சி செய்யவும் மறுக்கின்றது.

பல ஆயிரம் அடியார் பெருமக்கள் பெருமானின் திருக் கருணையை உணர பெற்றிருக்கிறார்கள் , தித்திப்பான நமச்சிவாய பழம் தின்று… உணர்ந்தது.. அந்த இறை அனுபவத்தை மற்ற ஆன்மாக்களுக்கும் உரைக்க வேண்டித் தங்களால் ஆனா எல்லா செயல்களும் செய்துக் கொண்டிக்கிறார்கள் அது மிகவும் கடினமான பணியே.

சரி இறைவனை எம்பெருமான் சிவனை உணர எளிய மார்க்கம் உள்ளதா என்றால் நிச்சியம் உள்ளது… கடந்த பதினைந்து வருடங்களாக சிவபக்தனா இருந்த இச்சிறியேனை அவன் அடியாராக்கி ஆட்கொண்ட சிவ அனுபவத்தையே பகிர்ந்து கொண்டுள்ளேன்...

1. இறைவன் ஒருவனே என்று புத்திக்கு எட்டியதை மனத்திற்குள்ளும் புகுத்தி, மனம் சிறுதெய்வங்கள் பின்னால் போவதை நிறுத்த வேண்டும் . “சிவ பெருமான் மட்டுமே இறைவன்”, மற்றவை எல்லாம் அவரின் படைப்புகளே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை வரவேண்டும். இறைவனை உணர நினைக்கும் அத்துனை ஆத்மாக்களுக்கு எது எளிதே.

2. இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைதல் வேண்டும். “எல்லாம் நீயே”.. “நீ மட்டுமே” என்று இருத்தல். இந்த நிலை மிகவும் அற்புத நிலை, மனித மனம் தடுமாறாமல் காப்பது இந்த நிலையே. இந்த நிலைப்பாட்டால் மனம் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் துவண்டு விடாது, குமுறாது, துன்பமும் படாது… முயற்சி என்னுடையது முடிவு உன்னுடையது என்று இருந்து விடல்

3. இறைவனிடம் பொன் ,பொருள், பதவி ,செல்வம் போன்றவற்றை கேட்பதை நிறுத்தவேண்டும் . ஏன் என்றால் இறைவன் நமக்கு வேண்டத்தகத்தை எல்லாம் தானாகவே அருள்வார் . இருப்பினும் ஒன்றை மட்டும் ஆணித்தனமாக கேட்க வேண்டும் அது “இறைவனையே வேண்டும்” என்று கேட்டல். அவர் நம்மோடிருந்தால் எல்லாம் நடக்கும்..

4. சிவ சின்னங்களாகிய திருநீறும், உருத்திரக்கமும் ஏகாந்தமாக தரித்தல் வேண்டும் . மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நிலைகளை பெற்று தரக்கூடிய சிவப்பொக்கிஷமாகும் இவை. மனம் என்ற கட்டுக்கடங்காத காட்டுக் குதிரையை கட்டுக்குள் வைக்கும் மாமருந்து. மனதை சிவன்பால் மட்டும் வைக்கும் ஆற்றல் படைத்தது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் சிவபெருமான் இயல்பானாவர். எனவே சிவ சின்னங்களை அணிய எந்தக் கட்டுப்படும் இல்லை. இறைவன் மீது பற்றும், சிவசின்னங்களை அணிய விருப்பும் இருந்தால் போதும், பக்குவப்படாத தனி மனித வெவ்வேரு குணங்களும், பழக்க வழக்கங்களும் தானாக சீர்படும்.

தெய்வம் தேடினும் இல்லை…சிவத்தை உணர்ந்து சிவானந்தத்தில் திளைத்தது.. சிவகதி அடைவோமாக!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ சிவாயநம
திருச்சிற்றம்பலம்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Photo
Add a comment...

Post has shared content
எந்த ஒரு உண்மையான சித்தரும் தன்னை சித்தர் என்று சொல்லிக் கொண்டு, (பணம் கொடுத்தால்) பரிகாரம் செய்கிறேன் என்று விளம்பரம் செய்து கொண்டு கூட்டம் சேர்க்க மாட்டார்கள்.

❌ தன்னை சித்தர் என்று பகிரங்கமாக சொல்லி கொள்பவரிடமிருந்து ஒதுங்கி விடுவது அறிவுள்ள செயல். ❌

✅ சித்தரை பித்தனே அறிவார்

1.இருக்குமிடம் தெரிவிக்காமல்&

2.செய்ததை, செய்கின்றதை, செய்யப் போகின்றதை சொல்லாமல்&

3. (அனைத்தும்) அறிந்ததை அறியாதது போல் (நடித்து)&

4.நாமறியாமலும், அறிந்தும் நமக்கு வழிகாட்டி, வழி நடத்தி, பாக்கியமிருந்தால் பிறவிக் கடலில் இருந்து கடைதேற்றி&

5. பெற்றவர்களை விடவும் பல மடங்கு அன்பை பொழிந்து&

நம்முடனே உருவமாகவும், அருவமாகவும்
இருந்து, வாழ்ந்து, (உடல்) மறைந்து காலத்தை கடந்து
🔥 இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக இருப்பவர் உண்மையான சித்தர் .
Photo
Add a comment...

Post has shared content

Post has shared content
27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும். .
.
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
.
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
.
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
.
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
.
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.
.
மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.
.
மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.
.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
.
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
.
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
.
* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.
.
உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
.
* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
.
* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.
.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
.
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
.
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
.
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
.
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
.
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்.
.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
.
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.
.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
.
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
.
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
.
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.
.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

அன்பு உள்ளம் கொண்ட முகநூல் நண்பா்களே பிரகதீஸ்வரர் என்ற பெயாில்
வரும் ஆன்மீக படங்கள்; மற்றும்;வீடியோஸ்;கருத்துக்களை( லைக்)
செய்யுங்கள் பிறருக்கும் ஷேர்பண்ணுங்கள் அப்பொழுதுதான்
பலரும் பயன் பெறுவாா்கள்.
தங்களுக்கு பிடித்திருக்கிறதா
என்பதையும்
அறிய இயலும் உங்கள் அன்புடன்
பிரகதீஸ்வரர்

நன்றி.........

சர்வம்சிவார்ப்பணம்
Photo

Post has shared content

Post has shared content
அக்ஷய திரிதியை – சன்மார்க்க விளக்கம்

இந்த நன்னாளிலே தான்

1. பாஞ்சாலி , அனைவர் முன்னாலும் துகில் உரியப்பட, அது மேன்மேலும் வளர்ந்து , அவளின் மானத்தைக் காப்பாற்றியது

2. ஆகாய கங்கை பூமிக்கு இறங்கிய நாள்

3. கண்ணனின் பள்ளித் தோழர் குசேலரின் வீட்டில் செல்வம் மேன்மேலும் வளர்ந்து அவரின் வறுமையை விரட்டி அடித்தது

இதையே , ஒரு பெண்ணிடம் , நாம் இன்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் , இன்று தங்க நகை வாங்க வேண்டும் என்பாள். – இது தான் நிதர்சனமான உண்மை

பெரும்பாலான மெய் உணர்ந்த ஞானிகளின் வாழ்க்கையில் , ஒரு முறையேனும் இந்த அற்புதத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.

1. இயேசு பிரான், ரொட்டித் துண்டையும் , மீனையும் பன் மடங்காகப் பெருக்கி அனைவர்க்கும் படைத்தல்

2.ஷீரடி சாய் பாபா , தன் பக்தர் வீட்டில் உணவினை பன்மடங்காகப் பெருக்கி அனைவர்க்கும் போதுமானதாகச் செய்தார் – கூட்டம் அதிகமாகி , உணவு போதாது என்ற நிலை உருவான பொழுது

அக்ஷய திரிதியை என்றால் என்ன ? அதன் பொருள் என்னவென்று பார்த்தோமானால் :

அக்ஷயம் = மேன்மேலும் வளர்வது – குறைவுபடாமல் இருப்பது என்று பொருள்

திரிதியை = மூன்று – நாள்/பொருட்கள்/மணி போன்றவை

உண்மையான பொருள் என்னவெனில் – மூன்று சூக்குமப் பொருட்கள் நம் உடம்பிலே ஓரிடத்தில் கலந்தால் , அது பொரூட்களை மேன்மேலும் வளர்த்துக் கொண்டேப் போகும்

மூன்று சூக்குமப் பொருட்களின் கலவை வெற்றிடத்தை உருவாக்கும் – அதனை இறைவனின் அருட்கொடையானது தன் அருளால், பொருட்களால் மேன்மேலும் வளர்த்துக் கொண்டேப் போகும்

உதாரணங்கள் :

1. காசி – திரிவேணி சங்கமம் – மூன்று நதிகளின் சங்கமம் – இங்கு நீராடினால் நம் பாவங்கள் நசித்துப் போகும் – இதே போன்று
நம் தேகத்திலும் இது போன்று மூன்று சூக்குமப் பொருட்களைச் சேர்த்தால் , கங்கை உருவாகி , அது நம் பாவங்களையெல்லாம் கரைத்து விடும்

2. அமுதசுரபி – அள்ள அள்ள குறையாத அன்னம் பாலிக்கும் பாத்திரம் – அள்ள அள்ள குறையாமல் அன்னம் வருவதால் அதற்கு அக்ஷய பாத்திரம் என்று பெயர்

இது மணிமேகலையிடமிருந்தது

3. அமுத கலசம் – இது சிவன் கோவில்களில் லிங்கத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் – இது மூன்று கயிற்றின் மூலம் தொங்கிக் கொண்டிருக்கும்
அதில் சிறு ஓட்டை வழியாக நீர் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும் – இது மூன்று சூக்கும பொருட்களின் கூட்டுறவால் , அமுதம் உருவாகி, சொட்டு சொட்டாக நம் தொண்டை வழியாக வயிற்றில் விழும் என்பதைக் காட்டத்தான்.

நாம் கொண்டாடிடும் எல்லா பண்டிகைகளிலும், விழாக்களிலும், பெரும் பொருள் இருக்கின்றது – பெரும்இரகசியம் அடங்கி இருக்கின்றது – – அதனை தெரிந்து கொண்டாடினால் , அதன் பெருமையை நாம் உணர்வோம்

யோகச் சாதனைகள் யாவையும் நம் முன்னோர்கள் பண்டிகைகளிலும், விழாக்களிலும் புகுத்தி , நம் வாழ்க்கையின் அங்கமாக்கி விட்டார்கள்

பண்டிகைகளிலும், விழாக்களிலும் பொதிந்துள்ள இரகசியங்களை நாம் கண்டுபிடித்து, நாம் அதை சாதனையில் பயின்று , வெற்றி கண்டால், நாமும் மரணமில்லாப் பெருவாழ்வும் , சிற்றம்பலத்தில் நுழையும் வல்லமையும் திறமும் பெறுவோம் என்பது திண்ணம்.

மக்கள் இந்த உண்மையை உணராமல் இந்த நாளிலே , பூஜை, விரதம் , உபவாசம் , அன்னதானம், தங்கம் /நகை வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள்.

அவர்களின் செயலுக்கும் உண்மைக்கும் தூரம் மிக அதிகம் –

அவர்களின் செயலில் உண்மை புரிதலே இல்லை – அதனால் அவர்கள் நினைப்பது நடப்பதில்லை – அவர்கள் எண்ணம் ஈடேறுவதில்லை
Photo

Post has shared content

Post has shared content

Post has attachment
Photo
Add a comment...
Wait while more posts are being loaded