Profile cover photo
Profile photo
ஜோதிஜி திருப்பூர்
5,836 followers -
ஜோதிஜி (JOTHIG)
ஜோதிஜி (JOTHIG)

5,836 followers
About
ஜோதிஜி's posts

Post is pinned.Post has attachment
காலை வேளையில் மனைவியைக் காதலி. மற்ற நேரமெல்லாம் வேலையைக் காதலி.

Post has attachment
+Bibiliobibuli R உங்களுக்கு நேரம் இருக்கும் போது முழுமையாக வாசித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்தவும்.

Post has shared content
இலங்கையில் பிரபலமான இரண்டு சிங்கள இனவாத தலைவர்கள் பிறப்பால் தமிழர்களே!

(தகவலுக்கு நன்றி: TSounthar Sounthar )
//புகழ்பெற்ற இரு "சிங்கள" தலைவர்களின் பூர்வீகம் :

1.
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் மாற்றினார் . நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ” [ 1770 இல் பிறந்தார் ] .இவர் கோரலை முதலியாராக இருந்தார்.இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல் .
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”.இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா.
இவர்கள் கிறிஸ்தவ தமிழர்கள்.

2.
சிறு வயதில் தந்தையை இழந்த தம்பி முதலியார் என்ற தமிழன் கொழும்பில் குடியேறினான்.ஒல்லாந்துக்கு உளவு பார்த்தல் அவன் செய்த தொழில். தன்னை” ஏட்ரியன் ஜெயவர்த்தன ” என்று பெயர் மாற்றி கொண்டான் தம்பி முதலியார். இவரது மகன் தொன் ஏப்ரஹாம் ஜெயவர்த்தன. இவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன. இவரது மகன் யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன.இவரது மகனே J.R.ஜெயவர்த்தன.
ஜெயவர்த்தனாவின் மகன் ரவி திருமணம் முடித்ததும் ஒரு தமிழ் பெண்ணையே !
இவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களே.//

தமிழர்களின் குடிப்பழக்கத்தாலும், அதீத ஆசைகளாலும், தகுதிக்கு மேற்பட்ட விருப்பங்களாலும் திருப்பூர் முழுக்க உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் தற்போது வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள். முதலாளிகளும் இவர்களைத்தான் விரும்புகின்றார்கள்.

நான் பணிபுரியும் தொழிற்சாலையில் மூன்று மாநில (பீகார், ஒடிசா, நேபாளம் கீழ்ப்பகுதி) தொழிலாளர்கள் தான் அதிக அளவில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரையிலும் உள்ளே பணிபுரிந்தாலும் தப்பித்தவறிக்கூடத் தமிழ் பேச விரும்புவதில்லை. ஆனால் தமிழ் பேசத் தெரியும். தொழிற்சாலையின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அடுத்த கட்ட ஊழியர்களுக்கு இவர்களை வேலை வாங்குவது சவாலாகவே இருக்கும்.

இந்த மொழியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வட மாநில தொழிலாளர்களும் வெளியே எழுத முடியாத அளவிற்கு அத்தனை கேப்மாறி தனங்களையும் தொடர்ந்து செய்து தொந்தரவு செய்து வேலை நேரத்தை கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

நானும் கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் ஹிந்தி மொழி தேவை என்பதற்காக இரண்டு பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்று இருந்தாலும் தொடர்ந்து பேச வாய்ப்பில்லாத காரணத்தால் அடிப்படை புரிந்ததோடு அப்படியே ஆழமாய் உள்ளே இருந்ததை வைத்துக் கொண்டு தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

ஆனால் தற்போது நான் பணிபுரியும் தொழிற்சாலையில் உள்ளே நுழைந்த போது என்னிடம் ஹிந்தி தெரியுமா? உங்களால் சமாளிக்க முடியுமா? என்றார்கள். நான் சிரித்துக் கொண்டே அவனுக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படாமல் எனக்கு ஏன் ஹிந்தி தெரியவில்லை என்று வருத்தப்படுகிறீர்களே? என்று என்ன சொன்ன போது முதலாளி என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தார்.

அவர் மனதில் நினைத்தபடியே அடுத்தச் சில வாரங்களில் என் ஏழரையைத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தவனை வைத்துக் கொண்டு மொத்தமாக நிறுத்தி நான் நினைத்த விசயங்களைத் தமிழிலில் நிதானமாக மெதுவாகச் சொல்லி அப்படியே ஹிந்தியில் மொழி பெயர்த்து பேசச் சொல்வேன். கேட்டுக் கொள்வார்கள்.

அடுத்தச் சில நாட்களில் சில ஒழுங்குமுறைகள் உருவானது. இப்படியே படிப்படியான உருவானாலும் குறிப்பிடத்தக்க வெற்றியில்லை. எனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் இவர்களைக் கையாளவே பயந்தார்கள். என்னிடம் வேறு ஏதாவது பிரச்சனைகள் என்று எவர் வந்தாலும் உண்டு இல்லை என்று படுத்தி எடுத்து அவர்களை வாட்டி வதங்கி அனுப்பி விடுவதுண்டு.

ஒருவன் உள்ளே நுழைந்ததும் உனக்கு ஹிந்தி தெரியாதா? என்று தொடங்குவான். ஹிந்தியில் உள்ள அத்தனை கெட்டவார்த்தைகளைச் சரம் சரமாகக் கோர்த்து அவன் கழுத்தில் மாலையாகப் போட்டு உட்கார்ந்து இருக்கும் சேரை விட்டுக் கோபமாகத் தள்ளிவிட்டு எழுந்து நிற்கும் போது நான்கடி பின்னால் போய் நிற்பான்.

இப்போது எவன் என்னிடம் வந்தாலும் ஹிந்தி தமிழ் கலந்து சாரே என்று பேசுகின்றார்கள். நானும் தமிழ் ஹிந்தி கலந்து பேசுகின்றேன். உள்ளே பல நிலைகளில் பணிபுரிபவர்கள் போய் ஜிஎம் யைப் போய்ப் பார்த்து விட்டு வந்து உட்கார் என்பார்கள். வேண்டாம் சாரே? என்று பம்மிக் கொண்டு வேலை செய்கின்றார்கள்.


Post has attachment
அம்மா என்ற மம்மி
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது ஔவையார் வாக்கு. இப்போது அம்மாவின் சொத்துக்களைப் பினாமிகள் சுருட்டுகின்றனர்.  தமிழ் இளங்கோ அவர்கள் சென்ற பதிவில் விமர்சனம் மூலம் தெரிவித்து இருந்தார். அதற்காக  இந்தப் பதிவு. கடந்த பத்தாண்டுகளாக அலுவலகத்தில் உடன் பணிபுரியு...

Post has shared content
பொறுங்கள் சொல்கிறேன்...
____________________________

"எதுக்கு சார் ஹிந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்றீங்க" என்றபடியே வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு முகத்தை பார்த்தார் நண்பர்.
பொறுங்கள் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு ரெண்டு சப்பாத்தி என்றேன் சர்வரிடம்.

"அடுத்து என்ன சார்" என்றார் சர்வர்
நண்பர் ஒரு தோசையும், நான் மறுபடி ரெண்டு சப்பாத்தியும் சொன்னவுடன், அவர் ஆச்சரியத்துடன் "என்னங்க நீங்க, வெரைட்டியா டிபன் ஐட்டம் இருக்கும்போது மறுபடியும் சப்பாத்தியே கேக்குறீங்க" என்றார் ஒருவித அசூசையுடன்.
பொறுங்கள் சொல்கிறேன் என்றேன்.

அவர் என்னை விநோதமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் இருவரும் முதலில் கேட்டதை எடுத்து வந்து வைத்துவிட்டு சர்வர் நகர்ந்தவுடன் பொங்கலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

நண்பர் பதற்றத்துடன், "சார், அது நான் கேட்டது" என்றார்.
நான் நிதானமாக, ஓ... சரி பரவாயில்லை நீங்கள் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன்.
"அட, எனக்கு சப்பாத்தி பிடிக்காதுங்க" என்று சொல்லியபடியே வேண்டா வெறுப்புடன் சாப்பிட ஆரம்பித்தார்.

"அப்புறம் சார் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே. ஹிந்தி"... என்று முடிப்பதற்குள், கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன் என்றேன். அவர்
நக்கலாக சிரித்துக் கொண்டார்.

தோசையும் சப்பாத்தியும் வந்தது.
உள்ளே இறங்க மறுத்த சப்பாத்தியின் கடைசி பிட்டை இறக்க அவர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, தோசையை சாப்பிட ஆரம்பித்தேன்.

டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த காட்சியைப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்...

"அலோ உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள்தான் உங்கள் உணவை ஆர்டர் செய்துகொள்ள வேண்டும். உங்கள் உணவை என் தலையில் கட்ட நீங்கள் யார்?" என்று கொதித்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது!

அவரிடம் அமைதியாகச் சொன்னேன். நாளை காலையில் வெளியேறிவிடும் உணவை உங்கள் மீது திணித்ததற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருகிறதே, காலங்காலமாக பேசும் ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியை திணிப்பதை எப்படி இவ்வளவு மொன்னையாக அணுகுகிறீர்கள்?

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...
உங்கள் முன் இருக்கும் சப்பாத்திதான் ஹிந்தி. நான் மோடி அரசு. ஒரே ஒரு வித்தியாசம்தான். நானாவது உங்கள் உணவை சாப்பிடுவேன். மோடிகள் அதை செய்ய மாட்டார்கள். சப்பாத்தியை தலையில் கட்டுவது மட்டும்தான் அவர்கள் வேலை, வாங்க போகலாம்.

"எங்கே"...

#இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு!

#தோழரின்_பதிவு.

Post has shared content

Post has attachment

Post has attachment
Photo

Post has shared content
Wait while more posts are being loaded