Profile cover photo
Profile photo
rams gopal
About
Posts

Post has attachment
சஞ்சீவி மாமா - சிறார் நாவல் குறித்து
சஞ்சீவி மாமா ( இந்தியாவுக்கு நேரு மாமா … இந்த தெருவுக்கு யாரு மாமா ?
) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு . பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் வெளியீடு . கொ . மா . கோ இளங்கோ என்றவுடன் தயக்கமின்றி உடனே அந்த புத்தகத்தை எடுத்தேன் . அன்று இரவே வாசிக்...
Add a comment...

Post has attachment
பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி
அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு
நடந்துச்சாம் என்றது...
Add a comment...

Post has attachment
பிறிதொரு பொழுதில் - ஒரு போராளியின் அனுபவங்கள்
நாள்தோறும் நான் காணும் மனிதர்கள், சூழல்கள் இவற்றில்
நாம் எவ்வாறு “வினை” புரிகிறோம் என்பது ஒரு முக்கியமான அரசியல். அந்த அரசியலை முன்
வைக்கிறது பரிந்துரைக்கிறது இந்த நூல் என்றே நினைக்கிறேன். ரமேஷ் பாபுவின் எழுத்துக்கள்
எனக்குப் புதிதல்ல. ஆனாலும் ஒன்றாக தொகுப்...
Add a comment...

Post has attachment

Post has attachment
தாழிடப்பட்ட கதவுகள் - நூலினை குறித்து
தாழிடப்பட்ட கதவுகள் , தமிழ் சிறுகதை நூல் வரிசைகளில் நல்லதொரு வரவு . 25 ஆண்டு கால கோவை கலவரங்களின் பின்னணியில் எழுந்து வரும் அடுத்த படைப்பு . ஒவ்வொரு கலவரம் எனப்படுவையும் அந்த நிலத்தின் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கிறது....
Add a comment...

Post has attachment
அதிகாரம் அறிதல் - மீட்சி (ஒல்கா)
இதிகாச ப் புராணங்கள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை , அநேகமாக எக்காலத்தும் . சிறு வயதில் அதன் மாயங்களில் மகிழ்ந்தும் , பின் அதன் வீரத்தில் வியந்தும் , பின் அதன் வளத்தில் கிறங்குவதுமாக இதிகாச புராணங்கள் இருக்கின்றன . நம் நாட்டின் இதிகாசங்களான மகாபாரதம் , ராமாயண...
Add a comment...

Post has attachment
Add a comment...

எப்போதெல்லாம் தேசத்திற்கு எதிரானவர்கள் என சிலர் நிறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்கு எதிராக இராணுவ வீர்ர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இராணுவ வீர்ர்களின் தியாகம் போற்றுதலுக்குரியதே, அவர்கள் நம் நாட்டைக் காக்க செய்யும் தியாகமும் அளப்பரியதுதான்.

ஆனாலும், ஒரு நாட்டின் எல்லைகளக் காப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே முக்கியம் அந்த நாடு என்னும் ஒரு identityயை காப்பதும், அதாவது நாடு நாடாக இருப்பதும். மொழி, சாதி, மதம், இனம், கலாச்சாரம், பண்பாடு, பணம் முதலிய எந்தவித பாகுபாடுகளோ முற்றி ஓர் நாட்டு மக்கள் தம்முள்ளாகவே சண்டையிட்டு நாடு துண்டாடப்படுவதை தடுக்க முயலும் ஒவ்வொருவரும் அந்நாட்டின் இராணுவ வீர்ருக்கு ஒப்பானவர்கள்தான் என்பது என் எண்ணம்.

பண்முகத்தன்மை எனப்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த இந்திய நாட்டில் ஒற்றை மொழிதிணிப்பிற்கு, சாதி, மத மேலாதிக்கத்திற்கு, இனத்தூய்மைக்கு, ஒற்றை கலாச்சாரத்திற்கு, பொருளாதார சுரண்டலுக்கு, மறுக்கப்படும் உரிமைகளுக்கு எதிராக நிதமும் தங்களால் இயன்ற போராட்ட வடிவை கைகொண்டு இத்தேசம் உள்ளுக்குள்ளாகவே உடையாமல் இருக்க களம் காணும் போராளிகள் ஒவ்வொரும் இந்திய நாட்டின் இராணுவ வீர்ர்களுக்கு இணையாக போற்றுதலுக்குரியவர்களே.
Add a comment...

”தங்கள் பதிலை எதிர்பார்த்து” - பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆளுமைகளுக்கும் இடையிலான கடிதங்கள் என்னும் நூல் சமீபத்தில் வாசிக்கப் பெற்றேன். முதலில் சொல்லிவிடலாம், வித்தியாசமான புத்தகம்.

ஒரு பள்ளியில் சுதந்திர தினத்தன்று ஆளுமைகளுக்கு குழந்தைகள் கடிதங்கள் எழுதுகின்றனர். ஆளுமைகள் சிலரும் குழந்தைகளுக்கு கடிதங்கள் எழுதியிருக்கின்றனர். சுவையானவையே. ஆளுமைகள் என்னும்போது வயதான எனக்கு சில சங்கடங்கள், தயக்கங்கள் உண்டு. ஆனால் குழந்தைகள்.... அவர்கள்தான் குழந்தைகள். எவ்வளவு சுதந்திரமாய் எழுதுகின்றனர். தயக்கமேயில்லாமல், சரளமாய்.

எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் தோழர் மிக நல்ல வேலையை செய்திருக்கிறார். மேலும் கடிதங்கள் தொகுக்கப்பட வேண்டும். குழந்தைகள், ஆளுமைகள் பங்கேற்கும் விவாத மேடைகளும் அங்கே உருவாக்கப்பட்டால் நல்லது.

ஒரு தனியார் பள்ளியின் குழந்தைகள் (கொஞ்சம் வசதி பெற்றவர்கள்) அவர்களுக்கான ஆளுமைகள் மெஸ்ஸியிலேர்ந்து, கு.சிவராமன் வரை என விரிந்த வெளியாக இருக்கிறது. ஆனால் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு?

தோழர் ச.தமிழ்செல்வன் அவர்களுக்கு, தோழர் நீங்கள் ஏன் 2002 தொடங்கப்பட்டு 2015 வரை 13 வருடங்களை ஓர் ஆராய்ச்சிக்கூடமாக, பயிற்சிக்கூடமாக குழந்தைகள் தங்கள் குழந்தைமையை தொலைக்காது, தேர்வு பயம் இல்லாது, தாய்மொழி வழி கல்வியை சோதித்து பார்க்கும் நமது குறிச்சி பள்ளி குறித்து எழுதக் கூடாது? சீக்கிரம், செய்யுங்கள்
Add a comment...

http://www.thenewsminute.com/article/how-does-india’s-caste-system-work-21st-century-quora-user-hits-bull’s-eye-35962#sthash.X0f5Aj6V.hpvt

MUST read one
Add a comment...
Wait while more posts are being loaded