Profile cover photo
Profile photo
சிகரம் பாரதி
358 followers
358 followers
About
சிகரம்'s interests
சிகரம்'s posts

Post has attachment
என் இனிய நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் மற்றும் சக தமிழர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழர்களின் புத்தாண்டு எது? இந்தக் கேள்விக்கான தீர்க்கமான விடை இன்னும் யாரிடமும் இல்லை. ஆளும் அரசுகளும் தத்தமது கொள்கைகளுக்கேற்ப ஒவ்வொரு நாளை பின்பற்றி வருகின்றன.

தை யா? சித்திரை யா? தமிழர் புத்தாண்டு எது? நம் தமிழறிஞர்கள் பலர் பலமுறை ஆராய்ந்து தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு என அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்த வண்ணமே உள்ளது. சித்திரைத் திருநாள் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒன்றாகவும் மாறிப்போய் இருக்கிறது. தை தான் நமக்கு முதல் மாதம். தமிழில் மாதங்களை சொல்லும் போது தையில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம். வருடம் முதல் மாதத்தில் இருந்து ஆரம்பிப்பது தானே முறை?

சித்திரையில் நிகழ்வது இராசி மாற்றம். அதாவது சனிப்பெயர்ச்சி போன்ற ஒன்று மட்டுமே. தமிழரின் அடையாளம் விவசாயம். விவசாயிகளின் திருநாளும் தை தான். மேலும் சித்திரை இடைநடுவில் வரும் மாதம். வருடப்ப்பிறப்பு வருடத்தின் நடுப்பகுதியில் நிகழ்வது சாத்தியம் தானா? ஆகவே தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு திருநாள் என்று உறுதியாகக் கூறலாம். மேலும் சித்திரைத் திருநாள் வட இந்தியர்களின் வாயிலாக நமது கலாச்சாரத்துக்குள் ஊடுருவிவிட்ட ஒன்று. ஆகவே தைத்திருநாளே தமிழர் திருநாள் ஆகும்.

இறுதியாக நமது பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிவரிகள் உங்களுக்காக:

“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்.

Post has attachment
சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
என் இனிய நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் மற்றும் சக தமிழர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழர்களின் புத்தாண்டு எது? இந்தக் கேள்விக்கான தீர்க்கமான விடை இன்னும் யாரிடமும் இல்லை. ஆளும் அரசுகளும் தத்தமது கொள்கைகளுக்கேற்ப ஒவ்வொரு நா...

Post has attachment
நூல்கள் எமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைரத்திலும் உயர்வானவை. புத்தகங்களும் அது போன்றவையே. ‘உனக்கு வரம் வர யாரோ இருந்த தவமல்லவா புத்தகம்’ என்கிறார் வைரமுத்து. மேலும் ‘ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும். ஒவ்வொரு பக்கம் நகரும் போதும் நீ எதிர்காலத்துள் காலடி வைக்கிறாய் – ஒரு புத்தகம் முடிகிறது மனசின் மர்மப் பிரதேசம் விடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார் வைரமுத்து.

Post has attachment
வாசிப்பை நேசிப்போம்
இக்கட்டுரை
இலங்கையின் தேசிய நாளேடான ‘வீரகேசரி’ இல் 24.02.2008 அன்று கதிர் பகுதியின் 04 ஆம் பக்கத்தில் வெளியானது. ‘சிகரம் பாரதி’
என்னும் புனை பெயரில் வெளியானது. வாசிப்பை நேசிப்போம் வாசிப்பு ஒரு மனிதனை
முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்...

Post has attachment
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் மூன்றாம் பகுதி உங்களுக்காக இங்கே:

Post has attachment
தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 3
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05...

Post has attachment
பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் ! அத்தகைய பெயர் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்! அவரது அசரவைக்கும் வரிகளைப் படித்து அதன் எளிமையில் ஆழ்ந்து போன நாட்கள் கணக்கிலடங்கா ! சில பாடல்களைப் படிக்கும்போது அழகான ஒன்றிரண்டு பழஞ்சொல்லோ, பாடல் வரியோ, கவிதை நயமோ, காப்பியநயமோ நமது நினைவுக்கு வராமல் போகாது! அது கவிஞர்களுக்கே உரித்தான பெருமை! சலுகையும் கூட ! ஆனால் அந்த வரிகளை எந்த அளவுக்கு மேலும் மெருகும், அழகும், எளிமையும், ஏற்றமும் கூட்டிப் படைக்க அவனால் இயல்கிறது என்பதே கவியின் சிறப்பு! அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சில, எந்தெந்தப் பழைய வரிகளை நினைவூட்டுகிறது, அந்தப் பழைய பெட்டகத்துக்கு மேலும் எந்த அளவுக்கு அவர் எளிமையும் ஏற்றமும் அளித்து நமக்குத் தருகிறார் என்பதை அலசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

Post has attachment

Post has attachment
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் இரண்டாம் பகுதி உங்களுக்காக இங்கே:

Post has attachment
தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2
வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம்
நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு
ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக
ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம்.
அந்த வகையில் இன்றைய...
Wait while more posts are being loaded