Profile cover photo
Profile photo
kanniappan vadivelupillai
1,867 followers -
சிவம் - அன்பு - உண்மை - திருமுறை - சாத்திரம்
சிவம் - அன்பு - உண்மை - திருமுறை - சாத்திரம்

1,867 followers
About
Posts

Post has attachment

Post has attachment
Photo

Post has attachment
திருமுறையில் ஆர்வம் கொண்டோர் அனைவருக்கும் அறிமுகமான அப்பர் தேவாரப்பாடல்:-
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.(5.90.10)
இதற்கான விளக்கம்(கழகப் புலவர்.சித்தாந்த பண்டிதர்.குலசை ப இராமநாத அடிகளார்) வருமாறு:-
இத்திருப்பாட்டு, இறைவன் ஆவியுடன் மறைந்து நிற்கின்றான் என்பதும், அவனை அன்பு ஆகிய கோலால், மறவாமைஆகிய அறிவுக் கயிற்றினால் சீலம் (சரியை), நோன்பு (கிரியை) என்னும் செய்முறை செய்து வலிந்து இழுத்துக் கடைய விறகில் தீப்போல் வெளிப்படுவன்.
மேலும் செறிவு (யோகம்) என்னும் ஒழுக்கத்தில் நிற்போர்க்கு இழுத்துக் கடைய பாலில் நெய் போல் தோன்றுவன்.
அத்தோடு அறிவ (ஞானம்) என்னும் ஒழுக்கத்தில் நிற்பார்க்கு கடைய மணியில் ஒளி தோன்றறுவது போல் தோன்றுவன்.
இத்திருப்பாட்டையே ஒருபுடை ஒப்பாக
ஆவிக்கும் (உயிருக்கும்) கூறலாம்
உயிர்கள் மலச்சார்பால் மூவகைப்படும்.
(1) ஆணவம் மட்டுமே உடைய ஒருமலத்தார்
(விஞ்ஞான கலர்)
(2)ஆணவமும் கன்மமும் உடைய இரு மலத்தார்.
(பிரளயா கலர்)
(3)ஆணவமும் கன்மமும் மாயையும் உடைய . . மும்மலத்தார் (சகலர்)
ஒருமலத்தார்க்கு (விஞ்ஞான கலருக்கு) வேண்டுதல் வேண்டாமை ஆகிய இரு வினைச் செயல்கள் அற்ற தூய யாக்கையும் தூய வினையும் உடையவர்கள். உணர்த்து மெய் எனும் சிவ தத்துவ நிலையினர்.
எனவே அவர்கட்கு மணியின் கண் ஒளி அடைதல் போன்று இறைவன் அறிவுக்கு அறிவாய் நின்று மெய் உணர்வைத் தோற்றுவிப்பன்.
இருமலத்தார்க்கு (பிரளயா கலருக்கு) விருப்பு வெறுப்பு உண்டு ஆகையால் அவர்கள் தூவா மாயையினர்.உணர்வு மெய் எனும் வித்யா தத்துவத்தினர்.
இவர்கட்கு மாயை இன்மையால் மயக்கம் இன்றாம். எனவே பாலில் நெய் போல அருளுருவாய்த்
தோன்றி திருவடி இன்பம் தருவன்.
மும்மலமும் உடைய சகலர்க்கு(நம்மவர்க்கு) விருப்பு வெறுப்போடு மயக்கமும் உண்டு ஆகையால் நாம் எல்லாம் உடல். மெய்யினர் (ஆன்ம தத்துவத்தினர்).
ஆகவே நமக்கெல்லாம் மெய்யுண்ர்வு என்பது விறகில் தீயை வலிந்து இழுத்துக் கடைய முன்நிற்பது போல இறைஅருள் ஆசாரியத் திருக்கோலம் (குருஉரு)
கொண்டு நூலும் (உபதேச மொழியாலும்), நொடித்தலும் (பார்வையாலும்), நடித்தலும் (பாவனையாலும்) ஆகிய செய்கைகளால் ஆட்கொள்வன்.
அன்புடன் சிவனகம் ந அருளரசு.
Photo

Post has attachment
ஒன்பதாம் திருமுறை - திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா - கோயில் (சிதம்பரம்)
பண் : பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்
இருட்பிழம்பு அறவெறிந்து எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
தூயநல் சோதியுள் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மாலறி யாமை
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே!
பொருள்: ஐயனே! என்னுடைய பிறவித் துன்பத்தைத் தொலைத்து தடுத்தாட் கொண்டு அருளி, என் மனத்தினுள் இருந்த அஞ்ஞானமாகிய மிக்க இருளை வேரறக் களைந்து சுடர் விட்டு எழுந்த ஒளிபொருந்திய மாணிக்கத் தீபத்தினுள்ளே ஒளி வீசுகின்ற தூய்மையான் அழகிய ஒளியினுள்ளே ஒளிவடிவாய் விளங்குபவனே! வலிமை பொருந்திய இடபத்தை வாகனமாகக் கொண்டவனே! பொன்னம்பலத்தில் நின்று நடனம் ஆடுபவனே! நான்முகனும், திருமாலும் அறிய இயலாதவாறு மிக்க ஒளியினை வீசிப் பரவி நின்றவனாகிய உன்னை , அடியவனாகிய யான் வணங்கும் வண்ணம் நீ திருவருள் புரிவாயாக!

திருச்சிற்றம்பல
Photo
Add a comment...

Post has attachment
ஒன்பதாம் திருமுறை - திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா - கோயில் (சிதம்பரம்)
பண் : பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே!
பொருள்:
ஒளிமிகும் விளக்கே!
அழிவற்ற, ஒப்பற்ற பொருளே!
சென்று பற்றும் சுட்டறிவும், ஆய்வும் கடந்து நின்று பதி ஞானத்தால் (சிவஞானத்தால்) மட்டுமே அறியப்படும் மேலான பேரறிவே!
ஒளி பொருந்திய பளிங்கின் தோற்றத்தை உடைய திரட்சியான மாணிக்க மலையே!
மெய்யன்பரது மனத்தின் கண் தித்திக்கும் தேனே!.
( இனிப்பு என்பது சரியான தமிழ்ச் சொல் அல்ல. தித்திப்பு என்பதே சரியான் தமிழ்ச் சொல்)
அன்பு பெருகும் மெய்யடியாரது மனத்தின் கண் பேரானந்தத்தை விளைவிக்கும் கனியே!
தில்லை அம்பலத்தையே நடனம் புரியும் சபையாகக் கொண்டு அங்கு சிதாகாசத்தில் ஆடும் ஆதியும் அந்தமும் அற்ற தெய்வீக நடனத்தை விரும்பிச் செய்யும் உன்னை, அடியவனாகிய யான் புகழ்ந்து உரைக்குமாறு நீ எனக்கு உரைத்தௌ அருள்வாயாக!
திருச்சிற்றம்பலம்
சிவாயநம!
Photo
Add a comment...

Post has attachment
என் இளைய மகன் கந்தனருள் நிறைமதி இணையரின் மகனும், என் பெயரனுமாகிய திருவளர்ச் செல்வன் நித்திலன் இந்திய அளவில் சாதனை புரிந்து உள்ளான், அது பின் வருமாறு:
SOLVED 9 TYPES OF RUBIK CUBES IN SHORT TIME:
___________________________________________
k.NITHILAN (Born on September 5 , 2011) Rubik Cube Genius Boy of Ambattur, Chennai, Tamil Nadu, Solving 9 types of Rubik cubes including 2*2*2, Pyramid, Skewb,3*3*3 Mirror, 2*3*3Windmill, Squre 1 Cube, 2*2*2Mirror etc., in 14 min 47 secs and a new Record at Anna Nagsr Association Club, Chennai, on April 30, 2017
______________________________________________
http:/www.indiabookofrecords.in/ solving-most-types -of-rubik-cubes-in-least-time/
http:/www.worldrecorsindia.com/2017/05/solved-9-types-rubik-cubes-in-short-time/
______________________________________________
இந்திய அளவில் சாதனை செய்த போழ்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு. நித்திலனுக்கு ஆசிகளும் பாராட்டுகளும். சிவாயநம!
PhotoPhotoPhotoPhotoPhoto
24/5/17
12 Photos - View album
Add a comment...

Post has attachment

Post has attachment
அன்பிற்கினியீர்! மாலை வணக்கம்.
இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத்தின்
படையறாத் திருக்கரமுஞ் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப்பாடலும்
தொகையறாச் செவ்வாயுஞ் சிவவேடப் பொலிவழகுந் துதித்து வாழ்வாம். - மாதவச் சிவஞான சுவாமிகள்
வருகின்ற 21&22 ஆகிய இருநாள்கள் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருநாள் விழா (குருபூசை ) , திருக்கழுக்குன்றம்-நால்வர் கோயிலில் நிகழ்முறையில் கண்டவாறு நடை பெற உள்ளது. அடியார் பெருமக்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெற்று உய்ய அன்புடன் அழைக்கின்றேன்.
சிவாயநம.
PhotoPhotoPhoto
18/4/17
3 Photos - View album
Commenting is disabled for this post.

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded