Profile cover photo
Profile photo
O.R.B Raja
3,288 followers -
Former Farmer and Future Farmer! Currently, in the concrete jungle of Chennai!
Former Farmer and Future Farmer! Currently, in the concrete jungle of Chennai!

3,288 followers
About
O.R.B's posts

எங்கள் நிறுவனம் அளிக்கும் தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகப் பயிற்சிகள். திருவள்ளூர் மாவட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும். நன்றி!
--

திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள், மாணவ/மாணவியர் கவனத்திற்கு - இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு
-------------------------------------------------------------------------------------------

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் (District Employment Office) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் (Tamilnadu Skill Development Corporation) இணைந்து, கீழ்கண்ட இலவசத் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை விரைவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் அளிக்க உள்ளனர் (Courtesy: Axiom Semantics).

* இந்தத் திறன்மேம்பாட்டுப் பயிற்சியைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
* கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருத்தல் வேண்டும்.
* 18 வயது முதல் 25 வயது வரையான, ஆண்/பெண்/மூன்றாம் பாலினத்தவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
* பயிற்சியின் முடிவில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு தமிழக அரசு சான்றிதழுடன் தகுந்த தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்.
* 100% வருகைப் பதிவு உள்ளவர்களுக்கு, பயிற்சி நாட்கள் கணக்கிடப்பட்டு, தினசரி ரூ.100 வீதம் பயிற்சியின் முடிவில் போக்குவரத்துப் படியாக அவர்களது வங்கிக்கணக்கில் ECS மூலம் செலுத்தப்படும்.

அளிக்கப்படும் இலவசத் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள்:

1. ACCOUNTS ASSISTANT USING TALLY
2. DTP & PRINT PUBLISHING ASSISTANT

மேலும் விபரங்களுக்கும், பயிற்சிக்கானப் பதிவுகளுக்கும் அணுகவேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்
தொலைபேசி எண்: 044-27660250

(by)

Axiom Semantics
Telephone Number: 044-64558899
Mobile/WhatsApp: 9543322116

Post has attachment
எங்கள் முருகன் கோயில் கந்த சஷ்டி. இரண்டு நாட்களுக்கு பக்திப்பழ அவதாரம் :)
Photo

Post has attachment
நாந்தான் முழிச்சிருந்தாலும்........... நாயுமல்லோ ....முழிச்சிருக்கும் :)))

(சங்கர்) கணேஷ் இசை, நடிப்பும் அவரே. இவரின் நிறைய பாடல்களை இளையராஜா பாடல்களோடு குழப்பிக்கொள்வது அடிக்கடி :)

என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு நினைச்சேன் :) இந்தப் பொஸ்தவத்தை வாங்கிட்டீங்களா அம்பேரிக்க வாழ் மக்கழே? என்னமா பீதியக் கெளப்புறாய்ங்க?

3 நிமிஷம்னு சொல்லி 30 நிமிஷமா பேசிகிட்டிருக்கான். நாங்கல்லாம் ஈமெயில் சப்ஜெக்ட்டப் பாத்தாலே சொல்லிடுவோம்லே :)))

http://www.blackoutusa.org/vsl/index.php?r=4480&r=1553&hop=ramnaval

+Andhiyuran Pazamaipesi +குடுகுடுப்பை சித்தர் +Muthukumaran Devadass +Dyno Buoy +Raja ILAmurugu +இளவஞ்சி iLaVAnJi +Rohini Siva +Dhinesh Kumararaman +ஓலை சிறிய

Post has attachment
கண்ணைமூடி கேட்கவும் :)

மேல்மருவத்தூருக்கும் மதுராந்தகத்துக்கும் நடுவில், சென்னை வரும் வழியில் முன்பிருந்த நண்பரின் (99 காஃபி ஷாப், அறப்பேடு -ன் கிளை) தீனிக்கடை மூடப்பட்டிருக்கிறது. அது வேறு ஒரு கடையாக உருமாறியிருக்கிறது.

அதன் அருகில் சென்னை சில்லின் (Chennai Chillin) எனும் கடை உள்ளது. சாண்ட்விச் & கோல்ட் ஸ்டோன் ஐஸ்க்ரீம் மிக அருமையாக உள்ளது.

வாய்ப்பிருப்பவர்கள் சுவைத்து மகிழலாம்!

OYO Rooms? Oh No Mams :(
Worst service, will never ever book a hotel room through them again.

நடு ராத்திரி ஒரு மணிக்கு பேய் மாதிரி அலையவிட்டுட்டானுங்க :(

ஒரு நாள் பயணம் கோவை. Hotels.com ல ரூம் புக் பண்ணலாம்னு போனா, முதல் நாலஞ்சு ரூம்களும் ஓயோ ரூம்களா வந்தது. ப்ராப்பர்ட்டியும் நல்லாருந்து, நல்ல டீல் குடுத்ததால் புக் பண்ண ட்ரை பண்ணேன். கடைசி ஸ்டெப்ல இந்த ரூம் அவைலபிலா இல்லன்னு காமிச்சான். அடுத்த ரெண்டு ரூமுக்கும் அதே மாதிரி. நாலாவது ரூம் ஒரு வழியா புக் பண்ணிட்டேன். என்னோட வேலையிடத்துக்கும் பக்கத்துலயே இருந்தது.

பாதி தூரம் ட்ரெயின்ல போகும்போது ஒரு ஓயோ சனியன் கால் பண்ணுச்சு. நீங்க புக் பண்ணின ரூம் கிடைக்கிறதுல ஏதோ பிரச்சினை, அதனால் நாங்க உங்க ரூமை 'அப்கிரேட்' பண்ணி இன்னொரு ப்ராப்பர்ட்டில போட்டிருக்கோம்னு சொன்னுச்சு அந்த சனியன். வேலையிடத்துக்கு தூரமா இருக்கும்போலருக்கேன்னு கேட்டதுக்கு, உங்களுக்குப் புடிக்கலன்னா கால் பண்ணுங்க மாத்தி தரோம்னு சொன்னுச்சு. சரி, ரொம்ப தூரமா இருக்கிற மாதிரி இருந்தா மாத்திக்கலாம்னு ஜங்ஷன்ல இறங்கி போனா, போய்கிட்டே இருக்கு ஓலா கேப். அந்த ட்ரைவர் பையனும் எனக்காக முடிஞ்சவரை தேடி தேடிப் பாத்தா அந்த ப்ராப்பர்ட்டியே காணலை. சரி குடுத்த நம்பரைக் கால் பண்ணி அட்ரஸ் கேக்கலாம்னு பாத்தா, அந்த நம்பர் ஓயோ கஷ்டமர் சர்வீஸ்.

போனை எடுத்தவன்கிட்ட விஷயத்தை சொல்லி, ப்ராப்பர்டி நம்பர் வாங்கி குடுடா பக்கின்னா, 15 நிமிஷம் காக்க வச்சுட்டு ஒரு நம்பரை குடுத்தான். அந்த நம்பருக்கு கால் பண்ணா, சார் எங்களுக்கு புக்கிங் இன்ஸ்ட்ரக்‌ஷனே வரலைங்கிறாரு. இப்பிடித்தான் அவங்க இஷ்டத்துக்கு மாத்தி மாத்தி அவங்களே புக் பண்ணிட்டு எங்க கழுத்தை அறுக்குறாங்கன்னு சொல்லிட்டு, இந்த ப்ராப்பர்ட்டில ரூம் காலி இல்லை, 10 கி.மீ பக்கம் உள்ள இன்னொரு ப்ராப்பர்ட்டிக்கு போறீங்களான்னு கேக்க, நான் வேணாம்னுட்டேன்.

மறுபடி ஓயோவுக்கு கால் பண்ணி மாட்டினவனை 2 நிமிஷத்துக்கு நல்ல ஆங்கிலத்தில் அர்ச்சனை பண்ணிட்டு, பஸ் ஸ்டாண்ட் வந்து கண்ணில் பட்ட ஒரு பாடாவதி லாட்ஜில் ரூம் போட்டப்போ மணி விடியல் 2:20 மணி.

காலைல மெயில் செக் பண்ணிப்பார்த்தா, புக் பண்ண முடியாம எர்ரர் காமிச்ச மூனு ரூமும் கன்ஃபர்ம்ட்னு மெயில் வந்துருக்கு. நாலாவது ரூம் கன்ஃபர்ம் பண்ணி அப்புறம் அப்டேட் பண்ணிருக்கோம்னும் ரெண்டு மெயில்.

மவனே இன்னொரு தடவை ஓயோன்னு கண்ணில் பட்டுச்சு.....செத்தான்.

Post has attachment
வெள்ள நிவாரண நிதி அப்டேட் 20/01/2016 (final):

சென்னை:
தையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் இருவருக்கு (சுந்தரி அம்மாள் & துளசி) உதவவேண்டி விண்ணப்பம் வந்தது. இவர்கள் இருவரும் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் ஓரத்தில் குடியிருப்பவர்கள். குடிசை மறுசீரமைப்புக்கும், ஒரு மாத கால மளிகைப் பொருட்களுக்கும் தலா 5000 உதவி செய்யப்பட்டது. மாலதி ராஜாவால் உறுதிசெய்யப்பட்ட பயனாளர்கள் இவர்கள்.

கடலூர் மாவட்டம்:
18/01/2016 அன்று நானும், +புதுகை அப்துல்லா வும் நண்பர் ஜெயராம் பிரகாஷ், வடலூரில் சார்பதிவாளராகப் பணிபுரியும் திருமதி கனிமொழி, வடலூர் வணிகர் சங்கத் தலைவர் பாபு, யாழி கிரிதரன் (இவர்கள் அனைவரும் வெள்ள நேரத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு உதவிகள் சரியாகப் பாதிக்கப்பட்டோருக்குச் செல்ல களத்தில் நின்றவர்கள்) ஆகியோர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மருவாய், பேரூர், மேல்பாதி, பாப்பம்பட்டு, வாய்க்கால்மேடு, அண்ணா ஸ்டாப், கங்கைகொண்டான் - பழைய நெய்வேலி மற்றும் வடக்குத்து காலனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, பாதிப்பு நேரடியாக உறுதிசெய்யப்பட்ட 132 நபர்களுக்கு (பெரும்பாலும் விதவைகள், பெண்கள்) தலா ரூ.1500 அளித்தோம்.

மருவாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற இளம்பெண் பெற்றோரை இழந்தவர், பள்ளி செல்லும் இரு சகோதரர்களுடன் வசித்து வரும் இவர், முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு (ஆங்கிலம்) படித்து வருகிறார். இவருக்கு அடுத்த செமஸ்டருக்கான கல்விக்கட்டணத்தை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதுவரை அளித்தது போக மிச்சமிருக்கும் தொகையுடன் மேலும் ரூ.500+ நான் சேர்த்து ரூ.7500 உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சேர்ந்த தொகை: 261021
சென்னையில் அளிக்கப்பட்ட தொகை: ரூ.54088
கடலூர் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட தொகை: ரூ.204923
செலவு (உத்தேசம்): ரூ.2010

இந்த வெள்ள நிவாரண நிதி உதவி இத்துடன் நிறைவு பெறுகிறது. நண்பர்கள் யாரும் மேற்கொண்டு நிதி உதவி நான் முன்பு குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு அனுப்பவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நிதி அனுப்பிய நமது அன்பிற்குரிய ப்ளஸ் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பாதிக்கப்பட்டோரின் நன்றியுடன் என் நன்றியும் உரித்தாகட்டும்!

இந்த நிதி உதவி சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்கள் மற்றும் புகைப்படங்களை இங்கு பார்வையிடலாம்: https://drive.google.com/folderview?id=0B-9kvkovF0fmOWVHcmo1ZnpQSTg&usp=sharing

Post has attachment
வெள்ள நிவாரண உதவி அப்டேட் 10/01/2016:

சென்னை
========
1. சைதாப்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உறுதி செய்யப்பட்ட 5 குடும்பங்களுக்கு இஸ்திரிப் பெட்டி வழங்கப்பட்டது. நண்பர் விஜய வீரப்பன் மூலம் கண்டறியப்பட்ட அவர்களுக்கு, பாரிஸ் கார்னர் சென்று 5 பெட்டிகள் வாங்கினோம். உதவி நோக்குடன் செய்கிறோம் என்பதை நாங்கள் சொல்லாமலே தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் (நந்தினி ஸ்டோர்ஸ்) கனிசமான அளவு தள்ளுபடி விலையில் (ரூ.350/பெட்டி கழிவு) கொடுத்தார். இதற்கு நேரில் வந்து உதவிய விஜய வீரப்பன் மற்றும் கே.ஆர்.பி.செந்தில் இருவருக்கும் நமது சார்பில் நன்றி! இதற்கு செலவான தொகை: ரூ.19687.50

2. ஜாஃபர்கான் பேட்டையில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் பழனி ஏழுமலையின் கடையும், வீடும் முழுமையாக பாதிக்கப்பட்டது. வீடு சரி செய்ய சில நண்பர்கள் உதவிய நிலையில், கதவு மற்றும் உள் கட்டமைப்பு சரிசெய்ய கார்பெண்டர் வேலைக்காக ரூ.9400 உதவி செய்யப்பட்டது. கே.ஆர்.பி.செந்தில் மற்றும் என் மூலம் உறுதி செய்யப்பட்ட பயனாளர் இவர்.

3. குரோம்பேட்டையில் வறுமையில் வசித்து வந்த, கணவனால் கைவிடப்பட்ட நிலையில் இரு குழந்தைகளுடன் குடிசையை இழந்து சுடுகாட்டில் வசித்து வரும் ஒரு பெண்மணிக்கு உதவி தேவைப்படுகிறது என உறவினர் மூலம் தெரியவந்தது. இன்று நான் நேரடியாகச் சென்று சரிபார்த்துவிட்டு எவ்வளவு உதவி செய்யலாம் என்று தெரிவிக்கிறேன். உத்தேச உதவித் தொகை: ரூ.5000 - முத்துலட்சுமி என்ற அந்த பெண்மணிக்கு ரூ.5000 உதவித் தொகை அளிக்கப்பட்டது.

4. அஸ்தினாபுரம் ஏரி அருகில் வசித்து வந்த பத்மா என்ற பெண்மணியின் குடிசை வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. குரோம்பேட்டையில் உதவி அளித்தபோது தெரியவந்த தகவல், இந்தப் பெண்மணிக்கு குடிசையை மறுகட்டமைக்க ரூ.5000 உதவி அளிக்கப்பட்டது. என்னால் உறுதி செய்யப்பட்ட பயனாளர் இவர்.

5. தையூர் அருகே ரோட்டோரங்களில் வசிக்கும் கூடை முடைபவர்கள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அல்லது நாளை நேரில் சென்று தகவல் அறிந்து பகிர்கிறேன் - அப்டேட்: இவர்களுக்கு வேறு வகைகளில் உதவி சென்று சேர்ந்துவிட்டது.

6. பஸ் மற்றும் சில கார்கள் சிக்கிக்கொண்ட அரங்கநாதன் சப்வே அருகில் டூ வீலர் மெக்கானிக்காக தொழில் செய்துவந்த ராஜா என்பவரின் கடை மொத்தமாக முழுகி நிறைய டூல்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. கார் ஒன்று வெள்ளத்தில் இழுத்துச்செல்லும் வீடியோவில் தெரியும் சாலையில்தான் இவர் கடை (கண்ணம்மாபேட்டை சுடுகாடு அருகே). அவருக்கு டூல்ஸ் வாங்க ரூ.5000 உதவிசெய்யப்பட்டது. கே.ஆர்.பி.செந்தில் மூலமும் என் மூலமும் உறுதிசெய்யப்பட்ட பயனாளர் இவர்.

-- Edited on 20/01/2016 to add two more beneficiaries from Thaiyur village:
7. தையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் இருவருக்கு (சுந்தரி அம்மாள் & துளசி) உதவவேண்டி விண்ணப்பம் வந்தது. இவர்கள் இருவரும் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் ஓரத்தில் குடியிருப்பவர்கள். குடிசை மறுசீரமைப்புக்கும், ஒரு மாத கால மளிகைப் பொருட்களுக்கும் தலா 5000 உதவி செய்யப்பட்டது. மாலதி ராஜாவால் உறுதிசெய்யப்பட்ட பயனாளர்கள் இவர்கள்.

இதுவரை சேர்ந்த தொகை: 261021 (Edited on 14/1/2016 to add Rs.13220 sent by ப்ளஸ்ஸர் +குடுகுடுப்பை சித்தர்  from Dallas on 12/1/2016)
சென்னையில் அளிக்கப்பட்ட தொகை: ரூ.44088
கையிருப்பு: ரூ.216933

கடலூர்:
=======
ஜெயராம் பிரகாஷிடம் இருந்து இன்று உறுதிசெய்யப்பட்ட பயனாளர் பட்டியல் வருகிறது. இரண்டு கிராமங்களில் உள்ள 100 பயனாளர்களுக்கு தலா ரூ.2000 அளிக்கலாம் என்று யோசனை சொல்லப்பட்டது. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் வெள்ளரி விவசாயிகள் மற்றும் தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்தவர்கள்.
எப்போது கடலூர் செல்வது என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

-- Edited on 20/01/2016 to add Cuddalore update:  18/01/2016 அன்று நானும், +புதுகை அப்துல்லா வும் நண்பர் ஜெயராம் பிரகாஷ், வடலூரில் சார்பதிவாளராகப் பணிபுரியும் திருமதி கனிமொழி, வடலூர் வணிகர் சங்கத் தலைவர் பாபு, யாழி கிரிதரன் (இவர்கள் அனைவரும் வெள்ள நேரத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு உதவிகள் சரியாகப் பாதிக்கப்பட்டோருக்குச் செல்ல களத்தில் நின்றவர்கள்) ஆகியோர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மருவாய், பேரூர், மேல்பாதி, பாப்பம்பட்டு, வாய்க்கால்மேடு, அண்ணா ஸ்டாப், கங்கைகொண்டான் - பழைய நெய்வேலி மற்றும் வடக்குத்து காலனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, பாதிப்பு நேரடியாக உறுதிசெய்யப்பட்ட 132 நபர்களுக்கு (பெரும்பாலும் விதவைகள், பெண்கள்) தலா ரூ.1500 அளித்தோம்.

மருவாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற இளம்பெண் பெற்றோரை இழந்தவர், பள்ளி செல்லும் இரு சகோதரர்களுடன் வசித்து வரும் இவர், முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு (ஆங்கிலம்) படித்து வருகிறார். இவருக்கு அடுத்த செமஸ்டருக்கான கல்விக்கட்டணத்தை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதுவரை அளித்தது போக மிச்சமிருக்கும் தொகையுடன் மேலும் ரூ.500+ நான் சேர்த்து ரூ.7500 உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் சென்னை பயனாளர்களின் படங்களை இணைத்துள்ளேன்.

நன்றி!
PhotoPhotoPhotoPhotoPhoto
2016-01-09
5 Photos - View album

Post has attachment
Guest of honor at TJS Engineering College, Chennai.
Photo
Photo
2015-12-29
2 Photos - View album
Wait while more posts are being loaded