Profile cover photo
Profile photo
Namma Coimbatore
12 followers
12 followers
About
Posts

Post has attachment
கோவை மாநகரில் விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன; 20 சிக்னல்கள் அமைக்க திட்டம்

கோவை மாநகரில்,அதிகளவு விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கூடுதலாக, 20 போக்குவரத்து சிக்னல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோவை மாநகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு, மருதமலை ரோடு, தடாகம் ரோடு, பேரூர் ரோடு உட்பட முக்கிய ரோடுகளில் தினந்தோறும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கோவை மாநகர பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு, 302 பேரும், 2017ம் ஆண்டு, 308 பேரும் விபத்தினால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க போலீசார் நடவடிக்கைகள் எடுத்தாலும், எந்த பயனும் ஏற்படுவதில்லை. விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இச்சூழலில், குனியமுத்துார், கரும்புக்கடை பஸ் ஸ்டாப், சுந்தராபுரம் சந்திப்பு, மதுக்கரை மார்க்கெட் ரோடு, ஈச்சனாரி மேம்பாலம், ஒலம்பஸ் சந்திப்பு, ஹோப்காலேஜ் சந்திப்பு, சரவணம்பட்டி - துடியலுார் ரோடு சந்திப்பு உட்பட, 22 இடங்களில் விபத்துக்கள் அதிகளவு நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கூடுதலாக, 20 போக்குவரத்து சிக்னல்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசார் கூறியதாவது: மாநகர மேற்கு பகுதியில் தடாகம் ரோட்டில் பால்கம்பெனி, பொள்ளாச்சி ரோட்டில் இரண்டு, பாலக்காடு ரோட்டில் இரண்டு உட்பட எட்டு போக்குவரத்து சிக்னல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று கிழக்கு பகுதியில் அவிநாசி ரோட்டில் புதிதாக, 3 உட்பட, 12 சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.
இதேபோன்று அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இரும்பு 'பேரிகார்டு'கள், ஒளிரும் 'ஸ்டிக்கர்கள்' போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் விரைவாக செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


----- மேலும் தகவல்களுக்கு visit http://nammacoimbatore.in/ அல்லது "நம்ம கோயம்புத்தூர்" Android App - ஐ playstore - ல் nammacbe என search செய்து Download செய்யுங்கள்,

https://play.google.com/store/apps/details?id=com.bysoft.nammacbe&hl=en
Photo
Add a comment...
Wait while more posts are being loaded