Profile cover photo
Profile photo
N ULAGANATHAAN
About
N's posts

மலேசியாவிலிருந்து இந்தியா வந்ததிலிருந்து என் வாழ்க்கை இருவரை நம்பியே இருக்கிறது. நீங்கள் ஏதும் தவறாக நினைக்க வேண்டாம் வேறு ஏதோ என நினைத்து! ஒருவர் என் வீட்டு சமையல் கார அம்மா. இன்னொருவர் என் கார் டிரைவர். இந்த இருவரும் காலை குறிப்பிட்ட நேரம் வராவிட்டால் என் பாடு திண்டாட்டம்தான். ஊரே தீபாவளி பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கும். ஆனால் நான் மட்டும் “இன்னும் சமயற்காரவங்க வரலையே” என்ற பதட்டதுடன் இருப்பேன். ஏனென்றால் பிள்ளைகள் பட்டினியாக இருக்க கூடாது? அம்மா இல்லையே என்ற கவலை அவர்களுக்கு தெரிய கூடாது அல்லவா?

இந்தியாவில் எல்லாமே இப்படித்தான் என்று தெரிந்திருந்தால் நான் மலேசியாவிலேயே இருந்திருப்பேன். இதுவரை நான்கு டிரைவர்கள் மாறிவிட்டார்கள். பத்தாயிரம் ரூபாய் மேல் சம்பளம் தருகிறேன். நல்ல துணிமணிகள் வாங்கி தருகிறேன். அவ்வப்போது அட்வான்ஸ் வேறு! இதுவரை ஓடிப்போன ஒரு டிரைவரும் அட்வான்சை திருப்பி தந்ததே இல்லை. என்னிடம் இதுவரை பணம் வாங்கிய எவருமே திருப்பி தந்ததாய் சரித்திரமே இல்லை. ஏன் இந்தியாவில் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள்.

அத்தனை டிரைவருக்கும் கஷ்டப்படுகிறார்களே என்ரு மனம் இரங்கி உதவி செய்தேன். ஆனால் யாரும் நான் செய்த உதவியை நினைப்பது இல்லை. என் டிரைவர் மூன்று நாளாக வரவில்லை. இதுவரை 20 தடவை கால் செய்தும் எடுக்க வில்லை. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது. “Thick Skin” உள்ளவர்கள் போல! இனி நாளை செல்ல டிரைவர் தேட வேண்டும்.

இதில் விசயம் என்னவென்றால், எனக்கு நன்றாக சமைக்கவும் தெரியும், கார் ஓட்டவும் தெரியும். ஆனால் எல்லா வேலைகளையும் நானே செய்ய முடியாதல்லவா?
எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு:

“பொம்பள இரக்கப்பட்டா புள்ளத்தாச்சி
 ஆம்பள இரக்கப்பட்டா கடன்காரன்”
 

Post has attachment
மேடை பேச்சு எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. நிறைய கம்பனி மீட்டிங் மற்றும் போர்ட் மீட்டிங் அனைத்திலும் பேசி இருந்தாலும், இது போன்ற பொது மேடையில் ஒரு 200 பேருக்கு முன்னால் பேசிய அனுபவ்ம் இல்லை. திடீரென நான் எதிர்பார்க்காதபோது, எங்கள் நிறுவனத்தின் MD என்னை பேசும்படி மைக்கில் அறிவித்துவிட்டார். எப்படியோ அந்த கணம் தோன்றியதை பேசிவிட்டேன். அனைவரும் என் பேச்சை ரசித்தது ஆண்டவன் எனக்கு கொடுத்த வரம். சில போட்டாக்கள் இங்கே
PhotoPhotoPhotoPhotoPhoto
2016-04-16
6 Photos - View album

நானே மிகப்பெரிய இழப்பிலிருந்து இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுப்பட்டு கொண்டுருக்கிறேன். எதிலும் நிதானம் முன்பு போல் நிதானம் இல்லை. படிக்க முடிவதில்லை. எழுத முடியவில்லை. ஆனால் அலுவலகத்தில் கடுமையாக வேலை செய்கிறேன். கோபம், சந்தோசம், துக்கம் அனைத்துமே ஒரே உணர்வையே கொடுக்கிறன. மன அமைதிக்காக தியானம் செய்தவன் இப்பொது முடியாமல் தவிக்கிறேன். கதைகள் எழுத உட்கார்ந்தால் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. இதற்கிடையில் திருச்சி புத்தக கண்காட்சியில் வேறு நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். மனதை மாற்றுவதற்காக கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ ஆரம்பித்துள்ளேன்.

நான் மொத்தம் மூன்று புத்தகங்கள் வெள்யிட்டு உள்ளேன். ஓசியில் கொடுத்ததையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் 200 புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் விற்றிருக்கலாம். இந்த நிலையில் இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு.

“ ஹலோ, என். உலகநாதனா”

அழைத்தது ஒரு பெண். 40 வயதிற்கு மேல் இருக்கலாம்.

‘ஆமாங்க’

‘ஏங்க பொண்ணுங்கன்னா என்ன அவ்வளவு கேவலமா?’

‘இல்லையே. ஏன் கேக்கறீங்க?’

‘உங்க புத்தகத்துல ‘ஜீரணிக்க…’ அப்படின்னு ஒரு கதை எழுதியிருக்கீங்க. எப்படி அப்படி ஒரு கதை எழுதலாம்” என்று ஆரம்பித்து கன்னா பின்னா என்று திட்டிவிட்டு போனை துண்டித்து விட்டார்கள். சிறிது நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த பெண் யார்? அவர்களுக்கு எப்படி புத்தகம் கிடைத்திருக்கும்? என் நிலமை அவர்களுக்கு தெரியுமா?

பேசாமல் திரும்ப பழையபடி ஏதாவது தினமும் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதான் போல/?????????????????????


Post has attachment
ஜிம்!
நடந்த
சோகத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனையோ முயற்சிகள் செய்கிறேன். ஆனால்
முடியவில்லை. போன புத்தக கண்காட்சிக்கு வாங்கிய புத்தகங்களையே இன்னும் படிக்க வில்லை.
எழுதலாம் என்று உட்கார்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லாததால், எழுத முடியவில்லை. தினமும்
எழ...

Post has attachment
ரேகா!
ரேகாவை என் வா ழ் க்கையில் மறுபடியும் சந்திப்பேன் என்றோ அந்த சந்திப்பு
இப்படி அமையும் என்றோ கனவிலும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதானே வாழ்க்கையின்
நியதி. நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு எதிர்மறையாகத்தானே எல்லாம் நடக்கும். அப்படி
நினைப்பது எல்லாம் நடந்துவிட்டா...

”ஒரு வருஷமாச்சு”

“என்ன?”
”உயிர் என்னை விட்டு போய்”
“உயிரோட இருக்க. என்னவோ அப்படியே அப்பவே போயிடுவேன் சொன்ன”
“அதான் தெரியலை. இருக்கேன். ஆனாலும் உயிரற்ற உடலாய்”
“இல்லை என்பதை ஒற்றுக்கொள்”
“எது இல்லை?”
“உயிர்”
“யாருடைய உயிர்?”
“உனக்கே தெரியும்”
“ அப்போ உடல்?”
“அதான் ஏற்கனவே புதைக்கப்பட்டு விட்டதே. நான் தான் சொன்னேன்ல. அவர்களின் கணக்கு ஏற்கனவே முடிந்த கணக்கு”
“என் கணக்கு?”
“உன் கணக்கு!!! ம்ம்ம்”
“யாருக்குத் தெரியும்?”
“அவனுக்கு”
“யார் அவன்?”
“அதான் அந்த கணக்குகளை எழுதியவன்”
”எவன் அவன்”
“அவன் தான் கடவுள் என்று சொல்கிறார்கள்?”
“அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்”
“கேள்”
“அவன் எங்கு இருக்கிறான்?”
“தேடு”
“எப்படி”
“அவனை வழிபடுவதன் மூலம்”
“தவறாக கணக்கு எழுதியவனிடம் என்ன பேச”

(எழுதி வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்த நாவலில் இருந்து”)

சிறு வயதில் தொடங்கி இன்று வரை வாழ்க்கையில் நிறைய நண்பர்களுடன் பள்ளியில், கல்லூரியில், வேலையில் பழகி அவர்களுடனேயே வாழ்க்கையை வாழ்ந்திருப்போம். எனக்கும் நிறைய நண்பர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றார்கள். நாம் எல்லோருடனும் கடைசி வரை சேர்ந்து இருக்க முடியாது என்று தெரிந்தேதான் நாமும் பழகி இருப்போம். ஒவ்வொரு நட்பின் பிரிவின் போதும், மிகுந்த வலியுடனே வாழ்க்கையை கடந்து செல்கிறோம். ”எல்லோருமே அவரவர் வாழ்க்கையை எங்கேயோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்போம்.

ஆனால், என்றோ யார் மூலமோ ’நண்பர்களின் வாழ்க்கையில் ஏதேனும் இழப்பு’ நேர்ந்தது தெரிய வரும்போது வரும் வேதனையை நம்மால் கடக்கவே முடிவதில்லை. நான் ஒரு வருடமாகவே எதிலும் இல்லை. ஏன் நானே இல்லை. ஆனால், இன்றைய தினத்தை கடப்பது எப்படி என்று தெரியவில்லை.

ஆண்டவா! உனக்கு கருணையே இல்லையா?

Post has attachment
அன்பு நண்பர்களின் கவனத்திற்கு,

கடந்த நான்கு மாதங்களாக கடுமையான அலுவலக பணியினால் என்னால் தொடர்ந்து எழுதவோ படிக்கவோ முடியவில்லை. அதனால் என்னுடைய வலைப்பூ பக்கமே செல்லவில்லை. வருடா வருடம் மார்ச் மாதம் என்னுடைய வலைப்பூவிற்கான வருடாந்திர தொகையை அதுவே என் கிரெடிட் கார்ட் மூலம் எடுத்துவிடும். இந்த வருடம் பிப்ரவரி மாத வாக்கில் கூகிளில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதில் மார்ச் 15 உங்கள் வலைப்பக்கத்தை ரெனியூ பண்ண முடியாது. “Auto Renew” option ஐ ON செய்யுங்கள் என்று வந்தது. என்னால் அவர்கள் கொடுத்த லிங்க் மூலம் ஆன் செய்ய முடியவில்லை. காரணம் என் இ மெயில் ஐடி iniyavan2009@gmail.comமூலம் சென்றால் வேறு ஐடி மூலம் சரி செய்ய சொன்னது. நண்பர் மென்பொருள் பிரபு மூலம் எனக்கு இன்னொரு ஐடி அவர்களாகவே உருவாக்கி இருப்பதை அறிந்தேன். அதன் மூலம் சென்று “ON” மார்ச் 11ம் தேதி பணம் கட்டிவிட்டேன். பிறகு பிரச்சனை இல்லை என்று விட்டுவிட்டேன். 

நேற்று முன் தினம் என் தோழி ஒருவர் ஒரு முக்கியமான விசயத்தைப் ப்ற்றி பேசும் போது அவரிடம் நான், “இதைப்பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேனே? இருங்கள் லின்க் அனுப்புகிறேன்” என்று சொல்லி என் வலைப்பக்கத்தை திறந்தால், காணவில்லை. கூகிள் உருவாக்கித்தந்த ஐடியான ulaks@iniyavan.comமூலம் சென்று பார்த்தால் என்னுடைய கணக்கு activeவாக உள்ளது. என் பணம் கிரெடிட்டில் உள்ளது. ஆனால் எப்படியோ Auto Renew மட்டும் offல் இருந்தது. மீண்டும் அதை ஆன் செய்தேன். உடனே ஒரு மெயில் வந்தது, 

Hello,
Your domain name, iniyavan.com, is configured for automatic renewal with registrar godaddy on March 15, 2014. Each registration renewal is valid for one year.

மே 12 ம் தேதி வந்த மெயிலை பாருங்கள். பின் நேற்று ஒரு மெயில் வந்தது:

Hello,
Per our records, your domain registration subscription for the domain iniyavan.comhas not been auto-renewed, because you have transferred it out of Google to your registrar.

ஆக எல்லாம் சரியாக செய்தும் தொடர்ந்து வலைப்பூவை பார்க்காத்தனால் என் வலைப்பூவை இழந்து நிற்கிறேன். அவ்வளவுதான் எழுதிய அனைத்து இடுகைகளும் காலி என்று ஒரு சிலர் கூறினார்கள். ஆனால், ப்ளாக்கர் டேஷ் போர்ட் போய் iniyavan.com ஐ டெலிட் செய்து எழுதிய அனைத்தையும் காப்பாற்றிவிட்டேன். அவைகள் இப்போது http://iniyavan2009.blogspot.com/ என்ற முகவரியில் உள்ளது.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், என்னுடைய வெப்சைட் விற்பனைக்கு உள்ளது என்ற செய்திதான்:

IniYavan.com is for sale
The owner of the domain you are researching has it listed for sale $500

யாருக்காவது வேண்டும் என்றால் இந்த லிங்கில் சென்று வாங்கி கொள்ளுங்கள்:
http://whois.domaintools.com/iniyavan.com

வெறும் 500 டாலர்தான்!

இன்றைய “கல்கியில்” என்னுடைய சிறுகதை. நன்றி நண்பா +Amirtham surya 

7ஆம் தேதி எப்பொழுதும் போல் திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கினேன். எனக்கு ஒரு விசயமும் அப்போது தெரியாது. அன்று இரவிலிருந்து உறவினர்களுடனிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒரே போன் விசாரிப்புகள். விசயம் கேள்விப்பட்டு டிவியை திறந்தால், “மலேசிய விமானம் கடலில் விழுந்தது” என்று மட்டும் செய்தி வந்து கொண்டிருந்தது. முழு விபரமும் போடாததால் எல்லோருக்கும் குழப்பம்.
இரண்டு நாட்களாக கடலில் மிதந்து கொண்டிருப்பது போலவே ஒரு உணர்வு!
Wait while more posts are being loaded