Profile cover photo
Profile photo
c m jesu prakash
59 followers
59 followers
About
c m jesu's interests
View all
c m jesu's posts

Post has attachment
சிங்கார சென்னை - 2017

வெள்ளை கருப்பு கால கட்டங்களில்
வெள்ளியை போன்ற மிளிர்ந்த சென்னை - இப்போது

கலர் நிறத்தில் தங்கமாய் வைரமாய் ஜொலித்து
கலை மிகுந்து நிலை உயர்ந்து காட்சி தருகிறது

இன்னமும் நம்மிடையே ஒற்றுமை உணர்வு பிறந்து
தமிழை தமிழ் நாட்டை தமிழ் மக்களை உயர்த்தினால் - பின்

உலகம் நம் ஒற்றுமை கண்டு வியப்படையும்
கலகம் இல்லாத உலகத்தை நிலை உயர செய்யும்

நம் வாழ்வின் தூய்மை வார்த்தையின் நேர்மை
சட்டமில்லாத ஒழுக்கம் சஞ்சலமில்லாத உழைப்பு

கலாச்சாரம் பொதுஅரசியல் புகழ் இல்லாத சேவை
சாதி மத இன நிற மொழி வேறுபாடற்ற தன்மை யாவும்

நிறைந்து இன்னும் மிளிரட்டும் நமது சிங்கார சென்னை
வாழ்த்துக்களுடன் உங்கள் சி. எம் .ஜேசு பிரகாஷ்Post has attachment

Post has attachment
இயேசுவே இயேசுவே


என் வாழ்நாளின்
வாழ்க்கைக்கான ஆன்மீக மருந்து

உள்ளங்கள் அமைதிக்கான
மக்களின் செவிகளுக்கான விருந்து

அமைதி அன்பு நன்மை போதிக்கும்
தமிழ் நாட்டின் பாரம்பரிய இசையில்

இதயத்தை நிம்மதியில் ஆழ்த்தி
உதயத்தை வாழ்வில் நிறைக்கும் படைப்பு

உங்கள் பார்வைகளையும்
செவிகளையும் திருப்புங்கள் இயற்க்கைப் பக்கம்

என்றென்றும் உங்களுடன் சி .எம் .ஜேசு பிரகாஷ்

Post has attachment

Post has attachment
வாழ்த்துக்களை பதிக்கிறேன்
தந்தை .விக்டர் ரமேஷ் அவர்களுக்கு

ஆய கலைகள் நிறைந்து
அட்சய பாத்திரமாகி உலகுக்கு

ஒளிதரும் இவரின் இறை வாழ்வு
என்றென்றும் உயர்வு பெறட்டும்


ஜேசு 46 from 1971 - சி எம் ஜேசு

யுகத்தில் மலர்ந்தேன் கருவறை நின்று
முகத்தில் மகிழ்வை பெற்றோருக்கு தந்து

செஞ்சி பக்கம் சிறிதோர் கிராமம்
பஞ்சு மனசுள்ள தாய் தந்தைக்கு மகனாக

கிராமம் விட்டு நகரம் நகர்ந்தேன்
பட்டினப்பாக்கம் கடலோர வாழ்க்கை

கூலி வேலை தான் குழமி வாழ்ந்தோம் என
கூவி காதிலே உழைப்பை வளர்த்தாள் என் தாய்

ஆண்டவன் எனக்கு அன்றே தெரிந்தார்
உயர்ந்து நின்ற சாந்தோம் ஆலயம் பார்த்தேன்

வேலை வந்தது தந்தை கிராமம் செல்ல
வேண்டிய காலங்கள் அங்கே வாழ்க்கை நகர்ந்தது

மண்ணை ருசித்தேன் விண்ணை ரசித்தேன்
என்னைச் சுமந்த அன்னையின் சொல்கேட்பேன்

காலங்கள் சென்று 80 துக்கு வந்தது மீண்டும்
சென்னைக்கு என்னை அழைத்தார்கள்

தொடர்ந்தது கல்வி நான்கு முதல் எட்டு வகுப்புகள்
சென்னை சின்னமலை புனித சவேரியார் பள்ளி

இரண்டு வகுப்புகள் ஒன்பது பத்து
எழுச்சியை தந்தது சென்னை ஒ .எம் .சி.ஏ பள்ளி

பத்திலே புத்தி குறைந்து போனது
புற்றிலே புதையுண்டதைப் போலானேன்

தேர்வுகள் வரும்போதெல்லாம் தேடிசென்றேழுதுவேன்
சோதனைகள் தான் மிஞ்சும் சொல்லடிகளும் கூடும்

வாடிய முகத்துடன் தேடுவேன் வேலைகள்
மீண்டும் முடிந்தவரை படிக்கலாம் என்று தோன்றும்

முயற்சித்தேன் முடிந்தவரை முடித்தேன் தேர்வுகளை
இணைந்தேன் நந்தனம் அரசு பள்ளிதனில் 1990 - லே

சுற்றாடும் வணிகராக தந்தையும் சகோதரரும்
நான் கேட்பது யாவையும் தந்து வாழ்த்தினர்

முடித்தேன் 11 .12 முழுதும் தேராமல்
மீண்டும் மூலைக்குள் முடங்கியவனானேன்

ஆலயம் பணி புரிந்தேன் ஆண்டவனை தினம் கண்டேன்
கலைகளையும் வேலைகளையும் கற்க வழி பிறந்தது

இசைகல்லூரிக்கு சென்றேன் இசைக்கலைமணி வென்றேன்
இதயம் மகிழும் வேலை இதுதான் என்றறிந்தேன்

அடுத்தொரு படிப்பேனும் இசையாசிரியர் பயிற்சி
முடியாமல் தோற்று மீண்டும் வேன்றேடுதேன்

வாடாமல் ஓடி இணைந்தேன் இந்திய இசை
இயக்கம் குறைந்தது சான்றிதழை வாங்கி விட்டேன்

படிக்கும் காலங்களில் வீடுகளில் இசை கற்பித்தேன்
அதுவே தொழிலாகி தொடர்கிறேன் இன்று வரை

கவிதைக்கு மயங்கினேன் வார்த்தைகளை வார்தேடுத்தேன்
கற்பனைகள் இல்லாமல் அனுபவங்களை ஆல்பங்களாக்கினேன்

சொந்தமான தந்தை சொர்க்கத்திற்கு செல்லும் நேரம்
கடமைகள் தவறாமல் உழைப்பை அதிக படித்தினேன் 1999-இல்

ஊதியம் வந்தது உறுதுணையான மாணவர்களுடன்
கவலை வரும்போது கைபிடித்த பெற்றோர்களை நினைவு கூர்கிறேன்

அரசியல் இல்லாமல் மதபேதம் பார்க்காமல்
இசையை மட்டும் இறைவனாகப் பார்த்து இயன்றதை செய்கிறேன்

காதலை விட்டேன் மோதலை தவிர்க்க - என் குடும்பம்
நல்ல மனைவியை எனக்கு துணையாக்கியது 2006 -இல்

காலங்கள் செல்ல செல்ல இல்லத்தை உயர்த்தினோம்
உள்ளத்தை ஒன்றாக்கி ஒரே குடும்பமாய் வாழ்கிறோம்

வொவ்வொருவரும் வீட்டின் தூண்களாய் இருந்து கொண்டு
நாட்டிற்க்கு கெடுதல் இல்லாத நன்மையினை செய்கிறோம்

சுத்தங்கள் விரும்பி சத்தங்கள் இல்லாமல் சுகம் காண
அன்பின் வழி தேடி வாழ்வை பயணிக்கிறேன்

தோழர்களுக்கு துணையாகி அவர்களின் மனங்களுக்கு மருந்தாவேன்
உலகினின்று தனியாகி பூமியின் ஆற்றலை போற்றுவேன்

குழந்தை பேரு அற்று கண்கள் குளம் ஆக நல்ல
வளமும் நலமும் பெற்று என் மகன் கண்டேன் 2010 -இல்

உறவுகள் மறக்கவில்லை பிரிவுகள் ஆகிவிட்டது
நிறைவுகள் அடையாமல் அவர்களை நெருங்க மனமில்லை

சுற்றிருக்கும் தெரிந்தவர்கள் சுகம் கேட்கா சொந்தங்களாய் - நான்
பற்றியிருக்கும் இசையில் வாழ்பவர்களும் என் சொந்தங்களே

சாதனை என்று ஏதும் இல்லை சாதிப்பேன் என்றும் சொல்லவில்லை
நல்லவனாய் வாழ்ந்து மரிப்பதை நன்மையென உளம் வைத்துள்ளேன்

சிந்தனைகளை கட்டவிழ்த்துள்ளேன் சீர்மிகு உலகம் காண
சந்தைகளாய் வந்துதிக்கும் வலைதளங்களின் கலைக் களங்களிலே

உலகம் எனக்கு நிறைந்த இன்பம்
நான் தான் அதற்கு நிறைவில்லாத துன்பம்

கோவாவிற்கு பயணித்தேன் குடும்பத்தோடு
கோவில் கடற்கரைகள் கண்டு என் மனம் பதித்தேன்

கோவாவின் அழகும் அதன் பல கடற்கரைகளும்
மகிழ்ச்சியை தந்து என் வாழ்வில் எழுச்சியை உண்டாக்கியது

சிங்கப்பூர் சென்றேன் சீர்த்திருத்தங்கள் கண்டேன்
சிந்தை மகிழ்ந்த அந்நாட்களை என்றும் மறவேன்

அடுக்கி வைக்கப்பட்ட பெட்டிகளாக மேகத்தினை எட்டிப்பிடிக்கும்
கட்டிடங்களின் உயரங்கள் கண்டு வியப்படைந்தேன்

மலேசியா சென்றேன் மனங்களால் மகிழ்ந்தேன்
பசுமை பரப்பளவை கண்டு உள்ளம் பூரித்துப் போனேன்

அழகிய சாலைகள் அதன் இரு புறங்களும் வேலைப்பாடுகள்
கட்டுப்பாடுகளை கடமைகளாக பின்பற்றும் மக்களை கண்டேன்

விவிலிய பயணம் சென்றேன் இல்லத்தோடு - தெய்வீகத்தை
உள்ளதோடு நிறைத்து உலகை மறந்தேன்

சென்னையில் இருந்து மஸ்கட் - வான்வெளி பயணத்தில்
விமானத்திற்குள் பிஸ்கட் சாப்பிடுவதற்குள் வந்து விட்டது

கதைகளை விட்டுவிட்டேன் கவிதைகளை நேசிக்கிறேன்
காதலை விரும்புகிறேன் அன்பே வாழ்வாவதால் - உங்கள் சி. எம் .ஜேசு

தொடரும் . . . .

Post has attachment
புண்ணிய பூமியின் மலர் - சி .எம் .ஜேசு
* * * * * * * * * * * * * * * * * * * *

அழகிய மலர்
ஆண்டவனின் சன்னிதானத்தில்

பூந்தோட்டமாக
பூத்து குலுங்கும் கலிலேயா கடற்கரை

ஒரு மாலையில் அவர்( இயேசு )
மலை பொழிவில் அமர்ந்து மலர்ந்த இடம்

இன்று மலர்த் தோட்டமாய்
நிறைந்து நிம்மதி தருகிறது

புண்ணிய பூமியில் என் பாவத்தின்
பாதங்களை துடைத்தவனாக இன்று நான்

மலராத மொட்டுக்களாய் என் படைப்புக்கள்
உதிர்ந்து சிதறிக்கிடப்பதை அறிந்தவனாக

பார்வையால் மட்டும் அல்ல கலியுக
கருவியால் முறுக்கி இறுக்கி பற்றிக்கொண்ட படம் இது

மகரந்தம் ஒளியால் நிறைந்து - தன்
சிவந்த இதழ்களை விரித்திருக்கும் அற்புதம்

பூரண குணம் அடைந்தவனாகினேன் - இந்த
பாமரன் பரமனின் பதம் பணிந்தவனாக

என்ன தவம் செய்தேனோ என் இறைவா - நீர்
வாழ்ந்த மண்ணில் இன்று நானும் நடைபயில

புதையல் கண்ட கண்களாய் - இம் மலரை கண்டு
புகைப்படமாக்கியது என் கரங்கள் நன்றி சொல்கிறேன்

நல்ல தேவனுக்கு - சி .எம் .ஜேசு பிரகாஷ்
Photo

ஹெல்மட் - அதி முக்கியமானது
தலைக்கு பாதுகாப்பானது

முகத்தை பொலிவோடு
மூடி வைத்து காக்கும் முகமூடி

தூசுகள் துரும்புகள் புகாவண்ணம்
புலன்களை காக்கும் நவீன கவசம்

வேகமாக விவேகமாக செல்லும் பயணத்தில்
வேடிக்கை செயல் நிகழாவண்ணம் காக்கும் கடவுள்

என்றே கருதி நாம் நமது பயணத்திற்காக
உருவாக்கிய உன்னத சிரத்தின் சிம்மாசனம்

அப்படி பட்ட ஹெல்மட் அணிவதை மனிதர் தமது
விருப்பத்திற்கு விட்டுவிடுவதே மக்களாட்சிக்கும்

தனி மனிதனின் உரிமைக்கும் உணர்வுக்கும்
உரிய மகத்தான மாண்பு ஆகும்

தட்டு தடுமாறி கூட்டத்தின் நெரிசலில் சிக்கி
பயணத்தின் துவக்க முதல் இறுதி வரை அவதியுற்று

வியர்க்க வியர்க்க தலை அரிக்க - அதை
தடவி கூட விடமுடியாத இக்கால சூழலில்

ஹெல்மெட் அவரவர் விருப்பம் என்பதே
மனித மனதின் நிம்மதிக்கு நிறைவை தரும்

மக்களுக்கு துயரினைத் தரும் கட்டாய சட்டம்
மக்களை அலைக்கழிக்க வைக்கும் செயல்களையே செய்யும்

பக்கத்தில் தான் பயணம் ஹெல்மட் வேண்டாம் என்று
மனம் சொல்லி செயல் நிகழ்கிற அதே நேரம்

முக்கிய சாலை ஹெல்மெட் இல்லாதது விதி மீறல் என்று
மனித நேரத்தை அவசரத்தை அவசியத்தை உணராத சட்டம்

தன் கடமை தான் முக்கியம் என்று தண்டனை நிகழ்த்தும் போது
மனித மனம் அங்கேயே இறந்து போகும் நிலைக்கு ஒப்பாகும்

நீ இறந்து விடுவாய் என்று முன்னுரைத்து - வேண்டாம் என
முனகியவனின் முகம் மறைக்கும் கட்டாய ஹெல்மெட்

வாழ்க்கையினை கலைத்து வழக்குகளை சுமக்க செய்கிறது
துயரங்களை நிறைத்து துன்பங்களை துணையாக்குகிறது

அறிவுரைகள் இல்லாமல் ஆர்ப்பரிப்பு இல்லாமல்
அன்பை பண்பை நிறைக்கும் பயணமே நிம்மதியானது

இன்னல்களை இடர்களை சுமந்து வாழும் மனங்களுக்கு
இதயத்தின் அமைதி எதுவென்றால் - அது அவரவர் விருப்பமே ஆகும்

வாதங்கள் வேண்டாம் இதற்காக வதங்களும் வேண்டாம்
சட்ட அதிகாரிகளுக்கு மன உளைச்சலும் வேண்டாம்

மக்களின் உன்னத விருப்பத்திற்கு விடுதலை தருதலே
மக்களாட்சியின் மாண்புகள் ஆகும் - இறுதியாக

ஹெல்மெட் அணிவது தனி மனிதனின் அதிகாரம்
ஹெல்மெட் அணிவது தனி மனிதனின் சொந்த விருப்பம்

இதில் எந்த விதி மீறலும் இல்லை - மாறாக
ஆபத்து விளைவித்தால் ஹெல்மெட் இல்லாமல்

பயணித்து விபத்து நேர்ந்திருந்தால் - அங்கே தரப்படும்
சலுகைகளுக்கு தடை போடலாம் அதுவே மிகப்பெரிய தண்டனை

எனும் எண்ணத்தை விதைக்கிறேன் இதனால்
யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாமல் நிஜ பூமியில்

நிழலாய் வாழும் இசையாளன் - சி . எம் .ஜேசு பிரகாஷ்


நாமும் நம் வாழ்வும்
* * * 27 .02 .2017 * * *
தலைமுறைகள் ஏழு கண்டோம்
தமிழ் மண்ணில் தான் பிறந்தோம்

சுழலும் காலங்களில் தான்
சுழற்சியாய் பல மாற்றங்கள்

வறுமையின் சிவப்பு கண்டோம்
வாழ்வியல் உயர்வும் கொண்டோம்

பசி அடையும் வயிற்றுக்காகத்தான்
பல ஆயிரம் மையில் சென்றுழைத்தோம்

மிதிவண்டி கண்டோம் - அதில்
மோட்டார் பொருத்திதான் முறுக்கி பயணிக்கிறோம்

பயணத்தின் நிறைவுக்கு மகிழூந்து படைத்தோம் - அதை
மயக்கத்தில் தான் இயக்குகிறோம்

பெறமுடியாத அன்பை விட
அறிவினை அதிகம் கற்றிருக்கிறோம்

தரமுடியாத சேவையைவிட
சுயநலன்களை அதிகம் பெற்றிருக்கிறோம்

படிப்பு படிப்பு என்று சொல்லி
அனுபவ உயிர்களை புறம் தள்ளிவிட்டோம்

பிடிக்காதவர்களை ஒதுக்கி விடுகிறோம்
பிடித்தவர்களுடன் மயக்கத்தில் வாழ்கிறோம்

நலன்களை மட்டும் நேசித்து - குண
நலன்களை அறிந்திடாமல் வாழ்கிறோம்

உலகே உள்ளங்கையில் தான் இருக்கிறது என்றாலும் - அது
சுற்றுவதற்கு பவர் எனும் முயற்சி அவசியமாகிறது

நவீனங்கள் அற்றிருந்த காலங்களில்
நன்மைகள் நிறைந்து நலனை உயர்த்தியது

நவீனங்கள் உற்றிருக்கும் இக்காலங்களால் - மனிதர்க்கு
தீமைகள் நிறைந்து அவர் தவங்கள்தான் கலைந்து போனது

பெற்றோர்கள் கலையெடுக்கப்படுகின்றனர்
பெரியோர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்

உறவுகள் பணிநிறைவு காரணங்களால்
உழைப்புக்குள் இணைந்து ஆழ்ந்து வாழ்கிறார்கள்

ஸ்ரிஷ்டிக்கப் படுகிறது மகிழ்வு குழந்தைகளால்
திணிக்கப்படுகிறது மகிழ்வு திருமணங்களால்

ஏற்கப்படுகிறது மகிழ்வு சினிமாக்களால் - என்றாலும்
தோற்கடிக்கப்படுகிறது மகிழ்வு வாழ்வின் மாற்றங்களால்

அரசியல் இல்லாத வாழ்க்கை இனி வருமா
ஆன்மீகம் நிறைந்த பொது உலகம் இனி வருமா

ஆராய்வுகள் உலகை அன்பாக்குமா
சீர் ஆய்வுகள் உலகிற்கு ஒற்றுமை தருமா - இங்கு

நாடாக பிரிந்து மதத்தால் நிறத்தால் மொழியால்
சமயத்தால் சாதியால் சதியால் பிரிந்து வாழ்கிறோம்

மாற்றங்கள் ஒட்டவைக்குமா மனிதர்களை - அல்லது
ஏற்றங்கள் தான் இணைக்கும் வழிகாட்டுமா மனங்களுக்கு

இயல்புக்கு ஏற்றாற்போல் மாற்றம் பெரும் வாழ்வு
இயற்கையாய் பரந்திருக்கும் உலகை வள படுத்துமா

ஆயுதங்கள் தாங்கி ஒற்றுமை மறந்த இயக்கங்கள்
பூமியினை சல்லடையாக்குவது ஏன்

வாதம் வதம் தீவிரவாதம் போராட்டங்களால் தான்
வாழ்வு மனிதருள் தீர்மானிக்கப் படுகிறத்தா

கலையால் கலையப்படுமா தீமைகள் - அல்லது
ஆன்மீகத்தால் ஓட்டம் பெறுமா தீமைகள்

நன்மை எனும் உண்மையே உலகை ஒளியாக்கும்
உண்மையெனும் நன்மையே வாழ்வை நிறைவாக்கும்

புகழை புறம் தள்ளி அன்புக்காக இகழ்ச்சியை ஏற்போம்
பணத்தை மனம் துறந்து குணத்தை குடியேற்ற உழைப்போம்

வருங்காலம் தோழமைக்கு துணையானது - ஆதலால் நம்
வாழ்க்கை நாளும் நன்மைக்கு பேர்போனதாகட்டும் - எனும்

எண்ணங்கள் பதிக்கிறேன் இன்னும் தொடரும் ... cmjesuprakash - 27.02.2017

Post has attachment
Wait while more posts are being loaded