Profile cover photo
Profile photo
Lakshminarasimhan s
104 followers
104 followers
About
Lakshminarasimhan's posts

Post has attachment
Sri.R.Sundararajan Attained Lotus Feet
குருஜீ பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார்
அவர்களின் மருமான் திரு சுந்தரராஜன்,   திங்கட்கிழமை (19.06.2017) அன்று ஆசாரியன் திருவடிகளை
அடைந்தார். பாகவத ஸ்ரேஷ்டரான இவர், பூஜ்யஸ்ரீ
நாராயண ஐயங்கார் வழியில் ஸத்காரியங்களில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து எல்லோராலும் போற்றப்பட்ட...

Post has attachment
Ramanavami - துர்முகி வருட ராமநவமி பண்டிகை 2017
“ராம
பட்டாபிஷேகம்” என்ற இந்த சாமா ராகப் பாடல் “ ராகஸ்ரீ” என்ற திரு. ஸ்ரீநிவாச ராகவன் (1910)
அவர்களின் படைப்பு. திரு
GN பாலசுப்ரமணியன், ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களின் சமகாலத்தவர்.
திரு ராகஸ்ரீ அவர்கள் நானூறுக்கும் மேற்பட்ட பல க்ருதிகள...

Post has attachment

Post has attachment
Hari Narayanan Sings in praise of Ramanujacharya
ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர் . ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள் . ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மன...

Post has attachment
Ragasri Remembered
ராகஸ்ரீ படைப்புகள் பல. முருகனுக்கு அவர் சூட்டிய பாமாலைகள் பல. அவரது நாளான இன்று, அவரை நினைவு கொண்டு,  அவர் படைத்த இந்த பாடலால் அவரை  நாம் வணங்குவோம்.

Post has attachment
Photo

Post has attachment
Thiru Venkatapathy Iyengar - Centenary Celebrations
எங்களது
குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாரயண ஐயங்காரைப் பார்த்து அளவாளாவ, மற்றும் அவரது
ஆசி பெற, பலர், நாங்கள் முன்பு வசித்த வெங்கடரங்கம் பிள்ளைத் தெரு இல்லத்திற்கு
வந்ததுண்டு. 1956ம் ஆண்டிலிருந்து அவர் ஸம்ப்ரதாய பஜனையை நடத்தி வந்தார். நாம
ஸங்கீதத்தில் பங்குகொ...

Post has attachment
நாம் அன்றாட வாழ்வில் பல கல்யாணகள், பிறந்த நாள் விழாக்கள், சம்ப்ரதாய விழாக்கள் என்று பலவகை விழாக்களுக்குச் செல்கிறோம். அங்கு செல்லும்போது நமது உறவினர்களிடம் பல கருத்துக்களை பறிமாறிக் கொள்கிறோம். ஆனால் எழுத்து வடிவில் அதை அமைக்கும் போது அதில் நகைச் சுவை கலந்த ஒரு சுவாரஸ்யம் ஏற்படுகிறது. ஒரு அன்பர் எனக்கு மின் அஞ்சலில் அதனை பகிர்ந்து கொண்டார். நானும் அதனை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------
மொய் மார்கெட்டா ? ஸ்டாக் மார்கெட்டா ??

கல்யாண வீடுகளில் மட்டும் பெட்டிக் கடை ரேஞ்சில் இருந்த, மொய் மார்கெட் இப்போது குழந்தைகள் பிறந்த நாள் விழா,சீமந்தம், கிரஹபிரவேசம், என்று நடக்கும் சகல விழாக்களிலும் எழுதப்பட்டு
ஒரு ஸ்டாக் மார்கெட் அளவு முன்னேறி கொண்டிருக்கிறது என்றே
சொல்லலாம்..

மொய் மார்கெட் புல்லட்டின் என்ன சொல்லுதுன்னா.ரூ 51, ரூ101 என்று
இருந்த மொய் ரேட் இப்போது குறைந்த பட்சமாக ஒரு சிறிய பிறந்த நாள் விழாவிலேயே ரூ250/- ஆக ஏறி இருக்கிறது..ரூபா நோட்டுகளுக்கு பதில்
கிஃப்ட் வவுச்சர்களாகவும் தருகிறார்கள்..இதனால் கவருக்குள் பணத்தைப் போட்டு பேனாவால் 101 என்று எழுதியும் அல்லது கூச்சப் பட்டுக் கொண்டு எழுதாமலும் பின்னர் எழுதாமல் கொடுத்து விட்டோமே,கவரை ஒட்டினோமா, உரியவரிடம் நேரடியாக தராமல் வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டோமே
அவர் அபேஸ் பண்ணி விடுவாரோ என்று ராத்திரி தூக்கம் இல்லாமல் அவதிபடவேண்டியதில்லை..

அதனால தான் அந்த காலத்தில் ஓதி விடுவது மொய் எழுதுவது என்று வைத்திருந்தார்கள் போல..கொடுக்குற 51 ஆக இருந்தாலும் மணப்பையனோட ஒன்னு விட்ட ரெண்டு விட்ட சித்தப்பா வோட கொழுந்தனாரோட ஆசிர்வாதம் ஆயிரங்கட்டி வராகன் என்று ஐயர் லவுட் ஸ்பீக்கர் வாய்சில் அரங்கத்துக்கே அறிவித்து விடுவார். கல்யாணத்தில் எவ்வளவுதான் சந்தடி இருந்தாலும் இந்த மொய் சமாச்சாரம் மட்டும் எல்லார் காதிலும் ஸ்பஷ்டமா விழுந்து விடும்..

"கஞ்சப் பய ..பையன் அமெரிக்காலேர்ந்தும் ..பொண்ணு ஆஸ்திரேலியாலேர்ந்தும் டாலர்ல அனுப்பறாங்க..வெறும் 200 ரூபா
கொடுக்கறான் பாரு "என்பார் ஒருத்தர்..

"மைலாபூர்ல ஒரு ஃப்ளாட், வேளச்சேரில ஒரு தனி வீடு.. எப்படி கட்ட
முடிஞ்சது ? இப்படி சிக்கனமா இருந்து சேர்த்துதான்" என்று ஒரு சின்ன வயிற்றெரிச்சல் புகை ஒரு புறம் இருந்து பறக்கும்..

எப்படியோ யார் யார் எவ்வளாவு மொய் வைக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்..500 ருபாயைக் கவரில் போட்டு எடுத்து வந்தவரும் இந்த அறிவிப்பில் "ச்சே யாருமே 500 தரல நாமும் 200 குடுத்தால் போதும் என்று அந்த ஐநூறை எடுத்து அக்கம் பக்கம் 5 நூறா இருக்குமா என்று சில்லறை
மாற்றி 200 ரூபாயைக் கவரில் வைத்து, தான் ஏமாறவில்லை என்று சந்தோஷப்படுவர்..

இப்போது எல்லா பொருளுமே விலை உயர்ந்ததாகி விட்டன.மொய்யும் கணிசமாகத்தான் செய்ய வேண்டி இருக்கு..

மனசு கணக்கு போட்டு தொலைக்கிறது. கல்யாண சாப்பாடு ஒரு இலைக்கு குறைந்தது ரூ250 ஆகி விடுகிறது.வெல்கம் ட்ரிங்குன்னு சாத்துகுடி ஜூஸ்அல்லது ரோஸ் மில்க் ஒரு ரவுண்டோ ரெண்டு ரவுண்டோ குடித்து
விடுகிறோம்..ரெண்டுங் கெட்டான் முகூர்த்த நேரம் 11.30 டு 12 .00 ன்னு
இருந்தா டிபனும் சாப்பிடுகிறோம்..இட்லி வடை,பொங்கல், கேசரி,
மசால் தோச ப்லஸ் காப்பி அப்படின்னு அதுவும் 100 -150 வரைக்கும் ஆகும்
ஒரு தலைக்கு.. வரும் போது தேங்காய் போட்ட தாம்பூல பை.சில அசடுகள் பெண்களுக்கு பிலவுஸ் பிட்டு வேற வைத்து வழி அனுப்புவார்கள் சாதாரண துணியென்றாலே ஒரு ரவிக்கை பிட்டு 60 -80 ரூ ஆகி விடும்..அவற்றை
யாருமே உபயோகிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்.. மேலும் வீட்டுக்கு ஒருத்தராவா போறோம்..குறைந்த பட்சம் ஒரு வீட்டிலிருந்து ரெண்டு
டிக்கட்டுகள் போறோம்..இப்படி கணக்கு போட்டா குறைந்தது 1000 ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டுதான் வருகிறோம்..அதற்கு 100 /200 ன்னு மொய் எழுதிட்டு வர முடியுமா?..

ஆனால் லட்சக் கணக்கில் திருமண செலவுகள் செய்பவர்களுக்கு மொய்யால் ஒன்றும் ஆகப் போவதில்லைதான்..சிலர் பரிசு பொருட்கள் கூடாது என்று பத்திரிக்கையிலேயே போட்டு விடுகிறார்கள்.

இருப்பினும் இந்த மொய் எழுதுவது நம் சுய மரியாதைக்கு வரும் சோதனை /சாலஞ்ச் சாகவே இருக்கிறது..

#கொசுறு எந்த விழாவிற்கும் கையில பொக்கேவும் ( bouquet பூக்கள் )
வாயில கெக்கேவும் (சிரிப்பூக்கள்) போதும் என்பது என்னுடைய மொய் ஞானம் ச்சே மெய் ஞானம்.! ..

இன்று அப்டி ஒரு வெளாவ செறப்பிக்க கெளம்பிட்டு இருக்கேன் ..வ.ர்.டா ..!
Photo

Post has attachment
HAYAGREEVA JAYANTHI - 13th September 2016
இன்று “புச்ச ஏகாதசி ” அல்லது வைஷ்ணவ ஏகாதசி, மற்றும் ஸ்ரவண வ்ருதம்
அனுஷ்டிப்பவர்களுக்கான நாள். மேலும் இன்று ஹயக்ரீவ ஜயந்தி கொண்டாடும் ஒரு புண்ணிய
வ்ரத தினம். ஒரே நாளில் நாம் ஹயக்ரீவரையும் 
வாமனரையும் நமஸ்கரி க்க  கிடை த்த  தினம்.  ஹயக்ரீவர் என்றாலே நம் எல்லோ...

Post has attachment
HAYAGREEVA JAYANTHI - 13th September 2016
இன்று “புச்ச ஏகாதசி ” அல்லது வைஷ்ணவ ஏகாதசி, மற்றும் ஸ்ரவண வ்ருதம்
அனுஷ்டிப்பவர்களுக்கான நாள். மேலும் இன்று ஹயக்ரீவ ஜயந்தி கொண்டாடும் ஒரு புண்ணிய
வ்ரத தினம். ஒரே நாளில் நாம் ஹயக்ரீவரையும் 
வாமனரையும் நமஸ்கரி க்க  கிடை த்த  தினம்.  ஹயக்ரீவர் என்றாலே நம் எல்லோ...
Wait while more posts are being loaded