Profile cover photo
Profile photo
Muralitharan Mauran
1,606 followers
1,606 followers
About
Muralitharan Mauran's posts

Post has attachment
//இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் வதனரூபனின் கவிதைகள் பெரும்பாலும் 2005-2006 இற்குப் பின்னான சம்பூரினதும் மூதூர் கிழக்கினதும் அரசியல் நிலவரத்தின் உறுத்தலாலும் உந்துதலாலும் உருவானவை. இப்பிரதேசத்தில் இந்த 2005-2006 ஏன் தெளிவான ஒரு காலப் பிரிகோடாக அமைகிறது?//

Post has attachment
//இப்போது பழைய கனவான் அரசியல் புதினமான ஒரு வடிவத்தில் வந்திருக்கிறது. முன்னரெல்லாம் தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரகங்களில் பங்கேற்று, கட்சி உறுப்பினராயெல்லாம் இருந்த சட்டம் படித்த ஆங்கிலமறிந்த கனவான்களைத்தான் முன்னிறுத்துவார்கள். முப்பதாண்டுகாலம் பலதும் மாறிப்போய் கட்சிக்குள் கனவான்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுப் போனபிறகு, வெளியில் சமூகத்தில் கனவான்களாக உருவாகியிருப்பவர்களைப் பேசி அழைத்து வந்து தலைமையாய் நிறுத்தத்தொடங்கியிருக்கிறார்கள்.//

Post has attachment


அண்ணன்களின்
ரகசியமறிந்தவர்களாக
தங்கைகளே இருக்கிறார்கள்...

மணல் வீடு கட்டவோ
கட்டியதை இடிக்கவோ
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...

அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...

'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...

அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...

தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது

தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்...


அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...

அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...

தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...

திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்....


(இந்தக் கவிதை யாரால் எழுதப்பட்டதென்று தெரியவில்லை. Facebook இல் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள்.)
Photo

Post has shared content
Did you know that in Japan they have square watermelons?

Visit us at www.yesiknowthat.com
Photo

"சிற்றோடை மீதாகச் சாய்ந்து படுத்திருக்கும்
பாலத்தின் மேலே நீ
உட்கார்ந்து பார் கிழக்கே
பொன்னுருகிச் செம்பாகும் தலைகீழ் ரசவாதம்,
நீலநிறப் புல் பழுத்து நாவல் நிறமாகும்
பச்சை மலை விளிம்பிற் பற்றி நெருப்பெரியும்
மேலைத் திசை நெடுக நீளும் மலைகளிலே
நாளுக்கொரு பரிதி வீழும் எழில் தெரியும்"
என்றான் என் நண்பன்
சொல்லை இடைமறித்துச் சொன்னாள் அவன் தோழி
இல்லையது பொய், நொடியிற் பாதிக் கொரு பரிதி
கண்ணெதிரே தெரியுமென
கண்டிக்கு வந்தொருகாற் பாரென்றார்
ஓமென்றேன்

துணையாக நீ வந்த மாலைப் பொழுதொன்றில்
என் நண்பன் சொன்னதொரு பாலத்தின் சுவர்மேலே
உட்கார்ந்து பார்த்திருந்தோம் பகல் முடிய
ஆனாலும்
பொன்னுருகும் முகிலில்லை, செம்பில்லை
சுட்டெரிந்து
வேகின்ற மலையில்லை, புல்லில்லை
வானத்தின்
செந்நிறத்துச் சூரியனோ சூடாறித்
தண்ணெண்றென்
கைதொட்டுத் தோளோடு சாய்ந்திருந்த நொடித்துகளில்

-சி. சிவசேகரம்

Post has attachment
தடுமாறும் அரசுக்கு சட்டங்கள் காவல்
தவறான விளக்கங்கள் தர நூறுபேர்கள்.

இனவாத விதை இங்கு யார் தூவினார்கள்?
எரி என்றும் உடை என்றும் யார் ஏவினார்கள்?

இனவாத செந்தீயை யார் மூட்டினார்கள்?
திருநாட்டை எரியூட்டி யார் காட்டினார்கள்?

'போராயின் போர்!' என்றோர் புது வேதம் ஓத
புரியாமல் வெறி கொண்டு சனம் வாரி மோத

வீராதி வீரர் செய் வேளாண்மை இன்று
விளைச்சல்கள் தருகின்ற கருஞ்சட்டைக் கூட்டம்


[1986 இல் வெளிவத்ந இந்தப்பாடல் இன்று மறுபடியும் எம் நாட்டுக்குப் பொருந்தி வருகிறது. வட்டத்தை மீளவும் சுழல விடப்போகிறோமா?]

Post has attachment
Photo

Post has attachment
==ஓசை பெருத்த குண்டு உலகம் அழுத குண்டு ==

குண்டுகளின் தன்மையைப் பொறுத்து அவற்றின் ஓசை மாறுபடுவதைக்காட்டிலும் அவை வெடிக்கும் இடங்களைப்பொறுத்து அவற்றின் ஓசை அதிகம் மாறுபடுகிறது.

வன்னியில் போடப்பட்ட பாரிய வான்குண்டை விடவும் கொழும்பில் வெடிக்கும் சிறு கைக்குண்டு ஓசை பெருத்தது. காசுமீரிலும் சத்தீஸ்காரிலும் அஸ்ஸாமிலும் தொடர்ச்சியாக வீசப்படும் குண்டுகளை விடவும் பம்பாயில் வெடிக்கும் குண்டொன்று பெரும் ஓசை எழுப்பக்கூடியது. பாலஸ்தீனத்தில் வந்து வெடிக்கும் ஆயிரக்கணக்கான குண்டுகள் ஓசையின்றியும் இஸ்ரேலில் என்றாவது வந்துவிழும் எறிகுண்டொன்று பேரிடியோசையுடனும் வெடிக்கின்றன.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் ஊர்களையே எரித்துப் பொடிசெய்த அமெரிக்கக் குண்டுகளோ இறகொன்று நீரில் வீழ்வதுபோல் இதமாக ஒலியெழுப்புகின்றன. ஆனால், அமெரிக்க பொஸ்டனில் மூன்றுபேரைக் கொன்ற சமையற் சட்டிக் குண்டொன்று உலகமே அதிர்ந்து ஆகாசம் வெடித்து உயிர்களெலாம் கண்ணீர் உகுத்து உருண்டு புரண்டு கதறும்படியாய் பேரிரைச்சலுடனும் பெருத்த ஓசையுடனும் வெடித்தது.

இடத்தைப் பொறுத்த இந்த ஓசை வேறுபாட்டுக்கு வெடிக்கும் குண்டுகளின் தன்மையா, கேட்கும் காதுகளின் தன்மையா காரணமாகலாம்?

குண்டுகளின் இயற்பியலிலும் காதுகளின் உடற்கூற்றியலிலும் எவ்வளவு தேடியும் விடை கிடைப்பதாயில்லை.

இனி, குண்டுகளின் அரசியலிலும் காதுகளின் அரசியலிலும் தான் விடை தேட வேண்டியுள்ளது.
Photo

Post has attachment
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை


தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

[சங்கப்பாடல்களின் சாயலில் சங்கப்பாடல்களின் தெறலை எடுத்துச் சமகாலத் தமிழில் சமகால இசைக்குக் கொடுக்கும் வல்லமை வைரமுத்துவின் தனித்திறமை.]

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
With Debaters
19 Photos - View album
Wait while more posts are being loaded