Profile cover photo
Profile photo
தமிழ் புறவம் பூச்சரம்
113 followers -
கவிதைகள், கட்டுரைகள், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினம், கதை, செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்தையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை ,தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளலாம்.. பயன்பெறலாம்.. பயணிக்கலாம்..
கவிதைகள், கட்டுரைகள், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினம், கதை, செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்தையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை ,தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளலாம்.. பயன்பெறலாம்.. பயணிக்கலாம்..

113 followers
About
Posts

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுத முடியும். ஆனால் இனி நாம் சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பம் தான் ஈர்ப்பறி (Handwriting Recognition) எனும் நுட்பம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு இந்த நுட்பம் பற்றிப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த நுட்பத்தை பற்றிய ஒரு விழிய (Video) காட்சியை பாருங்கள்.
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
சென்ற இரண்டு பதிவுகளில் இந்தி மொழியின் வரலாறு அதன் தோற்றம் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இந்தி மொழியில் நூல்கள் பிறந்த வரலாறு, இந்தி பற்றி நடுவண் அரசு பரப்பும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் பார்ப்போம்.

இந்தியில் நூல்கள்
இப்படிப்பட்ட கலவை மொழி இந்தியில் எவ்வாறு நூல்கள் இயற்றப்பட்டது என்ற வரலாற்றை பார்ப்போம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'இராமனந்தர்' எனும் துறவி இராமனை மக்கள் வழிபடவேண்டும் என வடநாட்டின் பல பகுதிகளில் பரப்புரை செய்து அப்பகுதிகளில் இராமன் புகழை பரவச்செய்தார். கல்வியறிவு இல்லாத அம்மக்களுக்கு இராமன் தன் தந்தை இட்ட கட்டளையால் அரசு துறந்து, கானகம் சென்று அங்கு தன் மனைவியை இழந்து அடைத்த துயரம், அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்தது. இந்த மனவேதனையே இராமன் புகழ் அப்பகுதிகளில் வேகமாக பரவ காரணமாக அமைந்தது. மேலும் இராமனந்தர் அப்பகுதி மக்கள் பேசும் மொழி வழியாக இராமன் நாமத்தை பரப்பும் பொருட்டு இராமனை பற்றி எழுதிய நூல் தான் இந்தி மொழியில் இயற்றப்பட்ட முதல் நூல். அந்நூலின் பெயர் 'ஆதிகிரந்தம்' என அழைக்கப்படுகிறது.

இராமனந்தருக்கு பின், அவரின் மாணாக்கர் 'கபீர்தாசர்' என்பவர் காசி நகரில் சுமார் 460 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் நெசவு தொழில் செய்த மொகமதிய குடும்பத்தில் பிறந்தார் என்று ஒரு சாரரும் , ஒரு பார்ப்பன விதவை பெண்ணுக்கு மகனாக பிறந்து அவரால் கைவிடப்பட்டு பின்பு ஒரு மொகமதியரால் எடுத்து வளர்க்கப்பட்டவர் என ஒரு சாரரும் கூறுகின்றனர். இவர் கடவுளை இராமன், ஹரி, அல்லா, கோவிந்தன் என்ற பெயர்களால் பாடினார். ஆனாலும் இவர் கடவுள் பல அவதாரங்களை கொண்டவர் என்பதையும், கடவுளை கல், செம்பு, மர வடிவில் வைத்து வழிபடுவது தவறு என்றும், கடவுளுக்காக படையல், நேர்த்திக்கடன், சமய சடங்குகள் நடத்துவது வீண் வேலை என்றும் தனது நூல்களில் மிக கடுமையாக தாக்கியுள்ளார். கபிதாசர் இந்திமொழியில் இயற்றியுள்ள செய்யுள் நூல்கள் பல உண்டு. இவருக்கு பின் வந்த இவருடைய மாணாக்கர்கள் இயற்றிய நூல்களுக்கும் கபிதாசர் பெயரால் வழங்கப்படுகின்றன. கபிதாசரின் நூல்கள் இந்தி மொழியில் உண்டான பின்னரே சுமார் 430 ஆண்டுகளாக செல்லா காசாக இருந்த இந்திக்கு ஏற்றம் உண்டானது.
Add a comment...

Post has attachment
இதுவரை உருது எனும் மொழி உருவான வரலாற்றை சிறிது பார்த்தோம். இந்தியை பற்றி சொல்வதாக நினைத்தால் என்ன இது உருதை பற்றி சொல்கிறேன் என எண்ணவேண்டாம், விசயம் இருக்கிறது. இந்த உருதுமொழியில் இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, 'ல்ல்லு ஜிலால்' என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப் பிரித்துச் சீர் செய்யப்பட்ட மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில் சம்ஸ்கிருத சொற்களை இணைத்து இந்தி எனும் புதிய மொழியொன்றை தோற்றுவித்தார். இதனால் இந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது. வடமொழிச்சொற்களை சேர்த்துக்கொணடதால் இந்தி வடமொழியில் இருந்து உருவானது என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர். இந்தி எனும் மொழி உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி. உண்மையில் இந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும், பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி எவ்வாறு நம்நாட்டு மொழியாகும். இதனுடைய வயது வெறும் 830 ஆண்டுகள் தான். மேலும் இந்தி இந்துக்களின் சமயமொழி போல் சித்தரிக்கப்படுவது நமக்கு நகைப்பை தான் வரவழைக்கிறது. மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய இந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதிற்க்கும் இந்தி மொழிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு மொழிகளுக்கு ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது இந்தியில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்து முறை 'தேவநகரி', உருது மொழியில் எழுத பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.

இந்தியும், உருதும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதால்
Add a comment...

Post has attachment
நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு பொய்யை முதல் முறையாக கேட்கும் போது அது பொய் என்பதை நாம் அடித்து சொல்லுவோம். அதே பொய்யை நம் காதில் அடிக்கடி விழும்படி யாரேனும் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒருநாள் நாம் அந்த பொய்யை உண்மையென சொல்லுவோம். இதே உத்தியை தான் மைய அரசு இந்தி திணிப்பு விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது. ஆரம்பத்தில் மைய அரசு இந்தியை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் பயிலவேண்டும் என சொன்னபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு, போராட்டம் போன்றவை பார்த்து அரசு பணித்து தனது இந்தி திணிப்பு பாதையை மாற்றிகொண்டது. அதாவது நான் மேலே சொன்னது போல் ஒரு இந்தி விசயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது என்றாவது ஒரு நாள் நாம் சொல்லும் விசயத்தை தமிழ்நாடு நிச்சயம் கேட்கும் என நம்பிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக பலத்த முயற்சி செய்து இப்போது வெற்றியும் கண்டுள்ளது. 'எறும்பு ஊர கல்லும் தேயும்' எனும் பொன்மொழி இந்தி விசயத்தில் உண்மையென நிருபிக்கப்பட்டுள்ளது.

அன்று இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட கட்சிகள் இன்று வாக்கிற்காக அதற்கு வக்காலத்து வாங்குகின்றன. அதேபோல் மக்களும் மிகவும் வேகமாக இந்தியை கற்க தொடங்கியுள்ளனர். இன்று தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் பேசமுடியும் என பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். தன்னை வளர்த்த தமிழை இழிவாக பேசுவதையும், ஆங்கிலத்தையும், இந்தியையும் பற்றி உயர்வாக பேசுவதை பெருமையாகவும் கருதுகின்றனர். 'மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இன்று தமிழகம் தன் தனித்தன்மையை வேகமாக இழந்து வருகிறது. மைய அரசு இதை படி என்பது தவறாக தெரியவில்லையாம், ஆனால் தமிழக அரசு தமிழை படி என சொல்வது இவர்களுக்கு தவறாக தெரிகிறதாம். இதை பொறுத்துக்கொள்ளாத சில கொல்லையடிக்கும் கல்வி நிறுவன அமைப்புகள் நீதி மன்றத்தை அணுகுவது எவ்வளவு ஒரு கேவலமான செயலாகும். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தான் நடக்க முடியும்.
Add a comment...

Post has attachment
இலங்கைத் தீவில் ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு நபித்தோழர் சிலோன் வருகைதந்தார் என்றும் பிறகு அங்கிருந்து சீனா சென்றார் என்றும் இலங்கை முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதுண்டு. பின்னர் அவர், கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களது காலத்தில் அரேபிய தீபகற்பம் சென்றார் என்று கூறுவர். 

அடுத்து அரபியர் வருகை தொடர்ந்தது. அங்கேயே திருமணமும் செய்துகொண்டனர். இஸ்லாம் பரவியது; முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியது. ஆக, தங்களின் மரபுமூலம் அரபுகள்தான் என்று இலங்கை முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர். 

இலங்கைக்கு அரபியர் வந்ததற்குக் காரணம் இரண்டு. 1. வணிகம். இலங்கையில் உற்பத்தியாகும் மிளகு, நறுமணப் பொருட்கள் வாங்கிச் சென்றனர். 2. முற்காலத்திலிருந்தே முஸ்லிம்களிடம் ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சிலோனில்தான் இறங்கினார்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. ‘ஆதம் மலை’ இலங்கையில் உண்டு. இன்றுவரை மக்கள் அதைக் காண வருகிறார்கள். அவ்வாறு அரபியரும் வந்திருக்கலாம். 

பிறகு இந்தியா, மலாயா, ஜாவா, இந்தோனேஷியா ஆகிய பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் இலங்கை வந்து குடியேறினர். ஆக, இலங்கை முஸ்லிம்கள் 
Add a comment...
Wait while more posts are being loaded