Profile cover photo
Profile photo
விந்தைமனிதன் ராஜாராமன்
4,668 followers -
விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக்குருவியைப்போல் பறக்க நினைப்பவன்!
விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக்குருவியைப்போல் பறக்க நினைப்பவன்!

4,668 followers
About
விந்தைமனிதன்'s posts

குன்ஹா தீர்ப்பை கொண்டாடுனவங்க பூரா இப்பவும் அதே தீர்ப்பை கொண்டாட ரெடியா இருக்காங்க.. குமாரசாமி தீர்ப்பை கொண்டாடுனவங்கல்லாம் இப்போ அது வேண்டாம்... குன்ஹாதான் வேணும்னு பொலம்புறாங்களே...!
டேய்... உங்க டிசைனை எல்லாம் புரிஞ்சிக்கவே முடியலையே?!
கருமம்..கருமம்.
:) :)

//ஆனால் எந்தக்கணவனும் ‘நேரத்தை எல்லாம்’ மனைவிக்காகச் செலவிட முடியாது. செலவிட்டான் என்றால் அவன் மனநோயாளி ஆகக்கூடும். கணவன் செடிகளுடன் நேரம் செலவிட்டான் என தற்கொலைக்கு முயலும் மனைவிக்குத் தேவை அன்பு அல்ல, நல்ல உளவியல் சிகிழ்ச்சை. இந்த அசட்டுத்தனமான உலகப்பார்வையைத்தான் நம் வார இதழ்களில் பெண் கதாசிரியைகள் எழுதித்தள்ளுகிறார்கள். //

என்ன சொல்றார் இவர்? :))))

மூத்த குடும்பஸ்தர்கள் சொல்லுங்கப்பா
+Vasu Balaji +Kasi Arumugam +வெண்பூ வெங்கட் +வடகரை வேலன் +Aranga KV 

என்னதான் சொன்னாலும் பார்ப்பன மூளையே மூளை தான்யா! ஸ்காட்லாண்ட் யார்டெல்லாம் தோத்துடும் போல!! போலீஸ் முழிபிதுங்கிட்டு இருக்கிறப்ப எல்லாருக்கும் முன்னாடி கொன்னவன் பேரு வரை கரீக்டா கண்டுபுடிச்சு கூவிட்டு இருக்காங்க...

இப்பதான் ப்ளஸ் பக்கம் எட்டிப் பாத்தேன். சாதி ப்ளஸ் ரகளை ஓடிட்டு இருக்கு போல.. கையி குறுகுறுன்னு இருக்கு.

என்னோட பீத்த பெரும கலயத்தையெல்லாம் சொல்லி காலரை தூக்கி விட்டுக்கலாமான்னு ஒரு பக்கம் நப்பாசை....

இங்கிட்டு குந்திகிட்டு பெருமை பீத்திக்கிறதுக்கு பதிலா உருப்படியா ஏதாச்சும் யுட்யூப்ல படம் பாக்கலாம்னு தோணுறதால மீ எஸ்கேப்..

Post has attachment
இந்த நட்டநடூஸ் முக்காடூஸ் தான் “கிடைச்சுதுடா சாக்கு”ன்னு முக்காட்டை தூக்கி ஓரமா போட்டுட்டு ஷோல்டரை ஏத்தி கூவுறாங்கன்னா ஒருசில உ.பீஸும் ஏன் உணர்ச்சிவசப்படுறாங்கன்னு தெரியலையே?!

இந்தம்மாக்கு இதே மாதிரி செத்து செத்து வெள்ளாடுறது தான் பொழப்பாமாம்... :)))

தட் “நாதஸ் திருந்திட்டான்” மொமண்ட் :)))
Photo

மொத பந்திக்கு நானும் மொய்ப்பணத்துக்கு எங்கண்ணனும்...

”உயிரோட இருக்குறவரைக்கும் நான் தான் சிஎம்மா இருப்பேன்.. எதிர்க்கட்சித் தலைவர்னா மட்டும் ஸ்டாலின்”ன்னா எப்படி கலைஞரே?!

ஆக இனி சட்டசபைல அதிமுக, திமுக,காங்கிரஸ் மூணே மூணு கட்சி மட்டும்தான்! கொசுறா முஸ்லீக் லீக் ஒண்ணே ஒண்ணு..

ஆச்சர்யமாவும், சுவாரஸ்யமாவும் இருக்கு.

எதிர்க்கட்சிக்கார +Rajkumar Chinnasamy யைக்கூட “வாய்யா காபி ஷாப்புக்குப் போவோம்.. இது என்னோட ட்ரீட்”னு கூப்பிடுவேன்...

ஆனா ந.ந.செ முக்காடூஸ் லிஸ்ட்ல இருக்குற +Pattikaattaan Jey +Dyno Buoy  இன்ன பிறர்கள்லாம் இப்பவே ப்ளஸ்க்கு பத்து நாள் லீவு சொல்லிட்டு ஓடிப் போயிடுங்க :))))

கொஞ்சகாலமா நானு ப்ளஸ்ல ஆக்டிவா இல்லாத காரணத்தால +வெண்பூ வெங்கட்  +Vijayveerappan Swaminathan  இவங்கள்லாம் இன்னமும் முக்காடு ர.ர வா இருக்காங்களா இல்லையான்னு தெரியலை.. கொஞ்சம் வெரிஃபை பண்ணி சொல்லுங்க யாராச்சும் :)))

19 ம் தேதிலேருந்து திமுக காரங்களை ரொம்ப உரிமையோடு திட்டலாம்னு ஆசை ஆசையாய்க் காத்துட்டு இருக்கேன்...

.... அஃப்கோர்ஸ் அதுக்கு முன்னாடி ந.ந.செ முக்காடுங்களை வண்டை வண்டையாய்த் திட்டுன பிறகு தான்.. :)))))

நிறையவாட்டி ஊனாபீனாக்கள் மத்தவங்களை மோசமா திட்டுறதைப் பத்தி கோவமா பேசியிருக்கேன். ஆனா இப்போ இந்த நட்டநடு செண்டர் முக்காடுகளோட செயல்பாடுகளைப் பாக்கும்போது எனக்கே கடுப்பாத்தான் வருது...ஏன் உ.பிங்க பொங்க மாட்டாங்க?

ஸ்டாலின் “ நான் மேடையச் சொன்னேன்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”ன்னு சொன்னதா மொதல்ல எழுதி இருந்தாங்க.. அப்புறமா அதுக்கு ஆதாரமா ஒரு வீடியோவைத் தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அதுல அப்டி ஒரு வாசகத்தையே அவர் பேசக் காணோம்... கூட்டத்துல யாரோ ஒருத்தரோட எதிர்வினைக்கு “நான் சும்மா சொன்னேன்மா”ன்னுட்டு போறார். அந்த யாரோ ஒருத்தர் விகல்பமா புரிஞ்சி ரெஸ்பான்ஸ் பண்ணா இயல்பாவே யாரா இருந்தாலும் ஒரு சிரிப்பு வரும்... அவ்வளவே!

அடுத்தாப்புல இந்த நநசெங்க யாருமே ஜெயலலிதா கூட்டத்துல சாவு விழுறதைப் பத்தியோ, அவங்க பொதுக்கூட்டங்களை நடத்துற முறை பத்தியோ இந்தளவுக்கு பொங்குனதா தெரியலை.

அப்புறம் ஆர்.கே நகர்ல பொது வேட்பாளரா வசந்திதேவியை நிறுத்த திமுக முன்வரணும்னு ஒரு கூப்பாடு.. கேக்கவே கேணத்தனமா இருக்கு.. அப்படி நிறுத்த ஒத்துக்கிட்டா திமுகவே விஜயகாந்த் கூட்டணி அறுவரோடு  எழுவரானோம்னு ஐக்கியமாயிடலாமே?

திமுகவும் அதிமுகவும் ஒண்ணுதான்னு கூவுற நநசெங்க ஏன் அதே மாதிரி திருவாரூர்ல கருணாநிதியை எதிர்த்து பொதுவேட்பாளரா கம்யூனிஸ்ட் மாசிலாமணியை நிறுத்த ஒத்துழைப்பு கொடுக்கணும்னு அதிமுகவைக் கேக்கலை?

போங்கய்யா நீங்களும் உங்க நட்ட நடுநிலையும்...
Wait while more posts are being loaded