Profile cover photo
Profile photo
சைதை அஜீஸ்
408 followers
408 followers
About
Communities and Collections
View all
Posts

Post has shared content
மோடியின் GST நல்ல ஒன்று என (பிடி)வாதம் செய்வோரைநல்லாத்தான் சொல்றீங்கன்னு சொல்ல மாட்டேன். ஜப்பான் போன்று எல்லாப் பொருட்களுக்கும் 8% GST மட்டும் விதிக்கட்டும்.
இந்தியாவில் IT இருக்கும் போதே, Excise, Service tax, CST, TNGST என்று துன்புறுத்தலே வரிகட்டாமல் ஏய்க்கும் நிலை. ஆண்டுதோறும் Road tax வசூலித்துவிட்டு, கட்சிக்காரன் சம்பாதிக்க Toll Gate வரி.. என்னய்யா கூத்து இது? எரிபொருள் விலையே ஒவ்வொரு பொருளின் விலையை நிர்ணயிக்கிறது.
அம்பானியின் எண்ணெய் கம்பெனிக்காக அன்றாடம் விலை நிர்ணயம் செய்து கொள்ளும் கொள்கை..
எரிபொருள் விலை உச்சத்தில், நிர்ணயிக்கும் வண்டிச்சத்தம், எரிபொருள் விலை குறையும் போது மறுசீரமைக்கப் படுவதில்லை. ஓசிச் சோறு தின்று, ஓசியில் உடை உடுத்தி, ஓசியில் ஊர் சுற்றும் ஜென்மங்கள் இதைப்பற்றி சிந்திப்பதில்லை. 1956இல் மூதறிஞர் இராசாசி CST அறிமுகப்படுத்தும் போதே, இது சிறிது காலம் மட்டுமே. பின்னர் விலக்கி கொள்ளப்படும் என்று சொன்னதை, மறந்து கடந்த 60 ஆண்டுகளாக, வரிகளாக விதித்து வரும் பணத்தைக் கொள்ளையடிக்கும் அதிகார கும்பலின் தவறுகளை, ஓரளவாவது எடுத்துச் சொன்ன *அட்லீ*யின் மன தைரியத்துக்கு *அட்லீ*ஸ்ட் ஒரு பாராட்டு தெரிவிப்போம். IT ரெய்டு என்பது எதிர்கட்சிகளை மிரட்ட மட்டும் பயன்படுத்தினால், IT ஏய்ப்போர் எண்ணிக்கை கூடவே செய்யும். ஆம்....
ஆம்..
Photo

Post has shared content

Post has shared content

Post has shared content

Post has shared content
ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகுநாட்களாக குழந்தையும் இல்லை.

ஒருநாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக்கிடந்த பெரிய மீனொன்று அவனைப்பார்த்து கெஞ்சியது:

"மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரியஅலையில் சிக்கி இந்த கரைப்பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்தமுடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே, என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்" என்றது

மீனவன் அந்த மீனைத்தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு போய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. எனவே அவன் சொன்னான்:

"மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச்சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்" என்றான்

மீனும், "நீ ஒரேஒரு வரம்தான் கேட்கவேண்டும்'' என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச்சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக்கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்:

"மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்லவீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' என்றார்

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:

"மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெறவேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' என்றார்

கடைசியாக மனைவி கேட்டாள்:

நமக்குத்திருமணம் ஆகி பலவருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒருகுழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்" என்றாள்

நன்கு யோசித்த மீனவன், மறுநாள், அந்த கடலுக்குச்சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவியின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

விடை: "என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழவேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

நீதி:

*உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது, உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும், முடிவெடுக்கும் திறமையையும், இயல்பாகவே வெளிப்படுத்தும் என்பதே உலகம் கண்ட உண்மை.!💐💐🙏🏻🙏🏻🙏🏻

Post has shared content

Post has shared content

Post has shared content
என்னமா வேலை பாக்குறாங்க இந்த து...மீடீயா
Photo

Post has shared content
அரிசியில் புதைத்த சங்கு உள்ளே தங்காமல் எப்படி மேலே வருகிறது என்று பாருங்கள்.

Post has shared content
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!!உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.
படிக்கவே
நமக்குப் பெருமையாக
உள்ளது.
Photo
Wait while more posts are being loaded