Profile

Cover photo
மேவி ..
Worked at மன்னார் அண்ட் மன்னார்
Attended சாந்தி தியேட்டர்
Lives in மொக்கையூர்
3,189 followers|1,195,711 views
AboutPosts

Stream

மேவி ..

Shared publicly  - 
 
ஏர்டெல்லானை செமையா வைச்சு செய்ஞ்சு இருக்காங்க. காலை ல பாத்ததுல இருந்து சிரிச்சுகிட்டே இருக்கேன். 
 ·  Translate
7
Pattikaattaan Jey's profile photoமேவி ..'s profile photo
2 comments
 
எனக்கு +Vasu Balaji​ vs Airtelனு தோனுது
 ·  Translate
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
இது 1960கள இருந்த மேப் ... அப்ப சைதாப்பேட்டை வரைக்கும் தான் சென்னை.

இன்னொன்னு அப்ப காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்துல தான் இருந்துச்சு. பிறவு அரசியல் மாற்றங்களால செங்கல்பட்டு குட்டி ஊராகி, காஞ்சிபுரம் பெரிய ஊராகிருச்சு 
 ·  Translate
5
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, செய்தித்தாள் வாசிப்பது அதே பழைய சுவாரசியத்தை உங்களுக்கு தருகிறதா ??
 ·  Translate
40 votes  -  votes visible to Public
ஆம்
38%
இல்லை
58%
பழக்கமாகி விட்டது
5%
4
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
நீயா நானா ல வட இந்திய உணவு vs தென் இந்திய உணவுன்னு பேசிட்டு இருக்காங்க.

என்னைய பொறுத்த வரைக்கும் கார குழம்பு தான் உலகத்துலேயே சிறந்த ஐட்டம். எதோடு வேணுமானாலும் தொட்டுக்க வைச்சு சாப்புடலாம்.

அதுவும் கெட்டி தயிர் ல தயிர் சாதம் பண்ணி, அது ல ஒரு கை எடுத்து உருண்ட பிடிச்சு அது நடுவுல குழி பறிச்சு .... அந்த குழி ல சுட சுட காரகுழம்ப ஊத்தி அப்புடியே எடுத்து வாய் ல போட்டு சாப்புட்டா .... அடடா சொர்க்கம் 
 ·  Translate
17
ALIF AHAMED MINNAL's profile photoASHOK KUMAR.'s profile photoAsif Meeran's profile photo
4 comments
 
தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்பினேஷன் பெப்பர் பீஃப் ஃப்ரைதான். சான்ஸே இல்லை
 ·  Translate
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இதில் எது வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ???
 ·  Translate
36 votes  -  votes visible to Public
பணம்
36%
பொதுமென்ற மனம்
25%
நட்பு & புரிந்துகொள்ளும் உறவுகள்
36%
பொழுதுபோக்கு
3%
வாசிப்பு
0%
7
Vasudevan Tirumurti's profile photoArun Sundaramurthy's profile photoஜ்யோவ்ராம் சுந்தர்'s profile photoமேவி ..'s profile photo
7 comments
 
+Vasudevan Tirumurti அது போதுமென்ற மனம் .... தப்பா டைப் பண்ணி தொலைச்சுட்டேன்
 ·  Translate
Add a comment...
Have him in circles
3,189 people
VICTOR D.B's profile photo
Raji Iyarkai's profile photo
SATHIYENDRAN V SATHYA's profile photo
Meena Kumari's profile photo
Raj an's profile photo
praveen padh's profile photo
Veliyeettagam Chenthazhal's profile photo
melky christopher's profile photo
தமிழ் செல்வன்'s profile photo

மேவி ..

Shared publicly  - 
 
இன்று ஒரு அற்புதமான நாள் ....

மதியம் முக்கிய வேலையாக அலுவலகத்தில் இருந்து, வழியில் இறக்கி விடுவதாக சொன்ன நண்பனோடு பைக்கில் நுங்கம்பாக்கம் சென்று கொண்டு இருந்தேன்.

போகும் வழியில் அவன் இளையராஜா இசையமைத்த தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே என்ற பாடலை பாடினான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் நானும் சேர்ந்து பாடினேன். மதிய வெயில், போக்குவரத்து நெரிசல், வாகன சப்தங்கள் என்று எதுவும் எங்களை பொருட்படுத்தவில்லை. எதோ ஒரு ஞாயிறு காலை சொந்த ஊரில் மார்கழி குளிரில் நடந்தால் கிடைக்கும் இன்பத்தை உணர்ந்தேன்.

"மச்சி உனக்கு இளையராஜா பாட்டுன்ன பிடிக்குமாடா ??" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "மாமாஆ பிடிக்குமா ..... இளையராஜா பாட்டுன்ன உயிரு ... நைட் ரூம்ல இளையராஜா எம்பித்ரீய போட்டுட்டு கேட்டுகிட்டே இருப்பேண்டா .... சில பாட்ட கேக்குறப்ப அழுதுருவேன் ...." என்று சொல்லி கொஞ்சம் நேரம் கழித்து ..." ஏழர வருஷ லவ் மச்சீ .... மறக்க முடியல .... காசு இல்லன்னு சிங்கப்பூர் மாப்பிள்ளைய கட்டிகிட்டு போயிட்டா ..."

அதுக்கு நான் "ஏழர வருஷம் ல அதான் ஏழராகிருச்சு".

வண்டி நந்தனத்தை கடந்து கொண்டு இருந்தது, அப்பொழுது நான் "மச்சீ உனக்கு இந்த பாட்டு பிடிக்குமா ..." என்று கேட்டுவிட்டு சிட்டுக்குருவி படத்தில் வரும் என் கண்மணி உன் காதலி இள மாங்கனி என்ற பாடலை பாடினேன். உடனே அவனும் சேர்ந்து பாடினான்.

பாடிவிட்டு "மச்சீ அதவிட மௌன ராகத்துல வருமே மன்றம் வந்த தென்றலுக்கு பாட்ட மட்டும் எத்தன ஆயிரம் வாட்டி கேட்டு இருப்பேன்னு தெரியல ..." என்று சொல்லியபடி அந்த பாடலின் இசை கோர்வையை பாடி காட்டினான்.

பிறகு பைக்கை ஒரு டீ கடை பக்கம் நிறுத்திவிட்டு "மச்சீ ஒரு சிவகுமார் படம் வருமே ... அதுல கூட ஒரு பொண்டாட்டிய இன்னொருத்தன் பைக் ல தள்ளிகிட்டு போவான் ... அப்ப ஒரு பாட்டு வருமே ...." வாங்கிய சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து புகைவிட்ட படி ..... "ஆங் ரோசாப்பூ ரவிக்கைக்காரி .....எண்ணுள்ளில எங்கோ ஏங்கும் கீதம் பாட்டு சான்ஸே இல்ல .. அப்படி ஒரு மியூசிக் ...நைட்டு கேட்டுகிட்டே இருப்பேன் ...தூக்கம் வராது ...கேட்டுகிட்டே இருக்க தோணும்"

வாங்கிய தேநீரை சுவைத்தபடி நான் "மச்சி பன்னீர் புஷ்பங்கள் ல ஒரு பாட்டு பூந்தளிர் ஆடன்னு ...கேக்குறப்ப எல்லாம் ஸ்கூல் லைஃப்ப ரொம்ப மிஸ் பண்ணுவேண்டா ...."

அவன் "நான் என் உயிர ஒரு பாட்டுக்காக கொடுக்கலாமுன்னு இருக்கேன அது ஜானி படத்துல என் வானிலே ஒரே வெண்ணிலா பாட்டுக்கு தான் மச்சான்.... என்ன மியூசிக்கு ...என்ன வாய்ஸ் ....."

இப்படி பேசி கொண்டு டீ கடையிலிருந்து கிளம்பும் பொழுது மேற்கொண்டு அலுவலக வேலையை திங்கட்கிழமை அன்று பார்த்து கொள்ளலாம் என்று இருவரும் கிளம்பி பெசன்ட் நகரில் அமைதியான ; மரங்கள் சூழ்ந்த இடத்தில் அது தரும் நிழலில் நின்று கொண்டு நண்பனது கைபேசியில் இருந்த இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டு அதனை பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம்.

முப்பது வயது வரையில் ஆரவாரமான இசை, ஆர்ப்பாட்டமான இசை, துள்ளல் இசை போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் முப்பதுகளில் இது தான் வாழ்க்கை என்ற புரிதல் வரும் பொழுது இளையராஜாவின் பாடல்கள் பிடிக்க ஆரம்பிக்கிறது. இளையராஜாவின் இசை தினசரி வாழ்க்கையில் காயம் பட்டு இருக்கும் மனதிற்கு மயிலிறகின் மூலம் தடவ படும் மருந்தாக இருக்கிறது. 
 ·  Translate
23
குடுகுடுப்பை சித்தர்'s profile photoபெம்மு குட்டி's profile photoASHOK KUMAR.'s profile photoDyno Buoy's profile photo
5 comments
 
+குடுகுடுப்பை சித்தர்ஜி - பாவம் இந்த ஜீவன்கள்! வயதானவர்களை துன்புறுத்தாதிருப்போம்!

;)))
 ·  Translate
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
இன்றைக்கு கனமழை காரணமாக அலுவலகத்தில் விடுமுறை அறிவித்து விடவே, வீட்டிற்கு வந்து பொழுது போகாமல் பாகிஸ்தான் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்தேன்.

வாசித்த வரையில் ஃப்ரூக் ஸர்வர் எழுதிய ஓநாய் மற்றும் இஸ்மாயில் கௌஹர் எழுதி அப்பா ஆகிய கதைகள் மிகவும் பிடித்து இருந்தது.

ஓநாய் கதையில் பாகிஸ்தானிய சமூகம் பற்றி கேள்வி கேட்பதாய் இருக்கிறது. மதம், சடங்கு ஆகிய வரையறைகளுக்கு மக்கள் தங்களை அடக்கி வைத்திருப்பதை குறியீடுகள் மூலம் சொல்கிறது.

அதே போல் அப்பா கதையில் பாகிஸ்தான் கிராமிய பஞ்சாயத்தின் கொடூரமான முகத்தை காட்டுகிறது.

வெளியீடு - சாகித்திய அகாதெமி
விலை - 220ரூ.

குறை - ஐம்பது ஆண்டுக்காலத்தில் வெளியான பாகிஸ்தானிய சிறுகதைகளின் தொகுப்பு இது. ஒரு கதையும் எந்த ஆண்டு வெளியானது என்பதையும் போட்டு இருந்தால் அந்நாட்டில் நிகழ்ந்த சமுதாய மாற்றத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம். 
 ·  Translate
9
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
எதாவது திரைப்படத்தை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் கூடவே அந்த படத்திற்கு தியேட்டரில் நின்று டிக்கெட் வாங்கியதும் நினைவிற்கு வருகிறது.

இன்று சேரனின் ஆட்டோகிராப் படத்தை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது அந்த படம் வெளி வந்த அன்று முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமென்று திருச்சி ஜங்ஷனில் இருக்கும் சோனா மீனா திரையரங்குக்கு காலை பதினொரு மணிக்கே போய், கவுண்டரில் பட பெயரை சொல்லி டிக்கெட் வாங்க காசு தந்த ; கவுண்டரில் இருந்தவர் "அது மதியானம் தான் ...இப்ப darkness falls ..." என்று சொன்னார்.

அது வரையில் நான் எந்த படத்திற்கும் காத்திருந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்ததில்லை. அப்பொழுதெல்லாம் பொறுமை என்ற விஷயத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம். ஆனால் திருச்சி ராஜா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஹோலிக்ராஸ் பஸ் ஸ்டாப் வரையிலும் ஒட்ட பட்டு இருந்த வித விதமான போஸ்டர்களை பார்த்து மயங்கியதால் படத்தை பார்த்த ஆக வேண்டும் கவுண்டரிலேயே நின்று கொண்டு இருந்தேன். நல்ல வெயில் அடித்து கொண்டு இருந்தது. சுமார் மதியம் மணி ஒன்றை இருக்கும் பசி எடுக்கவே தியேட்டர் எதிரிலிருந்த டீ கடையில் டீயும் வெங்காய போண்டாவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் கவுண்டர் வரிசைக்கு வந்த பொழுது பத்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.

ஏன்னோ துக்கம் தொண்டையை அடைக்க, வெறுப்பில் நின்று கொண்டே டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே போனேன்.

கொஞ்ச நேரம் கழித்து நண்பர்கள் வந்தார்கள். வந்த உடன் டிக்கெட் கிடைத்ததை பற்றி அவர்கள் சொன்னதும், நான் மூன்று மணி நேரம் காத்து இருந்து டிக்கெட் வாங்கிய தியாக கதையை சொல்லவில்லை.

அதே போல் இரண்டு வாரம் கழித்து சரத்குமார் நடித்த கம்பீரம் படம் மெகா ஸ்டார் தியேட்டரில் வந்த பொழுது, குடி பழக்கம் இல்லாத என்னையும் செந்தில் என்ற இன்னொரு நண்பனையும் (இவன் இப்பொழுது பிரபல தனியார் மருத்துவமனையில் ஆலோசகராய் இருக்கிறான்) டிக்கெட் வாங்க நிற்க வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் திரையரங்கத்தின் எதிரில் கரூர் பைபாஸில் இருந்த அண்ணாமலை வையின் ஷாப்பில் தீர்த்த தாகத்தை தீர்த்துக்கொள்ள போய் விட்டார்கள்.

அப்பொழுது எல்லாம் மெகா ஸ்டார் தியேட்டரில் டிக்கெட் வாங்க போகும் வழி சுரங்கப்பாதைக்கு போகும் குகை போல் இருக்கும். பிற்பாடு மாற்றி அமைத்துவிட்டார்கள் என்று கேள்வி பட்டேன். அந்த குகை போன்ற வழியில் நின்று கொண்டு நானும் அவனும் "மச்சி .. நம்பளைய ஊறுகா ஆக்கிட்டாய்ங்கடா" என்று பேசி கொண்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் அந்த தியேட்டரில் இடைவேளையின் பொழுது விற்க படும் பிரட் பஜ்ஜிக்காக பொறுத்துகொண்டேன்.

இதே போல் கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஸ் சோனா மீனா தியேட்டரில் வந்த பொழுது, படம் பார்க்க துணை வேண்டுமே என்று நண்பனை அழைத்து கொண்டு வந்து வெளியே நிற்க வைத்து விட்டு, முதல் நாள் மதிய காட்சிக்காக அவனுக்கும் சேர்த்து என் காசை போட்டு டிக்கெட் வாங்க போனேன்.

சோனா மீனா தியேட்டரில் சோனா அரங்கிற்கான முதல் வகுப்பு டிக்கெட் தியேட்டரின் இடது பக்கம் இருந்த கம்பி கூண்டு வழியாக போய் டிக்கெட் வாங்க வேண்டும். வரிசையில் பத்தாவது ஆளாக நான் நின்று கொண்டு இருந்தேன். பின்னாடி இருந்து கூட்டம் தள்ள ஒரு அளவிற்கு மேல் சாய முடியாமல், இரண்டு கைகளையும் நீட்டி கம்பிகளை பிடித்து கொண்டு சாயாமல் இருக்க முயற்சி செய்தேன். ஒரு இரண்டு நிமிஷம் நிற்க்கவே கை எல்லாம் பழுத்துவிட்டது. ரொம்ப சோதிக்காமல் சீக்கிரமாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கஷ்ட பட்டு டிக்கெட் வாங்கி நண்பனை கூட்டி கொண்டு படம் பார்க்க போனால், இரண்டாவது காட்சி வருவதற்குள் அவன் தூக்கி விட்டான். படம் முடியும் நேரத்தில் சீனா தானா பாட்டு வரும் பொழுது தான் கண் முழித்தான். இடையில் போட்ட காசு வீணாக போகிறதே என்று அவனை எழுப்ப கெட்ட வார்த்தைகளை சொல்லி முயற்சித்து கொண்டு இருந்தேன்.

அப்பொழுதெல்லாம் சோனா மீனா தியேட்டர் டிக்கெட்டில் சோனா மீனா என்ற பெயரில் இருந்த "னா"வை பழைய மாதிரி கீழ கால் இழுத்து போட்டு இருப்பார்கள் .... பார்க்க நல்லா இருக்கும். 
 ·  Translate
11
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
வீட்டில் வைக்க இடமில்லாததால் குறைந்த விலைக்கு புத்தகங்களை தருகிறேன் ....

கனக துர்கா
கோணல் பக்கங்கள் (1,2,3)
யவன ராணி
அசோகமித்திரனின் 1945ல் இப்படியெல்லாம் இருந்தது

இவை நான்கையும் 100ரூ க்கு தயாராய் உள்ளேன்

விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் - 8939914848

அல்லது வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ணுங்க 
 ·  Translate
3
NAKA RAJAN's profile photoமேவி ..'s profile photoக ரா's profile photo
4 comments
 
நாளைக்கு கூப்பிடறேன்
 ·  Translate
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
கங்கா ஸ்நானம் ஆச்சா ??????
 ·  Translate
7
மேவி ..'s profile photoIyappan Krishnan's profile photoக ரா's profile photo
4 comments
 
+Iyappan Krishnan சந்திரமுகி நம்பர் வேணுமா மாம்ஸ்.
 ·  Translate
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
வீட்டில் புத்தகங்கள் வைக்க இடம் இல்லாத அளவிற்கு சேர்ந்து விட்டதால், படித்த புத்தகங்களை குறைந்த விலைக்கு விற்கலாம் என்று இருக்கிறேன்.

சுஜாதா கலெக்ஷன்ஸ்

ஆர்யபட்டா
ஐந்தாவது அத்தியாயம்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
திசை கண்டேன் வான் கண்டேன்
24 ரூபாய் தீவு
அனிதா - இளம் மனைவி
கொலையுதிர் காலம்
நைலான் கயிறு
பதவிக்காக
ஒரு நடுப்பகல் மரணம்
ஜே கே
சொர்க்கத் தீவு
ஆயிரத்தில் இருவர்
விபரீதக் கோட்பாடு
பத்து செகண்ட் முத்தம்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
ப்ரியா
விக்ரம்
மறுபடியும் கணேஷ்
கனவுத் தொழிற்சாலை
சுஜாதாவின் குறுநாவல்கள் - இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி, நான்காம் தொகுதி
கணையாழியின் கடைசி பக்கங்கள்
பார்வை 360 - சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்

இவற்றுடன்

முகில் எழுதிய "அகம், புறம், அந்தப்புரம்"
ஆர்.கே.நாராயண் எழுதிய "சுவாமியும் சிநேகிதர்களும்"

மேல் சொன்ன எல்லா புத்தகங்களையும் மொத்தமாக ரூ.1200 க்கு கொடுக்க இருக்கேன்.

விருப்பம் இருக்கிறவர்கள் தொடர்பு கொள்ளவும் : 89399 14848

மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் பண்ணுங்கள் 
 ·  Translate
7
2
Bhuvana Ganeshan's profile photoமேவி ..'s profile photoDyno Buoy's profile photokarthi sekar's profile photo
3 comments
 
+Bhuvana Ganeshan​ இருக்கு ... நிறைய புக் இருக்கு. ஆனா இப்போதைக்கி இவ்வளவு தான். 
 ·  Translate
Add a comment...

மேவி ..

Shared publicly  - 
 
ஹிஹிஹி
 ·  Translate
9
Add a comment...
People
Have him in circles
3,189 people
VICTOR D.B's profile photo
Raji Iyarkai's profile photo
SATHIYENDRAN V SATHYA's profile photo
Meena Kumari's profile photo
Raj an's profile photo
praveen padh's profile photo
Veliyeettagam Chenthazhal's profile photo
melky christopher's profile photo
தமிழ் செல்வன்'s profile photo
Education
 • சாந்தி தியேட்டர்
  பிட் படம், 1872 - 1943
  குஜால்ஸ் கதைஸ்
Basic Information
Gender
Male
Birthday
May 19
Other names
மொக்கை சாமி
Story
Tagline
நான் வானத்தை பார்க்குறப்ப, பூமில நிக்குறவண்டா
Bragging rights
அந்த இன்னொரு வாழைப்பழம் எங்க ????
Work
Occupation
தேவை இல்லாத ஆணிய புடுங்குறது
Skills
பஜ்ஜிக்கு சாம்பார் தொட்டுகிட்டு சாப்பிடுவேன்
Employment
 • மன்னார் அண்ட் மன்னார்
  பாரகு பார்க்குறது, 1789 - 2451
  சைட் அடிக்குறது & கடலை போடுறது
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
மொக்கையூர்
Contact Information
Home
Phone
123456789
Work
Phone
987654321
Apps with Google+ Sign-in
 • Archery 3D
 • Unblock Me FREE
 • One touch Drawing
 • Project 9
 • DEER HUNTER