Profile cover photo
Profile photo
M.K. Stalin
1,811 followers
1,811 followers
About
M.K. Stalin's posts

Post has attachment
"என்னுடைய முரட்டுப் பக்தன்" என்று தலைவர் கலைஞர் அவர்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு பெரியசாமி அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கழகத்தின் போர்க்குணமிக்க மாவட்டக் கழக செயலாளராக திகழ்ந்த அவரது மறைவிற்கு தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், சொந்தங்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் மீது தன் உயிரையும், என் மீது தனிப்பட்ட பாசத்தையும் வைத்திருந்தவர் அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்கள் என்பதை நினைக்கும் போது, பெருமைமிக்க தொண்டரை இழந்த சோகம் எங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். நலமுடன் திரும்பி வருவார் என்று நம்பிக் கொண்டிருந்த எங்களுக்கு அவரது மறைவு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.
1960-ம் வருடத்தில் இந்த பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்கள் வட்டக் கழகச் செயலாளர் முதல் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வரை கழகத்தினரின் செல்வாக்கைப் பெற்றும், தூத்துக்குடி நகர்மன்றத் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை மக்கள் செல்வாக்கை பெற்றும், மதுராகோட்ஸ் பஞ்சாலை தொழிலாளர், ஸ்பின்னிங் மில் தொழிலாளர், உப்பு மற்றும் தலைசுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 36 தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து "தொழிலாளர் வர்க்கத்தின்" உரிமைகளுக்காகவும் வாதிட்ட பெருமைக்குரியவர்.
30 வருடங்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக விளங்கிய அண்ணன் தூத்துக்குடி பெரியசாமி அவர்கள் கழகத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அவருக்கு "கலைஞர் விருது" வழங்கி சிறப்பிக்கப்பட்டார். அவர் பிரிந்தாலும் அவரிடம் உள்ள "கழக உணர்வு" எப்போதும் தலைமுறை தலைமுறையாக நம்மிடையே தங்கி நிற்கும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Photo
Photo
5/26/17
2 Photos - View album

Post has attachment
Union Cabinet has decided to announce a hike in Minimum Support Price (MSP) for sugarcane by 250 rupees per tonne. The announced hike is grossly inadequate considering the increase in cost of input, perennial water shortage for irrigation and the enormous risk that the sugarcane farmers are exposed to, due to various disasters time and time again. In consideration of the future prospects of sugarcane farmers, the Central and State Governments should come forward to implement the recommendations for sugarcane farmers submitted by Dr.M.S.Swaminathan. In addition to that, keeping in mind the election promise of ADMK during elections, it is their duty to announce a hike in the procurement price in order to safeguard the livelihood of them.
The sugarcane farmers constantly bear the brunt of nature in form of droughts, floods and cyclone in addition to the sugarcane dues that the sugar mills owe them, which in turn is severely undermining the sustainability of agriculture. Under these precarious circumstances, the ADMK Government reneged on its promise of price hike after negotiations with farmers, the last year. Likewise, this year an official tripartite dialogue is not yet convened by the ADMK Government to decide on the procurement price, thereby blatantly ignoring the protests by farmers and the travails faced by them. In this context, I request the ADMK Government to immediately fulfill the long-term demand of farmers to raise the procurement price of sugarcane to 3500 rupees.
In their 2011 Election Manifesto, ADMK promised to ensure prompt settlement of dues to farmers by sugar mills, which it reneged on for past 6 years. Hereby, I would like to remind them of their reneged promise and emphasize that, the Hon'ble Chief Minister should take adequate steps to ensure immediate settlement of outstanding sugarcane dues of nearly 2000 crore rupees, within a specified period of time to sugarcane farmers by the co-operative and private sugar mills.
கரும்புக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்தி மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இடுபொருட்கள் விலை உயர்வினால் கரும்பு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலும், பாசன நீர்த் தட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையிலும், கரும்பு விவசாயிகள் பல்வேறு பேரிடர்களால் பாதிப்புக்கு ஆளாகும் சூழ்நிலையிலும், இந்த விலை உயர்வு கரும்பு விவசாயிகளுக்கு நிச்சயமாகப் போதுமானது இல்லை என்றாலும், மாநிலத்தைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு, தான் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் கரும்பு விவசாயிகளுக்காக அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக ஏற்று அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
மாநிலத்தில் வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையால் கரும்பு விவசாயமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஏறக்குறைய விவசாயமே நொடிந்து போகும் நிலைமைக்கு வந்துவிட்டதை அதிமுக அரசு இன்னமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கடந்த வருடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, விலை உயர்வு அளிக்கப் போகிறோம் என்று அறிவித்து, பிறகு கைவிரித்து விட்டது அதிமுக அரசு. அதேபோல், இந்த வருடம் இன்னும் கூட முத்தரப்புப் பேச்சுவார்த்தையை அதிகாரபூர்வமாக நடத்தாமல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் நடத்திய போராட்டங்களையும் மதிக்கவில்லை.
கரும்புக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள விலை உயர்வு போதாது, நியாயமற்றது என்ற சூழலில், கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2011 தேர்தல் அறிக்கையில் ’கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளிலும் தனியார் ஆலைகளிலும் உள்ள நிலுவைத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று வாக்குறுதி அளித்த அதிமுக அரசு, ஆறு வருடங்கள் நிறைவடைந்த பிறகும் அதுபற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே கூட்டுறவு மற்றும் தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 2000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Photo

Post has attachment
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்ற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய குளங்களை தூர் எடுக்க வேண்டும் என்று நான் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, தி.மு.கழக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பணிகளை எல்லாம் நான் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இன்று காலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூட்டைக்காரன் சாவடி அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லடம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயசந்திரன் நகர் குடியிருப்பில் இருக்கக்கூடிய குளம் தூர்வாரப்பட்ட நிலையில் அதனையும் பார்வையிட்டேன். இதனால் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கழகத்தினரை பாராட்டியும் தங்களுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
திமுக ஆளும் கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்து இந்தப் பணிகளை நிறைவேற்றி அதனை வெற்றிகரமாய் முடிப்பதை பார்த்த பிறகாவது ஆளும் கட்சியில் இருப்பவர்களும், பிற கட்சியினரும் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
‪#DMKVolunteers4Water‬
PhotoPhotoPhotoPhotoPhoto
5/25/17
9 Photos - View album

Post has attachment
The Government Order regarding the 'Public examination for first year of higher secondary (11th standard)' was passed hastily on 22.05.2017 by School Education Department. It is said that the order was passed after receiving a letter from Director of Directorate of Government Examinations on 17.05.2017, based on the recommendations of an expert committee which was set up in 2012. The hasty manner with which the G.O was passed, which would immediately impact the future of nearly 8 lakh students raises serious doubts whether the intent of this G.O was noble or was it just a facade to the gross ineptitude of the ADMK Government.
It is indeed unethical to create a reductionist opinion that it is the half-hearted teaching of 11th syllabus which is resulting in lowering of standards among students and the lack of confidence to face All India Entrance Examinations. Kothari Committee clearly stated that, the quality of primary and secondary education is important for higher secondary education and the quality of higher secondary education is important for University level education. The blunt rhetoric laced propaganda that it is the non-conduct of 11th standard examination which impacts learning among students is thoroughly unwarranted and patently unethical.
The Kothari Committee report was submitted after following a systematic process which included setting up of 12 Task forces and 7 working groups before the preparation of the report. Discussions with accomplished educationalists were carried out, opinions from nearly 9000 people were garnered and around 2000 opinion drafts were received in due process. It is after having an audience with Hon'ble President of India, Kothari committee submitted the much valued report on educational reforms.
On the other hand, there is no clear details in the G.O passed by the ADMK Government abut the composition of the committee which was set up in 2012, along with other important details about from whom the recommendations were sought, what was the list of recommendations mentioned and whether the impacts of this G.O on the students were duly discussed in cabinet meeting with all sincerity that it requires.
It is to be noted that, according to this new scheme, the students have to face three public examinations consecutively from 10th to 12th standard, after which they have to face All India Entrance Examinations. I wonder, if due consideration was given to the impact it has on the mental health of the students. It is time to remember that, the system of 10th and 12th examinations was constituted based on the recommendations of Kothari Committee which examined the previous system of public examinations in 10th and 11th standard, realized the emotional stress of consecutive examinations on the students, and in turn went on to bifurcate higher secondary into two years, which led to the present day 11th and 12th standard.
DMK is worried that the resolution of ensuring school education to be the bedrock of university admissions, which was made in the Conference of Education Ministers from the states in 1964, be diluted by the extraneous, hasty actions of the inept ADMK Government and as a Principal Opposition party of this state, DMK registers its strong criticism for these actions which endangers the interests of the students.
It is the same Kothari Committee which recommended that the fall in standards of the students is to be attributed to the fall in standards of the schools. Keeping in mind these recommendations, DMK Government initiated the improvements in School infrastructure, increased teacher recruitments, introduced computer education and appointed computer teachers, ensured English instruction in Government schools, established Common Core Sameer Kalvi and worked towards upgrading the syllabus of Samacheer Kalvi.
On the other hand, ADMK is engaging in stunts like introducing Grade system, change in uniform, public examination for 11th standard instead of proactive measures like upgrading the primary and secondary education, upgrading pedagogy, ramping up teacher recruitments. Kothari Committee clearly stated that the destiny of India is determined in the schools and I hope, the inept ADMK Government takes this statement to the heart.
'Attention grabbing daily announcements' would never improve the standard of education. It is indeed imperative that the Government starts to think about how to alleviate the stressful situation that students face due to three consecutive public examinations and how to improve the quality of schools to match up to the national standards, by setting up a core committee of accomplished educationalists and ensure meaningful reforms are drawn and implemented keeping in mind the well being of the students, who are the future of Tamil Nadu.
’மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வு’, என திடீரென்று ஒரு அரசாணையை பள்ளிக் கல்வித் துறை 22.5.2017 அன்று வெளியிட்டு இருக்கின்றது. 2012 ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு பொதுத் தேர்வு இயக்குனர் 17.5.2017 அன்று ஒரு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தின் அடிப்படையில் 22.5.2017 அன்று சுமார் 8 லட்சத்துக்கும் மேலாக உள்ள மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய கல்வி விஷயத்தில், மிகவும் அவசர கோலத்தில் இந்த அரசாணையை அதிமுக அரசு வெளியிட்டிருப்பதன் நோக்கம் ’கல்வித்தரத்தை உயர்த்துவதா அல்லது நாங்களும் செயல்படுகிறோம்” என்று வெளி உலகிற்கு காட்டிக் கொள்ளவா என்ற சந்தேகம் எழுகிறது.
மாணவர்களின் கல்வித்தரம் குறைவதற்கும், அகில இந்திய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வுகளை எழுத அவர்கள் தயங்குவதற்கும், “மேல்நிலை முதலாம் ஆண்டு பாடத் திட்டங்களை” கல்வி நிறுவனங்கள் உரியமுறையில் கற்றுக் கொடுப்பதில்லை என்பது மட்டுமே காரணம் என்று சித்தரிப்பது, கல்வித்தரத்தை உயர்த்தும் ஒரு அரசின் நேர்மையான முயற்சியல்ல என்றே கருதுகிறேன். அதிமுக அரசு தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கையிலையே, “முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழக கல்விக்கு முக்கியம்”, என்று கூறியிருப்பதை வசதியாக மறந்துவிட்டு, “ஏதோ பதினோறாவது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாதது மட்டுமே மாணவர்களை பாதிக்கிறது” என்று பிரச்சாரம் செய்வது தவறானது.
கோத்தாரி கல்விக்குழு அறிக்கை தயாரிக்கும் முன்பு 12 செயல்குழுக்கள் (Task Force) அமைக்கப்பட்டன. 7 பணிக்குழுக்கள் (Working group) உருவாக்கப்பட்டன. புகழ்பெற்ற கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 2400 க்கும் மேற்பட்ட கருத்துரைகள் பெறப்பட்டன. மேலும், மாண்புமிகு பிரதமர் அவர்களையும், மேதகு குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்துப் பேசியபிறகே, அப்படியொரு சிறந்த கல்வி சீர்திருத்தம் தொடர்பான அறிக்கையை ’கோத்தாரி கல்விக்குழு’ அளித்தது.
ஆனால் அதிமுக அரசு 2012-ல் அமைத்ததாகக் கூறும் வல்லுநர் குழுவில் யார் யார் இடம் பெற்றார்கள்? அவர்கள் யார் யாரிடம் கருத்துக் கேட்டார்கள்? அந்த அறிக்கையில் கூறப்பட்ட ஒட்டுமொத்த பரிந்துரைகள் என்ன? அந்த பரிந்துரைகள் முதலமைச்சர் அவர்களால் பரிசீலிக்கப்பட்டதா? குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்த மிக முக்கிய முடிவுபற்றி ஆலோசனை செய்யப்பட்டதா? ஆகிய விவரங்கள் எல்லாம் அதிமுக அரசின் அரசாணையில் தெளிவாக இல்லை.
அதேநேரத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் தொடர்ந்து மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம், 12 ஆம் வகுப்பு முடித்ததும் அகில இந்திய தேர்வுகளுக்கு போட்டியிட வேண்டிய சூழல் எல்லாம் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கும். மிக முக்கியமான இந்தப் பிரச்சினை பற்றி உரிய கவனத்துடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால், கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கையிலேயே மாணவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடி பற்றி விவாதிக்கப்பட்டு, “10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவே மேல்நிலைக் கல்வி இரு ஆண்டுகளாக பகுக்கப்பட்டு, 12 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு என்ற நிலை கொண்டு வரப்பட்டது” என்பதையும் அதிமுக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
“மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்” என்ற நோக்கத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தால், அதை வரவேற்க திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் தயங்காது. ஆனால் மாணவர்கள், பெற்றோர்களின் சிரமங்களை உணராமலும், கோத்தாரி கல்விக்குழுவே கவலைப்பட்ட “பொதுத்தேர்வு” பற்றியும் ஆலோசிக்காமல் ஒரு முடிவை எடுக்கும்போது, பிரதான எதிர்க்கட்சி என்றமுறையில் அதை சுட்டிக்காட்டுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு என்றே கருதுகிறேன். குறிப்பாக “பட்டப் படிப்பில் அனுமதிக்கப்படுவதற்கு 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்விதான் நாட்டின் இலட்சியமாக இருக்க வேண்டும்” என்று 1964ல் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விருப்பத்திற்கு மாறாக, அதிமுக அரசின் முடிவு அமைந்து விடுமோ என்ற அஞ்சும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதே கோத்தாரி கல்விக்குழுதான் “பள்ளியின் தரத்தால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டியதையும் நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. அதையெல்லாம் எண்ணி தான் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் கணிணிப் பாடம், கணிணி ஆசிரியர்கள் நியமனம், ஆங்கிலப் பயிற்சி உள்ளிட்ட படிப்படியான ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளையும், சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வியின் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளையும் திமுகழக அரசு அமைந்த போதெல்லாம் மேற்கொள்ளப்பட்டன.
ஆகவே திடீரென்று “கிரேட் முறை”, “சீருடை மாற்றம்” “மேல்நிலை முதலாண்டில் பொதுத் தேர்வு” என்ற “விளம்பர நடவடிக்கைகளை” எடுப்பதைக் காட்டிலும், முதலாம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியின் தரத்தையும் உயர்த்த தேவையான பாடத்திட்டங்கள், கல்வி பயிற்றுவிக்கும் முறைகள், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமனம் போன்ற “விவேகமான திட்டங்களை” நிறைவேற்ற அதிமுக அரசு முன் வர வேண்டும் என்றும், “இந்தியாவின் தலைவிதி பள்ளிகளில் நிர்ணயிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டிய “கோத்தாரி கல்விக்குழு”வின் எண்ணவோட்டத்தை அதிமுக அரசு மனதில் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
“தினமும் ஒரு அறிவிப்பு” என்பதுதான் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற அளவோடு இந்த முயற்சிகள் அமைந்துவிடாமல், தொடர்ந்து மூன்று வருடம் பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டிய மன அழுத்தத்தைப் போக்க என்ன வழி? மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க என்ன வழி? பள்ளிகளின் தரத்தை படிப்படியாக தேசிய அளவிலான கல்வித்தரத்திற்கு உயர்த்துவதற்கு என்ன வழி? போன்றவை குறித்து சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து, பள்ளிக் கல்வியை, குறிப்பாக 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Photo

Post has attachment
‘ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை!’
என் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அவல அதிமுக ஆட்சி பற்றிய மடல்.

கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட இலஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் ‘புலப்படாமல்’ போனதால் கடந்த ஓராண்டுக்கு முன்- 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அப்படியும்கூட தி.மு.கழகத்தின் வாக்குகளையும், பெருகி வந்த ஆதரவையும் ஆளுந்தரப்பின் அதிகாரக் கரங்களால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை. இதயத்தின் கட்டளையை ஏற்று, மக்களின் விரல்கள் அளித்த தீர்ப்பின்படி தி.மு.கழகம் தனிப்பட்ட முறையில் 89 இடங்களிலும் தோழமைக் கட்சிகளுடன் சேர்த்து 98 இடங்களிலும் வெற்றி பெற்று, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை காணாத வலிமைமிக்க எதிர்க்கட்சியாகத் தனது கடமைகளைச் செய்து வருகிறது.
அதிகார பலத்தால் வென்ற அ.தி.மு.க.வுக்கும், அநியாயமாக வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1% தான். அதனால்தான், மக்களின் தீர்ப்புக்கு எதிரான ஜனநாயக முடிவு என்று அப்போதே நாம் குறிப்பிட்டோம். ஏன் வாக்களித்த மக்களே கூட எப்படி அதிமுக வெற்றி பெற்றது என்று அதிர்ச்சியடைந்து போனார்கள்.
அ.தி.மு.க.வினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதலமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி’ யால் ஏற்பட்ட மாற்றம். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, ஜெயலலிதா அம்மையார் ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழக அரசின் நேரடி கடன் சுமை 3 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதுபோக, மின்துறை உள்ளிட்ட பிற துறைகளின் மறைமுக கடன் சுமைகளையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி என்கிற அளவிற்கு, தமிழ்நாடே திவாலாகும் நிலையில்தான் அரசாங்கத்தின் கஜானா காலியாகி உள்ளது. எவ்விதத் திறனுமற்ற நிர்வாகத்தின் இயல்பான விளைவுதான் இது என்பது எளிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. மதுபான வருமானத்திற்காக எந்த அவமானத்தையும் ஏற்கும் மதிமயக்கமும் மனோபாவமும் கொண்ட அரசுதான் 6 ஆண்டுகாலமாக நம்மை ஆட்சி செய்து வருகிறது.
வாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவை உணவும் குடிநீரும்தான். அதைக்கூட உறுதி செய்ய முடியாத கையாலாகாத ஆட்சியை தமிழகம் சந்தித்துச் சகித்துக் கொண்டிருக்கிறது. பொதுவிநியோகத் திட்டம் என்றால் தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று தி.மு.கழக ஆட்சியின்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால் இன்று அந்தத் திட்டம் சீரழிக்கப்பட்டு, நியாய விலைக்கடைகளில் பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை, சர்க்கரை இல்லை, தரமான அரிசி இல்லை என்கிற நிலை உருவாகி, ஏழை மக்களை பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒவ்வொரு வீட்டுக்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம் என்று 2011ல் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. ஆள்வோரின் அலட்சியப் போக்கினால், தமிழகம் முழுவதும் காலிக் குடங்களுடன் பெண்கள் ஆவேசத்துடன் வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலையைக் காண்கிறோம். தவித்த வாய்க்குத் தண்ணீர் தரமுடியாத அரசாக அ.தி.மு.க அரசு இருக்கிறது. ஒரு மெகா குடிநீர் திட்டத்தைக் கூட உருப்படியாக நிறைவேற்றாமல், கழக அரசு கொண்டு வந்த நதி நீர் திட்டங்களையும் முடக்கி வைத்து இன்றைக்கு தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.
ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது, அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் இந்த ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. புதிய தாதுமணல் கொள்கை வகுக்கப் போகிறோம் என்றவர்கள் இப்போது அதை வசதியாக மறந்துவிட்டு, தாது மணல் கொள்ளை குறித்த விசாரணை அறிக்கையையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்.
இயற்கை வளங்கள் கொள்ளை போனதால் விவசாயிகளின் வாழ்வு தரிசு நிலமாக மாறிவிட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் உயிரிழப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் கூட கொச்சைப்படுத்திய இரக்கமற்ற ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஹிட்லரிசத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது. நிர்வாக செயலற்ற - மக்கள் விரோத கொடுங்கோல் அ.தி.மு.க. அரசிடம் முறையிட்டுப் பயனில்லை என்ற நிலையில், தமிழக விவசாயிகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தி, நிர்வாணமாக ஓட வேண்டிய அவலத்திற்குள்ளானதை மறக்கமுடியுமா? உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் அநீதி அதிமுக ஆட்சியில் நிலவுகிறது.
விவசாயிகள் மட்டுமல்ல, போக்குவரத்தும் தொழிலார்கள் தொடங்கி அனைத்துவகைத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வுடனும் இந்த அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது தொழில் முதலீடுகள். ஆனால் 6 ஆண்டுகாலமாக தமிழகத்தின் தொழில்முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளன. வர விரும்பிய தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குத் திரும்பி விட்டன. இருந்த தொழிற்சாலைகள் “விட்டால் போதும்” என்று வேகமாக வெளியேறி விட்டன.
அம்மையார் ஜெயலலிதா விஷன் 2023 எனும் தொலைநோக்குத் திட்டத்திற்கான கையேட்டினை வெளியிட்டார். அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது. அதுபோல அவர் காலதாமதமாக நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 42ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் 10% முதலீடு கூட தமிழகத்திற்கு வரவில்லை. எவ்வித உள்கட்டமைப்பு வசதியையும் உருவாக்கித் தராத அ.தி.மு.க அரசை நம்பி தமிழகத்திற்கு வருவதற்கு உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை.
தி.மு.கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகத்தில் காட்டப்பட்ட அக்கறையை நம்பி வரக்கூடிய ஒன்றிரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கேட்கும் லஞ்சத் தொகையைக் கண்டு மிரண்டு, அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் எடுக்கக்கூடிய மோசமான நிலையில்தான தமிழகம் இருக்கிறது. கியா மோட்டார் தொழிற்சாலையும் சிண்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள். ஆகவே புதிய முதலீடுகளும் இல்லை. புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை: புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை என்ற நிலையில் இன்றைய அதிமுக அரசு ஆட்சி செய்கிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று புகழப்பட்ட தமிழகத்தில் தற்போது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களும் துணைவேந்தர்களின் கையெழுத்தின்றி நடைபெறக்கூடிய அவலத்தில் உள்ளது. மூன்று பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி வருடக் கணக்கில் காலியாக இருக்கிறது. உயர்கல்வியிலிருந்து பள்ளிக்கல்வி வரை அனைத்திலும் ஊழல் முடைநாற்றம் வீசுகிறது. தமிழகத்தின் கிராமப்புற, ஏழை மாணவர்களைப் பாதிக்கக்கூடிய நீட் தேர்விலிருந்து அவர்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசாங்கம் நடைபெறுகிறது.
ஆசிரியர் நியமனங்களில் லஞ்சம் விளையாடுகிறது. அரசுப் பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கான உறுப்பினர்கள் நியமனத்திலேயே ஆளுங்கட்சி எந்தளவு நேர்மையற்ற முறையில் செயல்பட்டது என்பதை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டி அந்த நியமனங்களை ரத்து செய்திருப்பது இந்த ஆட்சியின் லட்சணத்தை எடுத்துக்காட்டும் சான்றிதழாகும். திருந்தாத அரசு திரும்பவும் அரசு தேர்வாணையத்தை அதிமுக தலைமைக் கழகமாக மாற்றவே துடிக்கிறது. மின்வாரிய ஊழியர் நியமனத்திற்கானத் தேர்வினை நட்சத்திர ஓட்டலில் நடத்தி, லஞ்ச பேரத்தை வெளிப்படையாக நடத்தியது அ.தி.மு.க அரசு.
கடந்த ஆறாண்டுகளாக தமிழகத்தில் வழிப்பறி தொடங்கி கொலை - கொள்ளை - பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளன. குறிப்பாக, வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் - முதியோர் ஆகியோரின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது. ஆறு வருடமாக மாலுமி இல்லாத கப்பலாக தமிழக காவல்துறை தரை தட்டி நிற்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாத காரணத்தினால், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில், அமைச்சர்களும் ஆளுங்கட்சியினரும் ஊழல் விளையாட்டில் புகுந்து போட்டிப்போட்டுக் கொண்டு விளையாடுவது குறித்து வெளிப்படையான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஊழலை ஓழிக்கும் ’லோக் அயுக்தா’ அமைப்பைக் கொண்டு வர அஞ்சி நடுங்குகிறார்கள். வருமானவரித்துறையின் சோதனைக்குப் பதவியில் இருக்கும் அமைச்சர்களே ஆளாகின்றனர். அதைவிடக் கேவலமாக, தமிழகத்தின் தலைமைச் செயலகத்திலேயே துணை ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலித்த மண்ணில், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப பொம்மைகளாக ஆடுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள். மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு தமிழக நலன்கள் பாதிக்கப்படுகிறது. வெள்ளம், வர்தா புயல், வறட்சி என எதற்கும் மத்திய அரசிடம் கேட்ட நிதியைப் பெற முடியாத கையாலாகாத ஆட்சி ஒரு ’காட்சிப் பொருளாகவே’ இருக்கிறது.
2011, 2016 ஆகிய இரு அதிமுக தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, இல்லத்தரசிகளுக்குக் கைபேசி, நதிகள் இணைப்பு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை பெருக்குவது போன்ற ’வாக்குறுதிகள்’ இன்று அதிமுக ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 110 அறிவிப்புகள் தூசுபடிந்து தூங்குகின்றன. நிதி நிலை அறிவிப்புகள் நிம்மதியாக குறட்டை விட்டு படுத்திருக்கின்றன. மான்யக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெற சட்டமன்றத்தைக் கூட கூட்டாமல் ஜனநாயகத்தின் குரல்வளையில் காலை வைத்து மிதிக்கும் கல்நெஞ்சம் கொண்ட ஆட்சி நடக்கிறது.
ஊழல் நாற்றம் வீசும் செயலற்ற - சரணாகதி அரசின் பிடியில் தமிழகம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கப்போகிறது என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் ஒலிக்கிறது. ஓராண்டுக்கு முன் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களும் கூட, தமிழகத்தில் எப்போது ஆட்சிமாற்றம் வரும் என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் படும் இன்னல்களை நீக்க மனச்சாட்சி இல்லாமல் இருக்கிறது அதிமுக ஆட்சி.
அதனால்தான் வலிமைமிகுந்த எதிர்க்கட்சியான தி.மு.கழகம் களத்தில் இறங்கி மக்களின் துணையுடன் நீர்நிலைகளைப் பராமரித்தல், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல், அரசுப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆய்வு செய்து விரைவுபடுத்துதல் என மக்களின் உற்ற நண்பனாகச் செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி செய்ய மறந்ததை ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது. “நம் மக்கள். நம் இனம்” என்ற உணர்வுடன் தமிழக மக்களுக்கான இந்தப் பணிகள் தொடர வேண்டும்.
ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று தி.மு.கழகம் எத்திசையிலும் வெல்லும்.
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் ஆண்டு 2048 - வைகாசி 09.
23-05-2017.
Photo

Post has attachment
என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் பொன்னாடை, பரிசுப் பொருட்களுக்கு பதில் புத்தகங்களை வழங்க வேண்டுமென்ற என்னுடைய வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் கழக முன்னோடிகள், நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்கி வருகிறார்கள், அதனை திருவாரூர், புதுக்கோட்டை,பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி, கிருஷ்ணகிரி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு வழங்கி வருகிறேன்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் “கௌரா புத்தக மைய”த்தின் சார்பில் 16 இலட்சத்து 50 ஆயிரத்து 330 ரூபாய் மதிப்பிலான சுமார் 6,765 புத்தகங்களை அதன் நிறுவனர் கெளரா ராஜசேகர் அவர்கள் என்னிடம் நேரில் வழங்கினார். பகட்டான பரிசுகளைத் தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்க வேண்டுமென்கிற கோரிக்கைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து கிடைத்து வருகிற வரவேற்பு உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கின்றேன்.
புத்தகங்கள் படிப்போம்! புது உலகம் படைப்போம்!
Photo

Post has attachment
இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட வடிவுடையம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தேன். தமிழகம் முழுவதும் இன்றைக்கு மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் சூழலில், இதுபோன்ற குளங்களை தூர்வாரக் கூடிய பணியை நியாயமாக,
முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனித்து நிறைவேற்றிட வேண்டும். ஆனால், இன்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களுக்கு பயன்படக்கூடிய தூர்வாரும் பணியை துவங்கி வைக்க மனம் இல்லை, நேரம் இல்லை.
ஏனெனில், இன்று அவர்களுடைய பணி, அவர்களின் ஆட்சியில், கட்சியில் இருக்கக்கூடிய தூரை எடுக்கக் கூடிய நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்களே தவிர, குடிநீருக்காக மக்கள் படும் இன்னல்களுக்கு தீர்வுக் காணக்கூடிய முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடும், பணியாற்றும் என்பதற்கு சாட்சியாக சான்றாக இந்த நிகழ்ச்சி விளங்கிக் கொண்டிருக்கிறது என்றேன்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த தூர்வாரும் பணி முடிவடைந்து மக்களுக்கு பயனளிக்கும் சூழ்நிலை உருவாகும் நேரத்தில் மீண்டும் ஒருமுறை நான் நேரில் வந்து பார்வையிடுவேன் என்கின்ற உறுதியை அங்கு கூடியிருந்த பொதுமக்களிடத்தில் தெரிவித்தேன்.
#DMKVolunteers4Water
PhotoPhotoPhotoPhotoPhoto
5/21/17
5 Photos - View album

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மதுக்கடைகளை எதிர்த்துப் போராடும் மகளிருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் போலீசாரின் வன்முறைகளை காணும்போது, தமிழக காவல்துறை தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் அந்த இலாகா இருக்கின்றதா? குறைந்தபட்சம் முதல்வரின் கட்டுப்பாட்டிலாவது காவல்துறை இருக்கின்றதா என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது. வேலூரில் மட்டுமல்ல, இதற்குமுன் திருப்பூர் மாவட்டத்திலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய தாய்மார்களின் மீது தடியடி நடத்தப்படுவதை நாகரிக சமுதாயத்தில் உள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
“தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்று ஓட்டு வாங்குவதற்காக மக்களை ஏமாற்றிய அதிமுக அரசு, இன்றைக்கு மதுக்கடைகளை மூடுவதற்கு பதில் மகளிர் மீது தடியடி நடத்தி வருகிறது. கோயில்கள், மார்கெட்டுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போடாத அதிமுக அரசு, தாய்மார்கள் தங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ‘டாஸ்மாக்’ கடைகளை மூடக் கோரினால்கூட, அவர்கள் மீது தடியடி நடத்தி வருவது ஜனநாயக உணர்வுகளை சாகடிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. இது, ஜனநாயகரீதியிலான போராட்டங்களுக்கு மதிப்பளித்துத் தீர்வு காண அதிமுக அரசு தயாராக இல்லை என்ற மனப்போக்கை வெளிக்காட்டுகிறதுபோலீஸ் காவலில் இருக்கும் கைதிகள் மரணம், சிறைக்குள் நிகழும் திடீர் மரணங்கள், போலீசாரின் காவலில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் கொலை என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சந்தி சிரிக்கிறது. ஒரு முதலமைச்சர் குடியிருந்த ‘கொடநாடு எஸ்டேட்’ காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது மட்டுமல்ல, அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் குற்றவாளிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல், அடுத்தடுத்து நடக்கும் மர்ம விபத்துக்கள் போன்ற நிகழ்வுகள், ,திறமைமிக்க தமிழக காவல்துறை “மாலுமி” இல்லாத கப்பல் போல இன்றைக்கு தரைதட்டி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இன்றைக்கு தமிழக காவல்துறையில் ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., ஆகிய பதவிகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய பகுதிகளின் சரக டி.ஐ.ஜி. பதவிகளில் முழுநேர போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படவில்லை. தமிழக காவல்துறையின் உளவுத்துறை, சட்டம் - ஒழுங்கு, போலீஸ் சீருடை பணியாளர் வாரியம் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு ஒருவரே ’டி.ஜி.பி’ பொறுப்பு வகிக்கும் நிலைமை ஏற்பட்டு இருப்பது உட்பட காவல்துறையில் இப்போது நடந்துவரும் பலவித நிர்வாக அலங்கோலங்கள், ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக விளங்கி வந்த தமிழக காவல்துறைக்கு சோதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
மூன்று டி.ஜி.பி. பதவிகளின் பணிகளை ஒரே ஒரு டி.ஜி.பி. கவனித்துக் கொள்வது, போலீஸ் சீர்திருத்தத்திற்கு வித்திட்ட “பிரகாஷ் சிங்” வழக்கில் சுட்டிக்காட்டப்பட சீர்திருத்தங்களை சுயநலனுக்காக அதிமுக அரசு பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டிய டி.ஜி.பி.களை ஓய்வுபெற்ற பிறகும் பணி நீட்டிப்பு கொடுத்தது, காலியிடங்கள் இருந்தும் டி.ஜி.பி. பதவி உயர்வு நிலுவையில் போடப்பட்டுள்ளது என்று “இந்து” ஆங்கிலப் பத்திரிக்கை சுட்டிக்காட்டியும் கூட, உரியவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க முடியாமல் தவிக்கும் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையின்மை என இவை எல்லாம், இன்றைக்கு தமிழக காவல்துறை நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப்போக வைத்திருக்கிறது. தமிழக காவல்துறையில் களத்தில் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கும், டி.எஸ்.பி.களுக்கும் சரியான வழிகாட்டுதல் தரக்கூடிய, ’ஆளுமைமிக்க’ தலைமை இல்லாமல் தமிழக காவல்துறை தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிமுக ஆட்சியில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து விட்டது.
அதனால், ஜனநாயகரீதியாக நடக்கும் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் கையாளுவதற்கு “தடியடி”, “144 தடையுத்தரவு” ஆகியவை மட்டுமே ஒரே வழி என்ற சிந்தனை, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறை அதிகாரிகள் மனதில் குடிகொண்டு இருப்பது வேதனையை எற்படுத்துகிறது. பெண்கள் மீது தடியடி நடத்துவது, அநாகரிகமாக அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்வது, கைகளைப் பிடித்து போலீஸ் வேனுக்கு இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள், மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதைக் கூட சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த அதிமுக அரசு தயாராக இல்லை.
ஆகவே, மதுக்கடைகளுக்கு எதிரான மகளிர் போராட்டங்களில் மனித உரிமைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் உட்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தாய்மார்கள் மூடக்கோரும் டாஸ்மாக் கடைகளை எவ்வித மறுப்புமின்றி உடனடியாக மூட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழக காவல்துறையில் உள்ள காலியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பி, ஒரே நபர் பல பதவிகளை கவனிக்கும் முறையை மாற்றி, ஜனநாயக உணர்வுகளையும், மனித உரிமைகளையும் மதித்து செயல்படும் வகையில் தமிழக காவல்துறையை “பிரகாஷ் சிங்” வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள உண்மையான நோக்கத்தினை பிரதிபலிக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
I strongly condemn the indiscriminate lathi charge on women who were protesting to remove the 'TASMAC' shop in the village of Azhinchikkuppam near Ambur in Vellore district. The recurring, indiscriminate high handed actions against women makes me wonder if the department is under the control of Director General of Police or if the Chief Minister is at least concerned about the heavy handed actions of the Police. It is to be noted that events like the ones happened in Vellore has happened previously in Tiruppur and other districts when the protestors took to the streets in order to voice their opposition to the opening of TASMAC shops.
The ADMK Government which came to the power promising a calibrated prohibition across Tamil Nadu has not only reneged on their promises but have unleashed unspeakable violence on women in form of lathi charge. The efforts by this Government to kill the protests through violence is thoroughly Anti-democratic and reveals the Autocratic functioning of the Government. Contrary to the list of promises made with regards to closure of TASMAC shops, this Government hasn't even considered to close shops which are near places where people congregate, like schools, religious places, markets and even hospitals.
The law and order situation in Tamil Nadu is now in dismal, laughable position given the reports like the deaths of prisoners in police custody, the sudden deaths in jail, and the prisoners who are being taken to the court under police custody which routinely appear in newspapers. The murder of the watchman of Kodanad Estate, a place which used to be the residence of the former chief minister and the continual life threat for alleged co-conspirators of this crime, the recurring mysterious accident-like events makes one wonder if the otherwise efficient Tamil Nadu police department is wobbling in mid-sea like a ship without a Captain.
The spectacular maladministration of Tamil Nadu police is revealed by the lack of timely promotions for officers working in the posts of I.G., Additional D.G.P., full time D.I.G.s not appointed for important regions like Trichy and Tirunelveli and creation of a circumstance where intelligence, law and order and Uniformed Services Recruitment Board are overseen by a 'Single' D.I.G.
It is patently unethical act by Tamil Nadu Government to use specific clauses mentioned in the verdict of the Supreme Court in the Prakash Singh vs Union of India case which is seen as a landmark in the fight for police reforms, in order to extend the tenure of D.G.P. who work in favour for the Government, the act of making a single D.G.P. to perform duties in place of three D.G.P.s, the vacant D.G.P. positions which remains unfilled which was reported by 'The Hindu' reveals the indecisiveness of Hon'ble Chief Minister Edappadi Palanisamy and is causing the Tamil Nadu police department to experience a standstill. The systematic deterioration of Tamil Nadu police over past 6 years is because of lack of initiative on part of ADMK Government in bringing senior officers with necessary leadership in order to effectively mentor Inspectors and D.S.P.s who are working hard on ground to maintain law and order situation.
The one-dimensional, archaic school of thought in trusting violence and 'Sec.144' as means to deal with democratic protests is setting a wrong precedence among the officials in Law enforcement and it is appalling to note that the Government is not prepared to educate the department that it is inhumane and an act of blatant trampling of Human rights to use indiscriminate lathi charge and physical handling of women who are protesting.
I hereby, ask Hon'ble Chief Minister Edappadi Palanisamy to engage in talks and negotiations with the women who are protesting on ground for the closure of TASMAC shops, keeping in mind the democratic norms and human rights and take action to close these shops honouring the intent of the protestors.
It is high time for the Government to take actions towards filling the vacant positions in the department and bring an end to the norm of a single person handling multiple duties, in order to effectively administer the police force. I hereby, insist the ADMK Government to look into the original intent of the 'Prakash Singh Case' and thereby engage in policy reforms which would in turn shape the Tamil Nadu Police Department into a modern law enforcement arm which respects and imbibes the norms of democracy and human rights.

“தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த முதல் திராவிட முன்னேற்றக் கழக அரசு 23.1.1968 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பொன்விழா ஆண்டில் நாம் இன்றைக்குப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
மொழிப் போராட்டத்தில் மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்ட மிக முக்கியமான நடவடிக்கை என்று இன்றைக்கும் போற்றப்படுகிறது. அந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வழிவந்து, சட்டமன்ற வைரவிழா காணும் தலைவர் கலைஞர் அவர்கள் “முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம்” என்ற “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை” 13.6.2006 அன்று இயற்றி தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் டி. முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள தாய் மொழி மிக அவசியம்” என்றும், “அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை” என்றும் கூறி “தமிழ் மொழி கற்கும் சட்டம் 2006” செல்லும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது, அங்கும் இந்தச் சட்டம் செல்லும் என்று கூறப்பட்டு, கழகம் ஆட்சியிலிருந்த வரை இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆசிரியர்கள் 525 பேர் நியமிக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக கற்பதில் எந்தத் தொய்வும் இல்லாமல் தலைவர் கலைஞர் அவர்கள் பார்த்துக் கொண்டார்.

தி.மு.க. அரசு கொண்டுவந்த தமிழ் கற்கும் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை “தமிழ் மொழி கட்டாயம்” என்று 18.9.2014 அன்று அதிமுக அரசுக்கு பெயரளவிற்கு ஆணை வெளியிட்டாலும், இன்றுவரை அந்த அரசு ஆணை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் உட்கட்டமைப்புகள், அதற்கேற்ற விதிமுறைகள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் தமிழ் அல்லாத மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுத்தேர்வு எழுத, தொடர்ந்து விலக்கு பெற்று வருகிறார்கள்.
தமிழை மத்திய ஆட்சி மொழியாக்குவது, தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்குவது போன்றவற்றில் மத்திய அரசை உறுதியாக வலியுறுத்தாமல் அலட்சியம் காட்டி வரும் அதிமுக அரசு செம்மொழிப் பூங்கா, செம்மொழி நூலகம் போன்றவற்றை சீர்குலைத்தது. அதேபோல், இப்போது தமிழ் மொழி கற்கும் சட்டத்தின் நோக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நேரத்தில் அன்னைத் தமிழ் மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. ஆனால், தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் முழுவதுமாக மறக்கடித்து விட வேண்டும் என்று திட்டம்போட்டு மத்திய அரசு செயல்படுவது போல், அதிமுக அரசும் செயல்படுவது கவலையளிப்பது மட்டுமின்றி, தமிழ் மொழியின் மீது மாணவ, மாணவியருக்கு இருக்கும் பற்று மற்றும் பாசத்தை பட்டுப்போகச் செய்யும் ஆபத்தான முயற்சியாக அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். அரசுப் பள்ளிகளிலும் போதிய தமிழாசிரியர்களை நியமித்து, தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கவேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் விதத்தில், ஆக்கபூர்வமான முயற்சிகளில் அதிமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
An historic resolution was passed by Perarignar Anna on 23.1.1968, when the first DMK Government headed by him decided to adopt two-language policy in place of three-language policy which was in force until then, thereby effectively removing Hindi from being offered compulsory in schools across Tamil Nadu along with Tamil and English. This year, 2017, marks the golden jubilee of this monumental resolution, which is hailed as one of the watershed moments along with the Anti-Hindi imposition protests spearheaded by students in ensuring the growth and sustenance of Tamil.
In continuation with the legacy of Perarignar Anna, Thalaivar Kalaignar introduced the 'Tamil Learning Act, 2006' on 13.6.2006, which made it compulsory for students from 1st standard to 10th standard to learn Tamil as a subject in schools. When this Act was challenged in the High Court, the bench constituted by Chief Justice A.P. Sha and D. Murugesan ruled in favour of the 'Tamil Learning Act 2006', based on the rationale that mother tongue is must for development of personality in a child and it is the duty of State Government to ensure this by taking adequate policy measures. Later on, the Act was challenged in Supreme Court only for it to rule in favour of this Act. It is also to be noted that, until the end of DMK regime in 2011, Thalaivar Kalaignar took special interest in ensuring that the Tamil was taught compulsorily in schools across the state and made appointments to 525 Tamil teachers to ensure seamless implementation of the Act.
Based on the 'Tamil Learning Act, 2006' which was brought into force by DMK, ADMK made a namesake order on 18.4.2014, that Tamil is to be compulsorily taught in CBSE schools from 1st standard to 10th standard, which remains inadequately implemented across the state. ADMK Government is acting slow on appointment of teachers, ensuring adequate infrastructure and framing rules and regulations in accordance with the infrastructure in place, which in turn is enabling students whose mother tongue is not Tamil to gain exemption from court of law, from writing public examination.
It is painful to note that ADMK Government is acting with nonchalance with respect to key issues like pressurizing Central Government to make Tamil as the official language of the country along with other scheduled languages and ensuring Tamil to be the official language of Madras High Court. In addition to systematically destroying the sustenance of Semmozhi Poonga, Semmozhi Library, it is now acting without any concern thereby weakening the aims and objectives of the monumental 'Tamil Learning Act 2006'.
Under the present circumstances where the BJP Government in the centre is bulldozing its way to impose Hindi across India in all walks of life, it becomes imperative for the ADMK Government here to ensure that compulsory Tamil instruction is introduced in schools across Tamil Nadu. The lax attitude adopted by ADMK Government in this issue makes one wonder if they are acting in cahoots with the BJP Government in the centre to weaken the resolve of the next generation to learn their mother tongue and stand in guard of Tamil in this state and this attitude of ADMK Government is highly objectionable.
Hence, I sternly request the ADMK Government to move ahead quickly to implement compulsory Tamil language instruction in C.B.S.E. and I.C.S.E. schools from first standard to tenth standard using the provisions of 'Tamil Learning Act, 2006'. I would also like to add that, the Government needs to hasten the appointment of Tamil teachers in Government Schools and make sure that 'Tamil Learning Act, 2006' is implemented in full force as soon as possible.
I also would like to insist the rather lax ADMK Government to take initiative in ensuring that the younger generation is made aware of the rich cultural legacy of Tamil language as it is that which would prove to be a bulwark to fend off future attempts by external forces to impose their language upon us.

Post has attachment
2016 இல் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக நான் கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று இன்றோடு ஓராண்டு காலம் நிறைவடைகிறது. நான் பல நேரங்களில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது, பொதுமக்கள், மாணவர்கள் என பலர் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு என்னிடம் மனுவாக அளித்திருந்தனர். அதனை சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் படிப்படியாக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.
அதனடிப்படையில் இன்று காலை (19-05-2017) கொளத்தூர் தொகுதியில் மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச மடிக்கணினிகளும், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கான ஊக்கத்தொகை மற்றும் முதியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
அதுமட்டுமல்லாமல், தொகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கண் அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவிகளையும் வழங்கினேன்.
அப்போது செய்தியாளர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை சிறந்த நிர்வாகி என்று தெரிவித்திருப்பது பற்றி கேட்டார்கள், அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பாணியிலே சொல்வதென்றால் “மகிழ்ச்சி” என்றேன்.
PhotoPhotoPhotoPhotoPhoto
5/19/17
11 Photos - View album
Wait while more posts are being loaded