Profile cover photo
Profile photo
K Selvan
1,577 followers -
உலகின் புதிய கடவுள்
உலகின் புதிய கடவுள்

1,577 followers
About
K's posts

Post has attachment
Public

Post has attachment
Public

Post has attachment
Public

Post has attachment
Public
உலகின் மிக வலிமையான மனிதன்

எடி ஹால் என ஒரு டாக்குமெண்டரி...நெட்ப்ளிக்ஸில் கண்டேன். பளுதூக்குதல், ஸ்ட்ராங்க்மேன், பாடிபில்டிங்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு படம் விருந்து. மற்றவர்களும் கண்டு ரசிக்கலாம்.

"உலகின் மிக வலிமையான மனிதன்" என்ற ஒரு போட்டி. அதில் கலந்துகொள்ளும் எடி ஹால் எனும் ப்ரிட்டிஷ் வீரரை பற்றிய தொகுப்பு இது. உலகின் வலிமையான மனிதன் போட்டி விடியோக்களை யுடியூபில் கண்டுகளிக்கலாம். பஸ்ஸை கயிறு கட்டி இழுத்தல், 200 கிலோ கற்களை தூக்குதல், ப்ரிட்ஜை முதுகில் தூக்கியபடி ஓடுதல் என ரகளையான போட்டி அது. தவறாமல் விடியோக்களை காணவும்.

ஒரு சாம்பியன் எப்படி உருவாகிறார், விளையாட்டு போட்டிகளும் உடல்நலமும் என பல விசயங்களை எனக்கு உணர்த்திய டாக்குமெண்டரி இது.

எடி ஹால் ஒரு மெகானிக்..உலகின் வலிமையான மனிதன் பணம் கொழிக்கும் விளையாட்டும் அல்ல. அதனால் இங்கிலாந்தின் நம்பர் ஒன் ஸ்ட்ராங்க் மேன் ஆக இருந்தும் எடி ஹால் நாள் முழுக்க மெகானிக் ஆல பணியாற்றி தினம் 10 மணி நேர உடல் உழைப்புக்கு பின் ஜிம்முக்கு சென்று மூன்றுமணிநேர பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

அவரது சம்பளம் அவரது உணவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. ஏனெனில் ஸ்ட்ராங்கேன் போட்டிக்கு ஏகப்பட்ட இறைச்சி, சத்தான காய்கறிகள் என எடுக்கவேன்டும். போட்டிக்கான உபகரணம், பயணசெலவு எல்லாம் இவர் தலையில் தான் பலசமயம் விடியும். அதனால் இவரது மனைவி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுகிறார்.

எடி ஹாலின் கனவுகள் இரன்டு

1) உலக் டெட்லிப்ட் சாதனை புரியவேண்டும்

2) உலகின் வலிமையான மனிதன் பட்டத்தை ஒருமுரையேனும் வெல்லவேண்டும்

இந்த கனவை புரிந்து கொள்ளும் மனைவி அமைந்ததால் அவரது பயணம் சாத்தியமாகிறது. ஆனால் மனைவி வேலை பார்க்க, இவரும் வேலை பார்த்து பயிற்சிகள் செய்ய பல நாட்கள் குழந்தைகளுடன் நேரம் கழிக்க முடியாமல் போகிறது. இந்த சூழலில் ப்ரோட்டீன் பவுடர் விற்கும் கம்பனி ஒன்று இவரை ஸ்பான்சர் செய்ய முன்வருகிறது. மிகுந்த மகிழ்ச்சியடைந்து மெகானிக் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஸ்ட்ராங்மேன் ஆக மாறுகிறார்.

இரண்டாவது கனவை நிறைவேற்ற முடியாமல் ப்ரையன் ஷா எனும் அமெரிக்கரும் ஸன்டூரஸ் ஸவிஸ்காஸ் எனும் லிதுவேனியரும் குறுக்கே நிற்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்களிர்வரும் தான் மாறி, மாறி பட்டம் பெறுகிறார்கள்.

சரி..உலக டெட்லிப்ட் சாதனையாவது செய்யலாம் என முயல்கிறார் எடி ஹால். மிக, மிக குரூரமான முறையில் விதி விளையாடி அந்த சாதனையை இவரை செய்யவிடாமல் தடுக்கிறது. ஆம் உலக சாதனை எடையான 461 கிலோ எனும் எடையை தூக்கிவிடுகிறார் எடிஹால். அதன்பின் மகிழ்ச்சியில் நடுவர் சிக்னல் அளிக்குமுன் எடையை கீழே போட்டுவிட அந்த சாதனை ரெகார்டில் ஏறாமல் போய்விட கண்ணீர்கடலில் மூழ்குகிறார் எடிஹால்.

அதன்பின் வரிசையாக ஸ்ட்ராங்க்மேன் போட்டிகளில் தோல்விகள்..ஒரு கட்டத்தின் ஒகையோவில் ஸ்ட்ராங்க்மேன் போட்டியில் தோற்று ஆறாமிடம் பிடித்த களைப்புடன் உடனே ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறி 36 மணிநேரம் பறந்து ஜெட்லாகுடன் மீண்டும் ஒரு ஸ்ட்ராங்க்மேன் போட்டியில் கலந்துகொள்கிறார்.

அங்கே இவரது கனவுநாயகன் அர்னால்டு...போட்டியில் ஜெயிக்க மீண்டும் டெட்லிப்டில் உலகசாதனை எடையை தூக்கவேண்டும் என்ற நிலை. அர்னால்டை கண்ட மகிழ்ச்சியில் முயற்சி செய்து 462 கிலோ எடையை தூக்கியும் விடுகிறார் எடிஹால். அர்னால்டு அவரை கட்டிபிடித்து பாராட்டுவதுடன் டாகுமெண்டரி நிறைவடைகிறது.

ஒரு சாம்பியனின் வாழ்க்கை, அதிலும் அதிக பணம் புரளாத விளையாட்டுக்களில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை எத்தனை சவால் நிறைந்தது என்பதை இந்த டாக்குமெண்டரி உணர்த்தியது.

அதிலும் எடி ஹால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார். இவரது எடை 200 கிலோவுக்கும் மேல். அதனால் ஸ்லீப் அப்னியா வராமல் இருக்க ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து தான் உறங்கவே முடியும் என்ற நிலை.

யுடியூப் விடியொ ஒன்றில் 500 கிலோ எடையை தூக்கி தன் உலக்சாதனையை தானே முறியடுக்கும் எடி ஹால் விடியோ ஒன்றை கண்டேன். 500 கிலோ மனிதனால் தூக்க முடியாத எடை. அதை தூக்குகையில் அவரது மூளை நரம்புகளில் ரத்தம் கசிந்து சாதனை செய்த அடுத்த நிமிடம் மயங்கி வீழ்கிறார் எடி ஹால். அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாறுகிறார்கள். 500 கிலோ எடையை யாராலும் டெட்லிப்டில் இனி தூக்க முடியாது, தூக்கினால் உயிர் போய்விடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தன் உலகசாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது என்ற மகிழ்ச்சியில் எடி ஹால் முகத்தில் மகிழ்ச்சிக்களை தாண்டவம் ஆடுகிறது.

சாதனை வெறி, வரலாற்றில் இடம்பிடிக்கவேண்டும் என்ற வெறிதான் இவர்களை இயக்குகிறது போல.

அந்த உணர்ச்சியை என்னால் முழுக்க புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனுக்கு இப்படி எதாகினும் ஒரு சவால் அவசியம். இல்லையெனில் எடி ஹால் இன்று யாராலும் அறியப்படாத எளிய ப்ரிட்டிஷ் மெகானிக் ஆக இருந்திருப்பார். தன் உடலின் வரம்புகளை அவரால் அறிந்து கொள்ள இயலாது போயிருக்கும்.

உடல்வளக்கலை என்பது எனக்கும் அதனாலேயே ஒரு இனிய போதை போன்ற விசயம். ஆரோக்கியம் எனும் எல்லையை தாண்டாமல் அந்த வரம்புக்குள் பளுதூக்குகிறேன். அதை தாண்டி சாதனை எனும் நோக்கில் அவர் பளுதூக்குகிறார்.இவரை போன்றவர்களால் உந்தபட்டுத்தான் நானும், இன்னும் பல லட்சம் பேரும் இத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தொம். அதனால் இளைஞர்களை ஊக்குவிக்க சாம்பியன்கள் அவசியம்.

நன்றி எடிஹால்....நிறைய பணம் சேர்க்க நல்வாழ்த்துக்கள்!Photo

Post has attachment
Public
பேலியோ டயட் புத்தகம் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை அடைந்தது.

இதுதான் என் வாழ்க்கையில் முதல் நூல்.....பட்டி, தொட்டியெங்கும் அந்த நூல் மக்களை சென்று சேர்ந்ததுக்கு முக்கிய காரணம்

1) ஆரோக்கியம் & நல்வாழ்வு சொந்தங்கள்
2) தமிழ் முகநூல் சமூகம்
3) ஊடகத்துறை நண்பர்கள்
4) நூலை வெளியிட ஊக்கமளித்து கட்டுரையாக அதை வெளியிட்ட தினமணி, மற்றும் Sa Na Kannan
5) கிழக்கு பதிப்பகம், Badri Seshadri & Haran Prasanna

இப்போது புதிய அட்டைபடத்துடன், புதிய சில மாற்றங்களுடன் பேலியோ டயட் நூல் புதியவடிவில் வெளியாகிறது.

தொடரும் நண்பர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்

அட்டைப்பட புகைப்படத்தை எடுத்தவர் அன்பு நண்பர் Karthic Umayanan
Photo

Post has attachment

Post has attachment
வணக்கம்.

அமெரிக்காவில் நாளை நன்றி அறிவித்தல் தினம்.

அந்த திருநாளில் ஒரு நல்ல செய்தி. ஆரோக்கியம் & நல்வாழ்வு உறுப்பினர் எண்ணிக்கை இன்று இரண்டு லட்சம் எனும் மைல்கல்லை எட்டியது.

செப்டெம்பரில் 1 லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை இரண்டே மாதத்தில் 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதற்கான நன்றியை இந்த நன்றி அறிவிப்பு தினத்தில் செலுத்துவதே முறையாக இருக்கும்.

நன்றி:

ஆரோக்கியம் & நல்வாழ்வு குடும்ப சொந்தங்கள்

பேலியோ லயன் தன்னார்வலர்கள்

அட்மின் டீம்

டயட் கன்சல்டன்டுகள்

தினமணி, விகடன், மல்லிகை மகள், தினகரன் வசந்தம், குங்குமம் டாக்டர், புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடக நண்பர்கள்

பல நகரங்களில் பேலியோ அறிமுகவிழா நடத்திய ஆர்கனைசர்கள், தன்னார்வலர்கள்

தமிழ் முகநூல், ட்விட்டர் தமிழ் சொந்தங்கள்

அனைவர்க்கும் மேலாக நம் அனைவரையும் காத்து இரட்சிக்கும் ஆதிபகவனான பரம்பொருள்

'அனைவர்க்கும் இந்த நன்னாளில் நம் அனைவர் நன்றியும் உரித்தாகுக

அட்மின் டீம் சார்பில்
நியாண்டர் செல்வன்
Photo

Post has attachment
பாத்துகுங்க மக்களே...உங்க எல்லார் கிட்டயும் பேலியோ மோசம்னு சொல்லிட்டு தான் மட்டும் சீக்ரட்டா பெலியோவை பின்பற்றி ட்ரிம்மா உலாவந்துகிட்டிருக்கார் நம்ம +Asif Meeran அண்னாச்சிPhoto

இந்த மாதிரி டிமானிடைசேஷன் மாதிரி விவகாரங்களை விட்டுவிட்டு பதவியில் உள்ள கட்சிகள் ஏன் கீழ்காணும் தீர்வுகளை யோசிக்ககூடாது?

1) பெப்ஸி, கோக், மெக்டாலட்ன்ஸ் மாதிரி பன்னாட்டு குப்பை உணவுகளுக்கு தடை

2) புகையிலை, சிகரெட், மதுவுக்கு தடை

3) அத்தியாவசிய துறை அல்லாத துறைகளில் பன்னாட்டு முதலீட்டுக்கு மறுப்பு

4) உலகவங்கி, ஐஎம்.எப் ஆகிய சர்வதேச கந்துவட்டி ஸ்தாபனங்களில் இருந்து இந்தியா விலகல்

5) ஐநா சபை எனும் சர்வதேச மிக்சர் தின்னும் சபையில் இருந்து கூட்டாக பிற ஆசியநாடுகளுடன் வெளியேறுதல்

6) பன்னாட்டு நிதி முதலீடுகளில் கவனம் செலுத்தி, சர்வதேச நிதியை இந்திய சந்தைகளில் நீன்டகாலமுதலீடுகளுக்கு மட்டுமே கட்டுபடுத்தி பங்கு சந்தை சூதாட்டத்தை தடுத்தல்

7) காட் ஒப்பந்தத்தை கிழித்தெறிதல்..இதற்கு பிற உலகநாடுகளின் ஆதரவை பெறுதல் அவசியம். ரஷ்யா, சிரியா, இரான் முதலிய நாடுகளுடன் சேர்ந்து பன்னாட்டு நிதி முதலீடுகளுக்கு எதிரான அமைப்பை உருவாக்கல்...

உலகமயம் வேறு, சுதந்திர பொருளாதாரம் வேறு எனும் தெளிவு மக்களுக்கு உள்ளது. அரசியல் பொருளாதார நிபுனர்க்ளுக்கு இல்லை என்பதே வேதனையான விஷயம்.

Post has attachment
ஆண்மயமான உலகில் ஒரு பெண் ஜனாதிபதி சாத்தியமா?

1920ல் பெண்களுக்கு அமெரிக்காவில் ஓட்டுரிமை வழங்கபடுகையில் "அடிமைதளையில் இருந்து ஜனாதிபதி பதவிக்கு" என ஒரு கார்ட்டூன் வெளியிடபட்டது. அடுக்களையில் இருக்கும் பெண் உரிமையில் ஒவ்வொரு படியாக ஏறிச்சென்று அடையவேண்டிய இறுதி இலக்காக அமெரிக்க ஜனாதிபதி பதவி சுட்டிகாட்டபட்டது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கடந்தபின் ஒரே ஒரு பெண் அந்த இறுதி இலக்கை நோக்கி நெருங்கி வந்தார். "10,000 ஆண்டுகால ஆணாதிக்கம் இன்றுடன் அழிந்தது" என முழங்கினார் மைக்கேல் மூர். இலரி லீடிங்கில் இருந்து வெற்றியின் இறுதிபடியில் காலை வைக்கும் நேரம், கடைசிபந்தில் சிக்சர் அடித்து வெற்றி இலக்கை தொட்ட ஜாவிட் மியாண்டட் போல விஸ்கான்ஸின், மிச்சிகன், பென்சில்வேனியாவை வென்று வெற்றிக்கனியை தொட்டார் டிரம்ப்.

இலரி ஜனாதிபதி ஆவார் என எதிர்பார்த்த கோடிக்கணக்கான பெண்ணியவாதிகள் கண்ணீரில் மூழ்கினார்கள். அந்த இறுதிப்படி இன்னமும் எட்ட முடியாத பகல்கனவாகவே இருக்கிறது.

இலரி ஒரு ப்ளூகாலர் உழைக்கும் குடும்பத்தில் பிறந்தவர். அவரது கல்யாணத்துக்கு முந்தைய பெயர் இலரி ரோதம். நியூயார்க்கில் வக்கீலுக்கு படிக்கையில் பில் க்ளின்டன் எனும் ஒரு வக்கீலை சந்திக்கிறார். பில் ஆர்கன்சா மாநிலத்துக்கு கவர்னராக ஆகும் முயற்சியில் இருக்கிறார். "என்னுடன் ஆர்கன்சா வா" என அழைக்கிறார்.

நியுயார்க் மாதிரி பெருநகரில் வக்கீல் ஆகி வாழ்க்கையில் உயரும் லட்சியத்துடன் இருந்த இலரிக்கு ஆர்கன்சா மாதிரி கிராமபகுதிக்கு போக விருப்பம் இல்லை. "பார்க்கலாம்" என சொல்லி பில் க்ளின்டனை அனுப்பிவிட்டு தன் படிப்பை தொடர்கிறார். புகழ்பெற்ற நியூயார் போர்ட் எக்ஸாமை எழுதுகிறார். அதில் தோல்வி அடைகிறார். நியூயார்க்கில் வக்கீல் ஆகும் வாய்ப்பை தவறவிடுகிறார்.

அதன்பின் பில் க்ளின்டனுக்கு போன் செய்கிறார். ஆர்கன்சாவுக்கு செல்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பில் க்ளின்டன் தேர்தலில் ஜெயித்து கவர்னர் ஆகிறார். இலரி ஆர்கன்சா மாநில முதல் பெண்மணி ஆகிறார்.

இலரியின் கெரியருக்கும், முதல் பெண் எனும் அந்தச்துக்குமான போராட்டம் இங்கிருந்து துவங்குகிறது. இலரியை ஆர்கன்சா மக்கள் நியூயார்க் மேட்டுகுடி பெண்ணாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு தகுந்தபடி தன்னை மாற்றிகொள்ள இலரி "இலரி ரோதம்" எனும்பெயரை உதறி விட்டு "இலரி க்ளின்டன்" ஆகிறார்.

இலரிக்கு இலரி க்ளின்டன் என பெயரை மாற்றிகொள்ள விருப்பம் இல்லை. ஆனால் மாற்றும் சூழல் உருவாகிறது.
முதல் பெண்மணி அந்தஸ்துடன் ஆர்கன்சாவில் உள்ள வால்மார்ட் மாதிரி பெரிய கம்பனிகளின் போர்டில் அமரும் வாய்ப்பு கிட்டுகிறது. நியூயார்க்கில் பிராக்டிஸ் செய்திருந்தாலும் கிடைத்திராத வெற்றி இது. செல்ஸி எனும் மகளும் பிறக்க இலரியின் கெரியர் உச்சத்தில் கொடிகட்டி பறக்கிறது

கணவரும் வெற்றி மேல் வெற்றிகளை ஈட்டுகிறார். அதே சமயம் வெற்றிகரமான ஆண்கள் நடுத்தர வயதில் செய்யும் தவறுகலை செய்ய துவங்குகிறார். அவருக்கு பெண் விசயத்தில் ஒத்துழைக்க சில ஸ்பெஷல் பாடிகாட்டுகளே இருக்கிறார்கள். பில் க்ளின்டனின் காதலிகளை யாருக்கும் தெரியாது ஓட்டலுக்கு கொண்டுவந்து விட,போக என இது வளர்கிறது.

இலரிக்கு இது தெரியுமா, பில் மறைத்தாரா என்பது குறித்த வாதங்கள் பலவகையாக இருந்தாலும் இலரியும், பில்லும் அப்போது இது எதையும் வெளியே காட்டிகொள்ளவில்லை. பின்னாளில் 2013ல் இலரியின் நெருங்கிய வலர்ப்புமகள் போன்ற ஹ்யூமா ஆபிதீன் கணவர் இதே போன்ற விவகாரத்தில் மாட்டுகையில் இலரி கூறிய அறிவுரையை வைத்து அவரது மனநிலையை இதில் ஒருவாறு யூகிக்கலாம்.

"எல்லா ஆண்களும் ஒன்றுதான். இவனை விவாகரத்து செய்து இன்னொருவனை கல்யானம் செய்தாலும் அவன் ஒழுங்காக இருப்பான் என எந்த உத்தரவாதமும் இல்லை. நீ உன் குழந்தையையும், கெரியரையும் பார்"

பில் க்ளின்டன் அதன்பின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கிறார். அவரது தவறுகள் அவரை துரத்துகின்றன. பில்க்ளின்டனுடன் உறவுகொண்ட ஜெனிபர் பிளவர்ஸ் எனும் பெண் அதை வெளியே சொல்ல தேர்தலில் க்ளின்டன் தோற்கும் நிலை உருவாகிறது.

கணவனுக்கு ஆதரவாக இலரி "என் புருசன் ரொம்ப நல்லவரு" என ஒரு பேட்டியை அளிக்கிறார். பில் க்ளின்டன் தேர்தலில் ஜெயிக்க அது முக்கிய காரணமாக சொல்லபடுகிறது. ஜெயித்தபின் இலரிக்கு செய்யவேண்டிய நன்றிகடனாக அவரிடம் "இலரிகேர்" எனும் ஹெல்த்கேர் பில்லை ஒப்படைக்கிறார் பில். இன்றைய ஒபாமாகேர் போல அன்றைய டெமக்ராட்டுகளின் கனவு திட்டம் அது. இலரி அதில் மிக மோசமாக தோல்வி அடைகிறார்.

டெமக்ராட்டுகல் 1994 இடைதேர்தலில் படுமோசமாக தோற்கிறார்கள். இலரியின் அரசியல் வாழ்க்கை அத்துடன் அழிந்ததாக கருதபடுகிறது. நாட்டின் முதக் பெண்மணியாக வெள்ளைமாளிகையில் முடங்குகிறார் இலரி

அதன்பின் மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் பூதாகரமாக வெடிக்க கட்சி மற்றும் கணவ்ர் எதிர்காலம் மீன்டும் இலரியின் கையில் வருகிறது. அவர் பிள்க்ளின்டனை விவாக்ரத்து செய்தால் கட்சியின் இமேஜ் பலமாக பாதிக்காப்டும். க்ளின்டன் இம்பீச் செய்யபடுவார் என்ற நிலை. அல்கோர் அடுத்து ஜெயிப்பதும் துர்லபம்.
இலரி கணவன் மற்றும் கட்சிக்காக முழுமூச்சாக களமிறங்குகிறார். மோனிகா விவகாரத்தில் கணவன் தரப்பில் உறுதியாக நிற்கிறார். பில் இம்பீச்மெண்டில் இருந்து தப்புகிறார். கட்சி இந்த நன்றிக்கடனை மறக்கவே இல்லை. இலரி 2000ம் ஆன்டில் செனட்டர் தேர்தலில் நின்று ஜெயிக்கிரார். கணவர் ஓய்வு பெற்ற அதே வருடம் நியூயார் செனட்டராக தன் அரசியல்வாழ்வை மீன்டும் துவக்குகிறார்.

அதன்பின் மனைவிக்கு தான் செய்யவேண்டிய ஒரே நன்றிக்கடன் அவரை ஜனாதிபதி ஆக்குவது என பில் க்ளின்டன் முடிவெடுக்கிறார். அவரது ஆதரவாளகளும் இலரிக்கு உழைக்கிறார்கள். 2008ம் வருடம் அவர்கள் கனவு கூடிவரும் ஆண்டு. அந்த ஆண்டு பராக் ஒபாமா எனும் எதிர்பாராத புயல் இலரியை தாக்குகிறது. இலரி செக்ரட்டரி ஆப் ஸ்டேட் ஆகி 2016ம் ஆண்டு எனும் கனவுடன் தன்கெரியரை தொடர்கிறார்.

2016ம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிமேல் மக்கள் நல்ல திருப்தியில் இருக்கும் ஆண்டு. பெரிதாக பொருலாதார சிக்கல் எதுவுமில்லை. பெண்ணியம், முற்போக்குவாத கொள்கைகள் உச்சத்தில் இருக்கும் தருணம். பராக் ஒபாமாவும், கட்சியில் உள்ள அனைத்து பெரியவர்களும் சேர்ந்து இலரிக்கு வழிவிடுகிறார்கள். வரலாற்றின் முதல் தடவையாக ஒரு பெண் டெமக்ராடிக்கட்சி நாமினி ஆகிறார்.

எதிரே களத்தில் நிற்பது டிரம்ப் எனும் கோமாளி. ஆனாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவம். வெற்றி உறுதி என்ற நிலையில் போர் துவங்குகிறது. டிரம்ம்பின் மேல் ஆணாதிக்கவாதி எனும் அஸ்திரம் எய்யபடுகையில் அவர் "உன் கணவன் மட்டும் யோக்கியமா" என திருப்பி அடிக்கிறார். பில் க்ளின்டனின் காதலிகளை அழைத்து பொதுகூட்டங்களில் பேசவைத்து அந்த அஸ்திரத்தை மழுங்கடிக்கிறார்.

இலரியின் உடல்நலனும் கெடுகிறது அவர் நம்பிய ஹியூமா ஆப்திதீனின் கணவன் அந்தோணி வெய்னர் மீன்டும் பாலியல் குற்ற்சாட்டில் மாட்டி, அவரது இமெயிலில் இலரியின் இமெயிலக்ள் இருந்து தேர்தலின் கடைச்வாரத்தில் இலரியின் பெயர் பயங்கரமாக கெடுகிறது. தேர்தல் நாளில் எதிர்பாராத தோல்வி.

மகத்தான தோல்விக்கு பின் மூன்றாம் நாள் குழந்தைகள் நல நிதி திரட்டலுக்கு வரும் இலரி உருக்கமாக பேசுகிரார் "இன்று இங்கே வந்து பேசுவது எனக்கு எளிதாக இல்லை. டிவியை பார்க்காமல் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தபடி எதவது ஒரு மூலையில் சுருண்டு படுத்துகொள்ளவேண்டும் போல இருக்கிறது"

தான் அணிந்துகொண்ட முதல் பெண்மணி, செக்ரட்டரி, செனட்டர் என்ற முகமூடிகளை எல்லாம் தான்டி இலரியின் இரும்பு மனதுக்குள் இருக்கும் ஒரு எளிய மனிதரை அமெரிக்கர்கள் அன்று இரண்டாம் முறையாக கண்டார்கள்.

முதல் முறை நியூகாம்ப்ஷயர் பிரைமரியில் அவர் அழுதது. இலரி அழுவார் என்பதையே அமெரிகக்ர்கள் அன்றுதான் அறிந்தார்கள். தோற்கவேண்டிய நியூகாம்ப்ஷயர் பிரைமரியை இலரி அதனாலேயே வென்றார்.
இரண்டாம் முறை அதை அவர்கள் காண்கையில் இலரியின் அரசியல்வாழ்க்கை அஸ்தமித்து விட்டிருந்தது.

இலரி வீழ்ந்தது ஆணாதிக்கத்தில். ஆனால் பால்ரும் நினைப்பது போல டிரம்ப்பின் ஆனாதிக்கம் மட்டும் அதற்கு காரணம் அல்ல. தன் கணவர், கட்சி ஆகியோர் அவரிடம் எதிர்பார்த்த தியாகங்களை ஒரு மனைவியாக, முதல் பெண்மணியாக, கட்சி தொன்டராக அவர் செய்ததே அவரை இறுதியில் வீழ்த்தியது.

பெண்களால் எட்ட முடியாத சிகரமா அதிபர் பதவி?

நிச்சயமாக இல்லை. எலிசபத் வாரன் இந்த தேர்தலில் நின்றிருந்தால் வெற்றி உறுதி என சொல்கிறார்கள். டிரம்ப்பின் ஆளுமையை எதிர்கொள்ள டெமக்ராடிக் கட்சியின் இருந்த ஒரே ஆளுமை எலிசபத் வாரன் மட்டுமே. அவரும் "இது இலரியின் ஆண்டு" என ஒதுங்கி வழிவிட்டார். அது இறுதியில் பெண்களின் ஆண்டாக அது அமையாமல் செய்துவிட்டது.

இலரிமேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் வாழ்க்கையில் செய்துகொன்ட காம்ப்ரமைஸ்களை உலகின் எந்த நாட்டு பெண்ணும் புரிந்துகொள்வாள். அது அவர்களிடம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமூகமும், குடும்பமும் எதிர்பார்க்கும் காம்ப்ரமைஸ்கள்....வரலாற் பெண்கள் மேல் சுமத்தும் இச்சுமைகளை சுமக்கமுடியாமல் சுமந்து வீழ்ந்த பெண் இலரி. அவரது வாழ்க்கை நம் அனைவர்க்கும் ஒரு படிப்பினையாக இருப்பதே நல்லது.

இலரி எனும் போராளிக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.
Photo
Wait while more posts are being loaded