Profile cover photo
Profile photo
Sircon Tech
About
Posts

Post has attachment
காற்றில் விம்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

சிறிய புரொஜெக்டர்களின்(Projector) ஊடாக பெரிய திரைகளில் விம்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
இவ்வாறிருக்கையில் திரைகள் இன்றி காற்றிலேயே விம்பங்களை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பத்தினை மிட்சுபிஸி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Aerial Display எனப்படும் இத் தொழில்நுட்பத்தின் ஊடாக 142 சென்ரிமீற்றர்கள் வரையான விம்பங்கள் உருவாக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நிழற்படங்கள் மட்டுமின்றி, வீடியோ காட்சிகளின் விம்பங்களையும் காற்றில் உருவாக்கக்கூடிய இத் தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2020ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தொழில்நுட்பம் செயற்படும் விதத்தினை விளக்கும் படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
Photo

Post has attachment
அட்டகாசமான அம்சங்களுடன் Galaxy S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்திய சாம்சங் 

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது S7 மற்றும் Galaxy S7 Edge மொடல்களை சாம்சங் நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபலை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கண்காட்சியில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் தனது Galaxy S7 Galaxy S7 Edge மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.

5.5 மற்றும் 5.1 இன்ச் தொடுதிரை வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல்கள் Water Resistant வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
PhotoPhotoPhotoPhoto
2016-02-23
4 Photos - View album

Post has attachment
Whatsapp குறுந்தகவல்கள், படங்களை இனி கூகுள் ட்ரைவில் சேமிக்கலாம்

ஆண்டிராய்டில் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் Whatsapp அரட்டை, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவில்(Google Drive) சேமித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதோடு, வேறொரு புதிய சாதனத்துக்கும் அதை இடமாற்றம் செய்துகொள்ள முடியும்.

இந்த புதிய வசதி இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும். ஆகவே Whatsapp செட்டிங்ஸ்(Seetings) பக்கத்தை அடிக்கடி பரிசோதியுங்கள்".

Whatsapp நிறுவனமும் இதே தகவலைப் பகிர்ந்துள்ளது.

உங்களின் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை, கூகுள் நிறுவனத்தில் சேமித்து வைக்கலாம்.

உங்களின் செல்பேசி தொலைந்துவிட்டாலோ அல்லது நீங்கள் வேறு ஸ்மார்ட்போனுக்கு மாறினாலோ, உங்களின் சாட் தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது
Photo

Post has attachment
கணணியின் பாதுகாப்பு அரண் “Firewall”

Firewall என்பது ஒரு நமது கணனிக்கும், இணையத்துக்கும் இடையே அரணாக உள்ள பகுதியாகும்.
Firewall பொதுவாக மென்பொருளாகவோ அல்லது வன்பொருளாவோ அல்லது இரண்டும் சேர்ந்ததாகவோ இருக்கும்.

அதாவது நமது கணனியை தாக்கவரும் ஒரு Programme-யினை தடுக்கும் ஒரு Hardware அல்லது Software Programme ஆகும்.

பயர்வாலின் பணி

பயர்வால், நம் கணனியில் நுழைந்து, தனி நபர் தகவல்களைத் திருடும் ஹேக்கர்களிடமிருந்து நம் கணனியை பாதுகாக்கிறது.

அதுமட்டுமின்றி இப்போது கணனிகளில் பயன்படுத்தும் அனைத்து Operating System-ங்களிலும் பயர்வால் ஒன்றைக் கொண்டுள்ளன.

Windows Operating System - ங்களிலும் மைக்ரோசொப்ட் நிறுவனம் பயர்வால் ஒன்றைத் தந்து, அதனை அவ்வப்போது தானாகவே Update செய்து வருகிறது.

ஆனாலும் விண்டோஸ் இயங்கும் கணனிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

ஏனென்றால், உலகெங்கும் விண்டோஸ் இயங்கும் கணனிகள் தான் ஹேக்கர்களின் இலக்குகளாக உள்ளன. 90% க்கும் மேலான கணனிகளில், Windows இயங்குவதே காரணம்.

நமக்குத் தெரியாமல், நாம் உணராமல், நம் கணனி இயங்குகையில், உள்ளே நுழைந்திடும் ஹேக்கர்களின் முயற்சியை முறியடிப்பதும், தடுப்பதுமே பயர்வால் ஒன்றின் செயல்பாடு.

இது கணனி உள்ளேயே இருந்து கொண்டு இந்த பணியில் ஈடுபடுவதால், இதனை உள்நிலைப் பாதுகாப்பு (inbound protection) என அழைக்கின்றனர்.

அத்துடன், , Worms, Virus மற்றும் Spam என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை மற்ற கணனிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.

இலவச Firewall தொகுப்புகளை எந்த எந்த தளத்திலிருந்து பெறலாம்?

ஸோன் அலார்ம் (ZoneAlarm) என்னும் பயர்வால் தொகுப்பினை Zone Labs என்னும் நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்குகிறது.

இது தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசம். இந்த தளத்தில் சரியாகச் சென்று இலவச பதிப்பினைக் கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்.

Zone Alarm Security Suite மற்றும் Zone Alarm Pro என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கும் பயர்வால்களும் இங்கு கிடைக்கும்.
Photo

Post has attachment
சம்சுங் அறிமுகம் செய்யும் நவீன டேப்லட்
 
முன்னணி மொபைல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான சம்சுங் சில தினங்களுக்கு முன்னர் Samsung Galaxy View எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டேப்லட் ஆனது WiFi தொழில்நுட்பத்தினை மாத்திரம் கொண்டதாகவும், WiFi மற்றும் LTE தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் இரு பதிப்புக்களை வெளியிட்டுள்ளது.

இவற்றில் WiFi தொழில்நுட்பதி்னைக் கொண்ட டேப்லட்டின் விலை 599 டொலர்கள் ஆகவும், WiFi மற்றும் LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் 699 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் இந்த டேப்லட்டின் சிறம்பம்சங்களாக 18.4 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, 1.6GHz வேகத்தில் செயல்படக்கூடிய Oocta Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 32GB மற்றும் 64GB தரப்பட்டுள்ளன.

தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாகவும், 5700 mA மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Photo

Post has attachment
விண்டோஸ்10 பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல்

விண்டோஸ் 10 தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் புதிய இணையப்பக்கத்தை மைக்ரோசோப்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம்  கணணிகளுக்கான மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழ்ந்துவருகிறது.

இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான விண்டோஸ் 10 இயங்குதளம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விண்டோஸ்10 இயங்குதளம் குறித்த புதிய மேம்படுத்தல்கள், தகவல்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் வழங்க மைக்ரோசோப்ட்  நிறுவனம் முடிவு செய்திருந்தது.

தற்போது இதற்காக புதிய இணையப்பக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த பக்கத்தில் விண்டோஸ்10 குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

மேலும் அங்கீகாரம், மேம்படுத்தல்களை நிறுவுதல், மற்றும் இயங்குதளத்தை  நிறுவுதல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மைக்ரோசோப்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, எங்கள் வாடிக்கையாளர்களையும் அவர்களின் கருத்துகளையும் இணைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இதன் காரணமாக விண்டோஸ்10 மேம்படுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை விண்டோஸ் மேம்படுத்தல் பக்கத்தில் தெரிவிக்கவுள்ளோம்.

எனவே மேம்படுத்தல் போன்ற முக்கிய தகவல்களின் சுறுக்கங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழு தகவலையும் அறிந்துகொள்ளலாம்.

மேம்படுத்தல் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் போதெல்லாம் இந்த பக்கம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Photo

Post has attachment
கூகுள் தரும் மற்றுமொரு இலவச சேமிப்பு வசதி

Safer Internet Day 2016 இனை கொண்டாடும் முகமாக கூகுள் நிறுவனம் 2GB வரையான இலவச சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது.
இம் மேலதிக சேமிப்பு வசதியானது கூகுள் ட்ரைவினூடாகவே வழங்கப்படுவதுடன் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதினை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனைப் பேறுவதற்கு கூகுள் கணக்கினுள் உள்நுழைந்து பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக இரண்டு நிலை சரிபார்ப்பு, கோப்புக்களை மீட்டெடுத்தல், ஏனைய சாதனங்களுடன் இணைத்தல் போன்ற செயற்பாடுகளின் போதான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.
Photo

Post has attachment
450 டொலர் விலையில் Samsung Galaxy S6

அமெரிக்காவில் Samsung Galaxy S6, 450 டொலர் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
5.1 இன்ச் தொடுதிரையுடன், முழு HD தீர்மானம் மற்றும் 2560 x 1440 பிக்சல் வசதி கொண்டது.

மேலும் 3GB RAM, 32GB சேமிப்பு வசதி கொண்டது, Exynos 7420 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, 5 மெகாபிக்சல் கொண்ட முன்புற கமெரா மற்றும் 16 மெகபிக்சல் கொண்ட பின்புற கமெரா வசதி கொண்டுள்ளது.
Photo

Post has attachment
இதோ வந்துவிட்டது Finger Print Pad Lock

தொழில்நுட்ப வளர்ச்சியில் கைவிரல் அடையாளமானது (Finger Print) நுட்பம் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக பேட் லாக் (Pad Lock) யிலும் இத்தொழில்நுட்பம் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பினை தரக்கூடிய இப் புதிய பேட் லாக்கில் ப்ளூடூத் வலையமைப்பு காணப்படுவதுடன் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தைச் சேர்ந்த David Tao என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த பேட் லாக் ஆனது தற்போது விளம்பரம் மற்றும் நிதி திரட்டல் நோக்கங்களுக்காக Indiegogo தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது
Photo

Post has attachment

விரைவில் அறிமுகமாகும் Microsoft Lumia 650

மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள Microsoft Lumia 650 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Qualcomm Snapdragon 210 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.

மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
Photo
Wait while more posts are being loaded