Profile cover photo
Profile photo
thomas ruban
542 followers -
இது தான் உண்மையான நிலவர்மா..?? உண்மையில் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள் எல்லாம் நம்பியார் காலத்து ஆட்கள் போல பணத்தை பதுக்கி வைத்திருப்பார்கள் என்று நம்புவதே அபத்தம். பணம் பரவலாக எல்லா இடங்களிலும் போயிருக்கும் அல்லது இங்கிருந்து ஹவாலாவில் இந்தியாவுக்கு வெளியே இந்நேரத்துக்கு போயிருக்கக் கூடும். அவை அனைத்தும் நாளைக்கு FDI என்கிறப் பெயரில் நுழையலாம். இதில் உடனடியாக பாதிக்கப்படப் போகிறவர்கள் சிறு, குறு வியாபாரிகள், சம்பளக் காரர்கள், தண்டலில் கலெக்‌ஷன் எடுப்பவர்கள், வட்டிக்கு விட காசை வைத்திருப்பவர்கள், கோயம்பேட்டில் தினமும் பல்லாயிரங்கள் கொடுத்து சரக்கு எடுப்பவர்கள். இதை என்னமோ மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பக்த கோடிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்துக்கு பங்களாதேஷிலோ, பாகிஸ்தானிலோ ஏன் உள்ளூரிலோ ரூ 50 / ரூ 100 தாள்கள் அடிக்க ஆரம்பித்திருப்பார்கள். இதை விட அடுத்த 2 மாதத்துக்கு இலாபகரமான தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது. நாளை முதல் இந்தியாவின் அதிக இலாபகரமான தொழில் வங்கியில் மாற்றுவதை விட 10% கமிஷன் கொடுத்தால் ரூ.500/ரூ.1000 நோட்டுகளுக்கு ரூ.100/ரூ.50 தாள் தருவதாக தான் இருக்கும். ஸ்மார்ட்டான முதலாளிகள் இன்றைக்கே தங்களுடைய வங்கிகளில் 100/50/20/10-னை தனியாக எடுத்து வைக்க சொல்லி இருப்பார்கள். நாளை காலை இந்தியா ஸ்தம்பிக்கும். எல்லா கட்சிகளும் இதை எதிர்க்கும். குறிப்பாக பாஜகவின் முக்கிய ஒட்டு வங்கியான ‘பனியா’ கும்பல். இன்றைக்கு வரைக்கும் திருட்டு கணக்கு எழுதுவதில் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது. செளகார்பேட்டையில் சேட்டு வாயிலும், வயிற்றிலும் இந்நேரம் அடித்துக் கொண்டே பணம் மாற்றுவார். இது சட்டரீதியாக நிற்குமா என்று தெரியவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர படலாம். இந்த கண்டெயினர் வைத்திருப்பவர்கள் நிலை கொஞ்சம் பாவம் தான். மேலும், பல்வேறு இடங்களில் தேர்தல் செலவிற்காக பணமெடுத்து வைத்திருப்பவர்கள் நிலைமை பரிதாபம். இப்படியெல்லாம் நாம் பொங்கிக் கொண்டிருக்கும் போது மோடியும், முப்படை தளபதிகளும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும் ? நாம் ஏதாவது coupற்கு தயாராகிறோமா ? அல்லது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப் போகிறோமா ? எதற்காக இரண்டு மாத liquidityயை சமூகத்திலிருந்தும், சந்தையிலிருந்தும் உறிஞ்ச வேண்டும் ? இதை எப்படி ஆர்.பி. ஐ ஒத்துக் கொண்டது ? இவை அனைத்தும் ஹேஷ்யங்கள் தான். இந்திய அரசியலமைப்பு சட்டம் வலுவானது என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது, ஆனாலும் இந்த கோஷ்டிகளை நம்ப முடியாது. இவர்கள் தங்களுடைய அதிகாரங்களைக் காத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள். நன்றி fb.
இது தான் உண்மையான நிலவர்மா..?? உண்மையில் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள் எல்லாம் நம்பியார் காலத்து ஆட்கள் போல பணத்தை பதுக்கி வைத்திருப்பார்கள் என்று நம்புவதே அபத்தம். பணம் பரவலாக எல்லா இடங்களிலும் போயிருக்கும் அல்லது இங்கிருந்து ஹவாலாவில் இந்தியாவுக்கு வெளியே இந்நேரத்துக்கு போயிருக்கக் கூடும். அவை அனைத்தும் நாளைக்கு FDI என்கிறப் பெயரில் நுழையலாம். இதில் உடனடியாக பாதிக்கப்படப் போகிறவர்கள் சிறு, குறு வியாபாரிகள், சம்பளக் காரர்கள், தண்டலில் கலெக்‌ஷன் எடுப்பவர்கள், வட்டிக்கு விட காசை வைத்திருப்பவர்கள், கோயம்பேட்டில் தினமும் பல்லாயிரங்கள் கொடுத்து சரக்கு எடுப்பவர்கள். இதை என்னமோ மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பக்த கோடிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்துக்கு பங்களாதேஷிலோ, பாகிஸ்தானிலோ ஏன் உள்ளூரிலோ ரூ 50 / ரூ 100 தாள்கள் அடிக்க ஆரம்பித்திருப்பார்கள். இதை விட அடுத்த 2 மாதத்துக்கு இலாபகரமான தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது. நாளை முதல் இந்தியாவின் அதிக இலாபகரமான தொழில் வங்கியில் மாற்றுவதை விட 10% கமிஷன் கொடுத்தால் ரூ.500/ரூ.1000 நோட்டுகளுக்கு ரூ.100/ரூ.50 தாள் தருவதாக தான் இருக்கும். ஸ்மார்ட்டான முதலாளிகள் இன்றைக்கே தங்களுடைய வங்கிகளில் 100/50/20/10-னை தனியாக எடுத்து வைக்க சொல்லி இருப்பார்கள். நாளை காலை இந்தியா ஸ்தம்பிக்கும். எல்லா கட்சிகளும் இதை எதிர்க்கும். குறிப்பாக பாஜகவின் முக்கிய ஒட்டு வங்கியான ‘பனியா’ கும்பல். இன்றைக்கு வரைக்கும் திருட்டு கணக்கு எழுதுவதில் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது. செளகார்பேட்டையில் சேட்டு வாயிலும், வயிற்றிலும் இந்நேரம் அடித்துக் கொண்டே பணம் மாற்றுவார். இது சட்டரீதியாக நிற்குமா என்று தெரியவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர படலாம். இந்த கண்டெயினர் வைத்திருப்பவர்கள் நிலை கொஞ்சம் பாவம் தான். மேலும், பல்வேறு இடங்களில் தேர்தல் செலவிற்காக பணமெடுத்து வைத்திருப்பவர்கள் நிலைமை பரிதாபம். இப்படியெல்லாம் நாம் பொங்கிக் கொண்டிருக்கும் போது மோடியும், முப்படை தளபதிகளும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும் ? நாம் ஏதாவது coupற்கு தயாராகிறோமா ? அல்லது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப் போகிறோமா ? எதற்காக இரண்டு மாத liquidityயை சமூகத்திலிருந்தும், சந்தையிலிருந்தும் உறிஞ்ச வேண்டும் ? இதை எப்படி ஆர்.பி. ஐ ஒத்துக் கொண்டது ? இவை அனைத்தும் ஹேஷ்யங்கள் தான். இந்திய அரசியலமைப்பு சட்டம் வலுவானது என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது, ஆனாலும் இந்த கோஷ்டிகளை நம்ப முடியாது. இவர்கள் தங்களுடைய அதிகாரங்களைக் காத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள். நன்றி fb.

542 followers
About
Posts

Post has attachment
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..🙂💐

உங்களிடம் இருந்து நான் கற்றுகொள்வதும், பெற்றுக்கொள்வதும் ஏராளம்..

#டிசம்பர் 12
Photo
Video
12/12/2017
2 Photos - View album
Add a comment...

Post has attachment
ஊரான் வீட்டு நெய்யே..
என் பொண்டாட்டி கையே... என்பது , மத்திய அரசு கொண்டு வரவுள்ள FRDI சட்டத்திற்கு பொருந்தும்..
https://m.facebook.com/story.php?story_fbid=1602636659759101&id=100000383483109
Add a comment...

Post has attachment
சேலம் அஸ்தம்பட்டியிலிருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் சாரதா கல்லூரி அருகே சண்முகா மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் ..
சேலத்தில் டெங்கு தீவிரம் அடைந்திருப்பதை அடுத்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தினந்தோறும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று சாரதா கல்லூரி அருகே உள்ள பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் விதத்தில் துப்புறவு பணிகளையும், விழிப்புணர்வு பிரச்சராங்களும் செய்து வந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்ததை அடுத்து சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் அந்த மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து குடிநீர் இணைப்பையும் துண்டித்தார்.
இன்று காலை சேலம் அஸ்தம்பட்டியிலிருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் சாரதா கல்லூரி அருகே சண்முகா மருத்துவமனை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டார்கள். அப்போது சண்முகா மருத்துவமனை வளாகத்திற்குள் ஆங்காங்கே மருத்துவக் கழிவுப் பொருட்கள் இருப்பதை பார்த்து மருத்துவமனைக்குள் ஆய்வு செய்யச் சென்றார்கள்.
மருத்துவமனைக்குள் ஆய்வு செய்ததில் 3 குடிநீர் தொட்டிகளில் கொசு புளுக்கள் உற்பத்தியாகி இருந்ததை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். உடனே மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பன்னீர்செல்வமும் மாநகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள். அதையடுத்து மாநகர ஆணையர் சதீஷூக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே மாநகராட்சி ஆணையர் சதீஷ் சம்பவ இடத்திற்கு வந்தார்.
ஆணையர் வந்த பிறகு தொடர்ந்து ஆய்வு செய்ததில் 5 குடிநீர் தொட்டிகளில் அதிர்ச்சிக் காட்சிகள் தென்பட்டன. அனைத்துத் தொட்டிகளிலும் புளுக்கள் இருந்ததோடு ஒரு குடிநீர் தொட்டியில் கொடிய விஷம் உடைய பாம்பும் படுத்திருந்தது. அந்த குடிநீரை மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பருகுகிறார்கள். அது தவிர மருத்துவமனை குடோனில் 3 டன் மதிப்புடைய மருத்துவக் கழிவுகள் இருந்ததை அடுத்து அந்த மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், குடிநீர் இணைப்பும், சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகள் வைத்திருந்ததற்காக வழக்கும் போடப்பட்டது.
இதுப்பற்றி மாநகராட்சி கமிஷனர் சதீஷ், ''தினந்தோறும் காலை 300 குழுக்களாக பிரிந்து மாநகராட்சி முழுவதும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணிகளை தொடந்து ஒரு மாதமாக நடத்தி வருகிறோம். சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. அது வருத்தம் அளிக்கிறது. சேலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொண்டு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆனால் சில தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தராமல் இருக்கிறார்கள். இன்று சண்முகா மருத்துவமனையில் ஆய்வு செய்த போது நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தி ஆவதற்கானப் பல காரணங்கள் அங்கு இருந்ததோடு, மருத்துவக் கழிவுகளை அங்கு கொட்டி வைத்திருந்தார்கள். அதையடுத்து அந்த மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்திற்குள் அபராத தொகை கட்டவில்லை என்றால் வருவாய் வரி வசூல் சட்டத்தின் படி அந்த மருத்துவமனையின் சொத்துகளை பறிமுதல் செய்து அபராத தொகையை மாநகராட்சி எடுத்துக் கொள்ளும்'' என்றார்.
இதுகுறித்து சண்முகா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பன்னீர்செல்வம்,''பாம்பு இருந்த அந்த தொட்டியில் உள்ள நீர் செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் தொட்டி. என்றார்.
http://bit.ly/2yYZ9d3
Add a comment...

Post has attachment
பெட்ரோல் பம்ப் செய்யும் மோட்டர் ஒரு இன்வெர்டர் கண்ட்ரோல் இருக்கும் அதன் மூலமே வேகத்தை கட்டுப்படுத்தி பெட்ரோல் வெளிவயுகிறது..இதில் frequency வைத்து தான் வேகம் மாருகிறது இதை கண்ட்ரோல் செய்யும் மைக்ரே சிப் நமக்கு வெளியில் தெரியும் மீட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் ...இதன் இடையே தான் அந்த குட்டி சிப் பயன்படுத்தப்படுகிறது இதில் பிக்சடாக மூன்று அளவும் வெளியில் தெரியும் ஒரு அளவும் இருக்கும் ..இதை ரிமோட்டில் இயக்குபவர் காசு வாங்கும் கேசியர் ...
SRasu
Add a comment...

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி நம்மை பலவீனமாக்கும் உளவியல் தாக்குதலை செய்து கொண்டு இருக்கின்றனர், சில ஊடங்களும்..பல அரசியல்வாதிகளும்..
Add a comment...

Post has attachment
விதி என்பதா சதி என்பதா..
Photo
Add a comment...

.இன்று உலக தண்ணீர் தினம்
.
கோடை காலம் ஆரம்பிக்கும் போதே வறட்சியும்ஆரம்பித்துள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பது அறிந்ததே. பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான்.70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.அதற்கு மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

1992ல் பிரேசில்நாட்டின் 'ரியோ டி ஜெனிரோ'நகரில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கியநாடுகள் பேரவைக் கூட்டத் தொடர் நடந்தது. அதில், வைக்கப்பட்ட 21ம் நுாற்றாண்டின் செயல் திட்டப்படி 1993 முதல் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 22ம் நாள் 'உலக நீர் நாள்' எனக் கடைப்பிடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தநாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், நீர்வளத்தின் ஒட்டு மொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகி வரும் நீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பதாகும்.மேலும் நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், இந்நாளின் ஒரு முக்கிய நோக்கம்.

கொண்டாடுவதன் நோக்கம்

1993ல் முதல் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பலகோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் இன்றுவரை அகலவில்லை.மக்கள் தொகை அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.

முந்தைய காலத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா?

இப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.

எனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது.

இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு
படுத்துகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.

எனவே ஒவ்வொரு ஆண்டும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர்நாளில் முன்னெடுப்பதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் திட்டமாகும். இத்
திட்டத்தின் படி 2006க்கான உலக நீர் நாள், யுனெஸ்கோவினால் 'நீரும் கலாசாரமும்' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்டது. 2007ல் 'நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளல்' என்ற கருப்
பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. 2008ல் 'சுகாதாரத்திற்கான ஆண்டாகவும்', 2009ல் தண்ணீர் மற்றும் வாய்ப்புக்கள் பகிர்ந்துகொள்ளல்' ஆண்டாக வும், 2010ல் 'தரமான நீர்' என்ற கருப்பொருளை கொண்ட ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது.

அதன்பின், 2011ல் நகரங்களுக்கு 'தண்ணீர் - நகர்ப்புறமாற்றங்களுக்கு பதிலளித்தல்', 2012ல் 'தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு', 2013ல் 'நீர்நிறுவனம்', 2014ல் 'நீரும் ஆற்றலும்', 2015ல் 'நீரும்
நிலையான மேம்பாடும்', 2016ல் 'சிறந்த நீர் சிறந்த தொழில்கள்' என்பன உள்ளிட்ட கருப்
பொருட்களில் ஆண்டுகள் கொண்டாடப்பட்டன. இந்த 2017ல் 'ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?' என்ற கருப்பொருள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

நீரை சேமிக்கும் வழிமுறைகள்

தற்போது உள்ள சூழ்நிலையில் தண்ணீரை சேகரிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

* பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு
நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
* தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட
வேண்டும்.
* வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க
வேண்டும்.
* 'ஷவர்'ல் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. 'ஷவர்'ல் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
* வெயில் காலங்களில் 'ஷவர்'ல் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு குளித்தால் நீரினை சேமிக்க முடியும்.
* வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். குறைவான அளவுதுணிகளை மட்டுமே துவைக்கும் போது, அதிகமாக தண்ணீர் செலவாகும்.
* வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்
படுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.
* தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* லாரியில் தண்ணீரைபிடிக்கும்போது போட்டிபோட்டிக் கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.

தண்ணீர் இல்லாது அவதி

* புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டியை யும் சேர்த்து கட்டினால்
நம்முடைய வருங்கால சந்ததியினர் அதிகம் பயன்பெறுவர்.இப்போது உலகில் சுமார் 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 110 கோடி மக்கள் நீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.

இப்படியே போனால் இன்னும் சில நுாற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும்.
மக்கள் குடிநீருக்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைதான் ஏற்படும். எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், 'உயிர்போல்
காப்போம்' என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

நன்றி@து.வெங்கடேஷ்
Add a comment...

இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி இருக்கலாம்.

எஸ்பிபி மகனுடன் இணைந்து இந்த இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் பக்கா பிஸினஸ் பார்ட்டிகள். அதுவும் வெளிநாட்டுக்காரர்கள். காப்புரிமைச் சட்டம் தெரிந்தவர்கள். இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும், அதை சட்டரீதியாக அணுகாமல், எஸ்பிபியை பேச வைத்து சென்சேஷனல் ஆக்கியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ராஜா மீதிருந்த நீண்ட நாள் எரிச்சல்களையெல்லாம் தீர்த்துக் கொள்ள ஒரு வழியாக அந்த வக்கீல் நோட்டீஸை பிடித்துக் கொண்டார் எஸ்பிபி என்பதுதான் உண்மை. பேஸ்புக்கில் ரொம்ப அப்பாவியாக, 'எனக்கு காப்பிரைட் சட்டமெல்லாம் தெரியாது.. ஆனாலும் இனி ராஜா பாடல்களைப் பாட மாட்டேன்,' என்று புலம்பி, மீடியா கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்.

சினிமாக்காரர்களில் சிலர், செய்தி உலகின் ஒரு பகுதியினர் ஏற்கெனவே ராஜா மீது அவதூறு பரப்புவதையே லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள். இந்த 'பீப்' பார்ட்டிகளுக்கு இப்போது ஒரே கொண்டாட்டம். எஸ்பிபியின் அந்த அறிவிப்பை வைத்து இஷ்டத்துக்கும் ராஜாவைத் திட்டி வருகின்றனர்.

இதைப் பார்த்த சில நடுநிலை ரசிகர்களும்கூட, 'ராஜா பணத்தாசையால் இப்படிப் பண்ணுகிறாரோ... இது தப்புதானே' என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

எஸ்பிபி நல்ல பாடகர். திறமையான பாடகர். இனிமையான பாடகர். ஆனால் படைப்பாளி அல்ல. இளையராஜா படைப்பாளி. அவரது படைப்புக்குக் குரல் தந்தவர்தான் எஸ்பிபி. ஒரு பாடலின் ட்யூன், இசை, அதை எப்படிப் பாட வேண்டும், எப்படியெல்லாம் பாடக்கூடாது என்று கற்றுத் தருவதெல்லாம் இசையமைப்பாளர்தான். பாடகர், பாடலாசிரியர் எல்லாம் இசையமைப்பாளருக்கு தேவைப்படும் இசைக்கருவிகளைப் போன்ற கருவிகளே. ஒரு பாடலுக்கு முழுமையான சொந்தக்காரர் இசையமைப்பாளர்தான்.

ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் பொங்குவதை இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். காரணம் இவர்கள் என்றுமே அசலை விரும்புபவர்கள் அல்ல.. நகல்களைத்தான் தேடித் தேடி வாங்குவார்கள். இளையராஜாவின் பாடல்களை காசு கொடுத்து வாங்காமல் எம்பி3, இலவச டவுன்லோடில் கேட்பவர்கள் அல்லவா... அந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் இது.

ராஜா இசையமைத்த ஆயிரம் படங்களின் காப்புரிமையும் அவரிடம் உள்ளதா? இப்படிச் சிலர் கேட்டு வருகின்றனர். அனைத்துப் படங்களின் காப்புரிமையும் இளையராஜாவிடம்தான் இருக்கிறது. நல்ல வேளை, அதற்கான ஆவணங்களையும் வைத்திருக்கிறார். இல்லையென்றால் இவருடைய இசையே இல்லை என்று கூடச் சொல்லி விடுவார்கள்.

அன்றைக்கு ரிக்கார்டில் வந்த இளையராஜா இசையை, ரிக்கார்டிங் சென்டர்களில் கேசட்டுகளில் பதிவு செய்து தருவதையே பிழைப்பாக வைத்திருந்தார்கள் பல ஆயிரம் பேர். அது காப்பிரைட் சட்டத்துக்கு விரோதமானதுதான். ஆனால் அந்த நாட்களில் இங்கே காப்பிரைட் சட்டமெல்லாம் பெரிதாக இல்லை... தெரியாது. ரொம்ப ரொம்ப தாமதமாகத்தான் இளையராஜாவுக்கு அது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 9000 பாடல்கள், அதைவிட அதிகமான இசைக் கோர்ப்புகளை உருவாக்கிய அந்த படைப்பாளி, தன் உழைப்பின் பலனை யார் யாரோ அனுபவிப்பதைப் பார்த்த பிறகுதான் சட்டத்தின் உதவியை நாடினார். தன் இசையை முற்றாக மறு வெளியீடு செய்யும் பொறுப்பை சிலரிடம் ஒப்படைத்தார். ஆனால் அவர்களும்கூட ராஜாவை முழுமையாக ஏமாற்றினார்கள்.

2015-ல் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சொன்னார்: "இன்றைய தேதிக்கு இளையராஜாவுக்குச் சேரவேண்டிய காப்புரிமைத் தொகையை முறையாக வசூலித்தால் ரூ 100 கோடிக்கு மேல் வரும். இந்தப் பணத்தை வசூலித்துத் தந்தால், அதில் ரூ 50 கோடியை தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தயாரிப்பாளர் சங்கத்துக்கே தருவதாக ராஜா வாக்குத் தந்திருக்கிறார்!"

எக்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் வெற்றிப் பெற்று செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, "எனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை எனது தயாரிப்பாளர்களுக்கும் தருகிறேன்," என்றார். அவரை பணத்தாசை பிடித்தவராய் சித்தரிக்கிறது இந்த கும்பல்.

எஸ்பிபியின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல... நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'?

இதைப் பற்றி எழுதும் முன், பேசும் முன் ஒரு பத்து நிமிடம் இளையராஜாவின் மனநிலையில் இருந்து பார்த்துவிட்டு, அவரவர் அபிப்பிராயங்களைப் பதியுங்கள்.

வேறு எந்த இசையமைப்பாளரையும் விட எளிமையான, இசையைத் தவிர எந்த வியாபார நுணுக்கமும் தெரியாத வெள்ளந்தி மனிதராகத்தான் இளையராஜா இருந்தார். ஆனால் டிஜிட்டல் வளர்ச்சி, அந்த டிஜிட்டல் யுகத்தில் அவரது படைப்புகளை வைத்து கோடிகளில் யாரோ சிலர் சம்பாதிப்பதைப் பார்த்த பிறகுதான் சுதாரிக்க முயன்றார். அந்த முயற்சிக்கு இந்த வலையுலக கொலைகாரர்கள் வைத்திருக்கும் பெயர் பேராசை.. கர்வம்.. திமிர்!!
- @ Vino Jasan
(ப.பி)
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
பகல் கொள்ளையா இருக்கே..
Photo
Add a comment...
Wait while more posts are being loaded