Profile cover photo
Profile photo
Multi Matrimony
153 followers -
Tamil Matrimony Services - Multi Matrimony
Tamil Matrimony Services - Multi Matrimony

153 followers
About
Posts

Post has attachment
http://goo.gl/8HThDb

Nadar Matrimony website in India with Free Registration. Register today and get thousands of matching profiles from Nadar Community to find your dream partner.

#tamilmatrimony   #Nadarmatrimonyservices   #Nadarbrideandgrooms   #Gramanimatrimony   #Nadarmarriage   #Nadarmatrimonymadurai   #Hindunadarmatrimony   #Hindunadarbrides   #Hindunadarbrides   #tamilmatrimonymadurai   #Marthandammatrimony   #viruthunagarmatrimony  
Photo

Post has attachment
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சிறப்பும் எதை பொருத்து இருக்கிறது?
குடும்ப வாழ்க்கை ஆரம்பித்து, சிறப்பித்து, மகிமைப்படுத்திய கணவன், மனைவியை பொருத்து இருக்கிறது, அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியும், சிறப்பும்.
மனைவியானவள் குடும்பம் மகிழ்ச்சியாக, சிறப்பாக இருக்க செய்ய வேண்டியவைகள்:
கீழ்படிதல்,மறந்துவிடுதல்,நேசித்தல், புரிந்துக்கொள்ளுதல்,கணவரை ஆதாயப்படுத்துதல்.
உங்கள் கணவனக்கு நீங்கள் கீழ்ப்படிய, கீழ்ப்படிய உங்கள் கணவரது அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும். அப்போது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்கள் பெற்றோருடன் நீங்கள் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை தற்காலிகமானது. மரணம் வரை உங்கள் கணவரோடு வாழ்வது நிரந்தரமானது.
கணவருடன் இணைந்து வாழும் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து கணவருடைய அன்பை சம்பாதித்துக்கொள்ளுங்கள்.
கணவனானவன் குடும்பம் மகிழ்ச்சியாக, சிறப்பாக இருக்க அவர் செய்ய வேண்டியவைகள்:
அன்பு கூறுதல்,கசந்துக் கொள்ளாதிருத்தல்,புரிந்து கொள்ளுதல்,கனப்படுத்துதல்,போஷித்து காப்பாற்றுதல்.
கொடுத்தல் இல்லாமல் அன்பு இல்லை. திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் என் கணவர் எனக்கு ஒன்றும் வாங்கி தந்ததில்லை என்று சில மனைவிமார்கள் கூறுவதை கேட்டு இருக்கிறோம்.
உங்கள் அம்மாவிற்கு நீங்கள் நல்ல பிள்ளையாகவே இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நீங்கள் வாங்கி கொடுக்கும் அன்பான பொருளில் தான் இருக்கிறது.
பொருளின் மதிப்பு பெரிதல்ல, ஒரு ரூபாய் பொருளானாலும் நீங்கள் அன்புடனும், பாசத்துடன் வாங்கிக் கொடுக்கும் பொருள் உங்கள் மனைவிக்கு உயர்ந்ததாகவும், மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கும்.
ஆகவே உங்கள் மனைவி மீது அன்பு கூர்ந்து, உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
கணவனும், மனைவியும் சேர்ந்து செய்ய வேண்டியவைகள்:
அன்பாயிருத்தல்,மன்னித்தல்,புரிந்துக்கொள்ளுதல்,
சந்தேகப்படாதிருத்தல்,இறைவனை வழிபடுதல்.
மகிழ்ச்சியை தருவது கணவன்,
மகிழ்ச்சியுற செய்வது மனைவி,
மகிழ்ச்சியை கொடுப்பது குழந்தை..
மொத்தத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும் இடம் 
குடும்பம்...!!!!!
Photo

Post has attachment
விட்டுக்கொடுப்பவன், கெட்டுப்போவது இல்லை! கெட்டுப்போகிறவன், விட்டுக்கொடுப்பது இல்லை!!
நமது வாழ்க்கை சமாதானமாக இருக்க வேண்டுமானால், நாம் சில நல்ல காரியங்களை நம் வாழ்வில் கற்று, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில கெட்ட காரியங்களை நம் வாழ்வில் இருந்து அகற்றவும் வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை., கெட்டுப்போகிறவர்கள், விட்டுக்கொடுப்பது இல்லை.
A: APPRECIATION; — மற்றவர்களின் நிறைகளை நாம் மனதார பாராட்ட வேண்டும்.
B; BEHAVIOUR-; புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட, நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளக்கூடாது.
C; COMPROMISE; அற்ப விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது., அந்த விஷயம் பற்றி , சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து மனம் திறந்து பேச வேண்டும்.
DEPRESSION: மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ள வில்லையே என்று சோர்வடைந்து விடக்கூடாது.
EGO :மற்றவர்களை விட உங்களையே உயர்த்த வேண்டும் என்று எண்ணி, கர்வமாக நடக்கக்கூடாது.
FORGIVE: கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
GENUINENESS: எந்த கட்டத்திலும், சந்தேகம் வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாள வேண்டும்.
HONESTY: தவறு செய்தால், உடனே மன்னிப்பு கேட்பதை, கவுரவமாக கருத வேண்டும்.
INFERIORITY COMPLEX: எவரையும் பார்த்து , பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள்.
JEALOUSY : பொறாமை வேண்டவே வேண்டாம்., அதனை கொண்டவனையே அது அழிக்கும்.
Kindness: இனிய, இதமான, இனிமையான சொற்களை மட்டுமே பயன் படுத்தங்கள்.
LOOSE TALK: சம்பந்தம் இல்லாமலும், அர்த்தம் இல்லாமலும், தேவை இல்லாத இடத்திலும் , அதிகம் பேசாதீர்கள்.
MISUNDERSTANDING : மற்றவர்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
NEUTRAL: எப்போதும், எந்த விஷயத்தையும் முடிவு எடுத்து விட்டு பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவற வேண்டாம்.
OVER EXPECTATION: அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
PATIENCE : சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
QUIETNESS: அனேக பிரச்சினைக்கு காரணம்., தெரியாததை பேசுவதுதான். கூடுமான வரை பேசாமலே இருந்து விடுங்கள்.
ROUGHNESS: பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
STUBBORNNESS: நான் சொன்னதே சரி., செய்ததே சரி., என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
TWISTING : இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விட்டு விடுங்கள்.
UNDER ESTIMATE : மற்றவர்களுக்கும் மரியாதை தர மறவாதீர்கள். யாரையும் மதிப்பு குறைவாய் எடை போடாதீருங்கள்.
VOLUNTARY: அடுத்தவர் இறங்கி வர வேண்டும் என்று காத்திராமல், நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்,. பிரச்சினை என்று வரும் போது, எதிர் தரப்பிலுள்ளவர்களின் கருத்துக்களுக்கும், காது கொடுங்கள். பின்பு அதற்கு பதில் கொடுங்கள்.
WOUND; எந்த பேச்சும், எந்த செயலும், யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
XEROX : நம்மை, மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்த வேண்டும்.
YIELD : முடிந்த வரை விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவன், கெட்டுப்போவதில்லை., கெட்டுப்போகிறவர்கள், விட்டுக்கொடுப்பது இல்லை. விட்டுக்கொடுக்கும் போது, கிடைக்கும் சந்தோஷத்துக்கும் அளவே இல்லை.
ZERO : இவை அனைத்தையும் கடை பிடிக்கும் போது, பிரச்சினை என்பது பூஜ்ஜியம் ஆகி விடுகிறது. இதை நாம் படிப்பதோடு மட்டும் அல்லாமல், இதனை நம் வாழ்வில் பயன் படுத்தும் போது, நம் வாழ்க்கை சந்தோஷமாக, இனிமையாக, மகிழ்ச்சியாக,மாறும்.
Photo

Post has attachment
மணப்பெண்க்கு டிப்ஸ்:
கல்யாணமோ, பண்டிகையோ அதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்பிருந்தே பெண்கள் படிப்படியாகத் நகங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும்.
வேலைகளை முடித்துவிட்டு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து தலை உள்பட உடம்பு முழுவதும் நிதானமாக நன்றாக மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள்.
பிறகு இரண்டு முட்டையை எடுத்து அவற்றின் வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்து அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து கருவோடு ஒரு டேபிள் ஸ்பூன் நீர் கலந்து, தலையில் தேய்த்து, நல்ல ஷாம்பூ கொண்டு கழுவிவிடுங்கள்.
பெரிய கைக்குட்டையில் கால் கப் ஓட்மீல், அரை கப் ஸ்டார்ச், அரை கப் பாலாடை உள்ள பால், அரை கப் பவுடர் பால் இட்டு முடிய வேண்டும். அந்த முடிப்பை உடல் முழுவதும் தேய்த்தால் உலர்ந்த சருமம் பளிச்சென்றாகும்.
மறுநாள் கை, கால்களை ப்யூமிஸ்கல் கொண்டு தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டும். கை, கால்களை வெதுவெதுப்பான சோப் கலந்த நீரில் சற்று நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு நகங்களை சீர்செய்து, விரும்பிய நிறத்தில் நகபாலீஷ் இடவும்.
மூன்றாவது நாள் முகத்தில் சிறிது பாலாடை அல்லது தரமான ‘நரிஷிங் கிரீம்’ கொண்டு மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீராவி பிடித்து மாஸ்க் போடவும். மாஸ்க்குகள் தற்போது கடைகளிலேயே கிடைக்கின்றன.
வறண்ட சருமம் உடையவர்கள் முட்டையின் மஞ்சள் கரு, சிறிது தேன், கடலைமாவு ஆகியவற்றைக் கலந்து குழைத்துப் பூசலாம். எண்ணெய்ச் பசை சருமம் உடையவர்கள் முட்டையின் வெண்கருவையும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து உபயோகிக்கலாம்.
நான்காவது நாளை, ஹென்னா எனப்படும் மருதாணி கொண்டு தலைமுடிக்குச் செழிப்பூட்டுவதற்கும், கை, கால்களில் உள்ள முடிகளைப் போக்குவதற்கும் (வாக்ஸிங் மூலம்) செலவிடலாம். மருதாணிப் பொடி, சிறிது தயிர், அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு, டீ டிக்காஷன் சிறிது, முட்டை ஒன்று ஆகிய எல்லாவற்றையும் நன்கு கலந்து, தலையில் தேய்க்க வேண்டும்.
ஐந்தாவது நாள் பண்டிகை, திருமணம் அல்லது வேறு விசேஷ நாள் அன்று உங்கள் வயது, நிறம், உடல்வாகு ஆகியவற்றிற்கு ஏற்ற உடைகள், நகைகள், ஹேர்ஸ்டைல், முக அலங்காரம் ஆகியன செய்து அழகிய பெண்மணியாகத் தோற்றமளிக்க முடியும்!
Photo

Post has attachment

Post has attachment
Smile!!!

#Tamilmatrimony   #Smile  
Photo

Post has attachment
A true relationship!!!

#Tamilmatrimony   #Relation   #relationships  
Photo

Post has attachment
சாக்லேட் சாப்பிட்டால் நன்மையா???

குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள் பலரும் கூட சாக்லேட் பிரியர்கள்தான். அந்த சாக்லேட் விரும்பிகளுக்கு ஓர் இனிய செய்தி. தினமும் 100 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் இதயநோய் ஏற்படாது என்கிறது, இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு.

இங்கிலாந்தின் நார்த்போல்க் நகரில், உணவு முறை குறித்தும், அதனால் உடல் நலத்தில் ஏற்படும் தாக்கம் பற்றியும் சுமார் 25 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், சாக்லேட் அதிகம் சாப்பிடும் இளைஞர்களின் உடல் எடை குறைவாகவும், ரத்தம் அழுத்தம் மற்றும் புரதம், சர்க்கரை அளவு சீராக இருப்பதும் கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு உடலின் செயல்பாடுகள் சீரான அளவில் நடப்பதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிக அளவில் வர வாய்ப்பு இல்லை என்று தெரிந்தது. அப்படி ஏற்பட்டிருந்தாலும், 9 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில், மரண விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்தது.

இவர்கள் தினமும் 100 கிராம் அளவில் சாக்லேட் சாப்பிட்டு வந்தவர்கள். அதனால் உடலுக்கு கூடுதல் சக்தி கிடைத்ததுடன் ரத்த ஓட்டம் சீராக இருந்ததால் இதய நோய்கள் தாக்கவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சாக்லேட் குறைவாகச் சாப்பிட்ட 25 சதவீதம் பேர் இதய நோய்களால் அவதிப்படுவதும் தெரியவந்தது. எனவே தினமும் 100 கிராம் அளவு பால் சாக்லேட் மற்றும் கருப்பு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு அதிக அளவில் இதய நோய்கள் ஏற்படாது என கண்டறியப்பட்டுள்ளது.

என்ன சாக்லேட் பிரியர்களே, சந்தோஷம்தானே!

#Tamilmatrimony   #Choclate  
Photo

Post has attachment
மணப்பெண் சிகை அலங்காரம்!!!

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகை யலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அல ங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப் பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின் னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பரு மன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச் சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்தி லிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.

#Tamilmatrimony   #BridalHairstyles   #Hairstyles  
Photo

Post has attachment
மணப்பெண்கள் அழகை பராமரிப்பது எப்படி?
மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசிகரமானதாகத் தெரியும்.
அரைதேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும்.
கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது.
வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்.
பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.
கடலைமாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் உலர விட்டு வெது வெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும். கடலைமாவு ஒரு மிகச்சிறந்த கிளன்சிங் ஏஜண்ட்.
முகத்திற்கு கிரீம் லோஷன், மாய்ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது.
சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை.
வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஓரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள்.
நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்.
உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.
கடைகளில் விற்கும் ஹாண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹாண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹாண்ட் கிரீம் தாயாரிக்கலாம்.
நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சிராகும்.
நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கால்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.
#Tamilmatrimony   #Bridalmakeup  
Photo
Wait while more posts are being loaded