Profile cover photo
Profile photo
Raju Attur
8 followers
8 followers
About
Posts

Post has attachment
MD Tnstc
மேலான் இயக்குனராகிய நான் தொழிலாளிக்கு 1. சட்டத்தை மீறி வேலை வாங்க மட்டேன் 2. அநியாய தண்டனை தர மாட்டேன் 3. தண்டனையை ரத்து செய்ய / குறைக்க கையூட்டு வாங்க மாட்டேன் 4. சொற்ப காரணங்களுக்கு மெமோ தர மாட்டேன் பேருந்துகளை 6. சரியான பராமரிப்பு செய்து தருவேன் 7. உதிரி...
MD Tnstc
MD Tnstc
tnstcworkers.blogspot.com

Post has attachment

திரு சுதன் அவர்கள் பதிவு

கார்ப்பரேட் ஆட்டம் #big_boss

பிக் பாஸ்...
நடிகர் திரு.கமலஹாசன் அவர்கள் விளம்பரப்படுத்தும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் செலவு மற்றும் வருமானம் பற்றிய ஒரு புள்ளிவிபரம் வருகிறது.
எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
அதன் மொத்த செலவு 70 கோடி. 30 வினாடிகளுக்கு 25 லட்சம் என, 100 நாட்களுக்கு மொத்த விளம்பர வருவாய் 1250 கோடிகள். தொகுப்பாளர் கமலுக்கு மட்டும் 20 கோடி.

கிட்டத்தட்ட 1000 கோடிகளை தாண்டுகிற இந்த நிகழ்ச்சியின் முடிவில் எந்த ஆக்கப்பூர்வமான வெளியீடும் நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. எந்த ஒரு தனிப்பட்ட பங்கேற்ப்பாளரின் திறமையையும் வெளிக்கொணர்ந்து அவருடைய திறமையை வளர்க்கப்போவதில்லை.

முதல் நாளிலே, சல்லிக்கட்டுக்கு மெரினாவில் கோசம் போட்ட அந்த இளம்பெண்ணின் அந்தரங்க நிமிடங்கள் வெளியாகிறது. அந்த பெண் மற்றொரு திரைப்பட கலைஞரிடம் “பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகாதே, எனக்காக இரு. யார் யாரோ கட்டி பிடிக்கிறாங்க, எனக்கு ஆளே இல்லை” ன்னு கெஞ்சுற மாதிரி இருக்கு.

வெளியீடு எதுவும் இல்லாத இந்த ப்ராஜெக்ட்டில் ஆயிரம் கோடிகளை முதலீடு செய்தால் அந்த விளம்பரதாரர்கள் அந்த கொள்முதலை எப்படி சம்பாதிப்பார்கள்?

ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏதாகினும் ஒரு பொருளை உற்பத்தி செய்தால் மாத்திரம் தான் ஆயிரம் ரூபாய்க்கு மேலாக லாபம் வைத்து பணம் சம்பாதிக்க முடியும்? இங்கு உற்பத்தி பொருளே இல்லாமல் எப்படி கோடிகளை முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்?

விளம்பரம் என்கிற முதலாளித்துவ உலகின் சுரண்டல் தளம் தான் இந்த மாய சக்தி மந்திரம். சில பிரபலங்களின் நூறு நாட்களின் அந்தரங்க, ரகசிய நிமிடங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. மக்களுக்கு, கண்ணுக்கு தெரியாத யாரோ சிலரின் அந்த அந்தரங்க நிமிடங்கள் விற்பனை செய்யபப்டுகிறது.

முதலாளித்துவ கார்ப்பரேட் உலகிற்கு தொழிலில் குறைந்த பட்ச நாணயமோ, சமூக சிந்தனையோ துளியும் இருக்காது. அவர்களின் முதல் இலக்கு லாபம், விளம்பரம். பால்உணர்வு என்பது இயற்கையானது. எல்லோருக்கும் இயல்பானது. அதை வெளிப்படுத்துவதை முறைப்படுத்தி, சீராக்கி அழகாக காண்பித்து இருக்கிறது எமது தமிழ் சமூகம். காதல், ஊடல், காமம் என்கிற பல பெயர்களில்.

ஆனால் இப்போதைய கார்ப்பரேட் அதை வக்கிர உணர்வாக காண்பிக்கிறது. முறைப்படுத்தப்பட்ட உணர்வை முறை தவறுகிற போக்கில் காண்பித்து காசு சம்பாதிக்க முயல்கிறது. கார்ப்பரேட்டிக்கு தொழில் அறம் தேவை இல்லை. லாபம் ஒன்றே குறிக்கோள்.

அறம் தவறிய களத்தில் பயணிக்குமாறு பழக்கப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறோம்...

பதிவு :- திரு. சுதன் அவர்கள், "சட்ட. பஞ்சாயத்து இயக்க புலனக்குழு" வழியாக

Post has attachment
வேகத்தடைகளால் விபத்து

சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, இந்தியாவில் தினமும், 30 விபத்துக்கள் வேக தடைகளால் தான் நடக்கின்றன. இதில் 9 பேர் பலியாகிறார்கள்.2015 ம் ஆண்டு மட்டும் வேகதடைகளால் இந்தியாவில் 3409 பேர் பலியாகி உள்ளனர். பெரும்பாலான வேக தடைகள் வாகன ஓட்டிகளின் எலும்புகளை முறிப்பவையாகவும், வாகனங்களை சேதப்படுத்துபவையாக இருப்பதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியே தெரிவித்துள்ளார்.
Photo

Post has attachment
நியாயவிலை கடைகளில் பொருட்கள் எப்படி கிடைக்கும்?
Photo

Post has attachment
எடப்பாடி சட்டமன்ற அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் அறிவித்ததன் எதிரொலி

பணிந்தது நிர்வாகம் .

சேலம் கோட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக நடந்த போக்குவரத்து ஊழியர்களின் இடமாற்ற உத்தரவை திரும்ப பெறுவதாக தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மேலாண் இயக்குநர் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ₹7 ஆயிரம் கோடி பணத்தை வழங்கிட கோரி கடந்த மாதம் அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அரசு, படிப்படியாக போக்குவரத்து தொழிலாளர்களின் பணம் வழங்கப்படும் எனத்தெரிவித்தது. இதை ஏற்ற தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதன்பின், ஒவ்வொரு போக்குவரத்து கோட்டத்திலும் வேலைநிறுத்தத்திற்கும் பெரிய அளவில் தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டிய தொழிற்சங்க நிர்வாகிகளை அதிரடியாக இடமாற்றியும், பணி மாற்றியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த பழிவாங்கும் நடவடிக்கையை தொழிற்சங்கத்தினர் கண்டித்தனர். சேலம் போக்குவரத்து கோட்டத்தில், சிஐடியூ தொழிற்சங்கத்தினர் துணை பொதுச்செயலாளர் கோவிந்தராஜை ஓமலூர் டெப்போவில் இருந்து தம்மம்பட்டி டெப்போவிற்கும், மேலும் 3 நிர்வாகிகளை வெவ்வேறு டெப்போக்களுக்கும் இடமாற்றினர். இதுபோக மருத்துவ தகுதியின்மை காரணமாக இலகு பணியை பார்த்து வந்த சில பணியாளர்களை அதிரடியாக கடின பணிக்கு இடமாற்றி கோட்ட மேலாண் இயக்குநர் பாண்டி நடவடிக்கை எடுத்தார்.

இதனை கண்டித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன், நேற்று (27ம் தேதி) போராட்டம் நடத்தப்படும் என சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்தது. இதனால் கோட்ட மேலாண் இயக்குநர் பாண்டி, போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதன்பேரில் நேற்று போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். சிஐடியூ போக்குவரத்து பிரிவின் தலைவர் சிங்காரம், பொதுச்செயலாளர் செல்வகுமார். பொருளாளர் ஏழுமலை உள்ளிட்டோர் மேலாண் இயக்குநர் பாண்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுச்செயலாளர் செல்வகுமார் கூறுகையில் ‘‘சேலம் கோட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஊழியர்கள் இடம் மாற்றப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாகவும், மருத்துவ தகுதியின்னை காரணமாக இலகு பணி பார்த்தவர்களுக்கு மீண்டும் அதே பணியை வழங்குவதாகவும் மேலாண் இயக்குநர் கூறியுள்ளார். மேலும் இனிமேல் பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது எனவும் உத்தரவாதம் கொடுத்துள்ளார். இதனால் எங்களின் போராட்டத்தை கைவிடுகிறோம்,’’ என்றார்.
Photo

Post has attachment
Photo

Post has attachment
பல்லவனும் நடத்துனர் இருக்கையும்

முன்பு (1960க்கு முன்பு) நகர பேருந்துகளில் நடத்துனர் இருக்கை (Seat) கிடையாது. நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த பின் படியில் நின்று தான் செல்ல வேண்டும். பயணிகள் இருக்கை காலியாக இருந்தாலும் அமரக்கூடாது. மீறி அமர்ந்தால் சார்ஜ் (மெமோ) செய்யப்படுவார். இதனால் நடத்துனர்கள் மிகுந்த சிரமத்திலிருந்தனர்.

பல முறை நிர்வாகத்தில் தொழிற்சங்கம் முறையிட்டும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. அன்று இரண்டே சங்கங்கள். ஒன்று ஆளும் கட்சி INTUC சங்கம், மற்றொன்று செங்கொடி சங்கம்.

இந்நிலையில் ரூட் எண் 8-ல் நடத்துனர் படியில் நின்று செல்லும் போது எதிர்பாராமல் ஓட்டுனர் போட்ட திடீர் பிரேக்கில் படியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்

ஏற்கனவே கொதித்திருந்த தொழிலாளர்கள் நடத்துனருக்கு இருக்கை வேண்டும் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெருக்கடிக்கு ஆளான நிர்வாகம் நடத்துனருக்கு இருக்கை பொறுத்தி தர ஏற்றது.

ஆனால் தொழிலாளர்கள் நடத்துனர் விழுந்த அந்தப் பேருந்தில் இருக்கை
(Conductor seat) பொறுத்தி கொண்டு வந்து காட்டினால் தான் வண்டி ஓட்டுவோம் என சொல்லி விட்டனர்.

அதன்படி அந்த பேருந்தில் நடத்துனர்
இருக்கை பொருத்தி கொண்டு வந்து காட்டிய பிறகே பேருந்துகள் ஒட ஆரம்பித்தன. பின்னர் படிப்படியாக அனைத்து பேருந்துகளிலும் நடத்துனர் இருக்கை பொருத்தப்பட்டது.

ஆக போராடாமல் உரிமையும் சலுகையும் பெற்றதாக வரலாறு இல்லை.

(தகவல் MC என்று அன்போடு அழைக்கப்படும் M.சந்திரன்)
தொடரும்.....
Photo

Post has attachment

Post has attachment
ஜூன் 30ந் தேதிக்கு மேல் இந்த மாடல் கைபேசிகளில் Whats app செயலி இயங்காது.
Photo
Wait while more posts are being loaded