Profile cover photo
Profile photo
Bala subramanian
933 followers
933 followers
About
Bala's posts

விண்ணப்பம் கூட தர மறுக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து பத்தொன்பதாயிரம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கவும்,

எனது நிலம் வேறு ஒருவர் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள், நில அபகரிப்பு செய்துவிட்டார்கள், இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பட்டா பெயர் மாற்றித்தர மறுக்கின்றார்கள், குடும்ப அட்டை மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, இரண்டு பென்குழந்தைகள் திட்டம், படித்த பட்டதாரிகள் திருமண உதவி திட்டம், வாரிசு சான்று, இப்படி ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சனைகளுக்குமாக மூன்று இலட்சத்து எண்பதாயிரம் பிரச்சனைகளுக்கும்

இந்தியன் குரல் இலவச உதவி மையங்கள் தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட்டு உரிய நிவாரணம் பெற்றுள்ளார்கள்

அமைப்பில் உறுப்பினர் கட்டணம் இல்லை, நண்கொடை பெறுவதில்லை, எந்த உதவிக்கும் சேவைக்கும் பயிர்த்திக்கும் கட்டணம் வாங்குவதில்லை- இது இந்தியன் குரல் அமைப்பின் கொள்கை
நீங்களும் உங்கள் பகுதியில் ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம் விதம் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் மட்டும் நேரம் ஒதுக்கி இந்தியன் குரல் இலவச உதவி மையம் நடத்திட விருப்பம் இருந்தால்

உங்களுக்காக இலவசமாக இந்தியன் குரல் பயிற்சி அளிக்கிறது
உங்களது மாவட்டத்தில் உங்கள் ஊரில் இருந்தபடியே சேவை செய்து விழிப்புணர்வுடன் மக்களின் தேவைகளை இலஞ்சமின்றி பெற வழிகாட்டியாக செயல்பட அனைத்து உதவிகளையும் இலவசமாக அளிக்கின்றோம்.

பயிற்சி நடைபெறும் நாள்; 26-3-17 அன்று பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்

இடம்; கும்பட் காம்ப்ளக்ஸ் முதல்மாடி, 29.ரத்தன் பஜார், சென்னை 3 தொடர்புக்கு 805667579, 9445249202
உங்களது சுய விவரத்துடன் மின்னஞ்சல் அனுப்ப; vitrustu@gmail.com

Post has attachment
இந்தியன் குரல் அளிக்கும் சிறப்பு பயிற்சிமுகாமில் நான் கலந்து கொள்ள காரணங்கள்.
இந்தியன் குரல் அளிக்கும் சிறப்பு பயிற்சிமுகாமில் நான் கலந்து கொள்ள காரணங்கள். நன்மக்களே!.. மத்திய மாநில அரசுகளால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், எனது உருக்கும், என்பது நாட்டுக்கும் என்ன என்ன திட்டங்கள் செயப்படுத்தப்படுகின்றன? என்ன என்ன சேவைகள் அளிக்கப்பட...

Post has attachment
Bala subramanian commented on a post on Blogger.
சுதந்திர போராட்டம்
பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வாணிபம் செய்ய வந்தது. தனது வியாபாரம் தடையில்லாமல் நடைபெற மது, மாது போதைகளை கையூட்டாக்கி ஒவ்வொரு குறுநில மன்னரையும் அடிமையாக்கி உலகம் முழுவது சூரியன் உதிப்பதும் மறைவதும் தங்களது தேசத்தில் என்று சொல்லும் அளவுக்கு அடிமைப் படுத்தி கொள்ளை வியாபாரம் செய்து இலாபம் ஈட்டியும் கேள்வி கேட்கும் மக்களை அடக்கியும் ஆண்டு வந்தது. அடக்குமுறை காரணமாக இந்தியாவில் பெரும் கிளர்ச்சி உருவாகி அது சுதந்திர போராக மாறியது.

நாடு சுதந்திரம் பெற்றது அடிமைத் தானம் தொடர்கிறது.

ஆம் இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி என்ன நோக்கத்திற்காக இந்தியா வந்ததோ அதன் நோக்கம் சிறிதும் குறையாமல் வேறு வேறு பெயர்களில் இன்றும் பன்னாட்டு கொள்ளை வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. உயிர் காக்கும் உணவு உற்பத்தியில் தன்னிறைவில் இருந்த இந்தியா இன்று கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவதும் உயிர்கொல்லி ரசாயனங்கள் தாராளமாக அனைத்து உணவுப் பொருட்களிலும் கலக்கப்பட்டு விளம்பரங்கள் மூலம் விற்பனையாவதை யாரும் தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்றால் நாம் அடிமைகள் அல்லாமல் வேறு இல்லையே!.

அனைத்து துறைகளிலும் தடம் பதித்த கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய பாரம்பரிய விவசாய முறையை அழிக்காமல் நாம் இங்கே ரசாயன வியாபாரம் செய்ய முடியாது என்று ராபர்ட் கிளைவ் அணைத்த குழுவின் மூலம் கண்டுகொண்டார்கள். விளைவு அதே ராபர்ட் கிளைவ் மூலம் பசுவதைக் கூடங்களை இந்தியாவில் உருவாக்கினர். அப்பசுவதைக் கூடங்கள் நமது நாட்டுமாடுகளை அளித்து பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனங்களும் இயந்திரங்களும் இந்தியாவில் தாராள விற்பனைக்கு வழிவகுத்தன.

பசுவதைக் குடங்களால் விவசாய பயன்பாட்டில் இருந்து நாட்டுமாடுகள் அழிக்கப்பட்டதால் மாடுகள் செய்யும் பணிகளை இயந்திரங்கள் செய்தன. ஆனால் மாடுகள் தரும் சத்தான உரங்களை எந்த இயந்திரத்தால் தர இயலும்? விளைவு ரசாயனங்கள் விவசாய விளைபொருட்கள் தரத்தை கெடுத்து நிலம் விஷமானது, விவசாய விளைபொருட்களை உயிர்கொல்லியாகி அதிலும் கலப்படம் செய்யப்பட்டு பல நோய்களும் துன்பங்களும் பெறுக காரணமாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இன்றும் தனது வியாபாரத்தை விரிவுசெய்ய நாம் உதவியாக இருக்கின்றோம் என்றால் நாம் அடிமையின்றி வேறு என்ன?

பல தோழில்களிலும் தடம் பரப்பி நமது தொழில் வளங்களை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இனி இந்திய விவசாயத்தைக் கைப்பற்றும் நோக்கில் அடுத்த நகர்வுகளை நகர்த்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது.

உலகளாவிய தொழில் ஒப்பந்தம்
1993 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் உலக பொருளாதார தாராளமயமாக்கல் ஒப்பந்தம் மூலம் உலக வர்த்தக அமைப்பின்கீழ் இந்தியா முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாக அனைத்து உற்பத்தி மற்றும் தொழில்களை பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் தாராளமாக தங்களது கிளைகளை அமைத்தது. அந்நிறுவனங்களை இந்தியாவில் கிளைகளை அமைத்திட வேண்டி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு(அடிமைகள்) பெருகும் என்று நம்ப வைக்கப்பட்டு நாமே விரும்பி அழைக்கும் வண்ணம் நிலைமை உருவாக்கினர்.

பன்னாட்டு நிறுவனங்கள்
இந்தியா முழுவதும் அனைத்து தொழில்களும் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அவர்களே முதலாளிகளாக இருந்து இந்தியர்களுக்கு வேலை கொடுத்து கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் கிளைகளை பரப்பிய அந்நிறுவனங்கள் வளம் கொழிக்க ஓயாமல் உழைக்கும்(அடிமைகள்) நாம் அடிமைகள் அல்லாமல் வேறு என்ன?

விவசாய ஒப்பந்தம்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆலைக்கு கடித்த கதையாக பன்னாட்டு நிறுவனங்கள் நமது பாரம்பரிய விவசாயத்தை அழித்து விவசாய விலைபெருட்கள் உற்பத்தி நிறுவங்களை நிறுவிட உலகளாவிய விவசாய ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 1995 ஆமடு முதல் போராடி 2013 ஆம் ஆண்டு இந்தியா ஏற்று கையொப்பம் இட பணித்தது.

அந்த ஒப்பந்தத்தில்
1. விவசாய விளைநிலங்களை விவசாய தொழில் நிறுவனங்கள் கையகப்படுத்த எவ்வித தடையும் இருக்கக் கூடாது.
2. விவசாய விளைபொருட்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மேல் அரசு கொள்முதல் செய்ய கூடாது.

3. விவசாயிகளுக்கு இலவம் மானியம் தரக்கூடாது.
4. விவசாய விளைபொருட்கள் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதியில் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற இன்னும் பல கடுமையான விதிமுறைகளுடன் கூடிய ஒப்பந்தங்கள் ஏற்று உலக வர்த்தக அமைப்புடன் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இது முழுமையாக நடைமுறைக்கு வரலாம்.

இப்படி அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களை முதலாளிகளாக்கிவிட்டு அவர்களிடம் அடிமையாக தொழில் செய்யும் நாம் அடிமைகளல்லாமல் வேறு என்ன ?

அனைத்தையும் இழந்தோம் ஆனால் இன்னும் நாம் நமது விவசாயத்தை முழுமையாக இழக்கவில்லை இருக்கும் விவசாயிகளை இழக்காமல் காப்பாற்றி நாம் நமது பாரம்பரிய விவசாயத்தை காக்க அதன் காரணிகளான நாட்டு மாடுகளை காப்போம், ஆறு ஏறி குளங்களை ஆக்கிரமானதாரர்களிடம் இருந்து மீட்போம், விவசாயிகளின் உயிரைக் காப்போம்.

இந்நிலை தொடர்ந்தால் உங்களது சந்ததிகள் பின்னும் 0-25 ஆண்டுக்கு பிறகு ஒருவேளை உணவுக்காக கத்தியை திட்டுவார்கள். இன்று நீங்கள் எவ்வளவு பணம் படைத்தவராக இருந்தாலும், அரசியல் ஆள்பலம் உள்ளவர் என்றாலும் அடுத்த 30 ஆண்டுகள் கழித்து உங்களது அனைத்து சொத்துக்களும் கொள்ளையர்களாலோ அல்லது அரசியல் கொள்ளையர்களாலோ கொள்ளையடிக்கப்பட்டு உங்களது பறிபோகும்.

ஓரளவு விளக்கிட முயற்சி செய்துள்ளேன் விரிவாக விளக்கமாக இன்னும் நிறைய விஷயங்களை அறிந்து விழிப்புணர்வு பெறவும் உங்களால் மற்றவர்கள் விழிப்புணர்வு பெறவும் முன்னேறி தேதிபெற்று ஏற்பாடு செய்து அழைத்தால் மாநிலத்தின் எந்த மாவட்டம் கிராமம் ஆனாலும் வர தாயாராக இருக்கின்றோம்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை (திருவள்ளுவர், திருக்குறள் 1036).
இந்தியா முழுமையும் வேளாண்பெருமக்கள் தற்கொலை புரிவது என்பது தொடர்நிகழ்வாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் முதன்மைக் கருத்து செலுத்திவேளாண் பெருமக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
நம்மை அழிவிலிருந்து காக்க, உழவர்களை அழிவிலிருந்து காப்போமாக!

- பாலசுப்ரமணியன்
இந்தியன் குரல்
9444305581

Post has attachment
விவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம்.
நாட்டு மாடுகளைக் காப்போம் !!!   பாரம்பரிய விவசாயத்தைக் காப்போம்!!! விவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம் . இந்தியாவின் விஷமற்ற விவசாயத்தை ஆராய்ந்த ராபர்ட் கிளைவ்   மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க ம...

Post has attachment

Post has attachment
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" உண்மையான விளக்கம்
நீரின்றி பயிர்கள் கருகினால் நாம் பட்டினி கிடைக்க நேரிடும் ஆகவே பயிர்களுக்கு எப்பொழுதும் நீர் குறைவின்றி கிடைக்கவும் விவசாயம் தடையின்றி நடைபெறவும் மழைநீரை சேமிப்பதும் அதை பாதுகாப்பதும் ஆறு ஏரி குளங்களின் அவசியத்தையும் மக்கள் உணரவேண்டும் அவற்றை பாதுகாக்கவேண்ட...

Post has attachment
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 நேரலையில் உங்கள் பிரசனைகள் எதுவாயினும் தீர்வுக்கு ஆலோசனை உங்கள் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் உங்களுக்காக நான் பங்கேற்கும் "காகிதத்தில் ஓர் ஆயுதம்" நிகழ்ச்சி காணுங்கள்


Post has attachment

Post has attachment
மரியாதைக்குரிய பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்,
மரியாதைக்குரிய பள்ளி தாளாளர் , தலைமை ஆசிரியர் , ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம் ,         உங்களுடன் எங்கள் பிள்ளைகள் நலனுக்காக சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் .          தினமும் நாளேடுகளைப் புரட்டும் நீங்கள் அறியாததையோ படிக்காத ஒன்றைய...

Post has attachment
"காகிதத்தில் ஒரு ஆயுதம்"

தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் நமது அனைத்து தேவைகளுக்கும் பிரசனைகளின் தீர்வுக்கும் தகவல் பெறுவது எப்படி?
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை 10.30 மணிக்கு கேப்டன் நியூஸ் தொலைக்காட்ச்சியில்
Wait while more posts are being loaded