Profile cover photo
Profile photo
Madhura Bharati
About
Madhura's posts

Post has attachment
ரமண சரிதம்: பால் பிரண்டன்
பகலுணவுக்குப் பின் மீண்டும் அறைக்கு வந்தனர். முதல் அனுபவத்தின் உயரத்திலிருந்து சற்றே கீழே இறங்கி வந்திருந்த பால் பிரண்டன் கேள்வி கேட்டார்: பால்: எனக்கு ஞான அனுபவம் வேண்டும். நீங்கள் உதவி செய்வீர்களா? இல்லை தன்னைத் தேடுவது ஒரு மாயைதானா? பகவான்: 'நான்' என்று ...

Post has attachment
ரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்
இதன் முந்தைய பகுதியைப் படிக்க:  பால் பிரண்டன் ஒரு ஞானி மற்றொரு ஞானியை மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார், அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும். பால் பிரண்டனோ ஊருக்குத் திரும்பிப் போக ஏற்பாடுகள் செய்தாயிற்று. எனவே திருவண்ணாமலைக்குப் போவதாக உறுதியளிக்கவில்லை. ...

Post has attachment
ஸ்ரீ ரமண தரிசனம் - 1
ரமணரை அறிய நினைப்பது ஒரு முயற்சிதானே தவிர, அது இயலக்கூடுவது அல்ல. ஒரு ஞானியை இன்னொரு ஞானியே அறியமுடியும் என்பார் ரமண பகவான். ஒரு பக்தனை, ஒரு யோகியைப் பார்த்த உடனே புற அடையாளங்கள் அவனை இனம் காட்டும். ஒரு ஞானிக்கு எந்த வெளிப்படையான சின்னங்களும் கிடையாது. ரமணர...

Post has attachment
ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 3
கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருமுறை ரமண பகவான் முன்னிலையில் தரிசனக் கூடத்தில் உட்கார்ந்திருக்கையில் அவரது ஆள்காட்டி விரலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் பகவான் தனது ஆள்...

Post has attachment
ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 2
வைத்திய நாதனாக இருந்து தனது அன்பர்களின் நோய்களையெல்லாம் குணப்படுத்திய பகவானுக்கு எப்படி நோய் வந்தது என்ற கேள்வி எழுவது இயற்கையே என்பதாக நேற்று முடித்திருந்தோம். இனிப் பார்க்கலாம். 'உடலின் வாரிசு நோய்' என்றார் பகவான். நோய்கள் பாவத்தின் பலன் என்பது இந்தியத் த...

Post has attachment
ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1
ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமணர் விளையாட்டாகக் கூறினார்  “நீங்கள் என் காலைப் பிடித்துவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்ளப் பார்க்கிறீர்கள். அந்த எண்ணெயை இங்கே கொடுங்கள், நானே தடவிக்கொள்கிறேன். எனக்கும்தான் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே” என்று. எலும்புகள் தேய்ந்ததனால் அவரு...

Post has attachment
பாதாரவிந்த பதிகம்-10
பத்தியால் மதுரன் சொன்ன   பாதா ரவிந்த பதிகம் நித்தமும் ஓதி னோர்க்கு   நிலமீது நீடு வாழ்வு, உத்தமச் செல்வம் மற்றும்   ஒப்பரு முத்திய ருள்வன் சத்திய சாயி தேவன்   சத்தியம், அஞ்ச வேண்டா! பொருள்: பக்திபூண்ட மதுரபாரதியைக் கருவியாகக் கொண்டு அருளப்பட்ட இந்தப் பாதாரவ...

Post has attachment
பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-9
வெயில்வீசு வதனம் காண்பார்   விரிகேச மகுடம் காண்பார் அயில்வீசும் விழியின் அழகில்   அருள்வீச அன்பர் காண்பார் துயில்மாயச் சொல்லும் உரையில்   சுகபோத நிலையைக் காண்பார் ஒயிலான பாதம் பணிவோம்   பர்த்தீச ஞான குருவே! பொருள்: சூரியஒளியைச் சிந்துகின்ற நின் முகத்தினைக் ...

Post has attachment
பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-8
வேதங்கள் கூறு வோனும்,    விண்ணோர்கள் ஏத்து வோனும் நாதங்கள் கூறு வோனும்,    நல்லோர்கள் கூறுவோனும், ஏதங்கள் மாற்று வோனும்,    எம்மோனும் நீயே பாபா! பாதார விந்தம் பணிவோம்,   பர்த்தீச ஞான குருவே! பொருள்: மிக உயர்ந்தனவாகிய நான்மறைகள் நின்னையே குறித்து நிற்கின்றன;...

Post has attachment
பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்-7
ஓதா மறைகள் நவிலும்    ஒளிரா தொளிர்ந்த ஒளியே சேதார மென்ப தில்லா   செம்மைத்த முழுமை யுருவே காதார நாமம் பாட   களிப்பூறும் களியின் கருவே பாதார விந்தம் பணிவோம்   பர்த்தீச ஞான குருவே! பொருள்: எழுதிக் கற்கப்படாதவையான மறைகள், கண்ணாற் காணும் ஒளிக்கு அப்பாற்பட்ட நினத...
Wait while more posts are being loaded