Profile cover photo
Profile photo
Sujatha Selvaraj
202 followers -
Like to read Books
Like to read Books

202 followers
About
Sujatha's posts

Post has attachment
**
உன் உதடுகள்  நான் நீந்தித் திளைக்கும்  சிறு நதியின் இரு கரைகள்  மோனம் குழையும்  காலநிலை  அங்கு  தேன் குமிழிகளை  உண்டு பசியாறுவேன்  ஈரம் ஊறும்  அந்நிலம் அமர்ந்து  மூச்சுக்காற்றில்  கூந்தல் உலர்த்துவேன்  உதட்டு வெடிப்புகளில்  உடல் பொருத்தி  உறங்கிப்போவேன்  இந...

Post has attachment
அத்தர் மணக்கும் பாலை
வெகு தொலைவு பயணித்து வருகின்றன உதடுகள் வறண்ட பாலையில் முட்களினூடே நெழிதடம் பதிக்கிறது சர்ப்பம் செண்பகமரக் குரங்குகள் மொட்டுக்களை தின்றுத் தாவுகின்றன லாவகமாய் தோல்உரிக்கிறான் முயல்கறிக்கு பழகியவன் புழுதி படிந்த உதடுகள் தணலில் பு ரண்டு சிவக்கின்றன பாதி வெந்த ...

Post has attachment
நினைவுகளை அழித்தல்
நினைவுகளின் தேன்கூட்டை  அழிக்க முடிவெடுத்தபின் முதலில் இதயத்தைச் சுற்றி இறுக்கி மூடுங்கள் ஓயாமல் ரீங்கரிக்கும் சின்னஞ்சிறு நினைவுகளை தீயிட்டுப் பொசுக்குகையில் நொடிப் பொழுதும் தயங்கித் தடுமாறாதீர்கள்  தீயைத் தாண்டிவந்து நினைவுகள் கொட்டுகையில் பற்கடித்து வலி ...

Post has attachment
**
அலமாரியில் அத்தனைப் புத்தகங்கள் மீதும் வருடிக்கடக்கின்றன  விரல்கள் மின்விசிறியின்  பறக்கும் இறக்கைகளை பிடித்துவிட முயன்றுகொண்டிருக்கின்றன கண்கள்.  இக்கோடையின் நிசப்தம் முன் நெற்றியில் துளிர்த்து வழிகிறது

Post has attachment
**
கால் பெருவிரலை ஓயாமல் முத்திக்கொண்டிருக்கிறது செம்மீன் குட்டிச்சுழல் ஒன்று உருவாகி உள்ளிழுக்கிறது இப்பிரபஞ்சம் முழுவதையும்

Post has attachment
கடலைக் களவாடுபவள்
கடலாடி மகிழும் மகள் நம்ப மறுக்கிறாள் கடலை  உடன் எடுத்துச்செல்லுதல் இயலாதென்பதை தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள் குடிபுக முடியாதென்பதையும் ஆமை ஓட்டிற்குள் மழைக்கு ஒதுங்கமுடியாதென்பதயும் பதறப் பதற கிளிஞ்சல்களைப் பொறுக்கத் தொடங்குபவள் அரற்றிக்கொண்டு வருகிறாள் வீ...

Post has attachment
**
மிகுந்த சந்தோசப்பதற்றத்துடன் தேர்வு அறைக்குள் நுழைகிறீர்கள் அச்சிடப்பட்ட விடைத்தாள் உங்கள் கைகளில் தரப்படுகிறது உங்கள் மண்டைக்குள் வேறு விடைகள் இருக்கின்றனவா?! நன்றாக அதை சுருட்டிக் கசக்குங்கள் கடைமூளையில் ஒரு குப்பைத்தொட்டித் தெரிகிறதா? எழுதுகோலும், அழிப்ப...

Post has attachment
மனம் ஒரு மிருகம்
வால் குழைத்து மண்டியிடும் தோள் தாவி முகம் நக்கும் மென் உதிரம் கசிய நகம் பதிக்கும் தருணம் அறியாத் தருணம் ஒன்றில் குரல்வளைக் கவ்வும் மனமொரு வளர்ப்பு மிருகம்

Post has attachment
**
சீழ் தழும்பிக் குடைந்து கொண்டிருந்த நெடுநாள் ரணமொன்று உடைந்தது அல்லது உடைத்தேன் வெள்ளை ஆடை முழுதும் பரவும் செந்நிறக் குருதி பிரபஞ்சத்தின் கதவுகளைத் திறந்துவிடுகிறது அத்தனை ஆசுவாசமாய் அத்தனை சுதந்திரமாய்

Post has attachment
**
வகுப்பில் நெருங்கிய தோழன், தோழிகள் என்று சில ஜோடிகள் உண்டு. நிதீஷ் + மோனிஷ் , சோனாக்ஷி + ப்ரியான்ஷு , குருசரண் + ச்சார்வி. இவர்களை எப்படி பிரித்து அமரவைத்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். இதில் குருசரண், ச்சார்வி மட்டும் வெவ்வேறு பா...
Wait while more posts are being loaded