Profile cover photo
Profile photo
கவிதைக்காரன் டைரி
568 followers
568 followers
About
Posts

Post has attachment
வழித்துணை..
* நீ இல்லாத திசை எது என்பதைக் கண்டுபிடித்து அவ்விடம் நோக்கி பயணிக்கிறேன் முந்தைய நூற்றாண்டின் ஒரு புராதான இசை வழித்துணையாகிறது *

Post has attachment
மூடிய இமை..
* மெனெக்கெடுவதாக மனக்குறையைக் கை கழுவுவதாக காத்திருப்பதாக முடிவைத் தீர்த்து வைப்பதாக மௌனித்திருப்பதாக புரியாக் குழப்பத்தைத் திறந்து விடுவதாக எத்தனை விதங்களில் சொல்லியும் மூடிய இமை பிரிவதாக இல்லை ஒரு ப்ரியத்தின் மரணமாகி **  

Post has attachment
கொஞ்சமாய்..
* மீனின் சிறகுகள் அசைய கொஞ்சமாய் நகர்கிறது கடல் *

Post has attachment
காட்டிலும்..
* விட்டுப் போய்விடுதலைக் காட்டிலும் அதிகம் வலி தருவதாக இருக்கிறது திரும்பி வருதல் *

Post has attachment
நகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..
* ரகசிய சாவிகள் கொண்டு என்னைப் பூட்டுகிறாய் இன்னும் திறவாத கதவுகளின் இலக்கத்தை பரிந்துரைக்கிறாய் வாசல்களற்ற தனிமைச் சுவரின் முன் நிறுத்துகிறாய் நீ என் வழி அமிலச் சூத்திரங்களை மனனம் செய்விக்கிறாய் வார்த்தைகள் கலந்து மொழியொன்றை பொழிய உன் தருணங்களை எனக்குள் ம...

Post has attachment
இரு துளி நீர்..
* தனித்த ஜன்னல் கண்ணாடியில் மெல்ல கோலமிட்டு நெளியும் இரு துளி நீர் நீயும் நானும் ** நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -27 - 2012 ] http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5897

Post has attachment
தெறி..
* நிசி சிறகு விரி நிழலாகி இருள் பொறியை தெறி நினைவாய் மனப் பிறழ்வாகி நில் நடுவில் ** நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட்  -27 - 2012 ] http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5897

Post has attachment
உற்று நோக்குகிறாய்
* எளிதில் உள்வாங்க முடியாத பிரத்யேகப் பார்வையை எப்போதும் உன்னால் விரிக்க முடிகிறது சிக்கலான டிசைனில் பின்னப்பட்ட ஒரு எம்பிராய்டரி சில்க் துணியைப் போல கதவிடுக்கில் தவறுதலாய் நசுங்கிவிட்ட விரல் நுனியின் கரிய ரத்தக்கட்டைப் போல கண்ணாடித் தரையில் ஊற்றிவிட்ட தண்ண...

Post has attachment
இரவை மொழிபெயர்த்தல்..
* முதல் சூரியனிலிருந்து ஒரு விள்ளல் ஜன்னலில் மோதி இரண்டாய் உடைந்து தரையில் கிடக்கிறது கொஞ்ச நேரமாய் தூக்கம் கலைந்து ஆவலோடு எழுந்ததும் வருகிறாள் அதனிடம் தான்யா கையிலெடுத்துக் கொண்டு ஏதோ சொல்கிறாள் பிறகு வாயில் போட்டுக் கொண்டு திரும்பி என்னைப் பார்த்து இளமஞ...

Post has attachment
மாய மானின் உடல்மொழி
* ஒரு நிராதரவின் வாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது வருவோரும் போவோரும் விருந்தினர்கள் என்கிறாய் நின்று கொண்டிருக்கும் வரிசையைக் கைவிடச் சொல்லி நிர்ப்பந்திக்கிறாய் சத்தியங்களை குறிப்புகளாய் எழுதித் தூது அனுப்புகிறாய் அச்சுறுத்தும் அமைதியைப் பரிசளிக்கிறாய் பத...
Wait while more posts are being loaded