Profile cover photo
Profile photo
Margoschis College
47 followers
47 followers
About
Posts

Post has attachment
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்கள் கலந்தாய்வுக் கூடுகை
-----
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான கலந்தாய்வுக் கூடுகை உள்தர உறுதிப்படுத்தும் குழு சார்பில் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.  கல்லூரி நிதியாளர் முனைவர் ஆசைதம்பி தாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  வெள்ளமடம் பஞ்சாயத்து தலைவரும் கல்லூரிச் செயலருமான பி.பி.ஆர். அகஸ்டின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை உரை நிகழ்த்தினார்.  முதல் அமர்வில் நாசரேத் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாணவர்களின் நடத்தை பற்றியும், இரண்டாம் அமர்வில் நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமாரி மாணவர்கள் தங்களைப் பேணி பாதுகாத்தல் பற்றியும், மூன்றாம் அமர்வில் தூய யோவான் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ஜாண் கென்னடி மாணவர்களின் மேம்பாடு பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.  மாணவ, மாணவிகள் தங்கள் வாழ்வில் பெற வேண்டிய ஒழுக்கம், லட்சியம், கடின உழைப்பு, குறிக்கோள் பற்றிய எழுச்சிஉரை கலந்தாய்வுக் கூடுகையில் கலந்து கொண்ட சுமார் 750 மாணவ, மாணவியருக்கு பயனுடையதாய் அமைந்தது.  இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர். மேக்ஸ்வெல் சாமுவேல் நன்றி கூறினார்.  தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் பி.பி.ஆர். அகஸ்டின் மற்றும் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.எம். விஜயராஜா ஆகியோரின் ஆலோசனையின்படி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.  
   
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-09-21
5 Photos - View album
Add a comment...

Post has attachment
மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்
---
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி நிதியாளர் முனைவர் ஆசைதம்பி தாசன் வரவேற்று பேசினார். இதில் சென்னையைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சுகுமார் அனைத்து துறை மாணவர்களும் கல்வி, வேலைவாய்ப்பினை எளிதாக பெறுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்த்தினார். மூன்றாமாண்டு மாணவ, மாணவியர் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் முனைவர் ஜெயபாலன் கென்னடி, அந்தோணி செல்வகுமார், ராஜகுமார், சுஜாதா, கீதாஞ்சலி, பேரா. செல்வராஜ், பிரவீன் பீற்றர் ஞானையா, ஐசக் கிறிஸ்டோபர், முத்து ஜெயவாணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி செயலர் பிபிஆர் அகஸ்டின் அவர்களின் ஆலோசனையின்படி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சந்தோஷம், சிவா, நவநீதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.  
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-08-27
5 Photos - View album
Add a comment...

Post has attachment
மர்காஷிஸ் கல்லூரியில் சுதந்திர தின விழா

    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் 69வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு வெள்ளமடம் பஞ்சாயத்து தலைவரும் கல்லூரிச் செயலருமான பி.பி.ஆர். அகஸ்டின் தலைமை ஏற்று தேசியக் கொடி ஏற்றினார். மேனாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவை நாம் ஒவ்வொரும் நனவாக்க வேண்டும் என்று சுதந்திர தின உரையில் கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் குறிப்பிட்டார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் கல்லூரி நிதியாளருமான ஆசைதம்பிதாசன்; தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஏற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்பயிற்சி இயக்குநர் முனைவர் ராஜாசிங் ரோக்லண்ட் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார் தொகுத்து வழங்கினார். விழாவில் பேராசியர்கள் அலுவலர்கள் மாணவ, மாணவியர் நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அவர்களின் ஆலோசனையின் படி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ஆசைதம்பிதாசன் தலைமையில் திட்ட அலுவலர்கள் ஜெயபிரபா, கீதாஞ்சலி, டல்சி ஜெபா மேரி, ஸ்டான்லி டேவிட் பிச்சை மற்றும் அலுவலர்கள் சந்தோசம், ரவி, நவநீதன், அற்புதராஜ், ஸ்டான்லி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-08-14
15 Photos - View album
Add a comment...

Post has attachment
மர்காஷிஸ் கல்லூரியில் பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நிதி வசூல்
-------
இந்தியன் அசோசியேசன் விழியிழந்தோர் பாடசாலையில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சி நலனுக்கு உதவிடும் வகையில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உள்தர உறுதிப்படுத்தும் குழு சார்பில் நிதி வசூல் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை உரை நிகழ்த்தினார். கல்லூரி நிதியாளரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் ஆசைதம்பி தாசன் விழி இழந்தோர் கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார். வெள்ளமடம் பஞ்சாயத்து தலைவரும் கல்லூரிச் செயலருமான திரு. P.P.சு. அகஸ்டின் நிதி வசூலை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர், திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மனமுவந்து தாராளமாக நிதி உதவி அளித்தார்கள். உள்தர உறுதிப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் மாக்ஸ்வெல் சாமுவேல் நன்றி கூறினார். இவ்விழாவில் பேரா. பிரவின், மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர் அணி மாணவ, மாணவியர் கலந்து கொண்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்படி திட்ட அலுவலர் முனைவர் ஆசைதம்பி தாசன் தலைமையில் திட்ட அலுவலர்கள் முனைவர் கீதாஞ்சலி, ஜெயபிரபா, டல்சி ஜெபா மேரி மற்றும் பேரா. ஸ்டான்லி டேவிட் பிச்சை ஆகியோர் சிறப்பாக செய்தார்கள்.
Photo
Photo
2015-08-10
2 Photos - View album
Add a comment...

Post has attachment
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மரம் நடு விழா
---
     நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா நடைபெற்றது. கல்லூரி நிதியாளரும், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலருமான முனைவர் ஆசைதம்பிதாசன் செஞ்சிலுவை தின உரை நிகழ்த்தினார். கல்லூரி செயலரும் வெள்ளமடம் ஊராட்சிமன்றத் தலைவருமான பிபிஆர் அகஸ்டின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் கல்லூரி கலையரங்கின் அருகில் நிழல் தரும் மரத்தினை நட்டினார். இதில் தமிழ்துறை பேராசிரியர் முனைவர் கால்டுவெல் கணேசன், அலுவலக பணியாளர்கள் அற்புதராஜ், பாலசுந்தர், பிரான்சிஸ், சமுத்திரபாண்டி, சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரி செயலர் பிபிஆர் அகஸ்டின் வெகுவாகப் பாராட்டினார்.
Photo
Add a comment...

Post has attachment
மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் பதவி ஏற்பு மற்றும் பேராசிரியர்கள் பணி நிறைவு
    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியின் ஐந்தாவது முதல்வராக ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ரவீந்திரன் கல்லூரி ஆட்சிமன்றக்குழுவின் பரிந்துரையின் பேரில் முதல்வர் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஆணையை கல்லூரிச் செயலர் பி.பி.ஆர் அகஸ்டின் வழங்கினார். முதல்வருக்கான பதவி ஏற்பு விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. முனைவர் அருள்ராஜ் பொன்னுதுரை ஆரம்ப ஜெபம் செய்தார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பாஸ்கர் ராஜபால் வேதபாடம் வாசித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி நிதியாளர் முனைவர் ஆசைதம்பி தாசன் பணி நிறைவு பெறும் பொருளியல் துறைத் தலைவர் முனைவர் பொன்திலகர் ஸ்டான்லி, தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் நேசமணி ஷீலா, பொறுப்பு முதல்வர் பேரா. சாந்தி மற்றும் முதல்வர் பதவி ஏற்றுள்ள முனைவர் ரவீந்திரன் ஆகியோரை வாழ்த்தினார். கல்லூரி செயலர் பி.பி.ஆர். அகஸ்டின் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் அருட்திரு ஜெசுசகாயம், லே செயலர் எஸ்.டி.கே. ராஜன், கவுன்சில் சேர்மன் அருட்திரு தாமஸ், முன்னாள் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.டி.கே. ஜெயசீலன் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் விஜயராஜன், பேரா. சாந்தி மற்றும் பேராசிரியர்கள் சலோமி, மாக்ஸ்வெல், சிந்தியா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். கணினி இயல் துறைத்தலைவர் ஜெயபர்வீன், பிள்ளையன்மனை சேகர குரு அருட்திரு. ஜேஸ்பர் அற்புதராஜ் ஆகியோர் ஜெபம் செய்தார்கள். பிரதம பேராயரின் ஆணையாளர் ஆசி வழங்கினார். இதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ செயலர் அருட்திரு தேவராஜ் ஞானசிங், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பேராசியர் ஜெயச்சந்திரன், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் மற்றும் முதல்வர் தலைமையில் நிதியாளர் ஆசைதம்பி தாசன், முனைவர் அந்தோணி செல்வகுமார் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Photo
Add a comment...

Post has attachment
மர்காஷிஸ் கல்லூரியில் தமிழ் பயிலரங்கம்
---
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தமிழ்த்துறையும் உள்தர உறுதிப்படுத்தும் குழு இணைந்து நடத்திய “இக்கால இலக்கியத்தில் இன்றையப் போக்குகள்” என்னும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கு கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. முனைவர் கலையரசி ஆரம்ப ஜெபம் செய்தார். உள்தர உறுதிப்படுத்தும் குழு அமைப்பாளரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் அந்தோணி செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். வெள்ளமடம் ஊராட்சி மன்றத் தலைவரும் கல்லூரிச் செயலருமான பி.பி.ஆர். அகஸ்டின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பேரா. சாந்தி முன்னிலை உரை நிகழ்த்தினார். வணிகவியல் துறை பேராசிரியரும் நிதியாளருமான முனைவர் ஆசைதம்பிதாசன் வாழ்த்துரை வழங்கினார். வாழ்வியல் செய்திகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவே இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன என்று ம.தி.தா. இந்துக்கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி. தட்சணாமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். புதினத்தில் புரட்சி போக்குகள் என்னும் தலைப்பில் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கண்ணன், தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய முதன்மை அறிவிப்பாளர் விஜயகுமார், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். பயிலரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பயிலரங்கில் கணிதத்துறை தலைவர் முனைவர் ஜெபாலன் கென்னடி, பேரா. சோபியா பெர்சிஸ், லீலாவதி பாக்கியத்தாய், ஸ்டான்லி டேவிட்பிச்சை மற்றும் காயல்பட்டிணம் வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரி, கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் முதல்வர் நிறைவுரை ஆற்றினார். வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரி பேராசிரியை கல்பனா தேவி பின்னூட்டம் நிகழ்த்தினார். பயிலரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முனைவர் பெரியநாயகம் ஜெயராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, நன்றியுரை நிகழ்த்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனைபடி, தமிழ்த்துறைத்தலைவர் தலைமையில் முனைவர் பொன்மணி, விமலா, கால்டுவெல் கணேசன், பேராசியர்கள் ஜெயசீத்தா, ஜீலியட், பிரவீன் பீற்றர் ஞானையா, சுதாலட்சுமி மற்றும் மாணவ, மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-04-18
33 Photos - View album
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
மர்காஷிஸ் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறும்படம்

    நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவின்படி, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உள்தர உறுதிப்படுத்தும் குழு இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறும்படம் கல்லூரி கலையரங்கில் திரையிடப்பட்டது. உள்தர உறுதிப்படுத்தும் குழு அமைப்பாளர் முனைவர் அந்தோணி செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் பேரா. சாந்தி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் தமிழ்நாடு திரைப்பட பிரிவின் மூலமாக வழங்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. சுமார் 1000 மாணவ, மாணவியர் கண்டு களித்தனர். திட்ட அலுவலர் பேரா. ஸ்டான்லி டேவிட்பிச்சை நன்றி கூறினார். இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் டல்சி ஜெபா மேரி, ஜெயபிரபா, மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனையின் படி, முனைவர் கால்டுவெல் கணேசன், பிரவீன் பீற்றர் ஞானையா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
PhotoPhotoPhotoPhoto
2015-04-06
4 Photos - View album
Add a comment...

Post has attachment
மர்காஷிஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பிள்ளையன்மனையில் மூன்றாவது பட்டமளிப்பு விழா பேராயர் ஜெபச்சந்திரன் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் பி.பி.ஆர் அகஸ்டின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பேரா. சாந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர். ச. பிரபாகர்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளைஞர்கள் சகோதரத்துவம், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையோடு கற்ற கல்வியை நாட்டு முன்னேற்றத்திற்கு பயன்படுத்திட வேண்டும் என உரை நிகழ்த்தினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கண்காணிப்பாளர்கள் அசோகன், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஒவ்வொரு துறையிலும் பட்டம் பெறும் பட்டதாரிகளை துறைத்தலைவர்கள் அறிமுகம் செய்தனர். கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 201 பட்டதாரிகளுக்கு சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
    விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் அவர்களின் ஆலோசனையின் படி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் கல்லூரி நிதியாளர் முனைவர் ஆசைதம்பி தாசன், உள்தர உறுதிப்படுத்தும் குழு அமைப்பாளர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார், முனைவர். கால்டுவெல் கணேசன், பேரா. பிரவீன் பீற்றர் ஞானையா, இம்மானுவேல் நல்லதம்பி, ஐசக் கிறிஸ்டோபர், ஸ்டான்லி டேவிட்பிச்சை, ஸ்வீட்டன், சந்தோஷம், ஸ்டான்லி ஜெபக்குமார், அற்புதராஜ், கபர்சிங், சிவா மற்றும் கல்லூரி விடுதி மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-03-29
34 Photos - View album
Add a comment...
Wait while more posts are being loaded