Profile cover photo
Profile photo
Suresh Babu
2,984 followers
2,984 followers
About
Posts

கமலரசியல்

நான் கமல்ரசிகன் இல்லை. கமலின் பல படங்களுக்கும், அவருடைய பல கருத்துகளுக்கும் ரசிகன். எனக்குப் பிடிக்கவில்லையென்றால் திட்டத் தயங்கமாட்டேன். ரசிகனாக இல்லாததன் மிகப்பெரிய நல்லம்சம் - என்னாடா நம்மாளு இப்படி பண்ணிட்டாரு என்று ரகசியமாகப் புலம்பத் தேவையில்லாதது.

ஆனால், கமலின் அரசியல் பிரவேசம் என்பது வேறுவகையான விஷயம். அதைப்பற்றிப் பேச - ஒருவாரம் முன்புவரைகூட - தேவையில்லை என்றுதான் நினைத்தேன். வெள்ளம் வந்தபோது எங்கே போச்சு என் வரிப்பணம் என்று நண்பரிடம் பேசியதைப் பேனாக்கிப் பெருமாளாக்கி ஓபிஎஸ்ஸை பதிலளிக்கவைத்து வீங்கவைக்கும் ஊடகங்கள் நிறைந்த நம்மூர்க்காரர்கள், சிக்கலான மொழிநடை ட்விட்களுக்கும், பிக்பாஸ் பொடிவைத்த பேச்சுகளுக்கும் அரசியல் சாயம் பூசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

ஆனால் சமீபத்திய பேட்டிகள் தெளிவாகவே கமல் ஓட்டரசியலுக்குள் புகப்போகவதைச் சொல்லியிருக்கின்றன.
கமல் கட்சி அரசியலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அறவே இல்லை என்றே சொல்லிவிடலாம். சரித்திரம் முழுக்க அதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

அரசியலுக்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை, அதைப் பெறுவதற்கான உண்டியல்கள் நிரம்பினாலும், அவற்றை நிரப்புபவர்களின் எதிர்பார்ப்பை நிரப்பும் செயல்திட்டம்எதுவும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை - இருந்தாலும் அவை நியாயமானதாக இருக்க வாய்ப்பில்லை.

அரசியலுக்குத் தேவையான விஷயங்களில் முக்கியமானது அடுத்த கட்டத் தலைவர்கள் - கமலின் ரசிகர் மன்றம் ஒன்றும் வலுவாக இருப்பதாகத் தோன்றவில்லை. அதில் இருக்கக்கூடிய அமைப்பாளர்களின் பெயர் கமல் போல நம்பகம் அளிப்பதாகத் தெரியவில்லை. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளித்தவர்களில் 10%கூட அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவளிக்கவில்லை. அமைப்பு பலம் கொண்ட எந்தக் கட்சியுடன் கூட்டணியோ தொகுதி உடன்பாடோ செய்துகொண்டால் அவர்களின் பாவச்சுமையையும் (எல்லாக் கட்சிகளுக்கும் தேவையான அளவுக்கு மேலேயே இருக்கிறதே!) சுமக்க வேண்டியிருக்கும், தனித்துவத்தை இழக்க வேண்டியிருக்கும். இப்படித்தானே விஜயகாந்த் தன் 10 சதவீத வாக்கு வங்கியை எங்கோ இழந்து நிற்கிறார்?

யதார்த்தத்தில் கமலின் அரசியலைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றாலும், நம் அரசியல் அடைந்துள்ள கீழ்மையைப் பற்றி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

புகழோடு - மொத்த வாக்குக்களையும் பெறும் திறத்தோடு தோன்றினால் தோன்று, இல்லாவிட்டால் தோன்றாமை நன்று - என்பதுதான் கேஜரிவாலும் விஜயகாந்தும் நமக்குச் சொல்லும் பாடம்.

தெரிந்த ஊழல்வாதிகளை, மதவாதிகளை. ஜாதிக்கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதில் சற்றும் சுணக்கம் காட்டாத நாம், கேஜரிவால் மேலுள்ள கரைகளை பூதக்கண்ணாடி வைத்துப்பார்ப்போம், விஜயகாந்தைத் தவிர வேறு யாருமே குடித்ததில்லை என்பதுபோல் சிரிப்போம்.

எல்லாம் அசிங்கம் பிடிச்ச அரசியல்வாதிகள்தான் - என்று வாய்ப்பேச்சு மட்டும் பேசிக்கொண்டு நம் சார்பை மறைப்போம்.

வாழ்க ஜனநாயகம்!

நேற்று இரவு என் ரத்த அழுத்தம் வழக்கத்தைவிட பலபுள்ளிகள் அதிகரித்திருந்தது. தேவையே இல்லைதான் என்றாலும் நீயா நானா நிகழ்ச்சி பார்த்ததுதான் காரணம்.
அணைத்துவிட்டிருக்கலாமே, பார்க்காமல் விட்டிருக்கலாமே என்றெல்லாம் கேட்டால், லாம்தான். ஆனால் பொதுப்புத்தி எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமல் நெருப்புக்கோழி தன் தலையைப் புதைத்துக்கொள்வதுபோல் ஏன் இருக்கவேண்டும்?
நானும் “யூத்”தாக இருந்து வயதானவன்தான். இன்றைய யூத் - உபயோகிக்கும் கருவிகள் வேறாக இருக்கலாம், பரிபாஷைகள் வேறாக இருக்கலாம் - ஆதாரமாக நம் சமுதாயத்தின் மனம் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி காட்டியது. எந்த புறச்சூழலும், நடுங்கவைக்கும் சம்பவங்களும் பொதுப்புத்தியை மாற்றிவிடப்போவதில்லை என்ற அசிங்கமான உண்மையை இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டுக் காட்டியதுதான் ரத்த அழுத்தம் ஏறியதற்கான காரணம்.
ஒருதலைக்காதல் - என்பதுதான் தலைப்பு. பெண்கள் “எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை” என்று சொன்னாலும் விடாமல் தொடரும் நம் வருங்காலத் தூண்கள் ஒருபக்கம். அவர்களிடம் ஏகநேரம் திட்டு வாங்கவென்றே படைக்கப்பட்ட கண்ணகி-wannabes மறுபக்கம்.
”தொந்தரவு கொடுப்பதாக நீங்கள் நினைத்தால் போலீஸுக்குப் போகவேண்டியதுதானே” என்கிறார் ஒரு இளைஞர். இந்த அபாரமான கருத்துக்காக அவருக்கு ஒரு பரிசு வேறு கொடுத்தார்கள். அவர் வாழும் கிரகத்தைப்பற்றிய தகவல்கள் நிகழ்ச்சியில் சொல்லப்படவில்லை.
ஒருவன் துரத்துகிறான் என்பதைச் சொந்த அப்பாவிடம் சொன்னாலே “நான் அப்பவே சொன்னேன், மேக்கப் போட்டு மினுக்காதேன்னு” என்று குற்றத்தைப் பெண்மேல் திருப்பும் கிரகம்தான் நான் வசிக்கும் கிரகம். என் போட்டோவைத் திருத்தி ஆபாசமாக்கி வெளியிடுவதாக மிரட்டுகிறான் என்று சொன்னாலே லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் கேஸ் பதிவேன் என்று சொல்பவர்கள்தான் எங்கள் கிரகத்து போலீஸ்கள்.
நிகழ்ச்சி மட்டுறுத்துநர் ஆரம்பம் முதலே பெண்களுக்கு அறிவுரை கொடுப்பதில்தான் கவனம் செலுத்தினார். நீங்கள் நோ சொல்வதில் கொஞ்சம் அதிக அழுத்தத்தைத் தந்தால் அவன் விட்டுப்போய் விடுவான், ஆனால் உங்கள் அழுத்தம் போதாது என்றெல்லாம் உளறினார். ஒற்றை சிலபிள் நோ வில் என்னய்யா அழுத்தம் வேண்டிக்கிடக்கிறது?
40 முறை துப்பினாலும் 41வது முறையாகவும் ப்ரோபோஸ் செய்வேன் என்கிறார் இன்னொரு இளைஞர். நீங்கள் மாறவே மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா என்று - பெண்களை -கேட்கிறார் மட்டுறுத்துநர். 40 முறை துப்பினது அழுத்தமான நோ இல்லையா?
இதெல்லாம் காதல் எழவே கிடையாது, Stalking, Obsessive Compulsive Disorder என்று அறிவுரை சொல்ல ஒரு உருப்படியான ஆள் அரங்கத்தில் கிடையாது.
இதற்கெல்லாம் உச்சமாக, மென்மையாக ப்ரொபோஸ் செய்வதற்கான வழிமுறைகளைச் சில இளைஞர்கள் டெமோ செய்து காட்டினார்கள். செட் ஏ 10000 ருபீஸ் பேக்கேஜ், செட் பி 5000 ருபீஸ் என்று விற்பனை மட்டும்தான் செய்யவில்லை.
போதாது என்பதுபோல - இந்த Stalking ஐப் பெண்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள் என்று ஒரு சமகாலப் பாடலாசிரியர், ரிட்டயர் ஆன இயக்குநர் சொல்ல, அதை மொத்தக்குழுமமும் ஆதரித்தது.
என் கேள்வி - ஒரு பெண்ணைக் காதலித்து, அவள் மறுக்க, ஆசிட் ஊற்றியதையும், அவள் மறுக்க அவள் வாயில் அரிவாளால் போட்டதையும், அவள் மறுக்க அவள் ஆபாசப்படத்தை வெளியிடப்போவதாகச் சொன்னதையும்..
அவர்கள் ரசித்திருப்பார்கள் என்றுதான் இந்த அறிவாளிகள் நம்புகிறார்களா?
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு விளம்பரம் - விரைவில் சேனலில் வரப்போகும் படங்கள் குறித்து. அந்தப்படங்களில் பெரும்பான்மை, பெண்களை லூசாகச் சித்தரித்து, அவர்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் நாயகர்களைக் கொண்டாடுபவை.
அதை விற்கத்தான் இந்த முஸ்தீபா?
போங்கடா..

Post has attachment

குற்றம் கடிதல்

என்னதான் சொல்ல வராங்கன்னு கடைசி வரைக்கும் புரியாம வைக்கறதுதான் நோக்கம்னா, வெற்றிதான் அடைஞ்சிருக்காங்க.

டீச்சர் பையனை அடிக்கறது சரியா தப்பான்றதுதான் மெயின் ஸ்டோரியா? ஆரம்பக் காட்சியமைப்புகள் சரின்றமாதிரிதான் எனக்குத் தோணுது. ஆனா கடைசிக்காட்சியில அந்த டீச்சரே தப்புன்னு சொல்றாங்களே! சரியா தப்பான்றது ப்ராப்ளம் இல்லை. படம் எதை வேணாலும் சொல்லலாம். ஆனா அது எதுன்றதே குழப்பமா இருந்தா?

பையனை அடிச்சது, ஸ்கூலுக்குப் பிரச்சினை, மீடியா எடுத்துகிட்டபிறகு பிரச்சினை வேற தளத்துக்குப் பயணமாகுது - எல்லாத்தையும் ஸ்லைடு போட்டே சொல்லியிருக்கலாம். எதுலயும் எந்த அழுத்தமும் இல்லை. ஒரு மீடியாப்பெண் பையனின் அம்மாகிட்ட பேசறதும், அதுக்கு முன்னாடி அவள் காதலன்கிட்ட பேசறதும் - ஷப்பா லெவல் ஒன்லி.

கொல்லிமலை பஸ்லே ஏறி அழுது வந்தவாசில இறங்கி அழுது வந்தவாசில லாரிபிடிச்சுஅழுது ஆரணில இறங்கி, அழுது ஆரணில லாட்ஜ் போட்டு அழுது, பக்கத்துல கூத்து நடக்கற நேரத்துல அழுது, தாம்பரத்துல புருஷன்கிட்ட சொல்லாம அழுதுகிட்டே இறங்கி, அப்புறம் அழுதுகிட்டே அந்தப்பையனோட அம்மாவைப்பார்க்கணும்னு அழுது, அந்த அம்மாவைப் பார்த்து அழுது..

படிக்கும்போதே கண்ணைக்கட்டுதே, இந்தக்காட்சியெல்லாம் ஏன்னே தெரியாம பார்த்துகிட்டிருந்த எங்களுக்கு எப்படி இருக்கும்? கூத்து எந்த விதத்துல கதைக்கு உதவியா இருக்கு? (குந்தியின் guilt, டீச்சரின் guiltன்னு எல்லாம் சொன்னா கடிச்சிருவேன்) தாம்பரத்துல இறங்கறதும் கணவன் திக்குத்தெரியாம ஓடறதும் எல்லாம் படம்னா 2 மணிநேரமாச்சும் இருக்கணும்னு எவனோ சொல்லிட்டதன் விளைவுதான்.

பிரின்ஸிபாலின் மனைவியாக நடித்தவர், +2 மேத்ஸ் டீச்சர் - ரெண்டுபேருதான் நடிப்புலயும் தேரறாங்க.

இப்படியெல்லாம் படமெடுத்து அவார்டு கிடைச்சதுன்னா - காக்காமுட்டை மாதிரி படங்களையும் மக்கள் மதிக்காம போயிருவாங்க.

Post has attachment
Photo

Post has attachment
Sometimes it is the people who no one imagines anything of who do the things that no one can imagine.

ஆலன் டூரிங், நவீன கம்ப்யூட்டர்களின் தாத்தாவைக் கண்டுபிடித்ததும் அப்படிப்பட்ட கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்தான்.

150 மில்லியன் மில்லியன் மில்லியன் வேறுபட்ட காம்பினேஷன்கள் கொண்ட எனிக்மா சங்கேத மொழியை உடைக்க முயற்சித்த குழுவில் - வழக்கமான முறைகளில் முயன்றால் மில்லியன் வருடங்கள் ஆகும் என்று கோட் உடைக்கும் லாஜிக்கை ஒரு மெஷினுக்குச் சொல்லித்தந்ததும், வெற்றி பெற்றதும் வரலாறாக ஆகவே 50 வருடங்கள் பிடித்திருக்கிறது.

41 வயதில் இறந்த டூரிங் செய்த சாதனைகளில் சில மட்டுமே வெளிச்சத்துக்கு உடனே வந்திருக்கின்றன. பல ராணுவ ரகசியங்களாக மக்கிப்போயிருக்கின்றன என்கிறது “The Imitation Game" திரைப்படம்.

ஆலனின் வாழ்க்கை வரலாற்றை முழுக்கப் படமாக்க முயலாமல், சில முக்கியமான நிகழ்வுகளை மட்டும் சொல்கிறது. ராணுவத்தின் Bureaucracy, மொழியியல், லாஜிக் வல்லுனர்களின் குழுப்போட்டிகள், காதல் போன்றே தோற்றமளிக்கும் காட்சிகள் மற்றும்...

சென்ற நூற்றாண்டின் மகத்தான அறிவுக்கு எதிரான அநியாயம்.

Benedict Cumberbatchக்கு ஷெர்லாக்கிலேயே நடித்தது போன்ற வேடமேதான் - அதீத அறிவாளி ஆனால் தினப்படி வாழ்க்கையின் சூட்சுமங்கள் தெரியாது - ஆனால் படத்தின் கடைசி 20 நிமிடங்களில் கதை வேறு தளத்துக்குச் செல்லும்போது தன் நடிப்பிலும் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்.

பலவருடங்கள் கழித்து ஒரு படம் பார்க்கும்போது கண்ணில் நீர்முட்டியது. ஸ்பாய்லர்கள் வந்துவிடக்கூடாது எனக் கவனமாக எழுதியும் இந்தவரியைத் தவிர்க்கமுடியவில்லை.

நிச்சயம் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.
Photo

ஒரு தமிழக நகரம், சேலத்து பாப்பான் வக்கீல் முதலமைச்சராக இருந்த காலம், கடவுள் பக்தியுடன் தினப்படி வாழ்க்கையைக் குழப்பிக்கொண்டிருக்கும் படிப்பறிவற்ற மக்கள், எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று வேப்பந்தழை தின்பது முதல் கடினமான மலைக்கோயிலைச் சுற்றுவது வரை எல்லாவற்றையும் செய்யும் குழந்தையற்ற தம்பதி, அந்தக்காலத்திலேயே அரசல்புரசலாகச் சொல்லப்படும் திருவிழா ஐதீகங்கள்.

இவற்றை நடந்தது என்று சொல்ல உறுதியான, கோர்ட்டில் செல்லத்தக்க ஆதாரங்கள் கிடைக்கப்போவதில்லை - வயதானவர்களின் ஞாபகங்கள் வாய்வழிப்பேச்சாகத்தான் தகவல் திரட்டமுடியும்.

நடக்கவில்லை என்று சொல்லவும் அதே நிலைமைதான். இது எங்கள் ஊரையே கேவலப்படுத்துகிறது என்று சொல்வது, அந்த ஊரில் அந்தக்காலத்தில் எல்லாரும் அப்படி இருந்தார்கள் என்று சொன்னால்மட்டுமே ஏற்கத்தக்க வாதம். அந்த ஊரிலேயே வளர்ந்த கதாநாயகனுக்கே ஆச்சரியமான தகவலாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்னும்போது, ஊரின் பேரைக் கெடுக்கிறது என்பவர்களின் வாதம் “கண்ணகி பிறந்த மண்” என்று உணர்ச்சிவசப்பட்டு “மாதவியும் பிறந்த மண்”ணை மறக்கிறவர்களின் போலித்தனத்தோடு ஒப்பிடக்கூடியது.

கள்ளக்காதல்களோ திருமணமில்லா கர்ப்பங்களோ இன்றுகூட இல்லாத ஊராக இருந்தாலே அன்று நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது.

Stray incidenceகளாக நடந்தவற்றைக் கதையாக்கும் எழுத்தாளரின் உரிமையைக் கேள்வி கேட்கும்போது, இதுதான் நாங்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதுதான் அந்த ஊரைக் கேவலப்படுத்துகிறது.

பி கு: எனக்கு நாவல் மிகவும் பிடித்திருந்தது.

பிசாசு
---------

பேரெழிலும் பெருங்கோபமும் மட்டுமல்ல, பேரன்பும் கொண்ட மாய யதார்த்தவாதப் பிசாசுகள் உலவிடும் அண்டப்பெருவெளியை தன் யப்பானியச் சிந்தனைக்கண்களுடன் நமது கண்முன்னே உலவவிட்டிருக்கிறார் மிசுகின்.

எண்ணங்களை வண்ணங்களால் காட்ட பிகாசோவுக்கும் வான்காவுக்கும் என்ன குத்தகையா கொடுக்கப்பட்டிருக்கிறது? பச்சையும் சிவப்புமாய் படம் நெடுக எண்ணவண்ணங்களால் நம் சிந்தையில் ஓவியமாய்க் காட்டுகிறார். 

நிறக்குருடு என்பதால் விபத்துகள் நடக்கலாம் - அவை சிறிய அளவோடு முடிந்துவிடும் - ஆனால் அலைபேசி சிதைக்கும் கவனங்கள் பேராபத்தை - அப்போது மட்டுமல்ல, காலங்காலத்துக்கும் ஏற்படுத்துவதற்கான அளவிடமுடியாத சாத்தியங்களை நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்பதை அசைக்கமுடியாத வாதங்களால் நம்மைக்கட்டிப்போட்டுக் கூறுகிறார்.

புகைபிடித்தலை நெருப்புக்குச்சி அணைத்தே நிறுத்தலாம், மதுபானம் அருந்துவதைத் திறப்பானை ஒளித்துவைத்தே கட்டுக்குள் கொணரமுடியும் என்பதை எளிய உதாரணங்கள் மூலம் நிறுவுவதை யாராலும் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது.

இல்ல வன்முறைகளுக்குக் காரணங்கள் ஏதும் தேவையில்லை, வன்முறை மனம் இருந்தால் மட்டுமே போதும் என்று நிலவிவரும் சமூகத்தின் அபத்தங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது.

பிசாசு - பேரெழிலின் பெருங்கோபம்.


பி.கு: சும்மா எழுதிப்பார்த்தேன். வீட்லதான் இருக்கேன், இன்னும் ஆஸ்பத்திரி போகவேண்டிய நிலைமை எல்லாம் வரலை.

Post has attachment
http://s98.photobucket.com/…/sudamini/media/sivaji1.swf.html …
http://s98.photobucket.com/…/sudamini/media/sivaji2.swf.html …

9 வருடங்களுக்கு முன் செய்தது. குவாலிட்டி கம்மிதான். ஆனால் இன்றும் காப்பியடிக்கப்படுகிறது.

ஒருமுறை பார்த்துருங்க. வசனம் புரியலைன்னா, எழுத்தா http://penathal.blogspot.ae/…/20-revised-premier-show-flash… - இங்க இருக்கு.

காவியத்தலைவனை ஒரு பீரியட் படம் என்று சொன்னார்கள், அங்கு ஆர்மோனியம் இல்லையென்றால் திட்டுவோம், நன்றாக இருந்தால் வாழ்த்துவோம்.

லிங்கா ஒரு பொழுதுபோக்குப் படம் என்கிறார்கள். பொழுது போனால் வாழ்த்துவோம், போரடித்தால் திட்டுவோம்.

இந்த சப்பை மேட்டரைக்கூட விளக்கவேண்டிய அளவிலா நம் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள்?
Wait while more posts are being loaded